சென்னை கொரியர் கம்பனியிலிருந்து வெடிமருந்து பொருட்களை மதுரைக்கு அனுப்பியது, பிரஸர்-குக்கர் வெடிகுண்டுகள் தயாரித்தது, நான்கு மாநிலங்களில் வெடித்தது – இது ஒரு பரந்த ஜிஹாதி தீவிரவாதம் தான் (4)
சென்னை கொரியர் கம்பனியிலிருந்து வெடிமருந்து பொருட்களை மதுரைக்கு அனுப்பியது, பிரஸர்-குக்கர் வெடிகுண்டுகள் தயாரித்தது, நான்கு மாநிலங்களில் வெடித்தது – இது ஒரு பரந்த ஜிஹாதி தீவிரவாதம் தான் (4)
நீதிமன்ற வளாகங்களில் 2016ல் வெடிகுண்டுகள் வெடித்தது: இந்திய நீதிமன்றங்களை நாங்கள் மதிக்க மாட்டோம், போலீஸார் எங்களை ஒன்றும் செய்யமுடியாது, ஆதாரங்களை அழித்தல்-மறைத்தல், உடனே அவர்களுக்கு ஆஜராகும் வக்கீல்கள், ஆள்-கொணர்வு மனு போடுதல், ஒரே குற்றத்தில் பலமுறாஇ சம்பந்தப்பட்டுள்ளது போல காண்பித்துக் கொள்வது போன்றவையும், அவர்களைக் காட்டிக் கொடுத்தது. ஆந்திரா மாநிலம் சித்துார் நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடித்த வழக்கு தொடர்பாக மதுரையைச் சேர்ந்த அபுபக்கர், அப்துல்ரகுமான் ஆகியோரிடம் தேசிய புலனாய்வு பிரிவ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்[1]. கடந்தாண்டு –
- ஏப்ரல்.,7 2016ல், ஆந்திரா மாநிலம் சித்துார் நீதிமன்ற வளாகம் மற்றும்
- ஜூன் 15ல் கேரளா கொல்லம் நீதிமன்றம்,
- ஆகஸ்ட்.,1ல் கர்நாடகா மைசூரு நீதிமன்றம்,
- செப்டம்பர்.,12ல் ஆந்திரா நெல்லுார்,
- நவம்பர்.,1ல் கேரளா மலப்புரம் நீதிமன்ற வளாகத்தில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது.
இதுதொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.பி.,) விசாரணை நடத்தி வருகிறது[2]. இதில், தடை செய்யப்பட்ட அல்கொய்தா அமைப்பிற்கு தொடர்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்த அமைப்புடன் தொடர்பு உடைய, மதுரை இஸ்மாயில்புரம் அப்பாஸ் அலி உள்ளிட்ட 4 பேரை என்.ஐ.பி., கைது செய்தது. ஏற்கனவே, இவர்களின் வீடுகளில் என்.ஐ.பி., சோதனையிட்ட நிலையில், கடந்த மார்ச் 27ம் தேதி 2017 கேரளா போலீசார் மதுரையில் உள்ள அபுபக்கர் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்தினர்[3]. இந்நிலையில், நேற்று சித்துார் நீதிமன்றத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக மதுரை செல்லுார் அபுபக்கர், மீனாட்சி பஜாரில் கடை வைத்திருக்கும் அப்துல்ரகுமான் ஆகியோரிடம் என்.ஐ.பி., அதிகாரிகள் விசாரித்தனர்[4]. ஏற்கனவே கடந்த ஜனவரியில் இருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரித்தனர்[5]. அப்பொழுது சரிவர பதில் சொல்லவில்லை, ஒத்துழைக்கவில்லை. தற்போது அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தனர். சென்னையிலிருந்து மதுரைக்கு வெடிப்பொருட்கள் அனுப்பியது, கொரியர் கம்பனி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் அபூபக்கருக்கு உள்ள தொடர்பும் கண்டுபிடிக்கப்பட்டது[6]. தீவிர விசாரணை மற்றும் ஆதாரங்கள் சரிபார்த்தவுடன் தான், இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்[7].
படித்த முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதிகளாக தயாராவது: தீவிரவாதிகள் கைதானதும், பொதுவாக பெற்றோர், உற்றோர், மாற்றோர், “ஐயோ அந்த பிள்ளை, ரொம்ப நல்ல பிள்ளை, தானுண்டு, தன் வேலையுண்டு, என்றிருப்பான்”; “நல்ல முஸ்லிம், ஐந்து வேளை தொழுகை செய்வான், அவ்வளவுதான்”; “ஏதோ வெளியூரில் வேலை செய்கிறான் என்று அடிக்கடி சென்று வருகிறான், அவ்வளவு தான், மற்ற விவரங்கள் எங்களுக்கு ஒன்றும் தெரியாது”; “எதுக்கு, இதையெல்லாம் கேட்குறீங்க, பிறகு தீவிரவாதி என்று சொல்லவா?” – இப்படி பலதரப்பட்ட பேச்சுகளை விசாரிப்பவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். படித்த, நவநாகரிகத்துடன் காணப்படும், இந்த முஸ்லிம் இளைஞர்கள் ஏன், எப்படி தீவிரவாதிகளாக மாற முடியும் என்று யோசிக்க வேண்டும். ஆரம்பித்திலிருந்தே, நாங்கள் தனித்தவர், மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர், தங்களைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே தாழ்ந்தவர்கள், காபிர்கள், இந்துக்கள், முன்னால் முகமதியர்களுக்கு அடிமைகளாக இருந்தவர்கள் என்ற எண்ணத்தி ஊட்டி, சிறுவய்திலிருந்து வளர்க்கப் படும் இவர்கள், தேவையில்லாமல், இந்துக்களை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள், பிறகு, ஐசிஸ் போன்ற தீவிரவாத இயக்கங்கள், மாதம் நன்றாக சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்துக் கொள்கிறது. இதனால், தீவிரவாதமே, வேலையாக, தொழிலாக மாறிவிடுகிறது. “வேலை செய்கிறேன், சம்பளம் கொடுக்கிறார்கள்” என்ற நிலையில் தீவிரவாதத்தில் அமுங்கி விடுகிறார்கள். அவர்களை அதற்கும் மேலாக மூளைசலவை செய்ய வேண்டிய அவசியமே இல்லாதவர்களாகி விடுகின்றனர்.
2008 மும்பை மற்றும் தொடர்புடைய வழக்கில் 12-04-2017 அன்று தீர்ப்பு: கடந்த 2008-ம் ஆண்டு மும்பை உள்பட பல்வேறு நகரங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டில் 12-04-2017 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது[8]. சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு கொடுக்கப்பட்டாலும், அந்த ஆத்மாக்கள் சாந்தியடையாது. மும்பை உள்பட பல்வேறு நகரங்களில் கடந்த 2008-ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து தீவிரவாத ஒழிப்பு படையினர் விசாரணை நடத்தினர்[9]. விசாரணையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து தீவிரவாத ஒழிப்பு படையினர் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தினர்[10]. இந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையதாக இந்திய முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்ந்த –
- சையது முகமது நவுசத்(வயது 28),
- அகமது பாஷா(35),
- அகமது(46)
- மொஹம்மது அலி, முக்கச்சேரியைச் சேர்ந்தவன்.
- ஜாவித் அலி (மேலே குறிப்பிட்டவனின் மகன்)
- மொஹம்மது ரபீக் போலந்தாரு பன்ட்நாலை சேர்ந்தவன்.
- சபீர் பட்கல் அல்லது ஷபிஇர் மௌலி,
ஆகியோர் உள்பட 7 பேரை பயங்கரவாத ஒழிப்பு படையினர் கடந்த 2008-ம் ஆண்டு கைது செய்தனர்[11].
மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை, நால்வர் போதிய அத்தாட்சி இல்லாததால் விடுவிப்பு: அவர்கள் அனைவரும் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள உல்லால் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். கைதான 7 பேர் மீதும் தீவிரவாத ஒழிப்பு படையினர் மங்களூரு 3-வது விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிந்து, நீதிபதி புஷ்பாஞ்சலி தேவி கடந்த 10-ந் தேதி இவ்வழக்கில் சையது முகமது நவுசத், அகமது பாஷா, அகமது ஆகிய 3 பேரை குற்றவாளிகள் என்று அறிவித்து தீர்ப்பு கூறினார். மேலும் அவர்கள் 3 பேருக்குமான தண்டனை விவரங்கள் 12-ந் தேதி அறிவிக்கப்படும் என்று கூறி அவர் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 3 பேரைத் தவிர மற்ற 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்[12]. இந்த நிலையில் நேற்று தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட சையது முகமது நவுசத், அகமது பாஷா, அகமது ஆகிய மூன்று பேருக்குமான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன[13]. அதற்காக அவர்கள் 3 பேரும் கோர்ட்டில் நீதிபதி புஷ்பாஞ்சலி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து அவர்கள் மூன்று பேருக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி புஷ்பாஞ்சலி உத்தரவிட்டார்[14]. ஆனால், இவர்கள் மேல்முறையீடு செய்வார்கள், காலந்தாழ்த்துவார்கள். ஆனால், தீவிரவாதம் குறையுமா அல்லது இந்த ஜிஹாதிகள் தான் மாறுவார்களா?
© வேதபிரகாஷ்
14-04-2017
[1] தினமலர்,சித்தூரில் குண்டு வெடித்த வழக்கு : மதுரையில் 2 பேரிடம் விசாரணை, பதிவு செய்த நாள். ஏப்ரல்.10, 2017.23.58.
[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1749096
[3] http://english.mathrubhumi.com/news/kerala/malappuram-collectorate-blast-2-more-arrested-1.1860732
[4] Indian Express, Malappuram collectorate blast: Two men from al-Qaeda inspired group arrested in Madurai, By Express News Service | Published: 10th April 2017 09:21 PM, Last Updated: 10th April 2017 09:22 PM
[5] http://www.newindianexpress.com/states/kerala/2017/apr/10/malappuram-collectorate-blast-two-men-from-al-qaeda-inspired-group-arrested-in-madurai-1592145.html
[6] Times of India, Two accused in Malappuram blast case arrested from TN, TNN | Updated: Apr 11, 2017, 07.11 AM IST.
[7] http://timesofindia.indiatimes.com/city/kozhikode/two-accused-in-malappuram-blast-case-arrested-from-tn/articleshow/58116486.cms
[8] மாலைமலர், இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த 3 தீவிரவாதிகளுக்கு ஆயுள்தண்டனை: மங்களூரு கோர்ட்டில் தீர்ப்பு, பதிவு: ஏப்ரல் 13, 2017 01:32
[9] http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/13013212/1079674/Mangalore-3-held-in-2008-on-charges-of-terror-and.vpf
[10] Indian Express, 2008 terror case: Three convicted, four acquitted, By Express News Service, Published: 11th April 2017 04:27 AM, Last Updated: 11th April 2017 04:27 AM
[11] http://www.newindianexpress.com/states/karnataka/2017/apr/11/2008-terror-case-three-convicted-four-acquitted-1592294.html
[12] Four others — Mohammed Ali of Mukkacherry, his son Javed Ali, Mohammed Rafique from Bolontharu in Bantwal and Shabbir Bhatkal alias Shabbir Maulvi — were let off due to lack of evidence.
[13] India Today, RI for three and four let out: IM, Published: 11th April 2017
[14] http://indiatoday.intoday.in/story/mangalore-3-held-in-2008-on-charges-of-terror-and-indian-mujahideen-links-get-life-term/1/927025.html
Explore posts in the same categories: 2008 குண்டு வெடிப்பு, ஃபத்வா, ஃபிதாயீன், அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, முஸ்லீம்களின் அடிப்படைவாதம், மைசூரு, மைசூர், வெடி, வெடி மருந்து, வெடிகுண்டு, வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள், வெடிபொருள் வழக்கு, Uncategorizedகுறிச்சொற்கள்: குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, சித்தூர், நரபலி, நெல்லூர், பிரசர் குக்கர், பிரஷர் குக்கர், மதுரை, மல்லபுரம், மீனாக்ஷி பஜார், மீனாட்சி பஜார்
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்