செக்யூலரிஸ உடலுறவா, கற்பழிப்பா, எந்த வகையில் ஜைனுல் ஆபிதீன் லீலைகள் இந்திய சட்டங்களில் வரும்-வராது அல்லது, ஷரீயத்தில் தப்பி விடுமா? ஜமாத்தில் சமாதி கட்டப்படும் சட்டமீறல்கள் [2]
செக்யூலரிஸ உடலுறவா, கற்பழிப்பா, எந்த வகையில் ஜைனுல் ஆபிதீன் லீலைகள் இந்திய சட்டங்களில் வரும்-வராது அல்லது, ஷரீயத்தில் தப்பி விடுமா? ஜமாத்தில் சமாதி கட்டப்படும் சட்டமீறல்கள் [2]
ஜைனுல் ஆபிதீனுக்குப் பிறகு பொறுப்பை ஏற்றுள்ள அப்துல்கரீம்: 20 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமிய சமூகத்தில் பல்வேறு முற்போக்குக் கருத்துகளை எடுத்துவைத்து தனி செல்வாக்குடன் வலம் வந்தவர் பி.ஜெ. ‘‘தவ்ஹித் ஜமாத்துக்கு என்று தனி பள்ளிவாசல், தனி நிர்வாகம் என சகலமும் இருக்கின்றன. தவ்ஹித் ஜமாத்தின் மீடியா நிர்வாகம் முழுவதும் பி.ஜெ கட்டுப்பாட்டிலேயே இருந்துவருகிறது. ஏற்கெனவே பி.ஜெ–வுடன் முரண்பட்ட பலர் இதேபோல குற்றச்சாட்டை சந்தித்து வெளியேற்றப்பட்டனர்’’ என்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து பி.ஜெ-வின் கருத்துக் கேட்க முயன்றோம். அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை[1]. தவ்ஹித் ஜமாத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அப்துல் கரீமிடம் பேசினோம்[2]. “எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணை நடத்தினோம். அதில் குற்றம் நிரூபணமானது. அதனால், பி.ஜெ–வை அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கியுள்ளோம். முதலில் வெளியான ஆடியோ குறித்து எங்களிடம் யாரும் புகார் தரவில்லை. எனவே அதனை நாங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கையை ரமலான் மாதத்துக்குப் பிறகு பொதுக்குழுவில் பேசி முடிவெடுக்க உள்ளோம். பி.ஜெ இல்லையென்றாலும் எங்களது சமூக, மார்க்கப் பணிகள் தொய்வில்லாமல் நடைபெறும். இந்த அமைப்பை நிறுவிய தலைவர்மீதே நடவடிக்கை எடுத்துள்ளோம் என்பதிலிருந்தே, எங்கள் அமைப்பின் தனித்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்’’ என்றார் சிம்பிளாக.- அ.சையது அபுதாஹிர்.
பாக்கர்–ஆபிதீன் லடாயும், இரண்டாகப் பிரிந்த டி.என்.டிஜேயும்: 2009ல் எஸ்.எம்.பாக்கர் மற்றும் ஜெயினுல் ஆபிதீனுக்கு இடையில் வேறுபாடு உண்டாகி, ‘தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்‘அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன் உடைந்து ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்’ என்ற புது இயக்கம் உருவானது. பிற்றகு, அதுவும் உடைந்து ‘இந்திய தவ்ஹீத் ஜமாத்‘என்றொரு புது அமைப்பு உதயமாகியிருக்கிறது. ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்‘அமைப்பில் பொதுச் செயலாளராக இருந்த எஸ்.எம்.பாக்கர் மீது செக்ஸ் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் சொல்லி அவரையும் வேறு சிலரையும் அமைப்பின் பொறுப்பிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். நீக்கப்பட்ட பாக்கர், ‘இந்திய தவ்ஹீத் ஜமாத்‘தைத் தொடங்கினார். தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் நிறுவனத் தலைவர் பி.ஜெயினுல் ஆபிதீனிடம் பேசினோம் [ஜூனியர் விகடன்]. ”பாக்கர் மீது புகார்கள் வரத் தொடங்கியதுமே அவரை ஒதுங்கி யிருக்கச் சொன்னோம். அவரோ,மேலும் பண மோசடிகளில் இறங்கினார். விண் டி.வி. முதலீட்டில் இரண்டே கால் கோடி ரூபாய் உட்பட பல கோடி ரூபாய் அவர் மோசடி செய்திருக்கிறார். நிலங்களை விற்றதிலும் அவர் மீது புகார்கள் வந்திருக்கிறது. ரியல் எஸ்டேட் என்கிற பெயரில் ஒருவரிடம் இரண்டு கோடி ரூபாய் வாங்கியிருக்கிறார். இதையெல்லாம் ஆதாரபூர்வமாகக் கண்டுபிடித்தோம். அவர் நடத்திய ஹஜ் சர்வீஸிலும் ஒழுங்காக நடந்துகொள்ளவில்லை. இத்தகைய காரணங்களால்தான் அவரை நீக்கி னோம்.”
பரஸ்பர குற்றச்சாட்டுகளா, திட்டம் போட்டு, தப்பித்துக் கொள்ள கடைபிடிக்கும் யுக்தியா?: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஒன்றாக, இரண்டாக பிரிந்தால், இழைத்த குற்றங்கள் போய் விடுமா? கற்பழிக்கப் பட்ட பெண்கள் க்ற்பைத் திரும்பப் பெற்று விடுவார்களா? ஆனால், இங்கும், சட்டப் படி என்னவாயிற்று என்று யாருக்கும் தெரியாது. இருவர் மீதும் ஒரே மாதிரியான குற்றச்சாட்டுகள் – பாலியல் புகார், பெண்களுடன் தொடர்பு, பண மோசடி…..பிறகு, முறைப்படி நடவடிக்கை எடுக்காமல், கட்சிகள் போல உடைவதால், குற்றங்கள் மறைக்கப் படுகின்றன என்றாகிறது. இது பரஸ்பர குற்றச்சாட்டுகள் என்பதை விட, ஏதோ, ஒரு திட்டம் போட்டு, தப்பித்துக் கொள்ள கடைபிடிக்கும் யுக்தி என்றே தெரிகிறது. போலீஸைப் பொறுத்த வரையில், புகார் கொடுக்காமல், அவர்கள் வழக்கு பதிவு செய்ய மாட்டார்கள். ஆகவே, இந்தியாவிற்குள் வாழ்ந்து, இந்தி சட்டங்களில் சிக்காமல் வாழும், இந்த இந்திய குடிமகன்களை நினைத்தால் தமாஷாகத் தான் உள்ளது.
கற்பழிப்பு சாமியார்களுக்கு எல்லாம் சட்டத்தின் படி நட்டவடிக்கை எடுக்க வேண்டும்: ஜைனுல் ஆபிதீன் ராம் ரஹீமை விட எப்படி வேறுபட்ட சாமியாராக இருக்க முடியும்? இல்லை நித்தியானத்தாவை விட மாறுபட்ட வழக்காக, இவரது நிலை உள்ளதா? சட்டத்திற்கு முன்பாக எல்லோரும் சமம் என்றால், இவர் மீதும், அதே முறையில் போலீஸார் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. ஒரு வருடமாக அவர்களே, தங்களுக்குள் விவாதித்துக் கொண்டு, முதலில் மறுத்து, பிறகு ஒப்புக் கொண்டு, மே 2018 வரை இழுத்துள்ளனர். இதில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. போலீஸுக்கு செல்ல்லாமல், ஜமாத்தில் முடிவெடுப்போம் என்றால், அது இந்திய சட்டங்களையே அவமதிப்பதாகும். இத்தகைய முறை எவ்வாறு செயல்படுகிறது, அரசாங்கத்திற்கு தெரியுமா-தெரியாதா, தெரிந்தால் ஏன் அமைதியாக இருக்கிறது போன்ற கேள்விகளும் எழுகின்றன. தீவிரவாதிகள் விசயங்களிலும், இவர்கள் இவ்வாறு இருப்பதினால், பலர் தீவிரவாதத்தில் இருப்பதே தெரியாமல் போகிறது. பிறகு மாட்டிக் கொள்ளும் போது தெரிகிறது. பிஜே விசயமும், இப்பொழுது அப்படியாகி விட்டது. “சுயோ மோடோ” முறையில், “தேசிய மகளிர் ஆனையம்” சட்டமீறல்களை எடுத்துக் கொண்டு, விசாரிக்க ஆணையிடுகிறதே, இவ்விசயத்தில் மௌனமாக இருப்பது ஏன்?
நிச்சயமாக செக்யூலரிஸவாதிகளின் போலித்தனம் வெளிப்படுகிறது: இந்தியாவில் “செக்யூலரிஸம்” என்றால், துலுக்கர், கிருத்துவர் இந்திய சட்டங்களில் வரமாட்டார் என்ற நிலையை உருவாக்கியுள்ளனர். சட்டம், நீதிமன்றம், போலீஸார் என்று எல்லோருமே, அவர்களைக் கண்டு கொள்வதில்லை. பெர்ரிதாக பிரச்சினை வரும் போது தான், நடவடிக்கை எடுக்கின்றனர். ஊடகங்களும் அவ்வாறே இருக்கின்றன. சட்டமீறல்களை, ஒரே மாதிரியாக அவை அணுகுவதில்லை.
- பிஜே, ஜைனுல்ஆபிதீன்பாலியல்விவகாரம், மற்றஅதிரடிசெய்திகளால்மறைக்கப்பட்டுவிட்டன, டிவிசெனல்களும்கண்டுகொள்ளவில்லைபோலும்.
- இந்தியாவில்பாலியல்-செக்ஸ்விவகாரங்கள்கூடசாமியார்கள்விசயங்களில் “செக்யூலரிஸ” மயமாக்கப்பட்டுள்ளதுபோலும்!
- துலுக்கர்-கிருத்துவர்களுக்குஎல்லாம்நீதிமன்றம்முதலியவைதேவையில்லை, அவர்களேபேசித்தீர்த்துக்கொள்வர், அல்லதுநீக்கிவைப்பர்போலும்.
- ஆபாச ஆடியோ குறித்து பி.ஜெ-விடம் அமைப்பின் உயர்நிலைக் குழு விசாரணை நடத்தியபோது, ‘பேசியது நான்தான்’ என ஒப்புக்கொண்டுள்ளார்.
- இதேபோல் 13 பெண்களிடம்பி.ஜெஆபாசமாகப்பேசியுள்ளதோடு, அவர்களுடன்தொடர்பில்இருந்ததற்கானஆதாரங்களும்எங்களிடம்உள்ளன – இப்ராஹிம்.
- சன்-டிவிஏன்இந்தஆடியோ-வீடியோக்களைவெளியிடவில்லை? நித்தியானந்தாபுகழ் – லெனின்குருப்புக்குதெரியவில்லையா?
- 13 பெண்களின்கதி, அவர்களின்குடும்பங்கள்கதிஎன்ன?, பெண்ணியவீராங்கனைகள்ஏன், எப்படி, எவ்வாறுபொத்திக்கொண்டுஇருக்கிறார்கள்?
- கற்பழிப்பாளிகளுக்கு, இவ்வாறுவெவ்வேறுமுறைகளில்தண்டனைகொடுக்கலாம், கூடாதுஎன்றெல்லாம், செக்யூலரிஸஇந்தியாவில்இருக்கமுடியுமா?
- இனி “யூனிபார்ம்கிரிமினல்கோட்” [Uniform Criminal Code] எடுத்துவரவேண்டும்என்றுஇந்துத்துவவாதிகள்கேட்பார்களா?
- ஹரியோ, வர்த்தினியோ, பாண்டேயோ, புதியதலைமுறைஇத்யாதிகள், இதைப்பற்றிஒன்றும்கண்டுகொள்ளவில்லையோ?
© வேதபிரகாஷ்
29-05-2018
[1] தி.இந்து, ஜெய்னுல் ஆபிதீன் மீது நடவடிக்கை ஏன்?: தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் விளக்கம்– உயர் நீதிமன்றத்தில் வழக்கு; டிஜிபியிடம் புகார், Published : 16 May 2018 09:02 IST; Updated : 16 May 2018 09:04 IST.
[2] http://tamil.thehindu.com/tamilnadu/article23899778.ece
Explore posts in the same categories: ஃபத்வா, அச்சம், அடிமை, அழகிய இளம் பெண்கள், அவதூறு, செக்ஸ், செக்ஸ் தொல்லை, ஜெயினுல் ஆபிதீன், ஜைனுல் ஆபிதீன், தௌவீத் ஜமாத், தௌஹித் ஜமாத், தௌஹீத், தௌஹீத் ஜமாத், பாலியல் குற்றம், பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, பெண்ணியம், பெண்ணுரிமை, பெண்மை
குறிச்சொற்கள்: இஸ்லாம் செக்ஸ், செக்ஸ் புகார், ஜெயினுல் ஆபிதீன், ஜைனுல் ஆபிதீன், தௌவீத் ஜமாத், தௌஹித் ஜமாஅத், தௌஹித் ஜமாத், தௌஹீத், தௌஹீத் ஜமாத், மௌல்வி செக்ஸ்
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்