கேரள ஐஎஸ் தொடர்புகள், 1970ல் மேற்கொண்ட கம்யூனிஸ்டுகளின் மலபுரம் பரிசோதனை 2016ல் இவ்வாறான நிலையில் உள்ளது!

கேரள ஐஎஸ் தொடர்புகள், 1970ல் மேற்கொண்ட கம்யூனிஸ்டுகளின் மலபுரம் பரிசோதனை 2016ல் இவ்வாறான நிலையில் உள்ளது!

Sanheetha Nataka Academy kerala oppose hanging of afsal guru

ஜிஹாதி இஸ்லாத்தை நோக்கி, கேரள முஸ்லிம்கள் செல்வது: மலையாள முஸ்லிம்கள் இந்தியாவுக்கு எதிராக போராடுவது ஒன்றும் புதியதல்ல. 2008ல், காஷ்மீரில் ராணுவத்தினருடன் நடைபெற்ற சண்டையில் இறந்தவர்களைப் பற்றி ஆராய்ந்ததில், அவர்கள் கேரளாவிலிருந்து வந்தது தெரிய வந்தது.  9/11 மற்றும் 26/11 ஜிஹாதி-தீவிரவாதி டேவிட் கோல்மென் ஹெட்மேன் மூணாறில் உள்ள டாடாவின் விருந்தினர் மாளிகையில் வந்து தங்கியிருந்து, நோட்டம் விட்டிருக்கிறான். 1990களிலிருந்தே கேரளாவில் இஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதத்துடன் சேர்ந்து செயல்பட ஆரம்பித்து விட்டது[1]. அதாவது, உள்ளூர் முஸ்லிம்கள் ஆதரவு இல்லாமல், இக்காரியங்கள் எல்லாம் நடக்காது என்பதனை இவ்விவகாரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஷரீயத் சட்டம் அமூல் படுத்தப் படவேண்டும், இஸ்லாமிய அரசு ஏற்படுத்தப் படவேண்டும் என்பதெல்லாம் அதன் திட்டமாகும்[2]. அப்பொழுது தான் தூய்மையான, உண்மையான இஸ்லாத்தை அடைய முடியும், அதற்கு முகமது நபி இருந்து, வழிநடத்திய பூமிக்குச் சென்றால் தான் தமக்கு அவரது அருள் கிடைக்கும், தானும் சிறந்த ஜிஹாதியாக மாற முடியும், பொராட முடியும் என்றேல்லாம் இளைஞர்கள் மூளை சலவை செய்யப்படுகிறார்கள். இதனால், அவர்கள், எளிதில் நம்பி அங்கு செல்ல தயாராகி விடுகிறார்கள்.  இஸ்லாமிய வங்கிகளும் திறந்து வைக்கப் பட்டுள்ளன.

Communist IUML nexus Keralaகம்யூனிஸத்தில் இஸ்லாம் பரிசோதனை, அவர்களையே தாக்குகிறது!: கம்யூனிஸ்டின் “மலப்புரம்” பரிசோதனை 1970ல் ஆரம்பித்தது, 2016ல், மறுபடியும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இப்பிரச்சினை, அனைத்துலக விசயமாகி விட்டது. சென்ற வருடம் 2015 – மலபுரத்தில், ஐஎஸ் தொடர்பு கொண்ட 23 வயது இளைஞன் கைது செய்யப்பட்டான்[3]. துபாயில் இன்டெர்போல் மூலம் கண்காணிக்கப்பட்ட அவன் 29-08-2015 அன்று கைதானான்[4]. அரபு நாடுகளிலிருந்து வரும் பணத்திலிருந்து மதரஸாக்களை அமைத்து, அவற்றின் மூலம், சலாபி / வஹாபி போன்ற தீவிர இஸ்லாமிஸம் போதிக்கப்படுவதால், அவர்கள் எளிதில் ஜிஹாதிகளாக மாற துணிந்து விடுகிறார்கள். திருமணம் என்பதை மதமாற்றத்திற்கு பயன்படுத்தப் படுகிறது என்பதை கேரள அரசு மறுத்து-மறைத்து வருகிறது. இப்பொழுது அதில் கிருத்துவர்களும் சிக்கியுள்ளார்கள் என்பது தெரிந்த நிலையில், விசயத்தை அமுக்கி வாசிக்கப் பார்க்கிறது[5]. “மெரின்”லிருந்து “மரியம்” என்று மலையாள மனோரமா விவரங்களை வெளியிட்டது[6]. ஏற்கெனவே லவ்-ஜிஹாத் என்று குற்றஞ்சாட்டப்படுவதால், அதனை பூசிமெழுகப்பார்க்கிறது. ஆனால், சமீபத்தைய, ஐஎஸ் ஆள்-சேர்ப்பு நடவடிக்கைகள் அவற்றை வெளிப்படுத்தி விட்டன. 10-07-2016 அன்று மும்பையில் பெரோஸ் கான் என்பவன் கைது செய்யப்பட்டதிலிருந்து, கேரள இளைஞர்கள் சிரியாவுக்குச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது[7].

ISIS recruit on Facebookதிடீரென்று பெற்றோர்கள் கவலைப்படுவது: தமிழகத்தில் திருப்பூர் நகரத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவர் மளிகைக்கடை வைத்து நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற ஒரு தம்பதி உட்பட 20 இளைஞர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 15 இளைஞர்கள் மாயமாகி உள்ளனர். இவர்கள் எங்கு சென்றார்கள், என்ன ஆனார்கள் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இது தொடர்பாக இளைஞர்களின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இவர்கள் அனைவரும் சிரியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்திருக்க கூடும் என்ற சந்தேகமும், அச்சமும் எழுந்துள்ளது[8]. இதனால் மாயமான இளைஞர்கள் குறித்து உடனடியாக விசாரிக்க போலீசாருக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்[9]. அம்மாநிலத்தில் இருந்து இதுவரை 21 பேர் மாநிலத்தில் இருந்து மாயமாகி இருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் சட்டசபையில் அறிவித்துள்ளார். அவர்களில் 6 பேர் பெண்கள் என்பதுதான் கூடுதல் அதிர்ச்சியாகும்.

iuml - back with Islamic flagதிருப்பூரில் பிடிபட்ட இரு முஸ்லிம் இளைஞர்கள் (14-07-2016): மாயமான அனைவரும் கேரளாவின் தமிழக எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், தமிழகத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காணாமல் போன முஹமது (மலபுழம்) மற்றும் ஷப்பீர் (பாலக்காடு) திருப்பூரில், ஒரு பின்னாலடை தொழிற்சாலையில் வேலைசெய்வது தெரிய வந்துள்ளது[10]. முன்பு மேற்கு வங்காளத்திலிருந்து வந்த ஐஎஸ் தீவிரவாதி திருப்பூரில் தங்கியிருந்தபோது தான் கைது செய்யப்பட்டான். 14-07-2016 அன்று அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, கேரளாவுக்கு கூட்டிச் செல்லப்பட்டுள்ளனர்[11]. ஆனால், கோயம்புத்தூர் வழியாக கேரள முஸ்லிம்கள் இப்படி தாராளமாக வந்து செல்வதும், அவர்கள் குற்றங்கள் மற்றும் தீவிரவாத தொடர்புகள் உள்ளதும் கவனிக்கத்தக்கது. அதாவது திருப்பூரில் அவர்களுக்கு ஆதரவாக ஒரு குழுவுள்ளது தெரிய வருகிறது.

PFI army to fight against India11-07-2016 அன்று கேரள சட்டசபை விவாதத்தில் ஐஎஸ் விவகாரம் வெளிவந்தது: கேரளாவில் 11-07-2016 அன்று சட்டசபை கூடியதும் இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கேள்வி எழுப்பினார். ‘‘கேரள இளைஞர்கள் சிலர் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் பெரும் பீதியை ஏற்படுத்துகின்றன. ஆனால் இதுவரை அரசு தரப்பில் இருந்து அதிகாரபூர்வமான பதிலோ, விளக்கமோ அளிக்கப்படவில்லை. நிலைமையை சமாளிக்க பொது மக்களின் உதவியை முதல்வர் நாட வேண்டும். கிடைத்த தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டார்[12]. பாஜக எம்எல்ஏ ஒ.ராஜகோபால், முதல்வரின் சொந்த தொகுதியில் வசித்து வந்த பல் மருத்துவ படிப்பு மாணவியும் மாயமாகியுள்ளார். அவர் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு பாலக்காட்டுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும், அம்மாவட்டத்தில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றவர்களில் அவரும் ஒருவர் என்பதும் தெரியவந்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

© வேதபிரகாஷ்

16-07-2016

[1] In 2008, five Malayali Muslim youth went all the way to Kashmir to fight alongside the separatists and four of them were shot dead by Indian forces. If it’s Kashmir in 2008, it’s only natural that it’s IS in 2016 because Islamism has been growing in the state since the 1990s. The common ideal is international Islam, as against the state’s age-old local Islam, and the allegiance is to what’s purported to be the purest form and practice — something that the Islamists believe belong to the Prophet’s land and the Prophetic era. It’s part of their blind trust in global kinship, an exclusive transnational state of radical Islam and the rein of Sharia law.

http://www.firstpost.com/india/kerala-should-be-worried-about-its-missing-youths-and-possible-islamic-state-links-2884596.html

[2] The First Post, Kerala should be worried about its missing youths and possible Islamic State links, G Pramod Kumar,  July 10, 2016 14:49 IST

[3] http://www.marunadanmalayali.com/news/exclusive/isis-recruitment-from-malappuram-21553

[4] MALAPPURAM:  Intelligence sleuths have taken into custody a 23 –year-old youth hailing from Pattarnakkavu, over his alleged ISIS links. The person was arrested jointly by IB and Karipur Emigration department as soon as he deplaned at Karipur airport. He, who was living in Dubai, had been under the observation of Abu Dhabi Interpol. And, his arrest was carried out as he arrived at the airport on August 29, 2015. The person had gone abroad five years ago and did his studies there, according to sources. He is also known to have travelled to several foreign countries.

http://kaumudiglobal.com/innerpage1.php?newsid=68525

[5] http://www.firstpost.com/india/kerala-should-be-worried-about-its-missing-youths-and-possible-islamic-state-links-2884596.html

[6] FROM MERIN TO MARIAM, FROM COCHIN TO SYRIA-Merin, who hails from a Christian family in Cochin, went to Mumbai after finishing her studies in Cochin. Her mother Mini told Manorama that she was influenced by her long-time classmate Yahiya, his brother Eeza and his wife Fathima, and converted to Islam. Merin who christened herself Mariam, later married Yahiya. Mini also said that the couple informed her about travelling to Sri Lanka for some prayers and that she had tried to stop her daughter.

India Today, ISIS recruits from Kerala: 11 out of 22 missing Keralites suspected to be in Syria, Posted by Vivek Surendran, New Delhi, July 11, 2016 | UPDATED 18:02 IST.

[7] Firoz Khan, a 24-year-old from Trikaripur in Kerala’s Kasargod district, was arrested yesterday (10-07-2016) evening by officers of the Intelligence Bureau from Mumbai. He was nabbed from a hotel in Dongri in Mumbai. Firoz had left for Mumbai on June 22 on the pretext of going to Kerala’s Kozhikode city. A phone call Firoz made to inform his family about his whereabouts is what trapped him. During the call, he said some others who went missing from his village have reached IS camps in Syria, says a Manorama report.

http://indiatoday.intoday.in/story/isis-kerala-recruitment-syria-kasargod-pinarayi-vijayan/1/712168.html

[8] தினமலர், ஐஎஸ்.,ல் சேர்ந்தார்களா கேரள இளைஞர்கள்?, பதிவு செய்த நாள். ஜூலை9, 2016: 11.59.

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1560666

[10] Onmanorama Staff, 2 missing Kerala youths traced in Tamil Nadu. No, they didn’t leave to join ISIS, Friday 15 July 2016 02:17 AM IST.

[11] http://english.manoramaonline.com/news/just-in/kerala-palakkad-youths-isis-suspect-traced-tamil-nadu.html

[12] தமிழ்.ஒன்.இந்தியா, கேரளாவில் இருந்து 21 பேர் மாயம்உறுதிப்படுத்தினார் பினராயி.. ஐஎஸ்ஸில் சேர்ந்திருக்கலாம் என சந்தேகம், By: Mayura Akilan, Published: Tuesday, July 12, 2016, 11:23 [IST]

Explore posts in the same categories: ஃபிதாயீன், ஃபேஸ்புக், அடிப்படைவாதம், அடையாளம், அல்லா, இந்திய விரோதம், இஸ்லாமிக் ஸ்டேட், ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐசில், ஐஸில், கம்யூனிசம், கம்யூனிஸம், குண்டு வெடிப்பது, கேரள ஜிஹாதி, கேரள ஜிஹாதிகள், கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், கேரள போலீஸார், கேரள முஸ்லீம் சேவை சங்கம், சிரியா, Uncategorized

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: