ஜூமா மஸ்ஜித் தெரு, “காஸா ரோடு” ஆகியதா, “விஸ்டெம் அகடெமி” தீவிரவாதத்தை போதிக்கிறதா – காசர்கோடில் நடப்பதென்ன? (1)
ஜூமா மஸ்ஜித் தெரு, “காஸா ரோடு” ஆகியதா, “விஸ்டெம் அகடெமி” தீவிரவாதத்தை போதிக்கிறதா – காசர்கோடில் நடப்பதென்ன? (1)
பாலஸ்தீன பயங்கரவாதம் பின்பற்றப் படுகிறதா?: பாலஸ்தீன நகரின் காஸா / காஜா [Gaza Road] என்ற பெயரை கேரளாவின் காசர்கோடு நகராட்சியில், உள்ள ஒரு தெருவுக்கு காஸா என்று பெயர் வைத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது[1]. ‘காஸா’ ஊடகங்களில் அடிக்கடி குறிப்பிடப்படும் நகரம். இஸ்ரேல் – எகிப்து நாடுகளுக்கு இடையே பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நகரம்தான் காஸா[2]. அங்கு கடைப்பிடிக்கப் படும் தீவிரவாத முறைகள் – பெட்ரோல் குண்டு, தற்கொலை மனித குண்டு, கல்லெறிதல் போன்றவை காஷ்மீரத்தில் பின்பற்றப்படுவதை காணலாம். அதனால், இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு இடையே நடக்கும் சண்டைகளின்போது காஸா நகரம் ஊடகங்களில் இடம்பெறுவது வழக்கம்[3]. இந்நிலையில், கேரளா மாநிலத்தின் காசர்கோடு நகராட்சியில் உள்ள துருத்தி வார்டில் உள்ள ஜூமா மஸ்ஜித் தெரு [Thuruthi Jama Masjid] அண்மையில் பெயர் மாற்றப்பட்டு ‘காஸா தெரு’ என்று எழுதப்பட்ட பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது[4]. இது கேரளாவில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது, அதாவது, வேறுவிதமாக, இது பிரச்சினையை ஏற்படுத்துகிறது. பெயர்மாற்றத்தை முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை. “டைம்ஸ் நௌ” டிவி-தொலைகாட்சியில் தினமும் இதைப் பற்றிய விவாதம் ஒரு வாரமாக நடந்து கொண்டிருக்கிறது.
“ஜூமா மஸ்ஜித் தெரு” பெயர் “காஸா ரோடு” என்று பெயர் மாற்றம்: உள்ளூர் தீவிரவாதம் என்று பேசப்படும் நிலையில், கேரளாவில் தொடர்ந்து இத்தகைய நிகழ்வுகள் அறியப்படுகின்றன[5]. இது தொடர்பாக இந்திய உளவுத்துறை, தேசிய பாதுகாப்பு முகமையும் கேரளாவின் காசர்கோடு நகராட்சியின் “ஜூமா மஸ்ஜித் தெரு” பெயர் காஸா என்று பெயர் மாற்றத்தில் ஐ.எஸ். தீவிரவாதப் பின்னணி உள்ளதாக சந்தேகிக்கிறது[6]. இந்த சந்தேகத்துக்கு காரணம் கடந்த 2016ஆம் ஆண்டு கேரளாவின் தற்போதைய காஸா தெரு பகுதியிலிருந்துதான் 21 இளைஞர்கள் காணாமல் போனார்கள்[7]. காணாமல் போன இளைஞர்கள் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்திருக்கலாம் என்று தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகளும் உளவுத்துறை அதிகாரிகளும் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதம், காசர்கோடு பஞ்சாயத்து தலைவர் ஏ.ஜி.சி.பஷீர் [district panchayat president AGC Basheer] துருத்தி ஜூமா மஸ்ஜித் தெருவை காஸா என்று பெயர் மாற்றி திறந்துவைத்தார் என்று கூறப்படுகிறது[8]. இது குறித்து அவர் ஜூன் 19ஆம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளிடம் கூறுகையில், காசர்கோடு நகராட்சி எல்லையில் வரும் அந்த தெருவை திறந்துவைத்தது நான் இல்லை. ஆனால், நான் அண்மையில்தான் அந்த பகுதிக்கு போயிருந்தேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால், காணாமல் போன இளைஞர்களைப் பற்றி ஒன்றும் கூறவில்லை.
பெயர் மாற்றம் எதைக் குறிக்கிறது?: காஸா என்று பெயர் மாற்றப்பட்ட அந்த தெருவுக்கு நகராட்சி நிதியில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இது போன்ற பெயரில் ஏதேனும் தெரு நகராட்சி எல்லைக்குள் இருந்தால் எங்களின் கவனத்துக்கு வந்திருக்கும் என்று காசர்கோடு நகராட்சி தலைவி பீபாத்திமா இப்ராஹிம் தெரிவித்துள்ளார்[9]. ஆனால், அப்பகுதியில் உள்ள பாஜக தலைவர் ரமேஷ் கூறுகையில், காசர்கோடு நகராட்சி பகுதியிலுள்ள தெருக்களின் பெயர்களை மாற்ற தீவிரமான முயற்சி நடக்கிறது. இந்த விஷயம் நகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு வந்து விவாதிக்கப்பட்டது. ஆனால், இந்த பெயர் மாற்றத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், இது போன்ற பல பெயர்கள் நகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்[10]. இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத உளவுத்துறை அதிகாரி கூறுகையில் மத வகுப்பு பிரிவுடைய காசர்கோடு மாவட்டத்தில் ஐ.எஸ். போன்ற அமைப்பினர் ஊடுருவியிருக்கின்றனர்[11]. இருப்பினும், மத்திய உளவுத்துறையின் பார்வையில் நீங்கள் குறிப்பிடுகிற காஸா தெரு பெயர் மாற்றம் சம்பவம் எங்களின் கவனத்துக்கு வரவில்லை. என்று தெரிவித்துள்ளார்[12].
காஸா ரோடில் இருக்கும் விஸ்டம் அகடமி மதம் மாற்றத்தில் ஈடுபட்டுள்ளதா?: கேரள மாநிலம் காசர்கோடில் இயங்கும் ‘விஸ்டம் அகாடமி’ எனும் டுடோரியல் கோச்சிங் மையத்தில் படிப்பதற்காக சேரும் இந்து இளம்பெண்களை அங்கிருக்கும் சில ஏஜண்டுகள் கலிபாக்கள் எனும் இஸ்லாம் மதகுருக்கள் மூலமாக இஸ்லாம் மதத்துக்கு மாறிவிடும் அளவுக்கு மூளைச் சலவைச் செய்து வருகிறார்கள்[13]. இந்தியாவைச் சேர்ந்த இந்துப் பெண்களை முஸ்லிம்களாக மாற்றி அவர்களை சிரியாவுக்கு அழைத்துச் செல்லவும், சிரியன் மொழியைக் கற்றுக் கொள்ள வைக்கவும் இங்கேயே ஏஜண்டுகள் வாயிலாக ரகசியமாக சதி வேலைகள் நடந்து வருகின்றன. காஸா எனப்படும் காசர்கோடு டுடோரியல் பள்ளியில் பயிலும் போது இப்படி மூளைச் சலவை செய்து மனம் மாற்றம் செய்யப் பட்ட, பாதிக்கப் பட்ட இளம்பெண் ஒருவரின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் மாலை ‘Times now’ ல் பிரேக்கிங் நியூஸ் ஓடிக் கொண்டிருந்தது.
தமிழ் ஊடகங்கள் அமைதியாக இருப்பது: “பி.டி.ஐ” செய்தி என்பதால், ஆங்கில ஊடகங்கள், செய்திதாள்கள் அனைத்திலும், இச்செய்தி வெளி வந்துள்ளது. ஆனால், தமிழில் வரவில்லை. தமிழ் சேனல்களில் இது தொடர்பான செய்திகள் எதுவும் உண்டா? என்று தேடியதில் பாக்கியின்றி எல்லாவற்றிலும் நமது அரசியல் அண்ணாத்தைகளும், விமர்சகப் புலிகளும் இணைந்து ஆழ்ந்த விவாத நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஒரு நிமிடம் யாருமே ‘Times Now’ பார்த்திருக்கவில்லையா? அல்லது இது ஃபேக் நியூஸா? என்று சந்தேகமாகி விட்டது. இன்று இந்நேரத்தில் இணையத்தில் தேடுகிறேன். அப்போதும் Times Now ல் மட்டுமே அந்தச் செய்தி காணக் கிடைக்கிறது. என்ன தான் நடக்கிறது எனத் தெரியவில்லை. இதோ கூப்பிடு தூரத்தில் இருக்கும் கேரளாவின் காஸர் கோடில் தேசப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் விளைவிக்கும் வண்ணம் ஒரு விசயம் நடந்திருக்கிறது என்றால் நமது ஊடகங்களில் ஏன் அதைப் பற்றிய செய்திகள் இல்லை? “வாட்ஸ்-அப்” விவகாரத்தை செய்தியாக்கி விட்ட்து என்று “டைம்ஸ்-நௌ” செனலை விமர்சனம் செய்யப்படும் போக்கும் காணப்படுகிறது[14].
உஸ்மா அகமதுவின் கதை: கடந்த மாதத்தில் இந்தியாவைப் பரபரப்புக்குள்ளாக்கிய செய்திகளில் ஒன்றை இப்போது குறிப்பிட்டாக வேண்டும்; டெல்லியைச் சேர்ந்த 22 வயதுப் பெண்ணான உஸ்மா அஹமது, மலேசியாவில் பணிபுரியும் போது தனது நண்பரான தாஹிர் அலி எனும் இஸ்லாமியருடன் இணைந்து பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்றார். சுற்றுலாவுக்கென அழைத்துச் சென்ற தாஹிர் அங்கே துப்பாக்கி முனையில் தன்னை மிரட்டி திருமணம் செய்து கொண்டு அறைக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்தான். “பாகிஸ்தானில் நான் இருந்த பகுதியில் என்னைப் போலவே மலேசியாவைச் சேர்ந்த இளம்பெண்கள் பலர் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். அதிருஷ்டவசமாக நான் அங்கிருந்து தப்பி இஸ்லாமாபாத்தில் இருக்கும் இந்திய தூதரகத்துக்கு வந்து சேர்ந்து அங்கேயே 20 நாட்கள் தங்கியிருந்து இந்திய வெளியுறவுத் துறையின் உதவி மூலமாக மறுபிறவி எடுத்ததைப் போல இந்தியா வந்து சேர்ந்தேன். பாகிஸ்தான் ஒரு மரணக் கிணறு அங்கே என்னைப் போல சென்று மாட்டிக் கொண்டு பெண்கள் மீள்வது நினைத்துப் பார்க்க முடியாத விசயம். அங்கே ஒவ்வொரு வீட்டிலும் 2 அல்லது 3 மனைவிகள் இருக்கிறார்கள். என்னால் தப்ப முடிந்திரா விட்டால் இப்போது என்னை யாருக்காவது விற்றிருப்பார்கள் அல்லது வேறு ஏதாவது தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்தி இருப்பார்கள்”, எனக் கண்ணீருடன் பேட்டியளித்த உஸ்மாவை நாம் அதற்குள் மறந்து விடக் கூடாது. உஸ்மா ஏன் பாக்கில் அடைத்து வைக்கப் பட்டார் என்ற விசயத்தை ஆராய்ந்தால் “பிரேக்கிங் நியூஸ்” விவகாரத்தையும் நம்மால் புரிந்து கொள்ள இயலும்.
© வேதபிரகாஷ்
25-06-2017
[1] Deccan Herald, Road in Kerala renamed after Gaza Strip, PTI, Published Jun 19, 2017, 7:49 pm IST, Updated Jun 19, 2017, 7:49 pm IS.
[2] http://www.deccanchronicle.com/nation/current-affairs/190617/road-in-kerala-renamed-after-gaza-strip.html
[3] மின்னம்பலம், கேரளாவின் ‘காஸா‘ தெருவை கண்காணிக்கும் உளவுத்துறை!, திங்கள், ஜூன்.19 2017.
[4] https://minnambalam.com/k/2017/06/19/1497877556
[5] Indian Express, A Kerala road ‘renamed’ Gaza Street: Report,, By: Express Web Desk | New Delhi | Published:June 19, 2017 3:49 pm
[6] http://indianexpress.com/article/india/kerala-road-renamed-gaza-street-4711571/
[7] India Today, Gaza street in Kerala’s Kasargod district throws intelligence agencies into tizzy, Rohini Swamy, Edited by Dev Goswami, Kasargod, June 19, 2017, UPDATED 13:51 IST
[8] http://indiatoday.intoday.in/story/kerala-street-renamed-to-gaza/1/982100.html
[9] Times of India, Kerala’s ‘Gaza Street’ on the radar of IB, NIA, K P Sai Kiran| TNN | Updated: Jun 19, 2017, 12.28 PM IST
[10] http://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/keralas-gaza-street-on-the-radar-of-ib-nia/articleshow/59210094.cms
[11] Hindustan Times, Kerala road ‘renamed’ Gaza Street, intelligence agencies not amused, Thiruvananthapuram, HT Correspondent, Updated: Jun 19, 2017 22:43 IST
[12] http://www.hindustantimes.com/india-news/kerala-road-renamed-gaza-street-intelligence-agencies-not-amused/story-N6DKwBjANNMqI70JOqEUKI.html
[13] கார்த்திகா வாசுதேவன், இந்தியப் பெண்களை மத மாற்றம் செய்து நாடு கடத்த ISIS நிர்ணயித்திருக்கும் அதிர்ச்சி தரும் ரேட் கார்டு விவகாரம்!, By தினமணி, Published on : 24th June 2017 05:56 PM.
[14] https://www.newslaundry.com/2017/06/24/times-now-kerala-isis-whatsapp-report
Explore posts in the same categories: ஃபிதாயீன், ஃபேஸ்புக், அடிப்படைவாதம், அம்மாவுக்குத் தெரியாதா முஜாஹித்தீன்கள், அல் அர்பி, அல் முஹம்மதியா, உயிர் பலி, உளவாளி, உளவு, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.டி.தீவிரவாதி, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசில், ஐசிஸ், ஐஸில், கற்பழிப்பு ஜிஹாத், கல் வீச்சு, கல்லடி ஜிஹாத், கல்வீச்சு, காசர்கோடு, காஜா ரோடு, காஜா ரோட், காதலி, காதல் ஜிஹாத், காதல் புனித போர்!, காஸா ரோடு, காஸா ரோட், குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பு, குண்டுவெடிப்பு, கேரள ஜிஹாதி, கேரள ஜிஹாதிகள், கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், கேரளா, செக்ஸ்-ஜிஹாத், ஜிஹாதி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, மின்னணு ஜிஹாத், விஸ்டெம் அகடெமி, Uncategorizedகுறிச்சொற்கள்: இஸ்லாம், ஐசில், ஐசிஸ், காசஎகோடு, காஜா ரோடு, காஜா ரோட், காஸா ரோடு, காஸா ரோட், கேரளா, ஜிஜாதி தீவிரவாதம், ஜிஹாதி, ஜிஹாதி குண்டு, ஜிஹாதி குண்டுக்கொலை, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாதி பெண் தீவிரவாதிகள், ஜிஹாதி பெண்கள், ஜிஹாதிகள், ஜிஹாத்
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்