கணவன் அக்பரை மனைவி பாத்திமுத்து கொலை செய்தது – கணவன்-மனைவி சண்டையா, கள்ளக்காதல் சீர்கேடா, பெண்ணியப் பிரச்சினையா, சமூக சீர்கேடா?

கணவன் அக்பரை மனைவி பாத்திமுத்து கொலை செய்தது – கணவன்-மனைவி சண்டையா, கள்ளக்காதல் சீர்கேடா, பெண்ணியப் பிரச்சினையா, சமூக சீர்கேடா?

அக்பர் கொலை 16-08-2016.பாத்தமுத்து

மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டுக் கிடந்த மண்ணடி இரும்பு வியாபாரி அக்பர்: சென்னை மண்ணடி என்றாலே, இரும்புப் பொருட்கள், கழிவுகள் போன்றவைதான் ஞாபகம் வரும். வண்ண்டிகளால் அடைந்து கிடக்கும் தெரு, மக்கள் இப்படியும், அப்படியும் சென்று கொண்டிருக்கும் நிலை. இங்கு பெரும்பாலான வியாபாரிகள் முஸ்லிம்கள் தாம். சென்னை பிராட்வே மண்ணடி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் அக்பர் (வயது 54). இரும்பு வியாபாரி. இவருடைய மனைவி பாத்திமுத்து (48). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 16-08-2016 அன்று காலை வீட்டின் படுக்கையறையில் தொழில் அதிபர் அக்பர் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார்[1]. உடனே, பாத்திமுத்து சத்தம் போட்டு, பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் மைத்துனர் சையதிடம் விசயத்தைக் குறினார். சையது போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இது பற்றி தகவல் அறிந்த வடக்கு கடற்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்பர் பிணமாக இருந்த அறையில் சோதனை மேற்கொண்டனர். தொழில் அதிபர் அக்பர் வசித்து வந்த வீடு 3 மாடிகளை கொண்டது. இந்நிலையில், 3-வது மாடியில் வசித்து வந்த அக்பர் வீட்டிலேயே படுக்கை அறையில் கொலை செய்யப்பட்டிருப்பது மர்மமாக உள்ளது[2].

industrialist-murder-Mannady-Chennai-police-investigation_அக்பரை கொலை செய்த மனிதன் வெளியே இருந்து வரவில்லை: இரவு மர்ம நபர்கள் வீட்டிற்கு வந்து அவரை கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர் என்று முதலில் சொல்லப்பட்டது. அக்பர் கொலையுண்ட படுக்கையில் ரத்த கறை படிந்துள்ளது. அதனையும் போலீசார் சேகரித்துள்ளனர்[3]. படுக்கையில் இருந்த கைரேகைகளையும் பதிவு செய்தனர்[4]. கொலையாளிகள் யார் என்பது தெரியவில்லை. அக்பரின் வீட்டில் கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் யாரேனும் புகுந்து அவரை கொன்று விட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது[5]. ஆனால், பிறகு வீட்டில் எதுவும் திருடப்படவில்லை என்று தெரிந்தது. வியாபார போட்டியும் இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது[6]. பெண் தகராறில் அக்பர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[7]. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். வீட்டில் கொள்ளை அடிக்க வந்த மர்ம நபர்கள் கொலை செய்தார்களா? அல்லது அக்பருக்கு தெரிந்த நபர்கள் அவரை கொலை செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது[8]. வீடு உள்ளே பூட்டப்பட்டிருந்தது என்றும் தெரிந்தது. மேலும், மோப்ப நாய் சோனா வரவழைக்கப்பட்டது. அது வீட்டிலிருந்து தெரு வரை ஓடி சென்று நின்றுவிட்டது[9]. இதனால், கொலையாளி வெளியே இருந்து வரவில்லை அல்லது உள்ளேயிருந்தவர் உதவியுடன் வெளியாள் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் தீர்மானித்தனர்.

அக்பர் கொலை 16-08-2016“சென்னையில் தொழில் அதிபர் கொலை நகைபணம் கொள்ளை” என்று ஆரம்பித்து “கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபர் கொலை கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி கைது” என்று முடிந்துள்ள செய்திகள்:  நேற்று, “சென்னையில் தொழில் அதிபர் கொலை நகை-பணம் கொள்ளை” என்று தான் செய்திகள் வந்தன. பிறகு, “கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபர் கொலை கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி கைது” என்று செய்திகள் முடிந்துள்ளன. அதாவது, தாம்பத்திய உறசு முறைக்கு அப்பாற்பட்ட கள்ளக்காதல்-தொடர்பு தான் கொலைக்குக் காரணம் என்பது தெரிந்திருக்கிறது, இருப்பினும், “முஸ்லிம்கள் சமாச்சாரம்” என்று செய்தியாளர்கள் ஜாக்கிரதையாக இருந்து, “நகை-பணம் கொள்ளை” என்று கதையினை ஆரம்பித்து வைத்தார்கள். பெண் தகராறில் அக்பர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[10] என்று முன்னரே கூறப்பட்டது. பிறகு, அதனை ஏன் இன்னும் விளக்கவில்லை என்று தெரியவில்லை. கள்ளக்காதலால், மனைவி கணவனை கொலை செய்தாள், கணவன் மனைவியைக் கொலை செய்தான், ஏன் ஆட்களை வைத்தே கொலை செய்தாள் / செய்தான் என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன, வந்துக் கொண்டிருக்கின்றன. அந்நிலையிலும், சமூக ஆர்வலர்கள், பெண்ணிய வீராங்கனைகள், மனநல வல்லுனர்கள் என்று யாரும் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. வழக்கம் போல ஊறுகாய் ;போடுவது எப்படி, எந்த கடையில் எந்த புடவை வாங்கலாம், லிங்கின்ஸைப் போடுவது எப்படி என்று தான் வாத-விவாதங்களை செய்து கொண்டிருந்தனர். பெண்ணிய அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளவில்லை.

அக்பர் கொலை 16-08-2016.தினத்தந்திபோலீசார் விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு: தூத்துக்குடி காயல்பட்டினத்தை சேர்ந்தவர் அக்பர் (50). இவர் சென்னை மண்ணடி கிருஷ்ணன் கோயில் தெருவில் உள்ள வீட்டின் 3வது மாடியில் வாடகைக்கு வசித்தார். தொழிலதிபரான இவர், மண்ணடி பகுதியிலேயே இரும்பு கடை நடத்தி வந்தார். இவரது மனைவி பாத்திமுத்து (45). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். அக்பருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது[11]. கள்ளக்காதலை கைவிடக்கோரி பாத்திமுத்து பலமுறை கெஞ்சியும் அக்பர் மறுத்து விட்டார். சில வாரங்களுக்கு முன்பு கள்ளக்காதலியுடன் இருந்த அக்பரை, பாத்திமுத்து கையும், களவுமாக பிடித்து எச்சரித்தார். அடித்து உதைத்தனர் என்றும் இன்னொரு ஊடகம் குறிப்பிட்டது. 15-08-2016 இரவு அன்று 12.30 மணியளவில் குடிபோதையில் வந்த அக்பரிடம், பாத்திமுத்து கள்ளக்காதலை கைவிட கூறியபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது[12].  ‘‘ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்னையும் குழந்தைகளையும் நினைத்துப் பாருங்கள். நீங்கள் செய்வது நியாயமா’’ என்று பாத்திமுத்து அழுது புலம்பினார். ஆனால் அவரோ பாத்திமுத்துவை எட்டி உதைத்தார். பிறகு போதையில் தனது அறையில் படுத்துள்ளார்.  அவரைப் பார்க்கக் பார்க்க ஆத்திரமுற்ற பாத்திமுத்து வீட்டிலிருந்த இளநீர் வெட்டும் அரிவாளை எடுத்து அவரது கழுத்தில் சராமாரியாக 3 முறை வெட்டியுள்ளார்[13]. மேலும் ரத்தம் கொட்டியதை பார்த்ததும் பாத்திமுத்துக்கு மயக்கம் வந்துவிட்டது. அரிவாளை துணியில் சுற்றி பீரோவுக்கு அடியில் தள்ளிவிட்டு அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு தன்னுடைய அறைக்கு சென்று தூங்கினார்.

© வேதபிரகாஷ்

17-08-2016

[1] தினத்தந்தி, கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபர் கொலை கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி கைது, பதிவு செய்த நாள்: புதன், ஆகஸ்ட் 17,2016, 1:08 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், ஆகஸ்ட் 17,2016, 2:45 AM IST.

[2] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னையில் தொழிலதிபர் கொலை.. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கொடூரம்!, By: Ganesh Raj, Published: Tuesday, August 16, 2016, 17:48 [IST]

[3] தினத்தந்தி, சென்னையில் தொழில் அதிபர் கொலை நகைபணம் கொள்ளை, பதிவு செய்த நாள்: செவ்வாய், ஆகஸ்ட் 16,2016, 3:19 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், ஆகஸ்ட் 16,2016, 3:19 PM IST

[4] மாலைமலர், சென்னை மண்ணடியில் தொழில் அதிபர் படுகொலை: நகைபணம் கொள்ளை?, பதிவு: ஆகஸ்ட் 16, 2016 12:03.

[5] http://www.dailythanthi.com/News/State/2016/08/16151929/Kill-the-industry-leaders-in-Chennai-5-kg-jewel-robbery.vpf

[6] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=96671

[7] http://www.maalaimalar.com/News/TopNews/2016/08/16120317/1032870/industrialist-murder-Mannady-Chennai-police-investigation.vpf

[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/businessman-murdered-chennai-260381.html

[9] தமிழ்முரசு, மண்ணடியில் பயங்கரம்கழுத்து அறுத்து தொழிலதிபர் படுகொலை; மனைவி, கள்ளக்காதலியிடம் போலீசார் தீவிர விசாரணை, 8/16/2016 . 3:33:44 PM

[10] http://www.maalaimalar.com/News/TopNews/2016/08/16120317/1032870/industrialist-murder-Mannady-Chennai-police-investigation.vpf

[11] The Times of India, Woman kills sleeping hubby, tells children to wake him up, TNN, Chennai edition, Aug 17, 2016, 04.17 AM IST.

[12] http://timesofindia.indiatimes.com/city/chennai/Woman-kills-sleeping-hubby-tells-children-to-wake-him-up/articleshow/53731735.cms

[13] தினகரன், கள்ளக்காதலியுடன் ஓட முயன்ற கணவனை அரிவாளால் வெட்டிக் கொன்றார் மனைவி, Date: 2016-08-17@ 00:38:58

Explore posts in the same categories: அக்பர், அடி உதை, இச்சை, இரண்டாம்மனைவி, இஸ்லாமிய திருமணச் சட்டம், இஸ்லாம், உடலுறவு, உரிமை, உல்லாசம், கள்ள உறவு, கள்ளக் காதல், கள்ளக்காதல், காதல், பாத்திமா, பாத்திமுத்து, மண்ணடி, Uncategorized

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: