ஜாகிர் நாயக் – கேரளா- ஐசிஸ் விவகாரங்களில் 23-07-2016 வரை மும்பையில் மூன்று பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்!
ஜாகிர் நாயக் – கேரளா- ஐசிஸ் விவகாரங்களில் 23-07-2016 வரை மும்பையில் மூன்று பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்!
ஜாகிர் நாயக்கிற்கு ரஹீல் செயிக்கைத் தெரியும்: ரஹீல் செயிக் தன்னுடய நிறுவனங்களில் நிகழ்ச்சிகளுக்காக வேலைசெய்துள்ளதை ஜாகிர் நாயக் ஒப்புக்கொண்டுள்ளார். “ஆயிரக்ககணக்கில் உள்ள தொண்டர்களில் அவனும் ஒருவன். ஊடகங்களின் மூலம் தான், அவக் சந்தேகிக்கப்படும் தீவிரவாதி என்று எனக்கு தெரிய வந்தது. அதனால், அவன் தோன்றும் காட்சிகளை எங்களுடைய வீடியோக்களிலிருந்து எடுத்துவிட சொன்னேன். ஏனென்றால், அதனை பார்ப்பவர்கள், அவனும் ஐ.ஆர்.எப்புடன் தொடர்புடைவன் என்ற நினைக்கக்கூடும் என்பதால், அவை நீக்கப்பட்டன”, என்று விளக்கினார்[1]. அதாவது, ஜாகிர் நாயக்கே தனக்கு சாதகமாக இல்லை என்றால், எடுத்த வீடியோக்களில் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன என்று தெரிகிறது. பிறகு, தான் பேசிய பேச்சுகளே “எடிட் / டாக்டர்டு” (மாற்றம் செய்யப்பட்ட) செய்யப்பட்டுள்ளன என்று இப்பொழுது சாக்கு சொல்வதேன்? அதற்கு திக்விஜய் சிங்கும் ஒத்து ஊதியதை கவனிக்கத் தக்கது. இவ்வாறு ஆதாரங்கள் மாற்றப்பட்டிருப்பது, திக்விஜயுக்கு முன்பே தெரியுமோ?
தற்கொலை தாக்குதல் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படுகிறது– ஜாகிர் நாயக்கின் வாதம்[2]:. பங்காளதேச தற்கொலை தாக்குதல் விசயத்தில், தற்கொலை தாக்குதலை நியாயப்படுத்தியதோடு, இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் எப்படி குண்டு போட்டதோ அது போல என்று விளக்கமும் அளித்தார். ஆனால், ஜப்பானியர்களுக்கு குரானும் இல்லை, ஜிஹாத் போன்றா வெறித்தனங்களும் இல்லை. தற்கொலை தாக்குதல் இஸ்லாத்தில் ஒரு யுத்த யுக்தியாக கையாளப்பட்டு வருவதால், அது அனுமதிக்கப்படுகிறது. ஆனால், அதில் அப்பாவிகள் கொல்லப்பட்டால் அது ஹராம் ஆகும், என்று ஜாகிர் நாயக் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்[3]. அதுமட்டுமல்லாது, செயிக் அப்த்-அ- இபின் பாஜ், என்ற சலாபி இஸ்லாமிய மதத்தலைவர் ஆதரிப்பதாக எடுத்துக் காட்டினார்[4]. இவர் சவுதி அரேபியாவின் தலைமை முப்தி ஆவார். அப்துல்-முஸ்ஹின் அல்-அப்பாத் என்ற இன்னொரு இஸ்லாமிய சலாபி வல்லுனர் பெயரையும் குறிப்பிட்டார்[5]. இப்படி மற்ற சலாபி வல்லுனர்கள் ஆதரித்து, ஒப்புதல் அளித்துள்ள விவரங்களை இங்கு படிக்கலாம்[6].
இஸ்லாம் தற்கொலை தாக்குதலை ஆதரிப்பது ஏன்?: இஸ்லாத்தைப் பொறுத்த வரையில், உலகத்தில் உள்ள குப்ரு (இஸ்லாத்திற்கு விரோதமாக உள்ளவை என்று தீர்மானப்படுத்தப்பட்டுள்ளவை) தன்மை ஒழியும் வரை, ஜிஹாத் என்கின்ற சண்டையை ஒவ்வொரு முஸ்லிமும் செய்து கொண்டே இருக்க வேண்டும். “உலகத்தில் காபிர்கள் இருக்குவரை, அல்லாவின் வழியில் சண்டையிட்டுக் கொண்டே இரு”, என்கிறது குரான். அதாவது, காபிர்கள் முழுவதுமாக நீக்கப்பட்டால் தான், கொலை செய்யப்பட்டால் தான், அந்த ஜிஹாத் நிறுத்தப்படும். உலகத்தில், முஸ்லிம்கள் தவிர மற்றவர்கள் எல்லோருமே அழிய வேண்டும் என்றால், இந்து ஜிஹாதி-தீவிரவாதிகள் காலத்திற்கு ஏற்ப எந்த முறைகளையும் கையாளுவார்கள். கத்தி போய், துப்பாக்கி வந்து, அத்துப்பாக்கியும் ஏ.கெ-47 என்று மாறி, பிறகு ராக்கெட் லாஞ்சர், குண்டுவெடுப்பு கொலை என்று வளர்ந்து வருவதால், இத்தகைய தற்கொலை ஜிஹாதையும் ஆதரிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இதனால் தன் இஸ்லாமிய மதகுருக்கள் அதனை பறிந்துரைக்கின்றனர்[7].
ஜாகிர் நாயக் எங்குள்ளார்?: ஜாகிர் நாயக் இந்தியாவுக்கு வராதது வியப்பாக உள்ளது. வீடியோ / ஸ்கைப் மூலம் பதில் சொன்னதால், அவர் சவுதி அரேபியாவில், துபாயில் அல்லது ஏதோ ஒரு ஆப்பிரிக்க நாட்டில் உள்ளார் என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன. மேலும், உள்துறை அமைச்சகம் ஐ.ஆர்.எப்பிற்கு, யார்-யாரிடமிருந்து பணம் வந்துள்ளது என்பதையும் ஆராய ஆரம்பித்து விட்டது. இதனால், அந்த தொடர்புகள் மற்ற விவகாரங்கள் அறியப்படும். அந்நிலையில், ஜாகிர் நாயக்கிடம் வேலை செய்த ஒருவர், அவர் அயல்நாடுகளிலிருந்து வரும் பணத்தை தவறாகப் பயன்ப்டுத்துகிறார் என்று ஜி-டிவிக்கு பேட்டி கொடுத்துள்ளார். ஏழை முஸ்லிம்களுக்கு என்று கொடுக்கும் பணத்தை இவர், தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதற்கு செலவழிக்கிறார். மேலும், “மணி லான்டரிங்” முறையற்ற பண-பரிவர்த்தனையிலும் ஈடுபட்டுள்ளார் என்று குற்றஞ்சாட்டுகிறார்[8]. நாயக் உச்சநீதி மன்றத்தில் பல மாநிலங்களில் பலதரப்பட்ட அரசு துறைகளால், பல வழக்குகளாக விசாரிக்கப்பட்டு இதை, ஒரே புலனாய்வு ஏஜென்சியை அமைத்து விசாரிக்கக் கோரி, ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார், அது நிலுவையில் உள்ளது[9].
22-07-2016 வியாழக்கிழமை ஜாகிர் நாயக் கம்பெனியின் மானேஜர் கைது செய்யப்பட்டது: எபின் ஜேக்கப் என்பவர் கணவனுடன் மும்பைக்குச் சென்ற தன்னுடைய சகோதரி மெரின் ஜேக்கப்பை, காணவில்லை என்றும், மும்பையில் உள்ள அர்ஸி குரேசி / அர்ஷி குரேஷி என்பவர் வல்லுக்கட்டாயமாக மதம் மாற்றியுள்ளார் என்றும் கொச்சி போலீஸில் புகார் கொடுத்தார்[10]. மெரின் ஜேக்கப், பெஸ்டின் வின்சென்ட் என்பவன் கூட பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டாள். பிறகு, இருவரும் ஶ்ரீலங்கா சென்று அங்கிருந்து, சிரியாவுக்குச் சென்று ஐசிஸில் சேர்ந்து விட்டனர் என்று புகார் கொடுத்தார்[11]. அதனால், கேரள போலீஸார் மற்றும் ஏடிஎஸ் போலீஸார் விசாரிக்க ஆரம்பித்தனர். இங்கு “லவ் ஜிஹாத்” வேறு முறையில் வேலை செய்துள்ளது. அதாவது, இந்து பெண்ணிற்குப் பதிலாக, ஒரு கிறிஸ்தா பெண் இலகாகியுள்ளார். இதனால், கேரளாவில் ஆதிக்கத்தில் உள்ள கிருத்துவர்களும் இதை விடுவதாக இல்லை போலும்! அர்ஸி குரேசி, ஐ.ஆர்.பியின் உறுப்பினர், 21-07-2016 அன்று நவி மும்பையில் கேரளா மற்றும் ஏடிஎஸ் போலீஸாரால் கைது செய்யப்பட்டான்[12].
அர்ஷி குரேஷி ஜாகிர் நாயக் கம்பனியின் மானேஜர்: இவன் ஐ.ஆர்.பியில் விருந்தினர் நலன் மேலாளர் [Guest Relations Manager] என்று வேலைசெய்து கொண்டு, ஐ.ஆர்.பிக்கு வரும் நபர்களுடன் உரையாடி வந்துள்ளான். மெரின் ஜேக்கப் என்ற கேரள பெண் மும்பையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, பெஸ்டின் வின்சென்ட் என்ற தனது கணவனோடு வேலை செய்து கொண்டிருந்தாள். 2009ல் ஜாகிர் நாயக் கூட்டத்தில் இவர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. பிறகு இவர்கள் ஜாகிர் நாயக்கால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் படியான போதனை செய்யப்பட்டது[13]. முதலில் பெஸ்டின் வின்சென்ட் முஸ்லிமாகி யாஹ்யா என்ற பெயரை வைத்துக் கொண்டான். பிறகு தனது மனைவியையும் மதம் மாற னற்புறுத்தினான். ஆனால், அவள் மறுத்ததால், 2015ல் ஐ.ஆர்.பி நடத்தும் வகுப்புகளில் கலந்து கொள்ள செய்தான். பிறகு அவளும் மதம் மாறினாள். மேலும் இஸ்லாம் பற்றி படிக்க வேண்டும் என்ற போர்வையில், அவர்கள் ஶ்ரீலங்கா மூலம், சிரியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது[14]. ஆனால், நவிமும்பை, செக்டார்.20, சீயுட்ஸ் ஏரியா பகுதியில் உள்ல அடுக்குமாடி வீட்டில் முதல் மாடியில் வசிக்கும் அர்ஸி குரேசியின் மனைவி தனது கணவன் 1000% அப்பாவி என்றும் அவருக்கு ஒன்றுமே தெரியாது என்றும் சாதித்தாள்[15]. இது வழக்கமாக, மாட்டிக் கொள்ளும் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் மற்ற ஜிஹாதிகளின் பெற்றோர், உறவினர், மற்றோர் கூறுவது போலவே இருக்கிறது. குரேசி அங்கிருந்துதான் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டான்[16]. 22-07-2016 அன்று இஸ்வான் கான் என்பவன் மும்பையில் கைது செய்யப்பட்டு, 23-07-2016 அன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டான்[17].
© வேதபிரகாஷ்
24-07-2016
[1] Naik accepted that Raheel Shaikh, a terror suspect, had worked as a volunteer in some of his programmes. “I did not know him personally and he was not part of our organisation. We have thousands of volunteers and he was one of them. When I came to know from media about him being a terror suspect I enquired my staff about him and when they said he was our volunteer, I asked them to remove his visuals from the videos so that people do not think he is part of IRF (Islamic Research Foundation, his organisation),” he added. Mr Naik, however, said he does not know about Abu Jundal.
http://www.asianage.com/kolkata/zakir-naik-denounces-terror-wrong-366
[2] India.today, Zakir Naik justifies suicide bombing as legal in tactic of war, Mail Today Bureau, Posted by Arpan Rai, New Delhi, July 16, 2016 | UPDATED 09:14 IST
[3] Controversial Islamic preacher Zakir Naik who is under fire for inspiring terrorists, including those who attacked a Dhaka café said on Friday that suicide bombings are permitted in Islam if it used as a tactic in war but if innocents are getting killed it is haram. Justifying suicide bombings as a tactical move in wars, he gave the example of Japan in World War II.
http://indiatoday.intoday.in/story/zakir-naik-suicide-bombing-islamic-preacher/1/716209.html
[4] Who are, then, those many scholars who have permitted the suicide bombing as war tactic? Naik has honestly named a few of them like Shaikh Abd al-Aziz ibn Baz, a Saudi Arabian Islamic scholar and a leading proponent of the Salafi sect. Notably, Ibn Baz has served as Grand Mufti of Saudi Arabia from 1993 until his death in 1999.
firstpost.com, Only Salafists like Zakir Naik view suicide bombing as war tactic; it’s haraam in Islam, Ghulam Rasool Dehlvi, Jul 17, 2016 17:27 IST
[5] Naik also cited another Salafist Shaikh Abdul-Muhsin al-Abbaad who wrote a complete paper entitled, “With Which Religion and Intellect are Suicide Bombings and Destruction Considered Jihaad?”
http://www.salafipublications.com/sps/sp.cfm?subsecID=MNJ14&articleID=MNJ140006&articlePages=1
[6] http://www.firstpost.com/india/suicide-bombing-is-haram-in-islam-only-salafist-ideologues-like-zakir-naik-view-it-as-a-war-tactic-2898840.html
[7] http://www.thenational.ae/thenationalconversation/comment/hatred-violence-and-the-sad-demise-of-yusuf-al-qaradawi
[8] https://www.youtube.com/watch?v=4WQKY11ON9w
[9] Naik had filed a writ petition in the Supreme Court (SC), asking for one agency to be appointed for investigating all the cases spread in different states. The petition is pending before the apex court.
[10] India.today, Employee of Zakir Naik’s IRF arrested for allegedly brainwashing youths to join ISIS, Mustafa Shaikh | Posted by Ashna Kumar Mumbai, July 22, 2016 | UPDATED 02:50 IST
[11] http://indiatoday.intoday.in/story/zakir-naik-irf-islamic-research-foundation-mumbai-kerala-isis-islam-nia/1/721036.html
[12] According to an eyewitness, the police took Qureshi into custody from his first-floor apartment in Sector 50 of Navi Mumbai’s Seawoods area.
[13] Hindusthantimes, Employee from Zakir Naik’s foundation arrested for influencing youth to join IS, HT Correspondent, Hindustan Times, Mumbai, Updated: Jul 22, 2016 10:30 IST
[14] Jacob alleged that his sister had been influenced to convert to Islam by Yahya and Ashi. Hailing from a Christian family, Mariyam née Merin had met her husband while working in Mumbai in 2015. Though she initially resisted Islam, she was taken to several classes, following which, she had been converted, police sources said. Ebin said that at one point his sister wished to come back to Kerala, where her family is, but was eventually forced into joining the IS. His brother-in-law also tried to convert him, Ebin added.His parents alleged that Yahya and Mariyam were radicalised though Dr Naik, who they had met while in Mumbai. According to police sources, Arshi was the public relation manager responsible when Dr Naik had held a massive public conference in 2009.
[15] Express News Service, Man held for ‘radicalising’ Kerala woman: ‘My husband 1000% innocent’, claims Arshi Qureshi’s wife, Mumbai, Published:July 23, 2016 1:36 am.
[16] http://indianexpress.com/article/cities/mumbai/man-held-for-radicalising-kerala-woman-my-husband-1000-innocent-claims-arshi-qureshis-wife-2930483/
[17] The special team, probing the mass disappearance of Keralite youths and their suspected links with Islamic State, arrested a man named Rizwan Khan from Mumbai on Saturday – 23-07-2016.
Explore posts in the same categories: ஃபத்வா, ஃபிதாயீன், அமைதி, அமைதி டிவி, அரேபியா, அர்ஷி குரேஷி, அல் - கொய்தா, அல்-முஜாஹித்தீன், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய நாடு, இஸ்லாம், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசில், ஐசிஸ், திக்விஜய் சிங், ரஹீல் செயிக், Uncategorizedகுறிச்சொற்கள்: ஃபத்வா, அர்ஷி குரேஷி, இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஷ்மீர், குண்டு வெடிப்பு, கொலை, ஜிஹாத், திக்விஜய் சிங், புனிதப்போர், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஸ்லிம்கள், முஸ்லீம்கள், ரஹீல் செயிக், லவ் ஜிஹாத்
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்