சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் ஷரீயத் கோர்ட்டுகளை சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்து, தீர்ப்பு வழங்கியது!

சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் ஷரீயத் கோர்ட்டுகளை சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்து, தீர்ப்பு வழங்கியது!

dinakaran-madras-high-court-to-ban-shariat-court

தலாக், தலாக், தலாக்விசயத்தில் வழக்கு: கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என்று எந்த ஒரு வழிபாட்டு தலமாக இருந்தாலும், அவை வழிபாட்டை தவிர வேறு ஏதாவது செயல்களில் ஈடுபட்டால், குறிப்பாக நீதிமன்றம் போல் செயல்பட்டால், அதுகுறித்து நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமையாகும் என்று சென்னை ஐகோர்ட்டு 20-12-2016 திஙட்கிழமை அன்று உத்தரவிட்டுள்ளது, என்று தமிழ் ஊடகங்கள் செய்தியை வெளியிட்டாலும், சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் ஷரீயத் கோர்ட்டுகளை [ illegal ‘sharia courts’ functioning from various mosques across Tamil Nadu], சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்து, தீர்ப்பு வழங்கியது என்று ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன[1]. தினகரன் மட்டும் தான் “ஷரியத் கவுன்சில் கட்டப்பஞ்சாயத்து செய்தால் போலீஸ் தடுக்க வேண்டும் : நீதிமன்றம் உத்தரவு” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[2]. மேலும் நான்கு வாரங்களில் செயபடுத்திய விவரங்களை தாக்கல் செய்யுமாறு ஆணையிட்டது[3]. ஷரீயத் போல, மத சட்டங்களின் அடிப்படையில், நீதிமன்றம் போன்று கோவில்களில் யாரும் கட்டப்பஞ்சாயத்து செய்வதில்லை. இருப்பினும் செக்யூலரிஸ முறையில் நீதிபதிகள் அவ்வாறு சொல்லியிருப்பது தெரிகிறது.

dinamalar-madras-hingh-court-about-sharia-court-20_12_2016_005_005

முகமதிய பெண்களும் மாறி வருவது தெரிகிறது: சமீப காலத்தில் முஸ்லிம் பெண்கள் “தலாக், தலாக், தலாக்”     என்று மூன்று முறை வாயால் கூறி, விவாகரத்து செய்யும் முறையை எதிர்த்து வருகின்றனர். ஏனெனில், பெரும்பாலும், முகமதிய ஆண்கள் இந்த நவீன காலத்தில், போன், செல்போன், ஈ-மெயில் போன்ற முறைகளிலும் அத்தகைய  “தலாக்” செய்து வருகின்றனர். காரணம் இல்லாமல், பல பெண்களுடன் வாழ வேண்டும் போன்ற நோக்கில் செயல்படும் ஆண்களும் இருக்கிறார்கள். அதற்காக இந்துக்களில் சிலர் மதம் மாறியுள்ளார்கள். ராஜிவ் காந்தி ஆட்சியில், “ஷாபானு” வழக்கில் மெத்தனமாக இருந்ததால், இப்பிரச்சினை பெரிதாகியுள்ளது. இஸ்லாமிய நாடுகளிலேயே இல்லாத வழக்கத்தை, செக்யூலரிஸப் போர்வையில் இந்தியாவில் இத்தகைய இடைக்கால, ஒவ்வாத பழக்க-வழக்கங்களை இந்தியாவில் ஏற்றுக் கொண்டுள்ளதை, முகமதிய பெண்களே சமீபகாலத்தில் எடுத்துக் காட்டி, எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். பலதார முறை இருந்தாலும், பெரும்பாலான முகமதிய பெண்கள், ஒரு ஆண் – ஒரு பெண் என்ற நியதியை விரும்புகிறார்கள். படித்தவர்கள் அவ்வாறே கடைப்பிடிக்கிறார்கள். இருப்பினும் அடிப்படைவாதிகள் மதவாத அச்சுருத்தல்களுடன், சமூகத்தை மிரட்டி வருகிறார்கள்.

mont-rosd-mosque-shariat-council

சென்னை அண்ணாசாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் ஷரியத்அத் கவுன்சிலை எதிர்த்து வழக்கு: சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் அப்துர் ரஹ்மான். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது[4]: “நான் வெளிநாட்டில் என்ஜினீயராக பணியாற்றினேன். என்னுடைய மனைவி என்னை விட்டுப் பிரிந்து வாழ்ந்தார். அவரை சேர்த்து வைக்கும்படி சென்னை அண்ணாசாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் ஷரியத்அத் கவுன்சிலில் [Makka Masjid Shariat Council] முறையிட்டேன். ஆனால், அவர்கள் என்னை மிரட்டி எனது மனைவியை விவகாரத்து செய்து விட்டதாக என்னிடம் கையெழுத்து வாங்கி கொண்டு, என்னை அனுப்பி விட்டனர். என்னைப் போல பலர் இதுபோல பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் பல இடங்களில் சட்டத்திற்கு விரோதமாக ஷரியத் நீதிமன்றம் என்ற பெயரில் முஸ்லிம் ஜமாஅத்களில் குடும்ப பிரச்சினைகளை விசாரிக்கின்றனர். இவ்வாறு ஜமாஅத்களில் நீதிமன்றம் நடத்துவதற்கு சட்டப்படியான அங்கீகாரம் உள்ளது என்றும், முஸ்லிம் மக்கள் தங்களது பிரச்சினைகளை தங்களது ஷரியத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் எனவும் ஜமாத்தார்கள் கூறி வருகின்றனர்.” சென்னை அண்ணா சாலையில் அத்தகைய ஷரீயத் கோர்ட் இருப்பதே யாருக்கும் தெரியாது எனலாம். ஹெரிந்திருந்தாலும், முகமதியர் விவகாரங்கள் என்று கண்டு கொள்ளாமலும் இருந்திருக்கலாம்.

madras-high-court-bans-dhariat-cout-20-12-2016-toi

ஜமாஅத்களில் தம்பதிகளுக்கு விவாகரத்துகள் மனம்போன போக்கில் ஒரு தலைபட்சமாக வழங்கப்படுவதால் பெண்களுக்கு பாதிப்பு: அப்துர் ரஹ்மான் மேலும் கூறியிருப்பது[5], “இந்த ஜமாஅத்களில் தம்பதிகளுக்கு விவாகரத்துகள் மனம்போன போக்கில் ஒரு தலைபட்சமாக வழங்கப்படுகின்றன. சொத்துப் பிரச்சினைகளிலும் இவர்கள் தான் தீர்ப்பு வழங்குகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான பெண்கள் தங்களின் வறுமை காரணமாக இந்த தீர்ப்புகளை எதிர்த்து நீதிமன்றங்களை நாடுவதில்லை. ஆகவே ஜமாஅத்களில் இதுபோன்ற கட்ட பஞ்சாயத்து நீதிமன்றங்கள் செயல்படுவதை தடை செய்ய வேண்டும்,”  இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது[6]. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது. முதன்முதலாக இப்பிரச்சினை கோர்ட்டுக்குச் சென்று, இவ்வாறு வெளி வந்திருப்பது தெரிகிறது. பொதுவாக முகமதியர், இத்தகைய விவகாரங்களை, வெளியே வராமல் அமுக்கி விடுவார்கள். ஜமாத்தை மீறி செயல்படுவதை ஒதுக்கி வைப்பது, மிரட்டுவது, தீர்த்துக் கட்டுவது போன்ற நிலைகளும் உள்ளன.

madras-high-court-bans-dhariat-cout-20-12-2016-hindusthan-times

விவாக ரத்து செய்த தம்பதியரிடம் கருத்து வேறுபாடு: இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் கமிஷனர் சார்பில் திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பி.பெருமாள் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது[7]: “மனுதாரருக்கும், அவரது மனைவிக்கும் கடந்த 2012–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2013–ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனுதாரர் அண்ணாசாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் ஷரியத்அத் கவுன்சிலில் புகார் செய்துள்ளார். அந்த கவுன்சிலின் பொதுச் செயலாளர், இருவரையும் சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறியுள்ளார். இதற்காக இருவருக்கும் கவுன்சிலிங்கும் நடந்துள்ளது.

madras-high-court-bans-dhariat-cout-20-12-2016-financial-express

மறு திருமணம் செய்து கொண்ட தம்பதியர்: போலீஸ் தரப்பு மனுவில் கூறியிருப்பது தொடர்கிறது[8], “இதன்பின்னர் மனுதாரர் முஸ்லிம் சட்டம் மற்றும் பழக்க வழக்கத்தின் அடிப்படையில், அவரது மனைவியிடம்தலாக்சொல்லியுள்ளார். அவரது மனைவியும் அதை ஏற்றுக் கொண்டார். இந்த விவாகரத்து பெரியவர்கள் முன்னிலையில் தான் நடந்துள்ளது. இதன்பின்னர் மனுதாரரின் புகார் முடித்து வைக்கப்பட்டு விட்டது. இதன்பின்னர் மகனை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மனுதாரர் குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 19–ந் தேதி குழந்தை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், மனைவியிடம் விவாகரத்து கேட்டு மற்றொரு வழக்கும் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையில் இந்த இரு வழக்குகளும் நிலுவையில் இருக்கும்போது, மனுதாரரை விவாகரத்து செய்த பெண், வேறு ஒருவரை மறுதிருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கடந்த அக்டோபர் 27–ந் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.”

 

© வேதபிரகாஷ்

21-12-2016

ஷா பானு வழக்கு

[1] Times of India, Madras high court bans unauthorised ‘Sharia courts’, A Subramani| TNN | Updated: Dec 20, 2016, 07.02 AM IST.

[2] தினகரன், ஷரியத் கவுன்சில் கட்டப்பஞ்சாயத்து செய்தால் போலீஸ் தடுக்க வேண்டும் : நீதிமன்றம் உத்தரவு, Date: 2016-12-19 15:44:48

http://www.dinakaran.com/latest_detail.asp?Nid=266694

[3] http://timesofindia.indiatimes.com/city/chennai/madras-hc-bans-sharia-courts/articleshow/56061972.cms

[4] தினத்தந்தி, கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் வழிபாட்டை தவிர வேறு செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமை; ஐகோர்ட்டு உத்தரவு, பதிவு செய்த நாள்: செவ்வாய், டிசம்பர் 20,2016, 7:28 PM IST; மாற்றம் செய்த நாள்: புதன், டிசம்பர் 21,2016, 1:15 AM IST.

[5] தினமணி, வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனை தவிர்த்து வேறு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது, Published on : 20th December 2016 03:58 AM

[6] http://www.dailythanthi.com/News/State/2016/12/20192814/Temples-churches-mosques-participate-in-acts-of-worship.vpf

[7]http://www.dinamani.com/tamilnadu/2016/dec/20/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-2618328.html

[8] தமிழ்.இந்து, மத வழிபாட்டுத் தலங்களில் சட்டவிரோத நீதிமன்றம் செயல்படுவதை ஏற்க முடியாது: போலீஸார் நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவு, Published: December 20, 2016 08:17 ISTUpdated: December 20, 2016 08:18 IST

Explore posts in the same categories: அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம், அடிப்படைவாதம், அல் ஹதீஸ், கட்டப் பஞ்சாயத்து, கட்டப்பஞ்சாயத்து, பஞ்சாயத்து, விலக்கிவைத்தல்

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: