பெண்ணுறுப்பு சிதைப்பு, பெண்கள் சுன்னத், கிளைடோரிடெக்டோமி தடுக்க போட்ட வழக்கு – இந்தியாவில் நிலைப்பாடு என்ன? [2]

 

பெண்ணுறுப்பு சிதைப்பு, பெண்கள் சுன்னத், கிளைடோரிடெக்டோமி தடுக்க போட்ட வழக்குஇந்தியாவில் நிலைப்பாடு என்ன? [2]

FMG - India demonstrates-13

செக்யூலரிஸ இந்தியாவில், பெண்கள் பிரச்சினையை மதப்பிரச்சினையாக மாற்றுவது: வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், பெண்ணின் உடலோடு ஒட்டிய பகுதியை மத நடவடிக்கை என்ற பேரில் ஏன் வெட்டி எடுக்க வேண்டும், இத்தகைய நடவடிக்கைகள் பெண்குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றங்களை தடுக்கும் போக்ஸா சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்தது[1]. இருப்பினும் இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை. பெண் சுன்னத் நட்டந்து கொண்டுதான்ன் இருக்கிறது. மேலும் தாவூதி போராஹ் வகுப்பினர் மத்தியில் இருந்த இதுபோன்ற பழக்கம் ஏற்கெனவே குற்றம் என்று தடை செய்யப்பட்டுள்ளது[2]. ஆனால், சுன்னிகள் இதை ஏற்றுக் கொள்ள வாட்டார்கள். இதையடுத்து ஒருவர் பெண்ணுறுப்பு சிதைப்பினை செய்துகொள்ள விரும்பவில்லை எனில், அதை செய்து கொள்ளும்படி யாரும் வற்புறுத்த முடியாது என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார்[3]. அவரைத் தொடர்ந்து பேசிய நீதிபதி சந்திரசூட் ஒரு பெண்ணின் உடலை மத அடையாளங்களுக்கு உட்படுத்துவதா?[4] எனவே, ஜூலை 16 ஆம் தேதிக்குள் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை, சுகாதாரத்துறை, சமூகநீதித்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத்துறை ஆகிய நான்கு அமைச்சகங்களும், மஹாராஸ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி ஆகிய நான்கு மாநில அரசுகளும் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது[5].FMG - India demonstrates-12

பெண்ணுறுப்பு அறுப்புபெண்கள் உன்னத்[6]: “ஃபீமேல் ஜெனிட்டல் மியுட்டிலேசன்” [Female Genital Mutilation] என்ற கொடுமைக்கு எதிரான நாளாக பிப்ரவரி-6 -ம் தேதியை 2016, ஐ.நா அறிவித்துள்ளது. ஆனால், பெண்ணிய போராளிகள் எல்லாம் கண்டுகொள்ளவில்லை போலும். ஃபீமேல் ஜெனிட்டல் மியுட்டிலேசன் என்றால் புரியாதவர்களுக்கு தமிழில் விளக்கம் ‘பெண் உறுப்பு சிதைவு’.  படிக்கும் பொழுதே பதற்றத்தை ஏற்படுத்தும் இந்த கொடிய செயல், ஆப்ரிக்க நாடுகளில் ஐம்பது சதவீத பெண்களுக்கு இன்று வரை வலுக்கட்டாயமாக நடத்துப்பட்டுவரும் ஒரு புனித சடங்கு என்றால் நம்ப சங்கடமாகத்தான் இருக்கும்[7]. 3000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து, இன்றும் மம்மி களாக பிரமிடுகளுக்குள் இருக்கும் பெண்களுக்கும் இந்த கொடுமை நடந்தேறியுள்ளது. ஆப்ரிக்கா நாடுகளான சோமாலியா, சூடான், எகிப்து, உகாண்டா, கானா, உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் பெண்களில், எழுபது சதவீதத்திற்கும் மேல் இப்படி பெண் உறுப்பு சிதைவுக்கு உட்பட்டவர்கள் என்பது அதிர்ச்சி தகவல். அதன் எதிரொலியாகத்தான் ஐ.நா சபை, பெண் உறுப்பு சிதைவிற்கு எதிரான நாளாக பிப்ரவரி-6ம் தேதியை அறிவித்துள்ளதுணப்படியென்றால், 06-02-2016, 06-02-2017 மற்றும் 06-02-2018 நாட்கள் எல்லாம் அமோகமாக கொண்டாடப் பட்டிருக்க வேண்டுமே, ஆனால், யாருமே கண்டுகொள்ளவில்லையே? கிறிஸ்துவ சமயத்தின் துவக்கத்திற்கு முன்பே, இஸ்லாமிய மதம் ஆப்ரிக்காவை அடைவதற்கு பல நுாற்றாண்டுகளுக்கு முன்பே, இந்த வழக்கம் பின்பற்றப்பட்டு வந்துள்ளது, என்று சையது அபுதாஹிர் எடுத்துக் காட்டினார்.

FMG - India demonstrates-11
பெண் சுன்னத் ஏன் செய்யப்படுகிறது?: பெண் உறுப்பு சிதைவு என்று இன்றைய உலகம் இதற்கு பெயர் சூட்டி இருந்தாலும், ஆப்ரிக்க நாடுகளில் கட்டாயமாக்கப்பட்ட இந்த சடங்கிற்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் பெண் சுன்னத். அதாவது இஸ்லாமிய மதத்தில் ஆண்களுக்கு சுன்னத் என்பது கட்டாயம். அதேபோல் பெண்களின் பிறப்புறுப்பில் செய்யப்படும் அறுவைசிகிச்சைக்கு பெயர்தான் பெண் சுன்னத். இஸ்லாமிய மதத்தில் ஆண்களுக்கு மட்டும்தான் சுன்னத் உள்ளதென அதன் மதகுருமார்கள் அறிவித்தாலும், ஆப்ரிக்க நாடுகளில் அதிகமாக இந்த வழக்கத்தை பின்பற்றுவதும் அதே இஸ்லாமிய சமூகம்தான். “பெண்கள் சைத்தானின் வடிவங்கள் என்று புனித நுால்கள் சொல்லியுள்ளது. அவர்களுக்கு பாலுணர்வு மட்டுமே இருக்கும். அந்த பாலுணர்வை கட்டுப்படுத்தி அவர்களை ஒழுக்கமான பெண்ணாக இருக்கச் செய்யத்தான் இந்த செயல்” என்று அர்த்தமற்ற விளக்கத்தை அதற்கு காரணமாக அவர்கள் சொல்கிறார்கள்.

FMG - India demonstrates-10
எப்பொழுது செய்யப்படும்?: இந்த பெண் உறுப்பு சிதைவு என்பதை பெண்கள் பருவம் அடையும் முன்பே செய்துவிட வேண்டும் என்பது இதற்கு எழுதப்படாத விதி. அதாவது ஐந்து வயது முதல் ஏழுவயதிற்குள் இந்த சடங்கை முடித்துவிட வேண்டும். ஓடி விளையாடும் சிறுமியை பிடித்துவந்து வலுக்கட்டாயமாக இந்த செயலை அரகேற்றியபின் தான் அவள் துாய்மையடைந்துவிட்டாள் என்று அந்த சிறுமியின் தாய் பெருமை பேசுவார். பெண்ணின் பிறப்புறுப்பில் இருக்கும் “க்ளிட்டோரியஸ்” என்ற பகுதிதான் பெண்ணிற்கான உணர்ச்சி கூறுகள். பெண்ணின் பாலுணர்வு ரீதியான உந்துதலுக்கு இதுதான் முதல் காரணமாக இருக்கின்றது. இதை அறுத்து விட்டால் அந்த பெண்ணிற்கு பாலுணர்வு குன்றிவிடும் என்ற கருத்துதான் இந்த வன்கொடுமைக்கு அடிப்படையாக இருந்துவருகிறது. ஆணுக்கு இப்படி, பெண்ணுக்கு அப்படி எப்படி என்பது எப்படி என்று தெரியவில்லை. இதெல்லாம் உண்மையா-பொய்யா ஏன்ற சோதித்துப் பார்த்தனரா?

FMG - India demonstrates-14
சடங்கு எப்படி செய்யப்படுகிறது?: அறுப்பது என்றால் முறையாக மருத்துவமனையில் மயக்க மருந்து கொடுத்து அல்ல; விளையாடி கொண்டிருக்கும் சிறுமியை சாப்பிட அழைப்பது போல் “இங்கே வா” என்று அழைத்து, நடக்கப் போகும் கொடுமையை அந்த சிறுமி பார்க்க கூடாது என்பதற்காக அந்த பெண்ணின் கண்ணை பொத்தி, அவளை இருட்டு உலகிற்கு கொண்டு சென்று, அதன் பின் சிறுமியின் கதறலோடு இந்த பாதக செயலை செய்கின்றனர். சாதாரணமாக சவரம் செய்யும் பிளேடுதான் இந்த ஆபரேசனுக்கு பயன்படுத்தப்படுகிறது. க்ளிட்டோரியஸ் என்ற மேல் தோலை, ஆட்டை அறுப்பது போல் அறுத்து வீசிவிடுவது இதன் முதல் படி. அதற்கு அடுத்தது “லேபியா பிளாஸ்டர்” என்று சொல்லப்படும் பெண்ணுறுப்பு உதட்டுப் பகுதியை அறுத்து எடுத்து, அதன் பின் “வெஜைனா பிளாஸ்டி” என்று சொல்லபடும் பெண்ணுறுப்பை சிறு துளை மட்டும் விட்டு, துணி தைக்கும் நூலால் தைப்பது என்ற மூன்று நிலைகளில் இது செய்யப்படுகிறது. அறுப்பது முதல் தைப்பது வரை இத்தனை விஷயங்களையும் அரங்கேற்றுவது ஒரு மருத்துவர் அல்ல; அந்த ஊரில் இதற்கென ‘வாழ்ந்துகொண்டிருக்கும்’ பெரிசுகள் அல்லது அந்த சிறுமியின் தாய். இந்த சடங்கை சங்கடம் இல்லாமல் செய்து முடிக்கின்றார்கள்.

FMG - India demonstrates-9
40 நாட்களுக்குப் பிறகு தூய்மை வரும்: அனைத்தும் முடிந்த பின், அந்த பெண்ணின் கால்களை அகட்ட முடியாத அளவிற்கு கட்டிப் படுக்க வைத்துவிடுவார்கள். நாற்பது நாட்கள் கழித்தால்தான் அந்த புண் ஆறும் என்பது அவர்கள் கணக்கு. புனித சடங்கு முடித்த உற்சாகத்தில், வழிந்தோடிய குருதி படிவை தண்ணீரால் கழுவி விட்டு, அந்த வீட்டில் சடங்கு விருந்து நடத்தும் நிகழ்வு இன்றும் ஆப்ரிக்க நாடுகளில் இருக்கும் கிராமங்களில் நடந்து வருகின்றன. இந்த பாதக செயலை செய்தால்தான், அந்த பெண்ணின் உடலில் உள்ள துர்நாற்றம் போய் அவளுடைய மேனி அழகு பெற்று, திருமணம் செய்யும் பொழுது பாலுணர்வு அதிகரிக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். தைக்கப்பட்ட நுாலை அந்த பெண் திருமணம் செய்த பின் அவளின் கணவன் அறுத்தால்தான் அந்த பெண்ணின் கன்னித்தன்மைக்கு தரப்படும் சான்று. ஆனால் சில நாடுகளில் க்ளிட்டோரியஸை அறுப்பதோடு நிறுத்திவிடுகின்றனர்.

FMG - India demonstrates-8
செக்யூலரிஸ இந்தியாவில் இதை ஏன் மத சடங்காக கருத வேண்டும்?: மதச்சடங்கு என்ற பெயரில் காலங்காலங்கமாக இந்த கொடுமை நடந்தேறி வந்தாலும், இது குறித்து பெரிய அளவிலான எதிர்ப்புகள் உலக அளவில் ஏற்படாமல் இருந்து வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் எகி்ப்தில் இந்த கொடூர சடங்கிற்கு ஆளான பெண் மரணம் அடைந்து, அது மிகப்பெரிய போராட்டமாக வெடிக்க, அதன் பின் அந்த நாட்டில் இந்த சடங்கிற்கு தடை செய்யப்பட்டது. ஆப்ரிக்கா நாடான உகாண்டாவில், ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் “இது பெரிய விழாவாக கொண்டாடப்பட்டும். அந்த ஒரு மாதத்தில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேலான பெண்களுக்கு பெண் உறுப்பு சிதைவு நடந்தேறும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கும் இதற்கு தடை வந்து விட்டது.

FMG - India demonstrates-16
.நா ஒப்புக்கொண்ட உண்மை: ஐ.நா. சபை பெண்களுக்கு எதிரான இந்த வன்கொடுமையை முற்றிலும் தடைசெய்யும் நோக்கில், ஆப்ரிக்க நாடுகளுக்கு பல முறை அழுத்தம் கொடுத்துவிட்டன. சமூக மாற்றமும், பெண் கல்வியும் இந்த முறைக்கு எதிரான மனோபாவங்களை ஏற்படுத்தி இருந்தாலும், பழங்குடி மக்களிடையே இருக்கும் இந்த பழக்கத்தை இதுவரை முற்றிலும் தடைசெய்யமுடியவில்லை என்று ஐ.நா சபையே ஒப்புக்கொண்டுள்ளது. இந்த பெண் சிதைவுக்கு உட்பட்ட பெண்களை வைத்தே பல பிரச்சாரங்களை தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டுவருகின்றன. இந்த பெண்சிதைவுக்கு ஆளானவர்கள் சுமார் 20 கோடிக்கும் அதிகமாக இருப்பார்கள் என்கிறது ஐ.நா சபையின் கணக்கு. நாடாளும் சக்தியாக பெண்கள் உருவாகி வரும் இந்தநாளில், இன்றும் எங்கோ ஒரு சிறுமிக்கு பெண் உறுப்பு சிதைவு நடைபெற்றுவருவது வேதனைக்குரிய முரண். ஆனால், பெரியார் பிறந்த மண்ணிலேயே, பெரியாரிஸ்டுகள் கூட பொத்திக் கொண்டு இருந்தது முரணாக இல்லை போலும்!

© வேதபிரகாஷ்

13-07-2018

FMG - India demonstrates-15

[1] The Week, Female Circumcision: ‘Should religious purity involve cutting a body part?’, Mini P Thomas By Mini P Thomas July 13, 2018 17:16 IST

[2] https://www.theweek.in/leisure/society/2018/07/13/female-genital-mutilation-should-religious-purity-involve-cutting-a-body-part.html

[3] https://tamil.news18.com/news/national/why-should-the-bodily-integrity-of-a-woman-be-subject-to-some-external-authority-sc-33235.html

[4] தமிழ்.ஒன்.இந்தியா, பெண் உறுப்பு சிதைப்பு சடங்கிற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விவீடியோ, By : Oneindia Tamil Video Team Published : July 10, 2018, 11:39

[5] https://tamil.oneindia.com/videos/no-one-can-violate-the-integrity-and-the-bodily-privacy-of-a-woman-323004.html

[6] விகடன், உயிரைக்குடிக்கும் பெண் உறுப்பு சிதைவு சடங்குஇன்றும் தொடரும் கொடூர வழக்கம்!, – அ.சையது அபுதாஹிர்,  Posted Date : 13:59 (06/02/2016) Last updated : 15:14 (06/02/2016).

[7] https://www.vikatan.com/news/coverstory/58646-anti-female-genital-mutilation-day.html

Explore posts in the same categories: அச்சம், அடிமை, அடிமைத்தனம், அடையாளம், அறுப்பு, அழிவு, அழுகை, செக்ஸ் அடிமை, பாலியல் அடிமை

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: