திருமா வளவனின் இந்து-விரோத பேச்சு – துலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு – தருக்கம் என்று மழுப்பியதிலும் பொய்மை, ஆணவம் வெளிப்பட்ட நிலை (3)

திருமா வளவனின் இந்துவிரோத பேச்சுதுலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு – தருக்கம் என்று மழுப்பியதிலும் பொய்மை, ஆணவம் வெளிப்பட்ட நிலை (3)

Tiruma wants tirumala temple demolished

“கோவில் இடிப்பு” பற்றி திருமா பேசிய முழு விவரங்கள்: இனி திருமா பேசியதை அலச வேண்டியுள்ளது. அந்த குறிப்பிட்ட வீடியோவில் ஆதாரமாக பேசியதை இடது பக்கத்திலும், என்னுடைய “கமென்டுகளை” வலது பக்கத்திலும் காணலாம்: இன்னொரு இடத்தில் உள்ள வீடியோ பேச்சு இவ்வாறு இருக்கிறது[1],

இனிமேல் மசூதி கட்டினால் பாபர் பெயர் வைத்து கட்டுங்கள் இது தான் முஸ்லிம் சமூகத்திற்கு நான் வைக்கும் வேண்டுகோள்….

துலுக்கருக்கு, இவர் இவ்வாறு பரிந்துரை செய்ய வேண்டிய அவசியம் என்ன? துலுக்கர் அந்த அளவுக்கு முட்டாள்களா, காபிர் சொன்னதை கேட்டு நடந்து கொள்வதற்கு!

அந்த இடத்தில் ராமர் பிறந்தார் என்பதற்கு என்ற சான்றுகளும் இல்லை. சான்று ஆவணங்களைக் காட்டுங்கள் என்று நாம் கேட்பது பொருத்தமானது தான் ஏன் ராமர் பிறந்திருந்தால் தானே காட்ட முடியும் (கைதட்டல்) ஒருகற்பனை பாத்திரம் (கைதட்டல்) அதற்கு வாய்ப்பே இல்லை (ஏளனமான சிரிப்பு)

இப்படி ஆவணத்துடன் பேசியது, திருமாவின் உள்ளத்தை வெளிப்படுத்தியுள்ளது. கருவின் கருவியத் தன்மையும்ம், இந்த விஷத்தமான வெளிப்பாடும் ஒன்றுதான். துலுக்கருக்கு ஆதரவான, விஷத்தைக் கக்கிய பேச்சு இது. ஏனெனில், இத்தகைய கேள்விகளை இஸ்லாம் பற்றி கேட்க திருமாவுக்கு தைரியம் கிடையாது.

அப்படியே இருந்தாலும் இரண்டாயிரம் ஆண்டுகள் தான் வரலாறு[2] (ஏளனமான சிரிப்பு) அவர்கள் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்ததாக சொல்கிறார்கள் (அஹ்ஹா. ஹஹ்ஹா….ஏளனமான சிரிப்பு, கைதட்டல்)

2,000 ஆண்டு வரலாறு என்பதை இவரிடமிருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியென்றால், குரான் கூறும், தீர்க்கதரிசிகள், நபிகள் எல்லோரும் கட்டுக்கதை, கற்பனை பாதிரங்களே! துலுக்கர் ஒப்புக் கொள்வார்களா?
அப்படி பார்த்தால்,  இன்றைக்கு சிவன்கோவில்களும், பெருமாள் கோவில்களும் இருக்கின்ற இடம் எல்லாம் பௌத்த விகாரங்களாக இருந்தன……..பௌத்த விகாரங்களை இடித்துவிட்டு தரைமட்டம் ஆக்கி விட்டுத்தான் சிவன் கோவில்களைக் கட்டியிருக்கிறீர்கள், பெருமாள் கோவில்களைக் கட்டியிருக்கிறீர்கள்.

இவ்வாறு இப்படி கூறியிருப்பதிலிருந்தே, இவரது சரித்திர ஞானமும், பிருகஸ்பதித்தனமும் வெளிப்பட்டுள்ளது. ஜைன-பௌத்த மோதல்கள் பற்றி இவருக்குத் தெரியாதது வேடிக்கை தான். இதற்கான ஆதாரங்களயும் கொடுக்கவில்லை.

எனவே அதையெல்லாம் இடித்து, தரைமட்டமாக்கிவிட்டு அந்த இடத்தில் எல்லாம் பௌத்த விகாரங்களைக் கட்டவேண்டும்…...[3]

முதலில், இவருக்கு இந்து கோவில், சமண கோவில் மற்றும் பௌத்த விஹாரம் அமைப்பு எப்படி இருக்கும் என்பதே தெரியாது என்பது தான், இவர் பேச்சிலிருந்து வெளிப்படுகிறது.

உங்க வாதத்திற்காக சொல்லுகிறேன்….. (கைதட்டல்) ராமர் கோவிலலிருந்த இடத்தில் தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்றால் 450 ஆண்டு கால பழமையான இந்த வரலாற்றுச் இச்சின்னமான இந்த பாபர் மசூதியை இடித்து விட்டு அந்த இடத்தில் ராமர் கோவிலலைக் கட்டுவோம் என்பது சரியான வாதம் என்றால் …….

இப்படி துலுக்கருக்கு தொடந்து ஜால்ரா போடுவதிலிருந்து, வரும் சந்தேகமாவது, ஒன்று இந்த ஆள் துலுக்கரின் அடிமை, கைகூலி அல்லது விலைக்கு வாங்கப்பட்டவர் அல்லது துலுக்கனாகவே மதம் மாறி இருக்க வேண்டிய நிலை…..

திருப்பதி ஏழுமலையான் இருக்கின்ற இடத்திலே பௌத்த விகாரை கட்ட வேண்டும். திருவரங்கநாதன் படுத்திருக்கின்ற இடத்தில் புத்த விஹாரை கட்ட வேண்டும், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் இருக்கின்ற இடத்தில் புத்த விகாரை கட்டப்படவேண்டும் ….

திருமலை கோவில் பற்றி இதுவரை ஊடகங்களில் சொல்லப்படவில்லை ஆனால், அதைப்பற்றி பேசியதிலிருந்து, இவரது வன்மம், குரூரம் மற்றும் கொடிய எண்னங்களின் வெளிப்பாடு அறியப்படுகிறது. இதன் பின்னணி என்ன என்பதும் நோக்க வேண்டியுள்ளது.

சொல்லிக் கொண்டே போகலாம்…… இந்தியா முழுவதும் இருக்கின்ற சிவன் கோவில்களும் பெருமாள் கோவில்களும் ஒரு காலத்தில் பௌத்த விஹாரங்களாகவும் சமண கோவில்களாகவும், இருந்தனயாரும் மறுக்க முடியுமா? அதற்கான சான்றுகள் உண்டா? முடியாது. ஏனென்றால் வரலாற்றை அப்படி பார்க்க முடியாது.

தமிழகம் என்று ஆரம்பித்து, ஆந்திர கோவிலைக் குறிப்பிட்டு, பிறகு இந்தியா முழுவதும் அப்படித்தான் என்றது, ஏதோ ஒரு திட்டத்தைக் காட்டுகிறது. துலுக்கர் ஒருவேளை ஏதாவது திட்டத்தை வைத்திருக்கின்றனரா என்று கவனிக்கப்பட வேண்டும்.

அண்ணன் ஹவாஹிருல்லா அவர்கள் ஒரு அருமையான கருத்து சொன்னார்கள் இந்த ஆர்பாட்டத்திலே, இஸ்லாம் என்பது மிக முக்கியமான ஒரு வாழ்வியல் நெறி, அது மசூதியைக் கட்டுவதற்காக என்ற வழிபாட்டு முறை வேறு, மசூதியைக் கட்டுகிறபோது, அது ஒரு ஆக்கிரமிப்பு செய்யப் பட்ட இடமாக இருக்கக் கூடாது, இன்னொருவரின் வழிபாட்டு கூடமாக இருக்கக் கூடாது என்று இஸ்லாம் எங்களுக்கு வழிகாட்டுகிறது[4],

இப்படி பெயிலில் வெளிவந்த ஆளைப் பாராட்டி, போற்றியிருப்பது, துல்லர் ஆதரவை மெய்ப்பிக்கிறது. இதையெல்லாம் உண்மை என்பது நம்பியுள்ளதும், திருமாவின் முகத்திரையைக் கிழிக்கிறது. ஏற்கெனவே கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டிருப்பது நிரூபனம் ஆகிவிட்டது. அதனை வைத்து தான், நிலத்தையும் உச்சநீதி மன்ற கொடுத்து விட்டது. பிறகு நான் துலுக்கன் சொல்வதைத் தான் நம்புவேன் என்றால், அந்நிலையை என்னவென்பது?
அப்படிபட்ட இடத்தில் நாங்கள் மசூதியை கட்ட மாட்டோம், அதற்கு வாய்ப்பே இல்லை, அதுதான் எங்கள் மரபுஎங்கள் இஸ்லாம் காட்டுகிற வழி என்று சொன்னார்.”

தமிழகத்திலேயே நூற்றுக்கணக்கான மசூதிகளின் உட்புறம் கோவில்களாகத் தான் உள்ளது. இது கூட திருமாவுக்கு தெரியாதது ஆச்சரியமாக உள்ளது. அந்த அளவுக்கு,ம் துலுக்கர் இவரை மூளைச்சலவை செய்து விட்டார்களா அல்லது அடிமையாக்கி விட்டார்களா?

 

 Tiruma opposes Ram temple

தலித் மற்றும் இஸ்லாமியர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம்: இத்தகைய கூட்டு வைத்துக் கொள்வதே, கேவலமானது எனலாம், ஏனெனில், இஅந்த ஆளே, முன்னர் எஸ்.சி முஸ்லிம்கள் ஆவதால், எஸ்.சி எண்னிக்கை குறைகிறது என்று பேசியது நினைவில் இருக்கலாம். எஸ்.சி என்றாலே, அம்பேத்கர் ஆசியல் நிர்ணய சட்டம், இந்துக்கள் தான் என்று சொல்கிறது, அதனால், திருமா இந்துக்களுக்கு எதிராக பேசுவதால், சமுக்கப் பிளவை – எஸ்.சி இந்துக்களுக்குள் ஏற்படுத்துகிறார் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். திருமா எந்த அளவுக்கு அதிகமாக பேசுகிறாரோ, அந்த அளவுக்கு தான் பொய்களை சொல்கிறார், சரித்திர ஆதாரம் இல்லாமல் பேசுகிறார் மற்றும் இந்து-விரோதியாகவும் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்! கருவைப்போல, திருமாவும் ராமரது சரித்துவத்தின் மீது கேள்வி எழுப்புவதால், அது மற்ற கடவுளர்களுக்கும் பொருந்தும் என்பதனை நம்பிக்கையாளர்கள் அறிந்து கொள்ளலாம். தர்க்கவாதம், ஒப்புமை படுத்தல் எனும் போது, அது அல்லா, ஜேஹோவா, ஏசு, மேரி, கிருத்து, இப்ராஹிம் /அப்ரஹாம் …என்று எல்லோருக்கும் பொருந்தும்! திருமா இந்த அளவுக்கு இந்து-விரோதியாக ஜிஹாதிகளை ஆதரித்து பேசுவதால், அவர் கீழிருக்கும் இந்துக்கள் விலகி விடலாம்! சுயமரியாதை இருந்தால், காட்ட வேண்டிய தருணம் இது! பேராசிரியர் ஜவாஹிருல்லா [இஸ்லாமிய வங்கி முறையில் பிச்.டி] இப்பொழுது பெயிலில் வெளியே உள்ளார். பிறகு, திருமா அத்தகைய ஜிஹாதிகளுடன் கைகோர்ந்து கொண்டு, தீவிரவாதிகளை ஏன் ஆதரிக்கவேண்டும்? சரித்திர பொய்மைகளை பரப்பி, துர்பிரச்சாரம் செய்யப் பட்டு வருவதால், இந்துத்துவவாதிகள், சரித்திரம் பற்றிய குழு ஒன்றை உண்டாக்கி, உரிய முறையில் எதிர்க்க வேண்டும். வெறும் பேச்சு [பேஸ் புக் வீர-சூரத்தனம்] ஒன்றும் பிரயோஜனப் படாது!

© வேதபிரகாஷ்

09-12–2017

VCK can be considered as Islamic movement

[1] https://www.youtube.com/watch?v=zRtvN7mFiJk

[2] 2000 வருடங்களுக்கு முன்னர் வரலாறே இல்லை என்று சொல்லும் இந்த அறிவு ஜீவியை என்ன்னவென்று சொல்வது?

[3] பாவம் இங்கு சமண கோவில்களை ஏன் விட்டு விட்டார் என்று தெரியவில்லை, அந்த அளவுக்கு பௌத்தவெறி வந்து விட்டது போலும்!

[4] அப்படி வழிகாட்டித்தான், பாபர் அந்த ராமர் கோவிலை இடித்துள்ளான். மசூதி, கோவிலை இடுத்துக் கட்டப்பட்டது என்பதை நீதி மன்றமே ஒப்புக்கொண்யடாகி விட்டது.

Explore posts in the same categories: அசிங்கப்படுத்திய முகமதியர், அடிமை, அத்தாட்சி, அழிப்பு, அழிவு, அழுக்கு, அவதூறு, இந்திய விரோதம், இந்து கோவில்கள் தாக்கப்படுவது, இந்துக்கள், இராம கோபாலன், ஔரங்கசீப், கஜினி, குரூரம், சரித்திர ஆதாரம், சரித்திரம், சைவம், ஜமாஅத், ஜவாஹிருல்லா, ஜிஹாதி, ஜிஹாதித்தனம், ஜைனம், தீவிரவாதம், தீவிரவாதி, துருக்கன், துருக்கர், துரோகம், துலாகர், துலுக்க, துலுக்கன், துலுக்கர், தேசவிரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், பள்ளிவாசல், பெருமாள், பெருமாள் கோவில், மசூதி, மசூதி இடிப்பு, மாலிகாபூர், மீனாக்ஷி, மீனாக்ஷி கோவில், முஸ்லிம், Uncategorized

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

One Comment மேல் “திருமா வளவனின் இந்து-விரோத பேச்சு – துலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு – தருக்கம் என்று மழுப்பியதிலும் பொய்மை, ஆணவம் வெளிப்பட்ட நிலை (3)”


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: