இரு நகரங்கள், இரு மதங்களின் கூடுதல், விளைவு கொரோனா பாதிப்பு, பரப்பு மற்றும் குற்றச்சாட்டு, அபாயகரமான விளைவு! [2]

வைரஸ்இரு நகரங்கள், இரு மதங்களின் கூடுதல், விளைவு கொரோனா பாதிப்பு, பரப்பு மற்றும் குற்றச்சாட்டு, அபாயகரமான விளைவு! [2]

Corona affected India details-Tamilnadu

01-04-2020 அன்றைய நிலை: தமிழ்நாட்டில் இன்று எத்தனை பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பான விவரங்களை மாநில சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் வெளியிட்டார்[1]. 01-04-2020 அன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இவர்கள் அனைவருமே டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்றும் கூறினார். தமிழகத்திலிருந்தும் 1500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.  சென்னையில் 31-03-2020 அன்று செய்தியாளர்களிடம் பேசிய பீலா ராஜேஷ், டெல்லியில் நிஜாமுதீன் மர்கஸில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் பலரைத் தங்களால் கண்டறிய முடியவில்லையென்றும் அவர்கள் தாங்களாக முன்வந்து அரசிடம் தங்களைப் பற்றிய தகவல்களைக் கூற வேண்டுமென்றும் தெரிவித்திருந்தார். அதன்படி, நேற்று மாலையிலிருந்தே பலர் தாமாக முன்வந்து தகவல் தெரிவித்ததாகக் கூறிய சுகாதாரத் துறைச் செயலர், இவர்களில் 658 பேருக்கு கொரோனோ தொற்று இருக்கிறதா என்ற சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

1500 from TN attended Tabliq, The Pioneer, 01-04-2020

திரும்பி வந்துள்ளவர்களில், தமிழ்நாட்டில் தொற்றுள்ளவர்கள்: தற்போது தமிழ்நாட்டில் 77330 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப் படுவதாகவும் 81 பேர் அரசின் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது[2]. இதுவரை தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்தவர்களில் 4070 பேர் கண்காணிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 2726 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 234 பேருக்கு அந்நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது[3]. இன்று கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்ட 110 பேரில் ஒருவர் பர்மாவையும் ஒருவர் இந்தோனீசியாவையும் சேர்ந்தவர். தமிழ்நாட்டில் இதுவரை நோய் உறுதிசெய்யப்பட்ட 234 பேரில் 190 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். இன்று நோய் உறுதிசெய்யப்பட்டவர்களில் 6 பேர் திருநெல்வேலியையும் 28 பேர் கோயம்புத்தூரையும் 20 பேர் தேனி மாவட்டத்தையும் 17 பேர் திண்டுக்கல் மாவட்டத்தையும் 9 பேர் மதுரை மாவட்டத்தையும் 5 பேர் சிவகங்கை மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். மேலும் திருப்பத்தூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து தலா 7 பேருக்கும் ஈரோடு, தூத்துக்குடி, திருவாரூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து தலா 2 பேருக்கும் கரூர், சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து தலா ஒருவருக்கும் நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Tabliq spreads Islam, , The Pioneer, 01-04-2020

தமிழக அரசு கெஞ்சிக் கேட்கும் விதம்: டெல்லி மாநாட்டில் பங்கேற்றது குறித்து தாமாக முன்வந்து தகவல் தெரிவித்த 1103ல் இதுவரை 658 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது[4]. மீதமுள்ளவர்களுக்கும் சோதனை செய்யப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த 1103 பேர் வசித்துவந்த வீடுகளை தனிமைப்படுத்தும் பணிகள் துவங்கிவிட்டதாகவும் அவர்களோடு யார் யாரெல்லாம் பழகியவர்கள் என்பது குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுவருவதாகவும் விரைவில் அவர்களும் கண்காணிப்பு வளையத்தில் வருவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது[5]. தமிழ்நாட்டில் இருந்து டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் குறித்த எண்ணிக்கையை உறுதி செய்வதில் சிக்கல்கள் இருப்பதாகவும் தொடர்ந்து இது தொடர்பான தகவல்களைச் சேகரித்து வருவதாகவும் பீலா ராஜேஷ்[6], தமிழக அரசு சுகாதாரத் துறைச் செயலா் தெரிவித்தார்[7].

Tabliq attendees portent to sspread Covid-19, Tamil Hindu, 01-04-2020

நிஜாமுத்தீன் ஜமாத் மர்ஜஸ் மாநாட்டிற்கு சென்று வந்தவர்களின் நிலைமை: பீலா ராஜேஷ் சொன்னதாவது[8], “நீங்கள் சொல்லும் தகவல் உங்கள் குடும்பத்தைக் காக்கும், சமுதாயத்தைக் காக்கும் என தெரிவித்திருந்தேன் அதை ஏற்று அனைவரும் தாமாக முன் வந்து தகவலை தெரிவித்துள்ளனர் அதற்கு முழுமையான நன்றி . தற்போது 1103 பேர் அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு அவர்களில் 658 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கும் நாளை சோதனை நடத்தப்படும்……..1500 மேல் என்று சொன்னோம் அதில் 250 , 300 பேர் அங்கே யே இருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் வந்துவிட்டார்கள். நேற்று நாங்கள் கோரிக்கை வைத்தவுடன் இரவு முழுதும் அனைவரும் வந்துவிட்டார்கள் அவர்கள் அனைவருக்கும் டெஸ்ட் எடுத்துள்ளோம். மொத்த எண்ணிக்கை 1103 பேர் தாமாகவே வந்துள்ளனர்…………நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட 110 பேர் 15 மாவட்டங்களிலிருந்து வந்துள்ளனர். மாவட்ட வாரியாக நெல்லை 6 பேர், கோவை 28 பேர், ஈரோடு 2 பேர், தேனி 20 பேர், திண்டுக்கல் 17, மதுரை 9 பேர், சிவகங்கை 5, பேர் திருப்பத்தூர் 7பேர், செங்கல்பட்டு 7 பேர், திருவாரூர் 2 பேர், தூத்துக்குடி 2 பேர், காஞ்சிபுரம் 2 பேர், கரூர் 1, சென்னை 1, திருவண்ணாமலை 1 மாநாட்டில் வந்தவர்கள் மொத்தம் 110 பேர் 15 மாவட்டத்திலிருந்து சென்றுள்ளனர். நேற்றைய கணக்கு 80 பேர் 18 மாவட்டங்கள். மொத்தம் மாநாட்டிலிருந்து வந்தவர்கள் 19 மாவட்டங்களில் உள்ளனர்.

Omar, Mehbuba defend Markaz , The Statesman, 01-04-2020-

இதனை யாரும் மதப் பிரச்சினை ஆக்கவில்லை: கொரோனா நிலைமையை, இங்கு புள்ளி விவரங்களுடன் காணலாம்[9]. இவை எல்லாம் யாரும் மதம், ஜாதி பார்த்து தயாரிப்பது இல்லை. ஆனால், பெரும்பாலானோர் துலுக்கராக இருக்கும் போது, அவ்வாறே சொல்லப் படுகிறது. தில்லி முஸ்லிம்களின் அடவாடி, ஆபத்தான நடவடிக்கைகள் பற்றி கொஞ்சம்-கொஞ்சமாக ஊடகங்களில் பேச ஆரம்பித்து விட்டார்கள். செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன. அந்நிலையில், அதைப் பற்றி அதிகம் பேசாமல், அமைதி காத்து வருகிறார்கள். இதை யாரும் மதப்பிரச்சினசென்று யாரும் நினைக்கவில்லை. முஸ்லிம்கள் விவகாரங்களை வெளியில் சொல்லாமல், அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல், ரகசியமாக வைத்துக் கொண்டனர். தில்லி பிரச்சினை வெளியே வந்தவுடன், மற்ற விவரங்களும் வெளிவந்தன்ன. அந்நிலயில் தான், இவ்விவரங்கள் வெளிவந்தன. ஆகவே, மதம், நம்பிக்கை, சித்தாந்தம் என்றெல்லாம் இருந்தால் கூட உயிர் மீது ஆசை இருப்பவர்கள் அரசிடம் உண்மை சொல்ல வேண்டும். தற்கொலை படையாவதை விட, தன்னையும் காத்து, தன் குடும்பம், சமூகம், நாடு, உலகம்  என்று எல்லாவற்றையும் காக்க உண்மை சொல்லவேண்டும்.

©  வேதபிரகாஷ்

01-04-2020

Mxm attended Tabliq conf. TN, corona graphics

[1] பிபிசி.தமிழ், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு: டெல்லி மத நிகழ்வில் பங்கேற்ற 190 பேருக்கு தொற்று, ஏப்ரல்1, 2020, 7.48 PM

[2] தமிழ்.இந்து, டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பிய 523 பேரில் 50 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 124 ஆனது ,Published : 31 Mar 2020 09:09 PM; Last Updated : 31 Mar 2020 09:23 PM.

[3] https://www.hindutamil.in/news/tamilnadu/547208-coronal-infection-in-50-people-the-number-became-124-50-out-of-523-returned-to-tamil-nadu-after-attending-delhi-conference.html

[4] தினமணி, தமிழகத்தில் புதிதாக 110 பேருக்கு கரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 234-ஆக உயா்வு, By DIN | Published on : 02nd April 2020 04:17 AM

[5] https://www.dinamani.com/tamilnadu/2020/apr/02/corona-110-new-victims-in-tamil-nadu-3392835.html

[6] இந்தியன்.எக்ஸ்பிரஸ்.தமிழ், தமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா; மொத்தம் 234 – சுகாதாரத்துறை, WebDesk, April 01, 2020 08:23:38 pm

[7] https://www.bbc.com/tamil/india-52123727

[8] https://tamil.indianexpress.com/tamilnadu/beela-rajesh-110-new-corona-cases-in-tn-delhi-nizamuddin-covid-19-181157/

[9] https://www.covid19india.org/

Explore posts in the same categories: இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இந்தோனேசியா, இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய மாநாடு, இஸ்லாமியத் தீவிரவாதி, ஈரோடு, உயிர்கொல்லி, உரிமை, கோவிட்-19, தென் கொரியா, நிஜாமுத்தீன், நிஜாமுத்தீன் ஜமாத், நிஜாமுத்தீன் ஜமாத் மர்கஸ், பீலா ராஜேஷ்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: