துருக்கம், துருக்கர், துலுக்கர், துலுக்கி முதலிய சொற்கள் பிரயோகம், அவற்றைப் பற்றிய விளக்கம் (3)
துருக்கம், துருக்கர், துலுக்கர், துலுக்கி முதலிய சொற்கள் பிரயோகம், அவற்றைப் பற்றிய விளக்கம் (3)
துலுக்கர் என்ற அடைபொழியில் வழங்கும் சொற்கள்[1]: இன்னும், இந்த துருக்கர்”, துலுக்கர்” என்ற சொற்களை வேராகக் கொண்டு பல புதிய தமிழ்ச் சொற்கள் தமிழ் வழக்கிற்கு வந்துள்ளன அவை :
துருக்கம் – செல்லுதற் கரிய இடம், காடு, மலையரசன்
துருக்கம் – கஸ்துாரி, குங்குமம்
துருக்க வேம்பு – மலை வேம்பு
துருக்கற்பொடி – செம்பிளைக் கற்பொடி
துருக்கமாலை – குங்கும மலர்மாலை
துருக்கத்தலை –கரு நிறமுள்ள கடல் மீன் வகை
துலுக்கி – சிங்காரி
துலுக்கடுவன் – ஒருவகை நெல்
துலுக்கப்பூ – துலுக்கச் செவ்வந்தி
துலுக்க மல்லிகை – பிள்ளையார் பூ என வழங்கப் படும் மலர், செடி
துலுக்க பசளை – கீரை வகை
துலுக்க பயறு – பயறு வகை
துலுக்க கற்றாழை – கரிய பவளம் (நாட்டு மருந்து)
மற்றும், துருக்கர்நாடு’ என்ற நிலக்கூறு இருந்ததை பதின்மூன்றாவது நூற்றாண்டு இலக்கிய கர்த்தாவான பரஞ்சோதி முனிவர், தமது திருவிளையாடல் புராணத்தில் குறிப்பிட்டுள்ளதும் இங்குபொருத்தமுடையதாக உள்ளது[2]. மற்றும், தமிழில், ஷர்பத், சிப்பாய், மணங்கு, தர்பார், தைக்கா, வக்கீல், அமீர், உலமா, காஜி, ஜாகிர், ஜமீன்தார் போன்ற துருக்கி மொழிச் சொற்களும், தமிழ்ச் சொற்களாக வழக்கிற்கு வந்துள்ளன.
நிகண்டுகள், அகராதிகள் தொகையகராதிகள் து, துருக்கர், துலுக்கர், துலுக்கி – பற்றி சொல்வது: இனி நிகண்டுகள், அகராதிகள் தொகையகராதிகள், இதைப் பற்றி என்ன சொல்கின்றன என்பதனை பார்க்கலாம்.
- “து” என்றாலே “வெறுப்பு” என்பதால், வெறுப்பை வெளிப்படுத்தும் சொற்களுடன் வருகிறது (துப்பு, துவேசம், துவர்ப்பு, முதலியன).
- துக்கம், துச்சம், துணுக்கம் (அச்சம், பயம், திகில், பீதி), துண்ணிடல் (திடுக்கிடல், பயமுருத்தல்),
- துத்து (பொய், ஏமாற்றுதல்), துப்பு, தும்பன் (கெட்ட எண்ணம் கொண்டவன்), துயர், துயரம்,
- துணக்கம் (திடுக்கிடுதல், பயமடைதல், பீதியடைதல்), துணுங்கர் (தீய காரியங்களால் அத்தகைய நிலையை ஏற்படுத்துபவர்கள்). திருஞானசம்பந்தர் இதனை ஜைனர் மற்றும் பௌத்தர்களுக்கு உபயோகப்படுத்தினார்.
- துர (செலுத்து, ஓடி போதல்), துரக்கம் (குதிரை), ரத-கஜ-துருக்க-பதாதி என்பதிலிருந்தும் அறியலாம்.
- துருக்கம் (காடு, பாலைவனம், குழப்பம்),
- துருக்கு, துலுக்கு (துருக்கி நாடு, துருக்கியர், துருக்கி மொழி, முகமதியர்)
- துர் (எதிர்மறை உண்டாக்கும் சொற்களுக்கு முன் வருவது) துர்மார்க்கம், துராச்சாரம், துராசை, துர்க்குணம், துர்புத்தி, துர்மரணம், முதலியன.
- துர்க்கம் (கோட்டை)
- துலுக்கு (முகமதியன், பாஷை, பேச்சு, ஆட்டுதல், ஆடுதல், தலையை-உடலை ஆட்டிக் கொண்டு நடத்தல், “துலுக்கி-துலுக்கி” நடத்தல், ”அவ்வாறு செய்யும் பெண் துலுக்கி எனப்பட்டாள்)
- துலுக்கி (சிருங்காரி, மயக்கி, மயக்கும் பெண், துலுக்கர் பெண்களை வைத்து மயக்கியதால், அத்தகைய பெண்கள் அவ்வாறே அழைப்பட்டனர்)
இவற்றிலிருந்து அச்சொற்கள் எல்லாமே, எதிர்மறையான, ஒவ்வாத, தீய, கொடிய, திகில்-பீதி-பயங்கரம் முதலியவற்றைக் குறிப்பதாகவே உள்ளது. அதாவது, அத்தகைய கொடிய-குரூர-பீதியைக் கிளப்பும் மக்களைக் குறிக்க பிறகு உபயோகப்படுத்தப் பட்டது தெரிகிறது. மேலும், இவையெல்லாம் பொது வழக்கில் இருந்ததால், 60 ஆண்டுகள் வரையிலும் இருந்ததால், அவற்றின் தாக்கத்தை நன்றாகவே தெரிந்து கொள்ளலாம்.
சீனப் பொருட்கள் போலத்தான் துலுக்கப் பொருட்களும்: பெரும்பாலும் அரேபியர், துருக்கர் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரிந்த விசயமே. அவர்கள் குறிப்பிட்ட பொருட்களை கொண்டு வந்து விற்றதால், அவர்கள் பெயரில் அப்பொருட்கள் அறியப்பட்டன. சீனப்பொருட்கள் எப்படி, சீனா பீங்கான், சைனா பொம்மை, சீன படிகாரம், சீன சுண்ணாம்பு……என்றெல்லாம் அழைக்கப்பட்டனவோ, அதுபோல, அவையெல்லாம், துலுக்கர் / துலுக்கன் / முஸ்லிம் பொருட்கள் என்று சொல்ல முடியாது. இன்றும் கற்பூரம், பன்னீர், சந்தனம், ரோஸ் வாட்டர், சமித்துகள், வெற்றிலை, பாக்கு போன்ற பூஜைப் பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்களை முஸ்லிம்கள் தான் அதிகமாக கடைகள் வைத்து விற்கிறார்கள். ஆனால், அவற்றை, துலுக்க சந்தனம், துலுக்க கற்பூரம், துலுக்க பன்னீர், துலுக்க சமித்து, துலுக்க சாம்பிராணி, துலுக்க வெற்றிலை, துலுக்க பாக்கு, துலுக்க ஜவ்வாது……………………..என்றெல்லாம் பெயர் வைத்து விற்பதில்லை. அதாவது, துலுக்கராக / முஸ்லிமாக இருந்தும், தங்களது அடையாளங்களை அமுக்கி வாசித்தும், மறைத்தும் தான் வியாபாரம் செய்கின்றனர் என்பதுதான் நிதர்சனம், உண்மை. ஆனால், பெருமையாக, தங்களை வெளிப்படுத்திக் கொண்டு அப்பொருட்களை அவ்வாறு விற்பதில்லை. துலுக்கர் என்பது பெருமையான பெயர், பிரயோகம் என்றால், இன்றும் தாராளமாக வெளிப்படையாக உபயோகிக்கலாம்.
ஶ்ரீரங்கத்தில் ஒரு துலுக்கநாச்சியார் / பீவிநாச்சியார்: 2013ல் ஶ்ரீநாமானுஜர் திரைப்படம் விசயத்தில், சரித்திர ஆதாரம் இல்லாத “துலுக்க நாச்சியார்” விசயத்தையும் இதில் சேர்த்துள்ளனர்[3]. “ ஸ்ரீரங்கத்தை முஸ்லீம்கள் கொள்ளையிட்டுச் சென்ற போது டில்லி பாதுஷாவினால் கொண்டு செல்லப்பட்ட ஒரு ரங்கநாதன் விக்கிரகத்தின் மீது பாதுஷாவின் மகள் மனதைப் பறிகொடுத்து அப்பெருமானிடமே அடைக்கலமாகிவிட்டாள். பின்னால் அந்த விக்கிரகத்தை மீட்டுக் கொண்டு வந்தபோது பாதுஷாவின் மகளும் பிரிவாற்றாமையால் பின்தொடர்ந்து வந்து அந்த ரங்கநாதனிடமே ஐக்கியமாகிவிட அப்பெண்ணுக்குத் துலுக்க நாச்சியார் என்றே பெயரிட்டு பெருமைபடுத்திப் போற்றித் துதித்தனர் வைணவர்கள். இந்நிகழ்வை நினைவுகூறும் முகத்தான் ஸ்ரீரங்கத்தில் மார்கழி மாதம் நடைபெறும் ஏகாதசி திருவிழா பகல் பத்துத் திருநாளிலே உற்சவப் பெருமாளான நம்பெருமாள் முஸ்லீம் இனத்தவரைப் போன்று லுங்கி வஸ்திரம் கட்டிக்கொண்டு இந்த துலுக்க நாச்சியாருக்கு காட்சி தரும் வழக்கம் தொன்று தொட்டு இன்றும் நடந்துவருகிறது. துலுக்க நாச்சியாருக்கு எம்பெருமான் ஒருவனே புகலிடம். அவனின்றி தனக்கு வேறு கதியில்லை என்ற (சரணாகதி பூண்ட) வைணவ சித்தி விளைந்ததால் ஆச்சார்ய ஸ்தானத்தில் வைத்துத் தொழத்தக்கப் பெருமை பெறுகிறார்.” என்றெல்லாம் குறிப்புகள் காணப்படுகின்றன[4]. ஆனால், இதற்கு ஆதாரங்கள் எவையும் இல்லாமல், வாய்வழி வந்தவை பிறகு எழுதி வைத்ததாகத் தெரிகிறது[5]. இஸ்லாமியர்களுக்கு உருவ வழியாடு இல்லை என்பதால் இந்தச் சந்நிதியில் துலுக்க நாச்சியார் வண்ணச் சித்திரம் மட்டுமே இருப்பதைப் பார்க்கலாம்[6], என்கிறது ஒரு இணைதளம்.
© வேதபிரகாஷ்
30-11-2017
[1] எஸ். எம். கமால், முஸ்லிம்களும், தமிழகமும், இஸ்லாமிய ஆய்வு பண்பாட்டு மையம், சென்னை, 1990.
[2] பரஞ்சோதிமுனிவர் – திருவிளையாடற்புராணம்-மாணிக்கம் விற்ற படலம். பாடல் : எண் 65,
[3] https://evilsofcinema.wordpress.com/2014/02/07/ramanuja-filming-adding-controversies-in-incorporating-myths/
[4] http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=3
[5] 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு, ஆசிரியர்:
டாக்டர். வைணவச் சுடராழி, ஆ.எதிராஜன் B.A., காரைக்குடி; http://www.tamilvu.org/ta/library-l4211-html-l4211ind-141584
[6]http://thtsiteseminars.wordpress.com/2013/04/04/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/
Explore posts in the same categories: அல்-மனத், அல்-லத், அல்லா, அல்லாஹ், அழிப்பு, அழிவு, அவதூறு, அவமதிக்கும் இஸ்லாம், துருக்க, துருக்கன், துருக்கர், துருக்கி, துருஷ்க, துருஷ்கா, துர்க்கம், துலுக்க, துலுக்கன், துலுக்கர், துலுக்கி, Uncategorizedகுறிச்சொற்கள்: அவமதிக்கும் இஸ்லாம், இஸ்லாமியத் தமிழன், இஸ்லாம், தமிழ் முஸ்லிம், து, துருக்க, துருக்கன், துருக்கர், துருக்கி, துர், துலுக்கச்சி, துலுக்கன், துலுக்கர், துலுக்கி, துலுக்க்கி, முகமதியர்
You can comment below, or link to this permanent URL from your own site.
ஜனவரி 14, 2022 இல் 3:12 முப
[…] [8] https://islamindia.wordpress.com/2017/12/01/tulukka-turukka-turkey-used-in-tamilnadu-after-medieval-… […]
ஜனவரி 14, 2022 இல் 3:27 முப
[…] [8] https://islamindia.wordpress.com/2017/12/01/tulukka-turukka-turkey-used-in-tamilnadu-after-medieval-… […]