ஜாகிர் நாயக்கின் “இஸ்லாமிய ஆராய்ச்சி இயக்கம்” சட்டத்திற்குப் புறம்பாக இயங்கும் இயக்கம் என்று அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது!

ஜாகிர் நாயக்கின்இஸ்லாமிய ஆராய்ச்சி இயக்கம்சட்டத்திற்குப் புறம்பாக இயங்கும் இயக்கம் என்று அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது!

How-Indian-Media-Got-Mad-On-Zakir-Naik-And-Hafiz-Saeed-Links-Must-Watchபங்களாதேச தீவிரவாத கொலைகள் மூலம் ஜாகிர் நாயக்கின் ஜிஹாதி தூண்டுதல் பிரச்சாரம் வெளிப்பட்டது: ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் தீவிரவாத தாக்குதலுக்கு வங்காளதேச முஸ்லிம்கள் தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. வங்கதேச தலைநகர் டாக்காவில் கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி 2016 பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான ரோஹன் இம்தியாஸ், முகநூலில் வெளியிட்ட பதிவில் ஜாகிர் நாயக்கின் உரை தனக்கு ஊக்கமளித்ததாக தெரிவித்திருந்தார்[1]. இதையடுத்து, நாட்டை விட்டு வெளியேறிய ஜாகிர் நாயக், அதன்பிறகு மீண்டும் திரும்பி வரவில்லை. வெளிநாட்டிலேயே தங்கிவிட்டார்[2]. எனவே ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்தியாவை வங்காளதேச அரசு கேட்டுக் கொண்டது. வங்கதேசத்தில் ஒளிபரப்பாகும் அவருக்குச் சொந்தமான “பீஸ் டிவி’க்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. ஜாகீர் நாயக்கின் மதபோதனைகள் பிரிவினையைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில் நுழைய அவருக்கு அந்நாட்டு அரசுகள் ஏற்கெனவே தடை விதித்துள்ளன. மலேசிய அரசும் அவரது பிரசாரத்துக்குத் தடை விதித்தது.

Raheel Sheikh, Hafeez Saeed, Zakir Naik - how they are connected though jihadஉள்நாட்டு ஜிஹாதிகளை ஊக்குவித்து தீவிரவாதத்தை வளர்க்கிறது என்பதும் தெரிய வந்தது: மும்பை, ஹைதராபாத், கேரளா, சென்னை / தமிழகம், போன்ற இடங்களில் கைதான முஸ்லிம் இளைஞர்களின் தீவிரவாத – ஐசிஸ் தொடர்புகளும் ஜாகிர் நாயக்கின் தீவிரவாத ஊக்குதல் எடுத்துக் காட்டியது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஆதரிக்கிறேன் என்ற போர்வையில், தீவிரவாத-பயங்கரவாதத்தையே நாயக் தூண்டி விட்டுள்ளது உறுதியானது. இதனால், ஜாகீர் நாயக் “இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன்” (ஐஆர்எப்) [Islamic Research Foundation (IRF)] கல்வி அறக்கட்டளை, ‘பீஸ் டிவி’ [Peace TV] ஆகியவற்றை நிறுவி, தீவிரவாதத்தை தூண்டும் வகையில் மதப் பிரச்சாரம் செய்து வருவதாகவும், பிற மதங்களை இழிவுப் படுத்தி, முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளாக மாற வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வருவதாக ஜாகீர் நாயக் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகள் எழுந்தது[3].

Rohan Imtiyaz and young jihadis 01-07-2016 insired by Zakir Naik.மாநில மத்திய அரசுகள் நடவடிக்கை எடுத்தது: மஹாராஷ்ட்ரா அரசு முஸ்லிம் இளைஞர்களை மதவாதிகளாக்கி, தீவிரவாதத்தில் ஈடுபடுத்துகிறார் என்று வழக்குகள் பதிவு செய்துள்ளது[4].  மும்பை சிறப்புப் பிரிவு [Special Branch (SB) போலீஸார், Mumbai police]  மற்றும் பொருளாதார குற்றப் பிரிவு [Economic Offences Wing (EOW)] முதலிய அதிகாரிகள், மேற்குறிப்பிடப்பட்ட அலுவலங்களில் சோதனையிட்டு, குற்றஞ்சாட்டப்படக் கூடிய வகையில் உள்ள ஆவணங்களைக் கைப்பற்றினர்[5]. அயல்நாட்டு பணம் வரவு கட்டுப்பாடு சட்டத்தின் பிரிவுகளை [Foreign Contribution (Regulation) Act (FCRA)] மீறி பணம் பெறப்பட்டதும் தெரிந்தது. அதை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியது[6]. விசாரணையில் வெளிநாட்டு அன்பளிப்பு கட்டுப்பாடுகள் சட்டத்தை (எப்சிஆர்ஏ) ஐஆர்எப் கல்வி அறக்கட்டளை மீறி செயல்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது[7]. இந்திய ரிசர்வ் வங்கியின் [RBI] முன்னனுமதி இல்லாமல்  பணம் பெற்றதும் உறுதி செய்யப்பட்டது[8]. அந்த அமைப்புக்கு சட்ட விரோதமாக வெளிநாடுகளில் நிதி வருவது ஆதாரப்பூர்வ தெரியவந்தது. மேலும், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பரப்புரை செய்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக, உளவுத் துறை அளித்துள்ள பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் ஜாகீர் நாயக் நடத்தும் என்ஜீஓ நிறுவனம் சட்டத்திற்கு புறம்பான நிறுவனம் என அடையாளப்படுத்தப்படுவதாக உறுதியானது.

Zakir says he cannot take responsibilityஎல்லாவற்றையும் ஆராய்ந்து மத்திய அரசு தடை செய்ய தீர்மானித்தது: இந்நிலையில், சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்புக்கு மத்திய அரசு [Unlawful Activities Prevention Act (UAPA)] கீழ் ஐந்து வருடங்கள் தடை விதித்துள்ளது[9]. மேலே கூறப்பட்டுள்ள விவகாரங்களை முறைப்படி ஆய்ந்து, ஆவணங்கள் முதலியவற்றை சர்பார்த்து சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதை உறுதி செய்து, அதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 15-11-2016 அன்று நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது[10]. இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு எதிராக அவரின் பேச்சுக்கள் இருப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

zakir-mumba- A. N. Orchidஜாகிர் நாயக் மேல் முறையீடு செய்யலாம் என்று “தி இந்து” ஆலோசனை செய்தி வெளியிட்டுள்ளது: ஐ.ஆர்.எப்பை தடை செய்ய பாராளுமன்ற அனுமதி தேவைப்படுகிறது, அதற்குப் பிறகு அரசு கெஜட்டில் முறைப்படி “தடை செய்யப்பட்ட இயக்கம்” என்று அறிவிக்கப் படும்[11]. இதை எதிர்த்து டிரிப்யூனல் [Tribunal] மூலம் மேல்முறையீடு செய்யலாம்[12] என்றெல்லாம் “தி இந்து” விவரிக்கிறது. அதாவது, நடந்துள்ள தீவிரவாத, பயங்கரவாத, ஜிஹாதி குண்டுவெடுப்புகள், குரூர கொலைகள் முதலியவற்றைக் கண்டு கொள்ளாமல், உயிரிழந்த அப்பாவி மக்கள், அவர்களின் மனைவி-மக்கள், உறவினர்கள் முதலியோரின் உரிமைகளைப் பற்றிக் கவலைப் படாமல், ஜாகிர் நாயக் சட்டப்படி எப்படி தப்பித்துக் கொள்ளலாம் என்று ஆலோசனை சொல்லும் ரீதியில் செய்திகளை வெளியிடுவது திகைப்பாக இருக்கிறது. அரசுக்கு இதெல்லாம் தெரியாமலா நடவடிக்கை எடுத்துள்ளது? இத்தகைய செய்திகளும் தீவிரவாதத்தை மறைமுகமாக ஆதரிப்பதாக உள்ளது.

Zakir supporting Osama bin ladenஊடகங்கள் தீவிரவாத, பயங்கரவாத, ஜிஹாதி குண்டுவெடுப்புகள், குரூர கொலைகள் தடுக்கப்பட வேண்டும், முஸ்லிம் இளைஞர்கள் நல்லவழியில் செல்ல வேண்டும் என்று ஏல் ஆலோசனை சொல்லக் கூடாது?: அதற்கு பதிலாக, சட்டப்படி, நடவடிக்கை எப்படி எடுக்கப்பட வேண்டும், இத்தகைய தீவிரவாத, பயங்கரவாத, ஜிஹாதி குண்டுவெடுப்புகள், குரூர கொலைகள் தடுக்கப்பட வேண்டும், முஸ்லிம் இளைஞர்கள் நல்லவழியில் செல்ல வேண்டும் என்றெல்லாம் ஆல்லோசனை கூறி, செய்திகளை வெளியிடலாமே? அவ்வாறு வெளியிட நிருபர்களுக்கு தெரியவில்லையா அல்லது “தி இந்து” அவ்வாறெல்லாம், நாட்டுக்கு, இளைஞர்களுக்கு நல்லது செய்யும் விசயங்களை வெளியிட வேண்டாம் என்று ஆணையிட்டுள்ளதா? கனடா, இங்கிலாந்து, மலேசியா போன்ற நாடுகளிலும், மேல்முறையீடு செய்யலாம் என்று ஆலோசனை சொல்லலாமே? அந்த நாடுகளில் உள்ள சட்ட நிபுணர்களையெல்லாம் விட, “தி இந்து” நிருபர்கள் பெரிய சட்ட ஆலோசகர்கள் ஆகி விட்டார்கள் போலும். விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பிரச்சாரம் செய்வதை விடுத்து, இவ்வாறு சித்தாந்த ரீதியில் வேலை செய்வது தான். “தி இந்துவின்” முகமூடியை அவ்வப்போது, திறந்து காட்ட வைக்கிறது.

© வேதபிரகாஷ்

16-11-2016

Bangladesh-bans-televangelist-Zakir-Naik-s-Peace-TV

[1] தினமணி, ஜாகிர் நாயக்கின் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை: மத்திய அமைச்சரவை முடிவு, By DIN  |   Published on : 16th November 2016 02:44 AM

[2]http://www.dinamani.com/india/2016/nov/16/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-2599256.html

[3] தமிழ்.ஒன்.இந்தியா, மதபோதகர் ஜாகீர் நாயக்கின் அறக்கட்டளைக்கு 5 ஆண்டுகள் தடை !, By: Karthikeyan, Updated: Wednesday, November 16, 2016, 0:27 [IST]

[4] Deccan Herald, Govt bans Zakir Naik’s organisation, Wednesday 16 November 2016
News updated at 2:37 AM IST.

http://www.deccanherald.com/content/581315/govt-bans-zakir-naiks-organisation.html

[5] The Hindustan Times, IRF ban: Mumbai police await notification, clarity before initiating action, Saurabh M Joshi, Hindustan Times, Mumbai, Updated: Nov 16, 2016 01:10 IST

[6] http://www.hindustantimes.com/mumbai-news/irf-ban-mumbai-police-await-notification-clarity-before-initiating-action/story-iagR2YPHn98Qdxqq8OYIrL.html

[7] http://tamil.oneindia.com/news/india/zakir-naik-ngo-banned-five-years-267327.html

[8] http://www.deccanherald.com/content/581315/govt-bans-zakir-naiks-organisation.html

[9] மாலைமலர், மதபோதகர் ஜாகீர் நாயக்கின் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை, பதிவு: நவம்பர் 16, 2016 03:55

[10] http://www.maalaimalar.com/News/TopNews/2016/11/16035525/1051018/Government-bans-controversial-preacher-Zakir-Naiks.vpf

[11] The Hindu, Centre bans Zakir Naik’s NGO, calls it ‘unlawful’, New Delih, November 15, 2016

[12] Banning any organisation under the Unlawful Activities Prevention Act (UAPA) requires an approval by the Cabinet, and a Gazette notification will follow soon. A Tribunal will be set up where Dr. Naik could challenge the ban on his NGO.

http://www.thehindu.com/news/national/zakir-naiks-ngo-banned-for-5-years/article9349724.ece

Explore posts in the same categories: ஃபத்வா, அமைதி, அமைதி டிவி, அமைதி தூதுவர், அரேபியா, அல்லா, அவமதிக்கும் இஸ்லாம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இந்து-முஸ்லிம், இந்து-முஸ்லிம் உரையாடல், இறைதூதர், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், குண்டு தயாரிப்பு, குண்டுவெடிப்பு, சட்டமீறல், சட்டம், சவுதி, சவுதி அரேபியா, ஜாகீர், ஜிஹாதி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் தன்மை, Uncategorized

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

One Comment மேல் “ஜாகிர் நாயக்கின் “இஸ்லாமிய ஆராய்ச்சி இயக்கம்” சட்டத்திற்குப் புறம்பாக இயங்கும் இயக்கம் என்று அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது!”

  1. vedaprakash Says:

    Zakir Naik’s counsel to move tribunal against Centre’s ban on NGO
    By: ANI | Mumbai | Published:November 16, 2016 9:34 am

    Following the Centre’s ban on Zakir Naik’s NGO, the Islamic Research Foundation, for five years, the counsel of the controversial Islamist preacher, has asserted that it is an ‘illegal and unjustified’ ban and added that they will move the tribunal against the order. Naik’s lawyer, Mubin Solkar, told media, “So far, we have not been served with any such kind of notification under Section 3 of the UAPA. We are clear that this ban is not justified at all and is an illegal ban, because, the provision of the UAPA has been wrongly invoked in this case. According to us, it is a clear misuse of the provisions of UAPA.”

    http://indianexpress.com/article/india/india-news-india/zakir-naiks-counsel-to-move-tribunal-against-centres-ban-on-ngo-4378138/


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: