திருமா வளவனின் இந்து-விரோத பேச்சு – துலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு – தருக்கம் என்று மழுப்பியதிலும் பொய்மை, ஆணவம் வெளிப்பட்ட நிலை (2)

திருமா வளவனின் இந்துவிரோத பேச்சுதுலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு – தருக்கம் என்று மழுப்பியதிலும் பொய்மை, ஆணவம் வெளிப்பட்ட நிலை (2)

Tiruma wanted Hindu temples demolished-DK, and anti-hindu groups

திருமாவிற்கு எதிராக எழுந்த கண்டனங்கள்: இதற்கு தொடர்ந்து கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், இந்தப் பேச்சு வருத்தமளிக்கும் விதத்தில் இருப்பதாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாலர் ஈஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்[1]. அந்த அறிக்கையில், கோவில்களை இடிக்க வேண்டும் திருமாவளவனின் பேச்சு மிகுந்த வருத்தமளிக்கிறது. புத்த மதத்தை சார்ந்தவர்களே இப்படிப்பட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சாதியையும், மதத்தையும், வழிபாட்டையும் அரசியல் லாபத்திற்காக எந்தவொரு தலைவரும் கொச்சைப்படுத்தி பேசுவதை தவிர்க்க வேண்டும். சிவனையும், பெருமாளையும் வழிபடுபவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் இல்லாமல் இல்லை. வழிபாடு என்பது எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அது அவர்களுடைய தனிப்பட்ட சுதந்திரம். ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதை யாரும் விரும்பமாட்டார்கள். எந்தவொரு உணர்ச்சி வேகத்திலும் சாதி, மதம் பற்றியோ, கடவுள் வழிபாடுகளை பற்றியோ அரசியல் கட்சி தலைவர்கள் பேசுவதை இவ்வளவு விழிப்புணர்வு அடைந்தப் பின்னால் தமிழ்நாட்டு மக்கள் விரும்பமாட்டார்கள்”.

Tiruma wanted all Hindu temples demolished-Polimer video

மற்றவர்களுடைய வழிபாட்டையும், கடவுள் நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தி பேசுவது ஏற்புடையதல்ல: ஈஸ்வரன் தொடர்ந்தது: “ஒருவர் தன்னுடைய வழிபாட்டு முறைகளை பற்றி உயர்த்தி பேசுவதே மற்றவர்களை பாதிக்கும் என்ற நிலை இருக்கும் போது மற்றவர்களுடைய வழிபாட்டையும், கடவுள் நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தி பேசுவது ஏற்புடையதல்ல. வாதத்திற்காக கூட இதுபோன்று மக்கள் அமைதியை குலைக்கின்ற விஷயங்களை பொதுமேடைகளில் பேசுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதைபோன்று அந்த கூட்டத்தில் இருந்தவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக பேசுவதும், அதை எதிர்த்து வேறுசில தலைவர்கள் எதிர்கருத்து தெரிவிப்பதும் மக்களிடையே அமைதியின்மை ஏற்படுத்தும். இதுபோன்ற விஷயங்களை பொதுமேடைகளில் பேசுவது தமிழகத்திற்கு எந்தவிதத்திலும் பயன் தராது. இன்றைய சூழ்நிலையில் அனைத்து துறைகளிலும் இறங்குமுகமாக இருக்கின்ற தமிழகத்தை முன்னேற்றுகின்ற முயற்சிகளில் அனைத்து தலைவர்களும் இறங்க வேண்டும். முன்னேற்றம் தடைப்பட்டு லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்து கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில் மக்களின் கவனத்தை மதம், சாதி போன்ற விஷயங்களில் திசை திருப்புவது நாம் அமர்ந்திருக்கின்ற மரத்தின் கிளையை நாமே வெட்டி சாய்ப்பதற்கு சமமாகி விடும்”.

 Thiruma, frwnzied speech

ஆக்ரோஷமாக துல்லுகர் முன்ம்பு பேசி, பிறகு அமைதியாக பேட்டி கொடுத்த நிலை: இந்து சமூகத்தினரின் மனதை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எதையும் பேசவில்லை. குறிப்பாக இந்துகோவில்களை இடிப்போம் என்கிற வார்த்தையை, அந்த சொல்லாடலை நான் பயன்படுத்தவில்லை. சமணர்களுக்கு, பௌத்தர்களுக்கும் எதிராக நடந்த யுத்தத்தில் சமணர்களின் கோவில்களும், பௌத்த விஹாரங்கள் இடிக்கப்பட்டன வரலாற்று உண்மை. அந்த வரலாற்று உண்மையை இதனுடன் பொருத்தி பேசினேன். ஆகவே பாபர் மசூதியை இடித்தது நியாயம் என்று நியாயப்படுத்துவது உங்கள் தர்க்கம் எனில் அதற்கு ஈடாக, பௌத்த விஹாரங்கள் இருந்த இடங்களில் மீண்டும் பௌத்த விஹாரங்கள் கட்டவேண்டும் என்று சொல்லுவதும் சரியாக இருக்கும், நியாயமாக இருக்கும் என்று பொருள்படும் படி நான் பேசினேன்,” என்று விளக்கம் கொடுத்து பேசியபோது, முகம் சாதாரணமாக இருந்தது. மைக்கின் முன்பாக, நிறுத்தி நிதானமாக, பேசியது நன்றாகவே தெரிகிறது. இதனால், நிச்சயமாக இந்துக்கள் ஏமாற மட்டார்கள். முதலில், 1980களில் கிருத்துவர்களுடன் சேர்ந்து கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இவர், 2000களிலிருந்து முஸ்லிம்கள் சார்பாக மாறியிருப்பதும் கவனிக்கத் தக்கது. பாமகவுடன் இருந்த கூட்டு முறிந்த பிறகு, அரசியலில் இவர் மற்றும் இவரது கட்சி முக்கியத்துவத்தை இழந்தது. ஆகவே, எவ்வாறு வைகோ உளறிக் கொண்டிருக்கிறாரோ,, அதே பாணியில், இவரும் இறங்கி விட்டார் போலும்!

 Tiruma wanted all Hindu temples demolished-DK, and anti-hindu groups

திருமா ஏன் இவ்வாறு ஒன்றும் தெரியாத அப்பாவியாகி விட்டார்?: இவரது இந்து-விரோதம் பல கேள்விகளை எழுப்புகின்றன:

  1. இந்திய சரித்திரத்தின் அடிப்படை விவரங்கள் கூட தெரியாத நிலை – எல்லியட் அன்ட் டாவ்சன் புத்தகங்கள் படித்தாலே, துலுக்கர், தமது துலுக்கரைப் பற்றி என்ன எழுதி வைத்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ளாத நிலை.
  2. துலுக்கரின் படையெடுப்பால் வடமேற்கு மற்றும் வடவிந்தியா பகுதிகளில் பௌத்தம் பாதிக்கப்பட்டது பற்றி தெரியாத நிலை. பௌத்தம் அங்குதான் கோலோச்சிக் கொண்டிருந்தது, ஆனால், துலுக்கட படையெடுப்பால், மொத்தமாக துடைத்தழிக்கப் பட்டது. சமீபத்தில் பாமியன் புத்தர் சிலை உடைக்கப்பட்டது உட்பட, தொடர்ந்து தலிபான் தாக்குதல், ஐசிஸ் தாக்குதல் முதலியவை.
  3. துலுக்கரால், தமிழகக் கோவில்கள் இடிக்கப்பட்டது, ஆக்கிரமிக்கப்பட்டது, மசூதிகளாக மாற்றப்பட்டது தெரியாதது போல நடிக்கும் நிலை. இப்பொழுது கூட திருப்பரங்குன்றத்தில், தீபம் ஏற்றமுடியாத நிலை.
  4. இன்றைக்கும் “பத்மாவதி” ஏன் எதிர்க்கப் படுகிறது என்ற நிலை.அதாவது இந்திய பெண்மை, துலுக்கரின் குரூரங்களால் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டது என்ற உண்மையினை மறைக்கும் சதி.
  5. ஏற்கெனவே உச்சநீதி மன்றத்தில் கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்ட நிலையை அறியாதது போல நடிப்பது.
  6. ஆனானப் பட்ட பெரிய-பெரிய சரித்திராசிரியர்கள் எல்லாம் எப்படி பொய் சொல்லியிருக்கிறார்கள் என்று அவர்க்களை உச்சநீதி மன்ற கண்டித்த உண்மை.
  7. இவற்றையெல்லாம் மீறி, அயோத்திதாசர், மயிலை சீனி.வெங்கடசாமி…..போன்றோர் சொன்னார்கள் என்று பழைய கதை பாடும் போக்கு. அவர்கள் ஜனரஞ்சன ரீதியில் கதை போல, உணர்ச்சிப் பூர்வமாக எழுதியவை-அவற்றை சரித்திரம் என்று ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
  8. இன்றைக்கு இந்தியாவிலேயே, ஜிஹாதி தீவிரவாதம் எந்த அளவுக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, என்பதனை மூடி மறைக்கும் போக்கு. ஐசிஸ் ஆட்கள், ஜிஹாதிகள், முதலியோர் தமிழகத்தில் கைதாகி இருப்பது பற்றி மூச்சு விடாமல், அமைதியாக இருப்பது.
  9. அளவுக்கு மீறி துலுக்கரை பாராட்டும், போற்றும் மற்றும் ஆதரிக்கும் போக்கு. பல சந்தேகங்களை எழுப்புகின்றன.
  10. சங்கப்பரிவாரை எதிர்க்கிறோம் என்ற போக்கில், இந்துக்களை, இந்து மதத்தை எதிர்க்கும், தாக்கும் மற்றும் தூஷணம் செய்யும் போக்கு வேண்டுமென்றே, விஷமத்தனமாக செய்வது போலிருக்கிறது.

 

© வேதபிரகாஷ்

09-12–2017

Tiruma accusing MODI

[1] தமிழ்.ஒன்.இந்தியா, கோவில்களை இடிக்க வேண்டும் என்று திருமாவளவன் பேசுவதா?- கொந்தளிக்கும் கொ..தே. ஈஸ்வரன், Posted By: Mohan Prabhaharan, Published: Friday, December 8, 2017, 18:47 [IST].

https://tamil.oneindia.com/news/tamilnadu/kmdk-leader-eswaran-says-vck-thirumavalan-speech-on-hindu-temples-304398.html

 

Explore posts in the same categories: அத்தாட்சி, அல்லா, அழிப்பு, அழிவு, அழுக்கு, அவதூறு, ஜவாஹிருல்லா, திருமா, திருமா வளவன், திருமாவளவன், துருக்கன், துருக்கர், துலுக்க, துலுக்கன், துலுக்கர், பள்ளி வாசல், பாபர், புத்த மதம், புத்தர், பௌத்தம், பௌத்தர், பௌத்தர்கள், மசூதி, மசூதி இடிப்பு, மனித நேய மக்கள் கட்சி, மாட்டிறைச்சி, மாலிகாபூர், மீனாக்ஷி, மீனாக்ஷி கோவில், முஸ்லிம்கள் ஆர்பாட்டம், முஸ்லீம்களின் தீவிரவாதம், முஸ்லீம்களின் வெறித்தனம், மோடி, மோதல்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

2 பின்னூட்டங்கள் மேல் “திருமா வளவனின் இந்து-விரோத பேச்சு – துலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு – தருக்கம் என்று மழுப்பியதிலும் பொய்மை, ஆணவம் வெளிப்பட்ட நிலை (2)”


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: