ஐ.எஸ்.சில் ஆள்-சேர்ப்பதற்கான சதி-திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (1)!
ஐ.எஸ்.சில் ஆள்-சேர்ப்பதற்கான சதி-திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (1)!
தெலிங்கானா–சென்னை ஐ.எஸ் தொடர்புகள்: ஜல்லிக்கட்டு-சசிகலா விவகாரங்கள் ஐ.எஸ்.தொடர்புள்ளவர்கள் கைதான விவரங்கள், சென்னையில் சதி-திட்டம் தொஈட்டியது முதலிய விவாகரங்களை பின் தள்ளிவிட்டடு அல்லது சென்னைவாசிகள் ஜாலியாக சசிகலா மோகத்தில் மூழ்கி விட்டனர் என்றே தெரிகிறாது. தெலிங்கானாவில் முஸ்லிம் மக்கட்தொகை கனிசமாக இருக்கும் நிலையில் அங்கு பிரிவினைவாதம், தீவிரவாத நடவடிக்கைகள், பிரச்சாரங்கள் முதலியவையும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஐ.எஸ்.சில் சேருவது, அதற்கான ஆட்சேர்ப்பு நடத்துவது, நிதியுதவி செய்வது என்பதெல்லாம் ஒரு பின்னப்பட்ட வலை போல வேலைகள் நடந்து வருகின்றன. தங்கம், போதை மருந்து, போலி ரூபாய் புழக்கம் என்ற ரீதியில் அவர்கள் நன்றாகவே வேலைசெய்து வருகின்றனர். இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ராஜமுந்திரியிலிருந்து தமிழக தலைநகர் சென்னைக்கு தனியார் சொகுசு பஸ்ஸில் தங்கம் கடத்தப்படுவதாக சென்னையில் செயல்படும் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு நேற்று முன்தினம் இரவு (02-02-2017) ரகசிய தகவல் கிடைத்தது[1]. இதனையடுத்து, மத்திய நுண்ணறிவு பிரிவு எஸ்பி அருண்குமார், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சனுக்கு தகவல் அளித்தார். இதைத் தொடர்ந்து, 03-02-2017 அன்று அதிகாலை 3 மணி முதல் அருண்குமார் மற்றும் பொன்னேரி டிஎஸ்பி மாணிக்கம் ஆகியோர் தலைமையிலான போலீஸார், இரு குழுக்களாக கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திரா- தமிழக எல்லையில் உள்ள ஆரம்பாக்கம் பகுதியில், சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
03-02-2017 அன்று தங்கத்துடன் பிடிபட்ட முகமது இக்பால்: இந்த வாகன சோதனையின் போது, காலை 6 மணி அளவில், ஆந்திர பகுதியிலிருந்து, சென்னை நோக்கி வந்த தனியார் சொகுசு பஸ் ஒன்றை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது, தெலங்கானா மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னை நோக்கி வந்த அந்த தனியார் சொகுசு பஸ்ஸில் சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த 4 இளைஞர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்[2]. இளைஞர்களின் பைகளை முழுமையாக சோதனை செய்தனர். இதில், துணிகள் மற்றும் காய்கறிகளின் அடியில் தலா 168 கிராம் எடை கொண்ட 20 தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது[3]. இதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட 4 பேரையும் ஆரம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர் போலீஸார். அந்த விசாரணையில் தெரியவந்த விவரம் வருமாறு: சென்னை – மயிலாப் பூரை சேர்ந்த-
- காஜா நஜிமுதீன் (42),
- சகாபுதீன் (38),
- ஜமாலுதீன் (30),
- முகமது இக்பால் (35)
ஆகிய அந்த 4 பேரும் கூலிக்காக தங்க கட்டிகளை தெலங்கானாவில் இருந்து சென்னைக்கு கடத்தியது தெரியவந்தது[4]. இதனைதொடர்ந்து, தலா 168 கிராம் எடை கொண்ட 20 தங்க கட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த எடை 3 கிலோ 360 கிராம் இருந்தது. இதன் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சாதாரண ஆட்களிடம் எப்படி இப்படி ஒரு கோடி மதிப்பில் தங்கக் கட்டிகள் இருக்க முடியும், அவற்றை சென்னைக்குக் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்பதையும் யோசிக்கத் தக்கது.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, முகமது இக்பால் ஐ.எஸ்.அமைப்பிற்கு தாராளமாக நிதியுதவி / “தீவிரவாத பணம்” [Terror money / Terror funding] அளித்துள்ளான்: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவனிடம், ராஜஸ்தான் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து, ராஜஸ்தான் மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு, எஸ்.பி., விகாஸ் குமார், ஜெய்ப்பூரில் 05-02-2017 அன்று நிருபர்களிடம் கூறியதாவது[5]: “முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான, ஐ.எஸ்.,சுக்கு, இந்தியாவில் ஆதரவு திரட்டிய பயங்கரவாதி, ஜமீல் அஹமது, கடந்தாண்டு நவம்பரில் கைது செய்யப்பட்டான். அவனிடம் நடந்த விசாரணையில், தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, முகமது இக்பாலுக்கு, 35, ஐ.எஸ்., அமைப்புடன் நெருங்கிய தொடர்புள்ளது தெரிய வந்தது. இக்பாலிடம் இருந்து, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, 20 தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவன் மீது, டி.ஆர்.ஐ., எனப்படும் வருவாய் புலனாய்வுத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, இக்பாலை, ஜெய்ப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்த, பயங்கரவாத தடுப்புப் பிரிவு திட்டமிட்டு உள்ளது”, இவ்வாறு அவர் கூறினார்[6]. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, முகமது இக்பால் ஐ.எஸ்.அமைப்பிற்கு தாராளமாக நிதியுதவி அளித்துள்ளான்[7]. இதுவரை மும்முறை நிதியுதவி செய்தது தெரிய வந்துள்ளதால், அவற்றின் விவரங்கள், ஆதாரங்கள் முதலியவற்றை கைப்பற்ற ராஜஸ்தானிலிருந்து துப்பறியும் போலீஸார் வந்தனர்[8]. இந்நிலையில் தான் இக்பால் தங்கத்துடன் பிடிபட்டுள்ளான். ஆக, ஐ.எஸ்,சுக்கு பணம் பட்டுவாடா / நிதியுதவி செய்து வந்த திருவள்ளூர் முகமது இக்பால் தான் இப்பொழுது பிடிபட்டுள்ளான். இதை “தீவிரவாத பணம்” [Terror money / Terror funding] என்றேயாகிறது. நவம்பரில் கைதானவர்களின் தொடர்பும் இதில் பினைந்துள்ளது. சுபஹனி ஹாஜா மொஹிதீன் கதை இதில் உள்ளது.
ஐசிஸ் தீவிரவாதி கடையநல்லூர் நகைக்கடையில் எப்படி சாதாரணமாக வேலை செய்து கொண்டிருக்க முடியும்?: சென்னைக்கும், தமிழகத்திற்கும் தீவிரவாதத்திற்கும் உள்ள தொடர்புகளும் திகைக்க வைக்கின்றனர். ஏற்கெனவே திருவான்மியூர், கொட்டிவாக்கம் முதலிய பகுதிகளில் சென்ற நவம்பர் 2016ல் சிலர் கைது செய்யப்பட்டனர். சுபஹனி ஹாஜா மொஹிதீன் ஏப்ரல் 8, 2015ல் இராக்கில் இருந்தான், செப்டம்பர் 2015ல் இந்தியாவுக்குத் திரும்பினான், அக்டோபர் 2016ல் திருநெல்வேலியில் கைதானான் என்ற நிலையில் சுபஹனி ஹாஜா மொஹிதீன் இருப்பதை எப்படி பெற்றோர், உற்றோர், மற்றோர் முதலியோருக்குத் தெரியாமல் இருக்கும். ஐசிஸ்.சுக்கு ஆதரவாக போரிட்டு, திரும்பி வந்தால், எந்தவித சட்டங்களையும் மீறவில்லை என்று, அவன், மறுபடியும் இந்தியாவில் வேலை செய்கிறான் என்பது சரியானதா என்றும் நோக்கத்தக்கது. உள்ளூர் போலீஸாருக்கு தெரியுமா, தெரிவிக்கப்பட்டதா முதலிய விவரங்களும் மர்மமாகவே இருக்கின்றன. சிரியாவில் தீவிரவாதத்திற்குத் துணைபோனான், தீவிரவாதியாக இருந்தான் என்றால், அங்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையில்லையா? இந்திய தூதரகம் மூலம் திரும்பியுள்ளான் என்பது, இன்னும் மர்மமாக இருக்கிறது. வேலைக்குப் போகிறேன் என்று சென்று ஓடிவந்தவர்களுக்கும், ஐசிஸில் சேர்ந்து போராடி, திரும்பவந்தவனுக்கும் வித்தியாசம் இல்லையா? இந்தியா எந்த அளவுக்கு தாக்குதல்களுக்கு மிகவும் மென்மையாக குறியாக இருக்கிறது என்பதை மறுபடியும் தெரிந்து கொள்ள அவகாசம் கிடைத்துள்ளது. ஆனால், துரோகம் செய்யும் இந்தியர்கள் கவலைப்படப் போவதில்லை. நவம்பரில் கைதானவர்களில் இன்னொருவன் – சுவாலிக் முகமது.
சென்னை கொட்டிவாக்கத்தில் சுவாலிக் முகமது கைது (அக்டோபர் 2016): சுவாலிக் முகம்மது என்ற யூசுப் என்ற அபு ஹசனா (26) என்பவரும் ஒருவர். தற்போது, இவர் சென்னை கொட்டிவாக்கம் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.நகர் அன்னை சத்யா தெருவில் குணசேகர் என்பவரில் வீட்டில் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வந்தார். இதையடுத்து, சுவாலிக் முகம்மது வீட்டில் 03-10-2016 திங்கள்கிழமை அதிகாலை திடீர் சோதனை நடைபெற்றது. விசாரணையில் முகம்மது என்ற யூசுப் என்ற அபு ஹசனா குறித்து கிடைத்த தகவல்கள் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியதாவது: “12-ஆம் வகுப்பு வரை படித்துள்ள அவர், 2010-ஆம் ஆண்டு முதல் சென்னையில் வசிக்கிறார். பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்துள்ள அவர், திருவல்லிக்கேணியில் மேன்சன்களிலும், கொட்டிவாக்கத்தில் தனது நண்பர்களின் அறைகளிலும் தங்கியுள்ளார். ராயப்பேட்டை ஓயிட்ஸ் சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இயங்கும் ஒரு தனியார் ரிசார்ட் அலுவலகத்தில் (மஹிந்த்ரா கிளப்[9]) 2013ஆம் ஆண்டு முதல் கணினி இயக்குபவராக வேலை செய்து வந்திருக்கிறார். வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது, கேரள கோழிக்கோடைச் சேர்ந்த ஜிம்சின்னாவை காதலித்து 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார்.
கத்தாருக்கு செல்ல திட்டம் போட்ட சுவாலிக் முகமது: பின்னர், கொட்டிவாக்கம் எம்.ஜி.ஆர். நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அப்போது, பிரசவத்துக்காக 2014ஆம் ஆண்டு ஜிம்சின்னா கோழிக்கோட்டுக்கு சென்றபோது, முகம்மது வீட்டை காலி செய்துவிட்டு தனது நண்பர்கள் அறையில் தங்கினார். இந்த நிலையில், கடந்த ஜூனில் சென்னைக்கு திரும்பி வந்தபோது, குணசேகரின் வீட்டின் முதல் தளத்தில் உள்ள வீட்டை மாதம் ரூ.7 ஆயிரம் வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். வாரத்துக்கு இரு முறை வெளியூருக்கு செல்லும் அவர், வேலைக்கு சரியாக செல்லாமல் இருந்துள்ளார். சந்தேகக்குரிய வகையில் சிலர் அடிக்கடி இவரை பார்த்துவிட்டு செல்வார்களாம். ஒரு மாதத்துக்கு முன்பு வெளிநாடு செல்ல இருப்பதால், தனது குடும்பத்தை திருச்சூரில் வைத்துவிட்டு, வீட்டை காலி செய்ய உள்ளதாக குணசேகரிடம் தெரிவித்துள்ளார். அதேவேளையில் கத்தார் நாட்டுக்கு செல்வதற்குரிய ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். கத்தாருக்கு சென்று, ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் இருக்கும் சிரியாவுக்கு தப்பிச் சென்று ஆயுதப் பயிற்சி பெற திட்டமிட்டிருந்துள்ளார். இந்த நிலையில், தென் மாநிலங்களில் ஏதேனும் சதிச் செயல் நடத்த திட்டமிருந்தார்களா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது என்றனர்.
© வேதபிரகாஷ்
12-02-2017
[1] தினத்தந்தி, ஆந்திராவில் இருந்து சொகுசு பஸ்சில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி தங்க கட்டிகள் சிக்கின, பிப்ரவரி 05, 01:16 AM.
[2] http://www.dailythanthi.com/News/State/2017/02/05011622/Luxury-bus-from-Andhra-Pradesh-and-Rs-1-crore-smuggled.vpf
[3] தமிழ்.இந்து, தெலங்கானாவில் இருந்து சென்னைக்கு 3 கிலோ தங்கம் கடத்திய 4 பேர் கைது, Published: February 5, 2017 09:32 ISTUpdated: February 5, 2017 09:32 IST
[4]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article9522479.ece
[5] தினமலர், ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பு : தமிழக இளைஞன் சிக்கினான், பதிவு செய்த நாள். பிப்ரவரி.6, 2017. 23.50.
[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1705753
[7] A 40-year-old man from Chennai who was arrested along with three others while trying to smuggle Rs 1 crore worth gold bars from Rajamundhry on Saturday (03-02-2017) morning at Arambakkam near Chennai was picked up for questioning by central agencies for his suspected links with ISIS. Mohamed Iqbal has been picked up after he was found donating generously to ISIS. He had made three donations to ISIS and a team of IB officials from Rajasthan had come to trace him based on evidence of his transactions. A team of Intelligence Bureau officials on Saturday (03-02-2017) nabbed four people with 3.3 kg of 20 gold bars worth Rs 1 crore, in an omnibus coming from Rajahmundry to Chennai at Arambakkam near Gumudipoondi in neighboruing Thiruvallur district. All the four were later handed over to DRI for further action with regard to smuggling while Mohamed Iqbal was taken for further questioning him on money donation to ISIS.
Deccan Chronicle,Chennai: Gold smuggler picked up for ISIS link, Published Feb 8, 2017, 6:15 am IST; Updated Feb 8, 2017, 6:23 am IST.
[8] Deccan Chronicle,Chennai: Gold smuggler picked up for ISIS link, Published Feb 8, 2017, 6:15 am IST; Updated Feb 8, 2017, 6:23 am IST.
[9] Club Mahindra, Westcott Rd, Express Estate, Royapettah, Chennai, Tamil Nadu 600002.
Mahindra Holidays & Resorts India Limited, Mahindra Towers, 2nd Floor, 17/18, Patullos Road, Mount Road, Chennai – 600 002. Tamilnadu, India.Tel : +91 (044) 3988- 1000; Fax : +91 (044) 3027- 7778.
Explore posts in the same categories: அடிப்படைவாதம், அமைதி, அல் - காய்தா, அல் - கொய்தா, அழிப்பு, குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பு, தங்கக் கட்டி, தங்கம், தீவிரவாத நிதியுதவி, முகமது இக்பால்
குறிச்சொற்கள்: இஸ்லாம், கடைய நல்லூர், கடையநல்லூர், குண்டு, குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, கையெறி குண்டுகள், கொட்டிவாக்கம், சென்னை, தங்கக் கட்டி, தங்கம், தமிழ்நாடு, திருவான்மியூர், தெலிங்கானா, பைப் வெடிகுண்டு, மும்பை குண்டு வெடிப்பு, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள்
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்