கேரளா முதல் காஷ்மீர் வரை: இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதமாகி, ஜிஹாதாகி, மனித வெடிகுண்டாக மாறியது ஆப்கானிஸ்தானில் “வெடிகுண்டுகளுக்கெல்லாம் தாயிடம்” செத்தது! (2)

கேரளா முதல் காஷ்மீர் வரை: இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதமாகி, ஜிஹாதாகி, மனித வெடிகுண்டாக மாறியது ஆப்கானிஸ்தானில்வெடிகுண்டுகளுக்கெல்லாம் தாயிடம்செத்தது! (2)

ISIS-K suffered huge loss

வெடிகுண்டுகளுக்கெல்லாம் தாய்என்ற குண்டை அமெரிக்கா ஐசிஸ் தீவிரவாத்களின் மீது போட்டது (13-04-2017): ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிராக அமெரிக்க படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன[1].  இந்நிலையில் அமெரிக்காவின் அணு ஆயுதம் அல்லாத மிகப்பெரிய குண்டாக கருதப்படும் MOAB [Mother of all bombs] GBU-43 என்ற குண்டை, 13-04-2017 அன்று இரவு 7 மணிக்கு ஐ.எஸ் அமைப்பினரின் இருப்பிடத்தில் அமெரிக்கப் படைகள் வீசின. அணுகுண்டுகள் இல்லாத ரகத்தில் இதுதான் மிகப் பெரிய வெடிகுண்டு. சுமார் 9,797 கிலோ எடை கொண்ட இந்த பிரமாண்ட வெடிகுண்டில், 9 ஆயிரம் டன் வெடிபொருள்கள் அடங்கியிருக்கும்[2]. இத்தாக்குதலில் குறைந்தபட்சம் 36 தீவிரவாதிகள் உயிரிழந்திருக்கக்கூடும் என ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது[3]. இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்தில் கேரளாவில் இருந்து சென்று ஐ.எஸ் அமைப்பினருடன் இணைந்து செயல்பட்ட 21 பேரில்,  2 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது[4]. இருப்பினும், உள்ளூர் ஊடகங்கள், இப்படியெல்லாம் விளக்கி விட்டு, ஒரு / இருவர் சாவு? என்று கேள்விக்குறியைத்தான் போட்டு செய்திகளை வெளியிட்டுள்ளன[5]. இந்தியர்கள், கேரளாகாரர்கள், மலையாளிகள், ஜிஹாதிகள் என்றெல்லாம் சொன்னாலும், அவர்கள் உருவானதை விளக்க வேண்டும்.

ISIS-K kERALA NEXUS- WOMEN TOO

ஐசிஸுக்கு கேரள ஜிஹாதிகள் சென்றது எப்படி?: சரி, குடும்பத்தோடு, இந்த ஜிஹாதிகள் ஆப்கானிஸ்தானுக்கு எப்படி சென்றனர்? இந்த நபர்கள் அனைவருமே ஒரு இடைத் தரகர் மூலம் ஆப்கனுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆப்கனில் தீவிரவாத செயல்களில் ஈடுபட இந்தியாவிலிருந்தே அதிகம் பேரை ஈர்க்க ஐஸ்ஐஎஸ் திட்டமிட்டிருந்தது. 13-04-2017 அன்று இரவு அமெரிக்கா நடத்திய மிகப்பெரிய குண்டு வீச்சு தாக்குதலில் கேரளாவிலிருந்து சென்று ஆப்கனில் தங்கியிருந்த 21 பேரும் கொல்லப்பட்டுவிட்டதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து ‘ஒன்இந்தியாவிடம்’ பேசிய உளவுத்துறை அதிகாரி ஒருவர்[6], “இந்த தாக்குதல் இப்போது நடைபெறும் என்று முன்கூட்டியே நாங்கள் கணிக்கவில்லை. ஆனால் ட்ரம்ப் இப்படி செய்வார் என எதிர்பார்த்ததுதான். அமெரிக்காவின் இந்த தாக்குதல் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து நாச வேலை செய்ய நினைப்போரின் சிந்தனையை மாற்றக் கூடியது. ட்ரம்ப் ஏற்கனவே தனது பிரசாரத்தின்போது கூறியதை இப்போது செயல்படுத்த ஆரம்பித்துள்ளார். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை முழுமையாக அழிகக அவர் எந்த எல்லைக்கும் செல்வார்,” என்றார்.  ஆனால், அசாசுதீன் ஒவைசி மற்றும் தமிழக-கேரள முஸ்லிம் தலைவர்கள் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். என்னடா, இந்திய முஸ்லிம்கள் ஜிஹாதிகளாக மாறி கொல்லப்பட்டனரே என்று சதோசப்படுவதா அல்லது வருத்தப்படுவதா என்று தெரியவில்லை போலும்!

ISIS-K kERALA NEXUS

கேரளா ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் செல்ல மாநிலமாக மாறிவருவது எப்படி?:. கேரளா ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் செல்ல மாநிலமாக மாறிவருகிறது என்கிறது “ஒன்.இந்தியா” வளைதளம். அங்குள்ள பல முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத இயக்கத்தால் வலை வீசப்படுகிறார்கள் என்றும் சேர்த்து சொல்கிறது. இந்த ஆபத்தை உணர்ந்த கேரள முஸ்லிம் அமைப்புகள் பலவும் தங்கள் இளைஞர்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்லி அவர்களை நன் மார்க்கத்தில் திருப்ப முயன்று வருகின்றன, என்று “இன்.இந்தியா” கூறியுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. மலப்புரம் என்ற தனி மாவட்டம் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து ஆரம்பத்திலுருந்து வளர்த்த இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதம் ஆகி, தீவிரவாதம் ஆகி, இப்பொழுது, வெளிப்ப்டையான ஜிஹாத் ஆகியுள்ளது. ஆப்கனில் 13-04-2017 அன்று நடந்த தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்த அறிவிப்பை வெள்ளைமாளிகை வெளியிடவில்லை. அதுகுறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில் இந்திய உளவுத்துறை ஈடுபட்டு வருகிறது. கேரளாவை சேர்ந்த 21 பேர் இறந்திருக்க கூடும் என்றபோதிலும், இதை “மினி கேரளா” என்ற கோட்வேர்ட் வைத்தே அழைக்கிறது இந்திய உளவுத்துறை[7].

kerala-isis-nexus-confirmed-youth-after-conversion-Afgan

ஊடகங்கள் உண்மைகளை மறைக்கும் விதம்: கடந்த அக்டோபர் [2016] மாதத்திலேயே, படித்த முஸ்லிம் இளைஞர்கள் அங்கு செல்வது ஊடகங்கள் எடுத்துக் காட்டின. ஆனால், ஒரு நிலையில், அதனை “கிருத்துவ-இஸ்லாமிய லவ்-ஜிஜாத்” போல கேரள ஊடகங்கள் சித்தரித்தன. எப்படியிருந்தாலும் ஐசிஸ்.ஸில் சேருவது ஏன் என்று விவாதிக்கப்படவில்லை. அதிலும் ஆப்கானிஸ்தானுக்குச் சென்று பயிற்சி பெறுகின்றனர் என்று செய்திகள் வந்தபோதிலும் அமைதியாக இருந்தனர்[8]. தங்களது மகன் / மகள் திரும்ப வரவேண்டும் என்று குரல் கொடுக்கவில்லை. ஏஜென்டுகளோ ஆட்களை அனுப்பிக் கொண்டே இருந்தனர்[9]. அதாவது ஏஜென்டுகளும் முஸ்லிம்கள் என்பதால், குடும்பத்திற்கு பணம் கிடைக்கிறது என்று அமைதியாக இருந்து விட்டனர் போலும். வேலைக்கு ஆட்களை அனுப்பி வைத்த கேரளா, இப்பொழுதும் ஆட்களை அனுப்பி வைக்கிறது, செய்யும் வேலை என்ன என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. கக்கூஸ் கழுவினாலும் சரி, இந்திய துரோகிகளாக இருந்தாலும் சரி, பணம் வருகிறது. குழந்தை வேண்டுமானால் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், ஒரு கிருத்துவப் பாதிரியை பிடித்து வைத்தார்கள் எனும்போது, மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து, பணம் கொடுத்து விடிவிக்க செய்தனர். ஆக, இதன் பின்னணி என்ன என்பதும் மர்மமாக இருக்கிறது.

kerala-isis-nexus-confirmed-youth-after-conversion

ராணுவத்தில் சேர்ந்தால் மகிழும் தாயும், ஜிஹாதில் சேர்ந்தால் மகிழும் தாயும்: தன் மகன் ராணுவத்தில் சேர்ந்து இந்திய நாட்டிற்கு சேவைசெய்ய வேண்டும் என்று எத்தையோ தாய்மார்கள், பெற்றோர்கள் இருக்கும் நம் நாட்டில், இவ்வாறு தமது மகன் / மகள் ஹிஹாதியாகவேண்டும், தீவிரவாதியாக வேண்டும், மனித வெடிகுண்டாக வேண்டும் என்று ஆசைப்படும் தாய்மார்கள், பெற்றோர்கள் கண்டு திடுக்கிடுவதாக இருக்கிறது. அதாவது அவர்களது மனங்களே, தீவிரவாதத்தால் ஊறிப்போனதால், ஜிஹாதித்துவம் அவர்களுக்கு உற்சாகமாக இருக்கிறது, குண்டுவெடித்து மக்களைக் கொன்றால், ஆனந்தமாக இருக்கிறது, மனிதவெடிகுண்டாக வெடித்து மற்றவர்களைக் கொன்றால், அம்மகிழ்ச்சி இன்னும் பெரும்மடங்காகிறது போலும். இல்லையென்றால், பெற்ற தாய் எவளும் அதற்கு உடன்பட மாட்டாள். இருப்பினும், இவையெல்லாம் நிதர்சனமாக இந்தியாவில் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் தான், தங்களைக் காக்கும் ராணுவவீரர்களையே அவமதிக்கிறார்கள் கேடுகெட்ட காஷ்மீர் முகமதிய இளைஞர்கள். அவர்கள் பெற்றோர் அவர்களை அவ்விதமாக வளர்த்துள்ளனர் என்று தெரிகிறது.

© வேதபிரகாஷ்

15-04-2017

six-arrested-02-10-2016 - KeralA NEXUS

[1] http://www.dailythanthi.com/News/World/2017/04/14121527/Missing-Kerala-youth-who-joined-IS-killed-in-Afghanistan.vpf

[2] விகடன், ஆப்கன் மீதான அமெரிக்காவின் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் பலி?!,  Posted Date : 02:27 (15/04/2017); Last updated : 02:43 (15/04/2017)

[3] http://www.vikatan.com/news/world/86485-isis-kerala-recruits-feared-dead-in-afghanistan-attack.html

[4] நியூஸ்7.செனல், அமெரிக்கா வீசிய வெடிகுண்டில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு!, April 15, 2017.

[5] http://ns7.tv/ta/tamil-news/india-world/15/4/2017/least-2-20-isis-kerala-recruits-feared-dead-afghanistan-moab

[6] தமிழ்.ஒன்.இந்தியா, அமெரிக்க குண்டு வீச்சில் சிக்கி ஆப்கனில் ஒரு மினி கேரளாவே காலி!, ByVeera Kumar, Published: Friday, April 14, 2017, 10:06 [IST]

[7] http://tamil.oneindia.com/news/international/a-mini-kerala-is-recruits-was-wiped-in-trump-s-big-afghan-bombing/slider-pf232606-279763.html

[8] dailymail.co.uk, Deep links between young Keralans and ISIS as probe reveals THIRTY youths attended training camps in Afghanistan before returning to start sleeper cells, By INDIA TODAY; PUBLISHED: 23:28 BST, 25 October 2016 | UPDATED: 12:47 BST, 27 October 2016

The arrest of 31-year-old Subahani, who is a native of Thodupuzha in Idukki district, was a major breakthrough as he had identified key persons in the network…….NIA identified Sajeer Abdulla Mangalaseri as the chief of the IS network in Kerala. 35-year-old Sajeer, a Civil Engineer from National Institute of Technology, Kozhikode and a Salafist who hails from Moozhikal in Kozhikode has been recruiting people from Kerala in IS fold.

[9] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-3872224/Deep-links-young-Keralans-ISIS-probe-reveals-THIRTY-youths-attended-training-camps-Afghanistan-returning-start-sleeper-cells.html

 

Explore posts in the same categories: 786, ஃபிதாயீன், அடையாளம், அத்தாட்சி, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, Uncategorized

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

One Comment மேல் “கேரளா முதல் காஷ்மீர் வரை: இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதமாகி, ஜிஹாதாகி, மனித வெடிகுண்டாக மாறியது ஆப்கானிஸ்தானில் “வெடிகுண்டுகளுக்கெல்லாம் தாயிடம்” செத்தது! (2)”

  1. vedaprakash Says:

    Family of Kasaragod native, who joined ISIS, confirms his death Wednesday 08 March 2017 02:40 PM IST…

    Kasaragod: The family of the missing Keralite youth, who is believed to have joined the Islamic State terror outfit, has confirmed his death.

    The family of Hafeesudeen T.K. at Trikaripur in Kasaragod found a photo of Hafeesudeen’s body, Manorama News reported Wednesday. Hafeesudeen’s kin saw the photo on another missing youth Abdul Rasheed’s social media account.

    Hafeesudeen and Abdul Rasheed were among the 20-odd missing youths from Kerala believed to have joined the ISIS.

    One of Hafeesudeen’s relatives had received a message that he had become a ‘martyr’ during an air strike in Afghanistan on February 25. However, there was no official confirmation.

    The relatives then scoured social media and found the photo. The National Investigation Agency had earlier confirmed that Hafeesudeen had joined the IS.

    Read more at: http://english.manoramaonline.com/news/kerala/kasaragod-native-isis-confirms-death-kerala-missing-youth.html


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: