பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்: கேரள ஜிஹாதி-தீவிரவாதம் வளறும் விதம் (2)
பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்: கேரள ஜிஹாதி–தீவிரவாதம் வளறும் விதம் (2)
ஐசிஸ் தொடர்புள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா‘ புகழ் பாடும் விகடன்: PFI மற்றும் ISIS தொடர்புகள் வெளிவந்து கொண்டிருக்கும் நேரத்தில், விகடன், சென்னையில் நடந்த அவர்களது மாநாட்டைப் பற்றி அதிகமாகவே விளம்பரம் கொடுத்துள்ளது[1]. ஜே. அன்பரசன், பா.காளிமுத்து, ப. பிரியங்கா என்ற மூவர் இதனை செய்துள்ளனர்[2]. அவர்களின் செய்தி, “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ என்பது இந்திய அளவில் வளர்ந்து வரும் மிகப்பெரிய முஸ்லிம் அமைப்பு. தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர் காலங்களில் இந்த அமைப்பு செய்துவரும் தன்னார்வ சேவைகள் அனைவரும் அறிந்த ஒன்று. ‘லவ் ஜிகாத் மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தல்’ போன்ற பொய்யானக் காரணங்களைச் சொல்லி மத்திய அரசு, ‘பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பைத் தடை செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளதாக அவ்வமைப்பினர் கூறுகின்றனர். அதனால், பி.ஜே.பி அரசை எதிர்த்தும், இந்த அமைப்பை மேலும் வலுப்படுத்தவும் இந்தியா முழுவதும் ‘உரிமை முழக்க மாநாடு’ நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள் ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பினர். கடந்த 8 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், பல்லாயிரக்கணக்கில் முஸ்லிம் மக்கள் கூட ‘உரிமை முழக்க மாநாடு’ நடைபெற்றது. இதற்கு முதல் நாள் அதாவது கடந்த 7 ஆம் தேதி மதுரையிலும், திருவனந்தபுரத்திலும் மாநாடு நடத்தினார்கள்.
திருமாவளவன், முதலியோர் கலந்து கொண்டது திகைப்படையச் செய்வதாக உள்ளது: சென்னையில் நடைபெற்ற மாநாட்டில்,
- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,
- மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,
- தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன்,
- ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், மற்றும்
- முஸ்லிம் கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் முஹம்மது அலி ஜின்னா, “சமீப காலமாக அவதூறு அறிக்கை கொடுத்ததாகச் சொல்லி, எங்கள் அமைப்பைத் தடை செய்ய தேசிய புலனாய்வு முகமை (N.I.A) தீவிர பணியினை மேற்கொண்டு வருகிறது. இந்த அவதூறு பிரசாரத்தை முறியடித்து, மக்களைச் சந்தித்து உண்மையைச் சொல்லும் பணியில், ‘பாப்புலர் ஃப்ரண்ட்ஆஃப் இந்தியா‘ இறங்கியுள்ளது. இதனடிப்படையில், இந்தியா முழுவதும் 14 மாநிலங்களில் மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.” இவ்வாறு முழுக்க-முழுக்க உண்மைகளை மறைத்து, பிரச்சார ரீதியில் நடத்தப் பட்ட மாநாட்டில், மேலே குறிபிட்டவர்கள், எப்படி, ஏன் கலந்து கொண்டனர் என்பது, திகைப்பாக இருக்கிறது. பொறுப்புள்ள அரசியல்வாதிகள் என்ற ரீதியில், நாட்டு நடப்புகள் இவர்களுக்கு தெரியாமல் இருக்குமா என்ன?
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் [08-10-2017][3]: இகடன் குழு தொடர்ந்து, இவற்றையும் வெளியிட்டுள்ளது. உரிமை முழக்க மாநாட்டில் முக்கியமான 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை:
- பாசிசத்துக்கு எதிரான கூட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு களப்பணி ஆற்றிட வேண்டும்.
- தேசிய புலனாய்வு முகமை (N.I.A) கலைக்கப்பட வேண்டும்.
- மதுரை, போலி குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும்.
- பாபர் மசூதி மீண்டும் அதே இடத்தில் கட்டப்பட வேண்டும்.
- பத்தாண்டுகள் சிறையில் கழித்த சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்.
- மியான்மரில் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளான ரோஹிங்கியா இன முஸ்லிம்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
- நீட் தேர்வை ரத்து செய்து கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
- தீவிரவாத எதிர்ப்பு சட்டமான யு.ஏ.பி.ஏ உள்ளிட்ட சட்டங்கள் மனித உரிமை மீறலுக்கும், நீதி மறுப்பதற்கான ஒரு கருவியாகவுமே இருக்கிறது. எனவே இந்தக் கருப்புச் சட்டங்களை நீக்க வேண்டும்.
- கெளரி லங்கேஷின் படுகொலை வன்மையான கண்டனத்துக்குரியது. மேலும் கொலைக் குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
- மாநிலங்களுக்கு சுயாட்சியை வழங்க வேண்டும்.
- மக்கள் நலப் பணிகளுக்கும், அறப்பணிகளுக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துகளை அர்ப்பணிக்கும் வக்ஃப் வாரியம் சீரமைக்கப்பட வேண்டும்.
- முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும்.
- தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
- லவ் ஜிகாத் பொய் பிரசாரத்தை நிறுத்த வேண்டும்.
- கல்வி வளாகங்களை சங்பரிவார்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன[4].
பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI] மற்றும் ஐசிஸ்க்குள்ள தொடர்புகள்: பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா [PFI], எஸ்.எப்.ஐ [SFI] தடைக்குப் பிறகு தோன்றிய இயக்கம் ஆகும். தடை செய்யப்பட்ட சிமி கூட்டத்தினர் இம்மாதிரியான Social Democratic Party of India (SDPI), Popular Front of India (PFI), National Development Front (NDF), என்று பரவி வருவதாகத் தெரிகிறது[5]. இப்பொழுது, லவ் ஜிஹாத், மதமாற்றம், ஐசிஸ்க்கு ஆள்சேர்ப்பு போன்ற காரியங்களில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்துள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் பலமுறை கொலை[6], வெடிப்பொருட்களைப் பதுக்கி வைத்தல்[7], தேசவிரோத செயல்கள் முதலியவற்றில் ஈடுபடுதல், முதலியவை உறுதிபடுத்தியிருப்பதால், போலீஸ் நடவடிக்கை எடுக்கப் பட்டதுள்ளது[8]. தமிழகத்தைப் பொறுத்த வரையில், தேசவிரோத, கம்யூனிஸ்ட், திராவிட கட்சிகளின் ஆதரவு இருந்து வருகிறது. அவ்வப்போது, ஏதோ சேவை செய்கிறோம் என்பது போலவும் காட்டிக்கொள்வதுண்டு. ஆனால், தீவிரவாத செயல், ஐசிஸ் தொடர்பு, கைது என்றெல்லாம் வரும் போது அமுங்கி விடுவர். ஆனால், பி.எப்.ஐ.யின் அடிப்படைவாத செயல்கள், பயங்கரமாக வெளிப்பட்டுக் கொண்டுக்கின்றன. இப்பொழுது, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் ஐசிஸ்குள்ள தொடர்புகள் வெளியாகி வருகின்றன.
© வேதபிரகாஷ்
17-11-2017
[1] விகடன், உரிமை முழக்க மாநாடு… ‘பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா‘-வின் புதிய பரிணாமம்!, Posted Date : 21:21 (09/10/2017); Last updated : 21:21 (09/10/2017.
[2] https://www.vikatan.com/news/tamilnadu/104514-popular-front-of-india-conference.html
[3] விகடன், உரிமை முழக்க மாநாடு… ‘பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா‘-வின் புதிய பரிணாமம்!, Posted Date : 21:21 (09/10/2017); Last updated : 21:21 (09/10/2017.
[4] https://www.vikatan.com/news/tamilnadu/104514-popular-front-of-india-conference.html
[5] According to a government paper, starting largely as a Kerala Muslim outfit and successor to National Development Front (NDF), the PFI now has more than 80,000 members and sympathisers, with a countrywide spread. The paper,that has already been circulated in the PMO,National Security Council Secretariat and the Home Ministry, states that the PFI has a militant core cadre, radical following and a subtly divisive and subversive media organ. While this case was handed over to the NIA last month [January 2014], subsequent police raids at that time on PFI activists had led to the recovery of subversive material. The paper says that raid on 100-odd PFI establishments had led to recovery of crude explosives,lethal weapons,besides a computer disk containing clips of executions by the al-Qaeda. It says Green Valley Foundation in Mallapuram district provided combat training to PFI cadre under the cover of providing vocational training to the indigent and physically challenged.
[6] http://news.outlookindia.com/items.aspx?artid=769976
[7] http://zeenews.india.com/news/kerala/country-made-bombs-seized-21-pfi-cadres-arrested-in-kerala_844220.html
[8] http://indianexpress.com/article/news-archive/web/concern-in-govt-over-pfis-growing-outfits-spread/0/
Explore posts in the same categories: அடையாளம், அப்துல் ரஷீத், அழிப்பு, அழிவு, கேரள ஜிஹாதி, கேரள ஜிஹாதிகள், கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், கேரளா, ஜிஹாதி குருரக் குணம், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதித்தனம், ஜிஹாத், தீவிரவாதம், தீவிரவாதி, தீவிரவாதிகளுக்கு பணம், தீவிரவாதிகள், பிரசாரம், போராட்டம், போராளி, மதகலவரம், Uncategorizedகுறிச்சொற்கள்: என்.ஐ.ஏ, எஸ்.டி.பி.ஐ, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசில், ஐசிஸ், ஐஸில், கேரள ஜிஹாதி, கேரள தீவிரவாதம், கேரளா, ஜிஜாதி தீவிரவாதம், ஜிஹாதி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாதி பெண்கள், ஜிஹாதிகள், ஜிஹாத்
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்