“தலித்-முஸ்லிம்” மோதல்கள் [24-04-2018, 05-05-2018], இழப்பீடு அறிவிப்பு 07-05-2018 மற்றும் 12-05-2018 அன்று திருமாவளவனின் தாமதமான விஜயம் (3)
“தலித்–முஸ்லிம்” மோதல்கள் [24-04-2018, 05-05-2018], இழப்பீடு அறிவிப்பு 07-05-2018 மற்றும் 12-05-2018 அன்று திருமாவளவனின் தாமதமான விஜயம் (3)
07-05-2018 அன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு அறிவிக்கப் பட்டது[1]: தேசிய ஆதி திராவிட ஆணையத்தின் துணைத் தலைவர், எல்.முருகன், 07-05-2018, திங்கள்கிழமை விசாரணை நடத்தினார், அன்றே அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு அறிவித்தார்[2]. ஆனால், ஊடகங்களை இச்செய்தியை அமுக்கி வாசித்தன. ஆங்கில ஊடகங்கள் அடுத்த நாள் செய்தியாக வெளியிட்டன. அதாவது, அரசு தரப்பில், உடனடியாக நடவடிக்கை எடுத்தாகி விட்டது. மேலும், இவர் பிஜேபியின் சார்பில் நியமிக்கப் பட்டவர் என்று தெரிகிறது. இருப்பினும், இதெல்லாம் சகஜமான விசயம் தான், ஏனெனில், அந்தந்த அரசு பதவிக்கு வரும்போது, இத்தகைய “நியமனங்கள்” எல்லாம் எல்லாதுறைகளிலும், பரிந்துரை பேரில் நடந்து வருகிறது. 70 ஆண்டுகளாக மத்தியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் மற்றும் மாநிலங்களில் திராவிடக் கட்சிகள் அந்த பலனை அனுபவித்துள்ளன. ஆனால், திருமாவளவன், அந்த நேரத்தில் தில்லிக்கு, அரசியல் செய்ய, கூட்டணி பேரம் பேச சென்று விட்டதால், இங்கு வரத் தயங்கினார். அதே நேரத்தில், கிருஷ்ணசாமி வேறு, தங்களது ஜாதியினருக்கு “பட்டியிலின” அந்தஸ்து தேவையில்லை என்று அறிவித்தார்[3]. புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு, விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர் பகுதியில் 06-05-2018 அன்று, கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், எஸ்.சி பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளர் வெளியேற வேண்டும் எனப் பிரகடனம் வெளியிடப்பட்டது[4]. இதெல்லாம் திருமா-துலுக்கக் கூட்டை அதிர வைத்தது. ஆக, அவர்கள், போலீஸாரிடம் புகார் கொடுப்போம் என்று கிளம்பினர்.
09-05-2018 அன்று போலீஸாரிடம் புகார் கொடுக்க வந்த அரசியல் கட்சியினர்: தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில், கடந்த 24-04-2018 மற்றும் 05-05-2018 தேதிகளில் “தலித்-துலுக்கர்” இடையே மோதல் ஏற்பட்டு, கல்வீச்சு சம்பவம் நடந்தது. திருமாவளவனே, “துலுக்கப்பட்டி” என்ற உண்மையை ஒப்புக் கொண்டுவிட்டதால், இனி, “துலுக்கர்” என்று கூட உபயோகிக்கலாம். பட்டியல் இனத்தவர், எஸ்சி, தலித் வசிக்கும் இடம் காலனி என்றால், துலுக்கர் வசிக்கும் இடம் துலுக்கப்பட்டி ஆகிறது. ஆனால், ஊடகங்கள், “இதுதொடர்பாக இருதரப்பினர் மீதும் தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்”, என்று தான் எழுதுகின்றன. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் எல்லாளன், தேனி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், மாவட்ட செயலாளர் நாகரத்தினம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அகமது முஸ்தபா மற்றும் நிர்வாகிகள் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு 09-05-2018 அன்று வந்தனர்[5]. விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இஸ்லாமிய நலக் கூட்டமைப்பு சார்பில் அவர்கள், பொம்மிநாயக்கன்பட்டி பிரச்சினை தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
மாவட்ட கலெக்டர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய கோரிக்கை: அந்த மனுவில், ‘பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தால் போலீஸ் துறைக்கு பயந்து இருதரப்பிலும் ஆண்கள் வெளியூர்களுக்கு சென்று விட்டனர். இரு பகுதியிலும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மட்டும் இருக்கிறார்கள். இக்கிராமத்தில் இயல்பு நிலைக்கு திரும்ப இருதரப்பு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் மாவட்ட கலெக்டர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று கூறியிருந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க சென்றனர். கலெக்டரிடம் மொத்தமாக சென்று மனு அளிக்க அனுமதி வழங்கப்படவில்லை என்றும், மூன்று பேர் மட்டும் மனு அளிக்க அலுவலகத்துக்குள் செல்லுமாறும் அங்கிருந்த அலுவலர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கலெக்டர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். இதனால், மனு அளிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்து மக்கள் கட்சி, இந்து எழுச்சி முன்னணி சார்பில் மனுக்கள்: இதேபோல், இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் ஒரு மனு அளித்தனர். அப்போது இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் ராமராஜ் மற்றும் நிர்வாகிகளும் உடன் இருந்தனர். அந்த மனுவில், ‘பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் இறந்த பெண்ணின் இறுதி ஊர்வலத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடு தாக்குதல் நடத்தி, கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்துக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து அமைதியாக வாழ வழிவகை செய்யவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர். முன்னதாக, கலவரத்தில் காயம் அடைந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிற கலைச்செல்வனை, இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்[6]. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “இருபிரிவினருக்கிடையே நடந்த மோதலில் காயமடைந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். சேதமடைந்த கடைகள், வீடுகளை சீரமைத்து கொடுக்க வேண்டும். கலவரத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களை நேரில் சந்தித்து திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. நடிகர் ரஜினிகாந்த் உரிய நேரத்தில் அரசியல் அறிவிப்பை வெளியிடுவார். அவரது கட்சி சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை இந்து மக்கள் கட்சி ஆதரிக் கும்”, என்றார்[7].
12-05-2018 அன்று திருமாவளவன் விஜயம்: 01-05-2018 அன்று ராகுல், யச்சூரி முதலியவர்களை சந்தித்தப் பிறகு, கூட்டணி பற்றி பேசுவதற்கே நேரமில்லாத திருமாவுக்கு, பொம்மிநாயக்கன்பட்டியில், எஸ்சிக்கள் கொதித்து போயிருக்கிறார்கள் என்பதனை அறிந்தார். எப்படியாவது, அவர்களை சென்று பார்க்க வேண்டி முக்கியமான செயலர்கள் மற்றும் தொண்டர்கள் அறிவித்தனர். ஆனால், முஸ்லிம் தரப்பில் அவரைத் தடுக்க பார்த்தனர். இந்நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் தெரிவிப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 12-05-2018 அன்று காலை 10.15 மணி அளவில், பொம்மிநாயக்கன்பட்டி சென்றார். அவருடன் ஏராளமான நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் இந்திராகாலனிக்கு சென்றனர். பாதிக்கப்பட்ட தலித் மற்றும் இஸ்லாமிய மக்களை நேரில் சந்தித்தார். பாதிக்கப்பட்ட தலித் மக்களிடம் நடந்த கலவரத்துக்கு வருத்தம் தெரிவித்ததுடன், ஆறுதலும் கூறினார். அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் சிலர், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கலவரம் நடந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆனநிலையில் தற்போது தான் வழி தெரிந்ததா? இவ்வளவு நாள் எங்கே சென்றீர்கள்? என்று அவரிடம் கேள்வி கேட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து திருமாவளவனுடன் வந்த தொண்டர்கள், அந்த பெண்களை சமதானப்படுத்தினர். இங்கு திருமா சேரில் உட்கார்ந்திருக்கிறார், இருக்கமான முகத்துடன் கையைக் காட்டி பேசுகிறார். அவர்கள் எல்லோரும், தனது தொண்டர்கள் என்ற மனப்பாங்கில் நடந்து கொண்டது தெர்கிறது.
மசூதிக்கு சென்று குல்லா போட்டு சந்தித்த திருமாவளவன்: பின்னர் அங்கிருந்து பகல் 12.45 மணி அளவில் புறப்பட்ட திருமாவளவன் பள்ளிவாசலுக்கு சென்றார். அங்கு அவரை ஜமாத்தார்கள் வரவேற்றனர். “துலுக்க குல்லா” போட்டு அவர் பேசியது விசித்திரமாக இருந்தது. “இந்துக்களிடம்” பேசும்போது, அத்தகைய சின்னங்களை தரித்துக் கொள்ளாத நபர், துலுக்கரிடம் செல்லும் போது குல்லா போடுவது, செக்யூலரிஸத்தை ஏமாற்றுகிறது. மேலும் சுமார் 4ஒ நிமிடங்கள் முஸ்லிம்கள் சூழ மசூதியில் தரையில் உட்கார்ந்து கொண்டு, ஒரு முஸ்லிம் தலைவர் சொல்லியதை சாகவாசமாக உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்ததை ஒரு வீடியோ எடுத்துக் காட்டுகிறது[8]. இடது பக்கம் சாய்ந்து உட்காருவது, தண்ணீர் குடிப்பது போன்றவற்றைக் கவனிக்கலாம். முஸ்லிம் “இந்துக்கள்”, மீது அளந்த குற்றச்சாட்டுகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு, இறுதியில், திருமா “அந்த பக்கம் நாலுன்னா, இந்த பக்கம் ரெண்டுன்னு பேசித்தான் இருப்பாக்க…….நாம் தான் சுமுகமாக இருக்கணும்,” என்ற ரீதியில் பேசும் போது, அவ்வீடியோ முடிந்து விடுகிறது. பின்னர், அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து திருமாவளவன் ஆறுதல் கூறினார். அதேபோல பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களின் வீடுகளுக்கும் சென்று அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். சுமூக முடிவு எடுக்க அறிவுறுத்தல் இரு தரப்பு மக்களின் குறைகளையும் கேட்டறிந்த பின்னர் சம்பவம் தொடர்பாக அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளதாக நம்பிக்கை அளித்தார். மேலும் இரு தரப்பினரும் தங்களின் உள்ளார்ந்த பிரச்சினைகளை நயமாக பேசி தங்களுக்குள் சுமூக முடிவுகளை எடுத்து கொள்ளுமாறும் திருமாவளவன் அறிவுறுத்தினார்[9].
© வேதபிரகாஷ்
13-05-2018
[1] Business Standard, Theni clashes: Compensation for Dalit victims announced, ANI | Theni (Tamil Nadu) [India], Last Updated at May 10, 2018 00:45 IST.
[2] In the aftermath of the recent clashes between Dalits and Muslims in Tamil Nadu’s Theni district, the National Scheduled Cast Commission (NSCC) has announced a compensation for the damages caused to Dalit houses by police while conducting searches and security drills in the area.
[3] விகடன், ”எனக்கும் பி.ஜே.பி–க்கும் எந்தத் தொடர்பும் கிடையாது” மாநில மாநாட்டில் கிருஷ்ணசாமி பேச்சு!, அருண் சின்னதுரை அருண் சின்னதுரை ஆர்.எம்.முத்துராஜ், Posted Date : 05:30 (07/05/2018) Last updated : 07:30 (07/05/2018).
[4] https://www.vikatan.com/news/tamilnadu/124297-krishna-samy-says-he-has-no-link-with-bjp.html
[5] தினத்தந்தி, கலவரம் நடந்த பொம்மிநாயக்கன்பட்டியில் கலெக்டர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், மே 10, 2018, 04:00 AM.
[6] https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/05/10002941/In-pomminayakkanpatti-Riots-The-peace-talks-should.vpf
[7] இந்த உதிரிகட்சியும் அரசியல் நோக்கில் வந்துள்ளது என்ரு தெரிகிறது. ஏனெனில், ரஜினி அரசியலை இங்கு சேர்த்துப் பேச வேண்டிய அவசியம் இல்லை.
[8] https://www.youtube.com/watch?v=Ujt3-PordME
[9] இவ்வீடியோவில் விவரங்களை பார்க்கலாம் – https://www.youtube.com/watch?v=CNt8Rq9My2Y
Explore posts in the same categories: அடிமைத்தனம், அடையாளம், அரசு நிதி, அவதூறு, இந்து எழுச்சி முன்னணி, சமரசம், துலுக்கப்பட்டி, தேனி, பள்ளிவாசல், பிண ஊர்வலம், பேச்சு வார்த்தை, பேச்சுவார்த்தை, பொம்மிநாயக்கன்பட்டி, மசூதி தெரு, மதமாற்றம், மதவாதம், முஸ்லிம் காலனி, முஸ்லிம் தெரு, முஸ்லிம் பெண்கள், முஸ்லீம்களின் வெறித்தனம், முஸ்லீம்தனம், மோதல், வன்முறை, விசாரணை, விடுதலை சிறுத்தைகுறிச்சொற்கள்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, இந்து, இந்து மக்கள் கட்சி, இஸ்லாம், கிருஷ்ணசாமி, தலித், தலித் அரசியல், தலித் இந்து, தலித் முஸ்லீம், திருமா வளவன், திருமாவளவன், துலுக்கப்பட்டி, தேனி, தேவதானப்பட்டி, தேவேந்திரகுலம், பொம்மிநாயக்கன்பட்டி, விடுதலை சிறுத்தை
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்