தென்மாநிலங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த பல கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடத்தப்பட்டிருக்கிறது – மதுரை ஜிஹாதித்துவத்தின் சமகால பரிமாணம்!

தென்மாநிலங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த பல கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடத்தப்பட்டிருக்கிறது – மதுரை ஜிஹாதித்துவத்தின் சமகால பரிமாணம்!

plot-to-kill-modi-al-qaeda-men-arrested-in-madurai

28-11-2016 மற்றும் 29-11-2016 தேதிகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: முதல் நாள் இரவு துவங்கி மறுநாள் மாலை வரை விசாரணை: மதுரையில் கைதான வெடிகுண்டு தீவிரவாதிகள் 28-11-2016 அன்று முன்தினம் மதுரை – சிவகங்கை மாவட்ட எல்லையில் இடையபட்டியில் உள்ள இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். இங்கு நடந்த விசாரணை குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தீவிரவாதிகளுக்கு வேறு நபர்களால் ஆபத்து வந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த முகாமை தேசிய புலனாய்வு படையினர் தேர்வு செய்தனர். தனித்தனியாக தீவிரவாதிகள் ஒவ்வொருவரிடமும் 26-11-2016 அன்று இரவு துவங்கி, நேற்று மாலை 3 மணி வரை துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது. இதில் பல முக்கியத்தகவல்கள் கிடைத்தன. சேகரித்தவற்றை ஆவணங்களாக தயாரித்து, உடனுக்குடன் பெங்களூருக்கும், டெல்லி தலைமையகத்திற்கும் புலனாய்வுப்படையினர் அனுப்பினர்,’’ என்றார். 150 சிம்கார்டுகள் மதுரை, சென்னையில்  கைதானவர்கள் போலி பெயர்களில் 150 சிம் கார்டுகள் வரை பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. ‘சமூகப்போராளிகள்’ பெயரில் இவர்கள் பேஸ்புக்கில் செயல்பட்டு வந்துள்ளனர். இவர்களது முகநூல் பக்கங்கள், சிம் கார்டுகளை ‘ட்ரேஸ்’ செய்து, அதன் அடிப்படையில் இவர்களது பல்வேறு தொடர்புகளை தேசிய புலனாய்வுப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

nia-arrested-two-more-connected-with-five-blasts-base-movement

தென்மாநிலங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த பல கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடத்தப்பட்டிருக்கிறது: கண்காணிப்பில் 548 பேர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தென்மாநிலங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த பல கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடத்தப்பட்டிருக்கிறது. மதுரையை மையமாக வைத்தே தீவிரவாத கும்பல் செயல்பட்டிருக்கிறது. எனவே, மதுரையில் இன்னும் சில நாட்கள் தேசிய புலனாய்வுப்படையினர் முகாமிட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளனர்கைதான தீவிரவாதிகளை காவலில் எடுத்து விசாரிக்கும்போது, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது, நடந்த பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும். குண்டு வெடிப்புகளுக்கான செலவுக்கு பணத்தை சப்ளை செய்தவர்கள் யார்? அல்கொய்தா தீவிரவாத அமைப்பிற்கும்கைதானவர்களுக்கும் உள்ள தொடர்பு மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட 22 தலைவர்களை  கொல்ல திட்டமிட்டது குறித்த பல்வேறு தகவல்களும் வெளிவரும்தமிழகம் முழுவதும் 548 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத தொடர்புடைய பலரும் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்தடுத்து பலர் கைதாவர்,’’ என்றார்.  நூறுக்கும், இருநூறுக்கும் கோடிக்கணக்கான மக்கள் அலைந்து கொண்டிருக்கும் நிலையில், கோடிகளில் தீவிரவாதிகள் விளையாடி வருவது திகைப்பாக இருக்கிறது.

nia-took-the-arrested-to-melur-madurai-court-dm-30_11_2016_005_005

500 / 1000 இதில்  கூட விளையாடியுள்ளது[1]: “தீவிரவாத செயல்களுக்கான செலவினங்களுக்கு பல கோடி ரூபாய் பணம் மதுரைக்கு கொண்டு வந்து குவிக்கப்பட்டிருக்கிறது. பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளான இவற்றை மதுரையை மையமாக வைத்து கும்பல் ரூ.25 கோடி வரை இளைஞர்களின் வங்கிக்கணக்குகள் மூலம் புதிய நோட்டுகளாக மாற்றிச் சென்றுள்ளனர். இந்த பணத்தை மாற்றித்தர தீவிரவாதக் கும்பல், 30 சதவீத கமிஷன் கொடுத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.  வங்கிக்கணக்குகள் மூலம் பணம் மாற்றியவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.  இதன்பேரிலும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தீவிரவாத தொடர்புடைய மேலும் சிலர் சிக்குவர்”, என்று போலீஸார் தெர்வித்துள்ளனர்[2].

three-trio-arrested-by-nia-in-mdurai-out-of-sixஐவரின் தொடர்புகள்[3]: இந்த ஐந்து-ஆறு பேர் என்பது அகப்பட்டவர்கள் தான். இன்னும் பிடிபடாமல் இருப்பவர்கள் எத்தனை பேர் என்று தெரியவில்லை. இவர்கள் அனைவரும், பேஸ்புக் முதல் இஸ்லாமிய பிரச்சாரம் வரையில் உள்ள செயல்களில் ஈடுபட்டிருந்ததால், தொடர்புகள் ஏற்பட்டு நண்பர்களாகினர். இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதம், அவர்களை பிணித்து விட்டது. நூலகம் மூலம் தீவிரவாத பிரசாரம். கைதானவர்களில் ஒருவரான அப்பாஸ் அலி, 8ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு, பெயின்டராக இருந்தார். ‘தாருல் இல்ம்’ என்ற பெயரில் இவர் நூலகம் வைத்து நடத்தி வந்ததும், இதன் மூலம் தீவிரவாத பிரசாரப்பணிகளில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. கைதான சம்சும் கரீம் ராஜா, பிகாம் பட்டதாரி. கோழிக்கடை வைத்துள்ளார். கைதான முகம்மது அய்யூப்பிற்கு திருமணமாகி ஒரு வாரமே ஆகிறது. பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவர், காது கேட்கும் கருவி விற்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு மூளையாக செயல்பட்ட மதுரையைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சுலைமான் (23), சென்னையில் கைது செய்யப் பட்டார்.  கைதானவர்கள் பணியாற்றும் இடங்களிலும், வீடுகள் உள்ள பகுதிகளிலும் கடந்த 2 நாட்கள் கண்காணித்த பிறகே, தேசிய புலனாய்வுப்படையினர் அதிரடியாக இவர்களை அடுத்தடுத்து கைது செய்துள்ளனர்.

habeus-corpus-petition-dismissed-madurai-terror-dm-01_12_2016_003_008

அமைதியாக, ஜாத்திரைக்கையாக நடந்தேறிய கைதுகள்: பாதுகாப்பு வளையத்தில் இந்தோ – திபெத் முகாம் தீவிரவாதிகளிடம் விசாரணை நடந்த இடையபட்டி இந்தோ -திபெத் எல்லைப் பாதுகாப்பு போலீஸ் முகாமிற்குள், உள்ளூர் போலீசார், பத்திரிகையாளர்கள் என யாரும் அரை கிலோ மீட்டருக்கு முன்பே அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பிற்கு வந்திருந்த ஒத்தக்கடை போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். முகாமைச் சுற்றிய ரோட்டில் போலீஸ் வாகனங்கள் ரோந்து சுற்றி வந்தன. அவ்வழியாக வந்த சந்தேகத்திற்குரிய வாகனங்களை ஒத்தக்கடை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்து அனுப்பினர். 30-11-2016 அன்று பிற்பகல் 3.10 மணிக்கு தீவிரவாதிகளை ஏற்றிக்கொண்டு காரில், தேசிய புலனாய்வு படையினர் மேலூர் கோர்ட்டிற்கு புறப்பட்டனர். காரின் முன்னும், பின்னும் திண்டுக்கல், மதுரை துப்பாக்கி ஏந்திய, ஆயுதப்படையினர் வேன்களில் சென்றனர். பெங்களுர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்[4]. நாகூரைச் சேர்ந்த அபு பக்கர் மலேஸ்வரம் குண்டுவெடிப்பில் சிக்கிக்கொண்டு, கைதாகி, சிறையில் கிடக்கிறான்[5]. இவர்களது கேரளா-தமிழ்நாடு தொடர்புகள் ஏற்கெனவே எடுத்துக் காட்டப்பட்டன. ஆனால், இவர்கள் எல்லோருமே தாங்கள் எதையோ சாதித்து விட்டதைப் போலத்தான் இருக்கிறார்கள், அவர்களுக்கு வேண்டியவர்களின் தயவோடு தங்களுக்கு வேண்டியதைப் பெற்று வாழ்ந்து வருகின்றனர். மதுரையைப் போன்று பெங்களுரும் அவர்களது “ஹப்பாகி” விட்டது

© வேதபிரகாஷ்

02-12-2016.

nia-takes-arrested-to-bangalore-dm-01_12_2016_003_009

[1] தினகரன், மதுரையில் ரூ.25 கோடிக்கு பழைய நோட்டுகள் மாற்றிய தீவிரவாதிகள், Date: 2016-11-29@ 02:14:48.

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=262231

[3] தமிழ்.இந்து, நீதிமன்றங்களில் குண்டு வைத்த 5 பேர் கைது: தேசிய புலனாய்வுப் பிரிவு தொடர்ந்து விசாரணை, Published: November 30, 2016 08:53 ISTUpdated: November 30, 2016 09:12 IST.

[4] The Hindu, The arrested brought to Bangalore, Bengaluru: November 30, 2016, 00.00 IST; Upadated. November 30, 2016, 04.03 IST

Samsum Karim Raja has been the aide of Abu Backer Siddique from Nagore, an accused in the Malleswaram blasts, who is in jail.

[5] http://www.thehindu.com/todays-paper/Arrested-terror-suspect-brought-to-Bengaluru/article16727865.ece

Explore posts in the same categories: ஃபேஸ்புக், அடிப்படைவாதம், அடையாளம், அத்தாட்சி, அத்வானி, அல் - காய்தா, அல் - கொய்தா, சுலைமான், ஜிஹாதி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி ஜேன், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, நெல்லூர், மதுரை, மல்லபுரம், மின்னணு ஜிஹாதி, மின்னணு ஜிஹாத், மைசூரு, மைசூர், வெடி, வெடி மருந்து, வெடிகுண்டு, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: