செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக்: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலை – ஷரீயத் உதல் வரை பொது சிவில் சட்ட கோரிக்கை வரை(2)

செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக்: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலைஷரீயத் உதல் வரை பொது சிவில் சட்ட கோரிக்கை வரை(2)

Wovs of talaq sufferings

முத்தலாக் வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது: தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டுக்கும், இஸ்லாமிய தனி நபர் சட்ட வாரியத்திற்கும் கருத்து மோதல்கள் நிகழ்ந்து வந்த நிலையில் மார்ச் 30, 2017 அன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது[1]. அப்போது, இவ்வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. மேலும், வரும் மே மாதம் 11-ம் தேதி 2017 முதல் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர். முன்னதாக, இவ்வழக்கை கோடை விடுமுறைக்கு பின்னர் விசாரிக்க வேண்டும் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வைத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். மூன்று தலாக் சொல்லி திருமண உறவை முறித்துக்கொள்ளும், நடைமுறைக்கு தடை விதிக்க கோரி இஸ்ரத் ஜஹான் என்ற முஸ்லிம் பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், இஸ்லாமியர்கள் கடைபிடித்து வரும் முத்தலா‌க் முறையை அரசியல் சட்டத்திற்கு விரோதமானதாக அறிவிக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு பதிலளித்துள்ளது[2]. இதுவிசயமாக பல வழக்குகள் பதிவாகியுள்ளதால், அவை அனைத்தும், மொத்தமாக விசாரிக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது.

Wovs of talaq sufferings- women demand justice

ஷரீயத் பிரிவு பெண்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது: இஷ்ரத் ஜகான் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மூன்று முறை தலாக் என கூறி மனைவியை கணவன் விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு, இஸ்லாமிய சட்டம் அனுமதிக்கிறது[3]. முஸ்லிம் தனிநபர் சட்டம்-1937 (ஷரியத்), பிரிவு-2ல் இதற்கு அனுமதியுள்ளது[4]. இந்த அனுமதி பெண்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 14ன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள, உரிமை மீறப்படுகிறது. எனவே தலாக் நடைமுறையை நீக்க வேண்டும் என்று அந்த பெண்மணி கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பான வழக்கில் முத்தலாக் முறை சம உரிமைக்கு எதிராக அமைந்திருப்பதால் அதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முத்தலாக் முறையால் இஸ்லாமிய பெண்கள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. ‌ஆனால், முத்தலாக் முறை இஸ்லாமியர்களுக்கான மத உரிமை என்றும் இதில் அரசு தலையிடக் கூடாது என்றும் அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரிய‌ம் தெரிவித்துள்ளது. அனைத்திந்திய முஸ்லிம் பெண்கள் சட்ட வாரியம், மூன்று தலாக் நடைமுறையை நீக்க விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Talaq-talaq-talaq

பலமுறைகளில் தலாக், தலாக், தலாக் சொல்லி விவாகரத்து செய்வது: முஸ்லிம் கணவர்கள் எப்படி இந்த முத்தலாக்கை செய்து வருகின்றனர் என்று ஏராளமான செய்திகள் வந்துள்ளன. முன்பு, தபால் அட்டைல் தபால், கூரியர் என்றெல்லாம் இருந்து, பிறகு போன், டெலக்ஸ் என்று மாறி, இப்பொழுது, இணைதள அளவில், மெஸேஜ், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் என்ற நிலைக்கு வந்துள்ளது. இதனால், அதிகம் பெண்கள் பதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில், முத்தலாக் முறையானது சம உரிமைக்கு எதிராக இருப்பதாகவும், அதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லை எனவும் மத்திய அரசு சார்பாக எழுத்துப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது[5]. இம்முறையால் இஸ்லாமியப் பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது[6]. ஆனால், அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியம், முத்தலாக் முறையானது இஸ்லாமியர்களுக்கான மத உரிமை என்றும், இதில் அரசு தலையிடக் கூடாது எனவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 5-ம் தேதி கான்பூரைச் சேர்ந்த அலியா சித்திக் என்பவர், தனது கணவர் விரைவு தபாலில் முத்தலாக் அனுப்பியுள்ளதாக மோடியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.  உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்திடமும் அவர் இதுபற்றி புகார் அளித்து இருந்தார். அவர், சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாரும் தனக்கு நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ansari wife- VP

முத்தாலிக், குரானில் இல்லை, மௌலானாக்களால் உருவாக்கப் பட்டதுசல்மா அன்சாரி: நாடு முழுவதும் ‘தலாக்’ விவகாரத்து விவகாரம் பெரும் விவாதங்களை உருவாக்கி வருகிறது. இஸ்லாமிய திருமண முறையில் இருந்து விவகாரத்து பெறுவதற்கு மூன்று முறை ‘தலாக்’ என்று கூறினால் மட்டும் போதுமானது. இந்த முறையை பின்பற்றுவதால் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று தொடர்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.  இதுதொடர்பாக நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக போனில் எஸ்.எம்.எஸ்ஸில் ‘தலாக்’ என்று விவகரத்து பெறுவதும் தபாலில் ‘தலாக்’ என்று அனுப்பி விவாகரத்து பெறுவதும் நடைபெற்ற சம்பவங்கள் செய்திகளாக வெளிவந்தன. இந்த நிகழ்வுகள் தலாக் முறை மீது கடுமையான எதிர்ப்புகளை உருவாக்கியது[7]. இந்த நிலையில் ‘தலாக்’ குறித்து கருத்து தெரிவித்த சல்மா அன்சாரி, மூன்று முறைதலாக்என்று சொல்வதாக மட்டும்தலாக்நடைமுறை இருக்க கூடாது. மவுலானாவில் என்ன கூறியிருந்தாலும் அது உண்மையா ?.குரானை அதன் மூல மொழியான அராபியில் படித்து தெரிந்துகொள்ளுங்கள். அதனுடைய மொழி பெயர்பில் படிக்காதீர்கள். குரானில் இருந்து அறிவை வளர்த்து கொள்ளுங்கள். அதுகுறித்து சிந்தனை செய்யுங்கள். யாரையும் குருட்டுத்தனமாக நம்பாதீர்கள்‘ என்று கூறியுள்ளார்[8].

muslim-act-misused-for-marrying-many-women

ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு 3.5 கோடி முஸ்லிம் பெண்கள் ஆதரவு: ராஜஸ்தானின் ஈத்காஹ் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அந்த வாரியத்தின் பெண்கள் பிரிவின் தலைவரான அஸ்மா ஜோஹ்ரா, முஸ்லிம் சமூகத்தில் விவாகரத்து எண்ணிக்கை அதிகம் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தினை உருவாக்க சிலர் முயற்சி செய்கின்றனர். நாட்டில் ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு ஆதரவாக முஸ்லிம் பெண்களிடம் இருந்து 3.5 கோடி விண்ணப்பங்கள் எங்களுக்கு வந்துள்ளன[9].  இவற்றிற்கு எதிரான பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு என கூறினார். பெண்களின் உரிமைகள் என்ற பெயரில் முஸ்லிம் சமூகம் மீது அவதூறு ஏற்படுத்துவதற்கான சதி மற்றும் முஸ்லிம் சமூக கட்டமைப்பினை தகர்க்கும் முயற்சியிது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்[10]. ஷரியத் மற்றும் இஸ்லாமில் உள்ள தங்களது உரிமைகளை முஸ்லிம் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய நேரமிது.  பெண்களுக்கு அதிகளவில் உரிமைகளை இவை வழங்கியுள்ளன என்பதனை மற்றவர்கள் கூட தெரிந்து கொள்ளட்டும் என அவர் கூறியுள்ளார். அந்த வாரியத்தின் உறுப்பினர் யாஸ்மின் பரூக்கி கூறும்பொழுது, முஸ்லிம் பெண்கள் என்றால் படிக்காதவர்கள் மற்றும் எளிதில் முட்டாளாக்கி விடலாம் என சித்தரிக்கப்பட்டுள்ளது.  ஆனால் உண்மை அதுவல்ல.  முஸ்லிம் பெண்கள் வெளிப்படையாக ஷரியத்திற்கு ஆதரவாக முன்வந்துள்ளனர். குறைந்த அளவிலான பெண்களே அவற்றிற்கு எதிராக உள்ளனர்.  தற்பொழுது வாரியம், வரதட்சணை கொடுமை, குறைந்த செலவில் திருமணங்களை முடித்தல் மற்றும் சொத்தில் மகள்களுக்கும் சம உரிமை போன்ற விவகாரங்களை சரி செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது என கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

11-04-2017

muslim-women-protection-divorce-act-1986

[1] மாலைமலர், முத்தலாக் வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவு, பதிவு: மார்ச் 30, 2017 15:12.

[2] http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/30151231/1077027/SC-bench-refers-TripleTalaq-matter-to-constitution.vpf

[3] தமிழ்.ஒன்.இந்தியா, முத்தலாக்அரசியல் சட்டத்திற்கு விரோதமானது.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில், By: Karthikeyan; Published: Tuesday, April 11, 2017, 3:31 [IST]

[4] http://tamil.oneindia.com/news/india/triple-talaq-makes-muslim-women-socially-financially-vulner-279416.html

[5] விகடன், முத்தலாக் முறைக்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லைஉச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு!, Posted Date : 02:59 (11/04/2017); Last updated : 02:59 (11/04/2017)

[6] http://www.vikatan.com/news/india/86044-triple-talaq-violate-right-to-equality—centre-tells-sc.html

[7] விகடன், முத்தலாக்முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் சல்மா அன்சாரி, Posted Date : 21:37 (08/04/2017); Last updated : 21:37 (08/04/2017).

[8] http://www.vikatan.com/news/india/85845-vice-president-ansaris-wife-critized-triple-talaq.html

[9] தினத்தந்தி, ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு 3.5 கோடி முஸ்லிம் பெண்கள் ஆதரவு: முஸ்லிம் சட்ட வாரியம் தகவல், ஏப்ரல் 09, 10:11 PM

[10] http://www.dailythanthi.com/News/India/2017/04/09221142/350-cr-women-support-Shariyat-Triple-Talaq–AIMPLB.vpf

Explore posts in the same categories: அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம், அப்பீல், அஹ்மதியா, குரான், தலாக், நிக்கா, முதல் பெண்டாட்டி, முதல் மனைவி, முஸ்லிம் சாமியார், முஸ்லிம் பெண்கள், முஸ்லீம் சட்டம், மூத்தா, மொஹம்மது, வக்ப், வழக்கு, விவாக ரத்து, விவாகம், ஷரீயத், ஷாபானு, ஷியா, ஷியா சட்டம், ஷியா முஸ்லீம் சட்டம், ஷியா வாரியம், ஷிர்க், ஹதீஸ், ஹராம், Uncategorized

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: