ஹைடெக்-ஜிஹாத் தீவிரவாதம், இணைதள ஆட்சேர்ப்பு, சேடிலைட்-போதனை, ஆனால், குண்டுவெடிப்பில் சாவுதான், ரத்த பீறல்தான், கைகால் சேதம் தான்!

ஹைடெக்-ஜிஹாத் தீவிரவாதம், இணைதள ஆட்சேர்ப்பு, சேடிலைட்-போதனை, ஆனால், குண்டுவெடிப்பில் சாவுதான், ரத்த பீறல்தான், கைகால் சேதம் தான்!

J-K - New type of young terrorists- Tral hotbed of terror

ரம்ஜான் முடியும் வாரத்தில் நடந்த தீவிரவாத கொலைகள் 07-07-2016 வரை: முதல் வாரத்தில் ரம்ஜான் முடியும் தருவாயில் உலகத்தில் பல இடங்களில் இஸ்லாம் பெயரில் தீவிரவாத குண்டுவெடிப்புகள், துப்பாக்கி சூடுகள், குரூர கத்திக் குத்துகள்-வெட்டுகள் என்ற முறையில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொலைசெய்யப் பட்டிருக்கிறார்கள். தினபதற்கு விலங்குகள் என்றால், அவர்களது ஜிஹாதி-பசிக்கு மனிதர்களே தேவைப்பட்டனர் போலும். 01-07-2016 மற்றும் 07-07-2016 தேதிகளில், இந்தியாவுக்குள் இருக்கும் அண்டை நாடான பங்களாதேசத்தில் 9/11 மற்றும் போன்ற தாக்குதலில் மக்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர். அதே வாரத்தில் தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அதே போன்ற தீவிரவாத செயல்கள் தினம்-தினம் நடந்து கொண்டிருந்தன. இந்திய ராணுவத்திற்கு, இந்தியாவும் தாக்கப்படும் என்று செய்திகள் வந்து கொண்டிருந்தன. அந்நிலையில் தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 3 பேரை பாதுகாப்புப் படையினர் 08-07-2016 வெள்ளிக்கிழமை அன்று சுட்டுக் கொன்றனர்.

Burhan Wani - praised by Urudu PAK media

08-07-2016 வெள்ளிக்கிழமைபாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால் சுட்டதால், பதிலுக்கு சுட்டதில் கொலை: இதுகுறித்து அந்த மாநில காவல் துறை டிஜிபி கே.ராஜேந்திரா, செய்தியாளர்களிடம் கூறியதாவது[1]: “பர்ஹன் முசாஃபர் வானி (21) என்ற பயங்கரவாதி, முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரம் செய்து இளைஞர்களை பயங்கரவாத இயக்கத்தில் சேர வைக்க முயற்சி செய்து வந்தார். இவரைப் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு வந்தன. இந்நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தின் கோகெர்நாக் பகுதியில் அவர் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை சென்ற பாதுகாப்புப் படையினர், அவரைத் தேடினர். அப்போது, ஓர் இடத்தில் பதுங்கி இருந்த பர்ஹன் முசாஃபரும், மேலும் 2 பயங்கரவாதிகளும் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்”, என்று ராஜேந்திரா தெரிவித்தார். காஷ்மீரின் புதிய தீவிரவாதத்தின் போஸ்டர் பாய் என்று அழைக்கப்படும், 21 வயதான பர்ஹன் முசாஃபர் வானி தனது 15-ஆவது வயதில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் இணைந்ததாகக் கூறப்படுகிறது. இவரைப் பற்றிய தகவல் தெரிவிப்பவருக்கு ரூ.10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று காவல் துறை அறிவித்திருந்தது[2].

J-K - New type of young terrorists- Pandits, Bhats turning into jihadists

ஹிஜ்புல் முஜாஹித்தீன் அட்டகாசமும், புர்ஹான் வானியின் இணைதள ஜிஹாதும், உண்மையன ஜிஹாதும்: கடந்த 1989ம் ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து காஷ்மீரை பிரித்து தர வேண்டுமென்று ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கம் பல தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பாதுகாப்புப் படையினரையும் கொன்றுள்ளது, என்றாலும், மத அடிப்படையில் நடந்து வரும் அத்தகைய தீவிரவாதம், காஷ்மீரத்திலிருந்து எல்லா இந்துக்களையும் கொன்று விட்டது, மிச்சமிருந்தவர்களை விரட்டி விட்டது என்று இங்கு குறிப்பிடவில்லை. இந்த இயக்கத்தின் முக்கிய அங்கமாக இருந்தார் புர்கான் என்ற 21 வயது இளைஞர். இவரை 08-07-2016 அன்று இரவு பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்திய ராணுவத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி ஆகும். பள்ளித் தலைமையாசிரியரின் மகனான புர்கான், படிப்பில் கெட்டிக்காரராக இருந்தான். ஒருகட்டத்தில்  படிப்பில் நாட்டமில்லாமல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 10 நாட்கள் முன்னதாக காணாமல் போனான். இதுவே முரண்பாடாக இருக்கிறது. படிப்பில் கெட்டிக்காரனாக இருப்பவன் எப்படி படிப்பில் நாட்டமில்லாமல் போவான் என்று “விகடன்” விளக்கவில்லை. பெற்றோர்கள் அத்தகைய மாற்றத்தைக் கண்காணித்து சரிபடுத்தியிருக்க வேண்டும். பின்னர் ஹிஸ்புல் இயக்கத்தில் சேர்ந்திருப்பது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. அப்போது அவனுக்கு வயது 15 தான். அபோழுதாவது தவறு என்று சுட்டிக் காட்டி, மகனை மீடிருக்க வேண்டும். செய்யவில்லை என்றே தெரிகிறது.

 J-K - New type of young terrorists

தேசத்துரோகியை புகழ்ந்து தள்ளிய தமிழ் ஊடகங்கள்: இணையதளங்கள், சமூக வலைத் தளங்களை கையாளுவதில் புர்கான் கெட்டிக்காரனாக இருந்ததால், இதன் வாயிலாக தீவிரவாத இயக்கத்துக்கு வேண்டிய நபர்களை தேர்ந்தெடுப்பதில் திறமையாக செயல்பட்டான், என்று திடீரென்று “விகடன்” கூறுகிறது. அவ்வாறான திறமையை அவன் எப்படி, எங்கு, எவ்விதம் பெற்றான் என்று விளக்கவில்லை. தீவிரவாதச் செயல்களை வீடியோவாக பதிவு செய்து அதனை ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடுவான்[3]. அதற்கு லைக் போடுபவர்கள், காமாண்ட் போடுபவர்களை குறி வைத்து நட்பாக்கிக் கொள்வான்[4]. பின்னர் அந்த இளைஞர்களை மூளைச் சலவை செய்து இயக்கத்தில் சேர்க்கும் வேலையில் ஈடுபடுவான். அப்படி 30க்கும் மேற்பட்ட இளைஞர்களை அந்த இயக்கத்தில் புர்கான் சேர்த்துள்ளான்[5]. தான் சேர்த்து விட்டவர்கள் ‘ஆக்டிவாக’ இருக்கிறார்களா என்றும் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளான். டெல்லி செங்கோட்டையில் இஸ்லாமியக் கொடி பறக்கவிட வேண்டுமென்பதுதான் புர்கானின் கோஷமாக இருந்தது. ஹிஸ்புல் இயக்கத்தின் முக்கிய பொறுப்புக்கு வந்திருந்த இவனது தலைக்கு இந்திய அரசு 10 லட்சம் அறிவித்திருந்தது, என்றேல்லாம் புகழ்ந்து தள்ளின ஊடகங்கள். தேசத்துரோகத்தில் ஈடுபட்டான் என்று ஒரு வரி கூட இல்லை. சுட்டுக் கொல்லப்பட்ட புர்கான் ஒரு கிரிக்கெட் வீரனும் கூட.  கடந்த 2015ம் ஆண்டு புர்கானின் சகோதரன் காலீத்தையும் இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.  காலீத், புர்கானை சந்திக்க சென்று கொண்டிருந்த போது பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர் என்று அரைகுறையாக செய்தியை வெளிட்டுள்ளது. தாக்கினால், பதிலுக்கு தாக்கத்தான் செய்வர், அதனை குறிப்பிடாமல், இவ்வாறு செய்திகளை வெளியிடுவது விசித்திரம் தான்!

Kashmiri mourners carry the body of Burhan Muzaffar Wani, the new-age poster boy for the rebel movement in the restive Himalayan state of Jammu and Kashmir, ahead of his funeral in Tral, his native town, 42kms south of Srinagar on July 9, 2016. A top commander from the largest rebel group in Indian-administered Kashmir was killed in a gun battle with government forces on July 8, police said. Young and media savvy, Burhan Wani was a top figure in Hizbul Mujahideen and had a one million rupee ($14,900) bounty on his head. Wani, 22, joined the rebel movement at the age of 15 and in recent years had been behind a huge recruitment drive to the group's ranks, attracting young and educated Kashmiris to the decades-old fight for independence of the restive disputed region. Viewed locally as a hero, his death sparked protests in nearby Anantnag town, with hundreds taking to the streets shouting independence slogans and lauding Wani as a revolutionary, witnesses said. / AFP PHOTO / TAUSEEF MUSTAFA

Kashmiri mourners carry the body of Burhan Muzaffar Wani, the new-age poster boy for the rebel movement in the restive Himalayan state of Jammu and Kashmir, ahead of his funeral in Tral, his native town, 42kms south of Srinagar on July 9, 2016.
A top commander from the largest rebel group in Indian-administered Kashmir was killed in a gun battle with government forces on July 8, police said. Young and media savvy, Burhan Wani was a top figure in Hizbul Mujahideen and had a one million rupee ($14,900) bounty on his head. Wani, 22, joined the rebel movement at the age of 15 and in recent years had been behind a huge recruitment drive to the group’s ranks, attracting young and educated Kashmiris to the decades-old fight for independence of the restive disputed region. Viewed locally as a hero, his death sparked protests in nearby Anantnag town, with hundreds taking to the streets shouting independence slogans and lauding Wani as a revolutionary, witnesses said. / AFP PHOTO / TAUSEEF MUSTAFA

09-07-2016 சனிக்கிழமை பிண ஊர்வலம்: ஸ்ரீநரில் 114 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பர்ஹான் வானி கொல்லப்பட்டதற்கு எதிராக பிரிவினைவாதிகள் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து இருந்தனர்[6]. இதனால், ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவுக்கு இணையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சமூக வலைத்தளங்களின் மூலம் வீண் வதந்திகள் பரவுவதை தவிர்க்கும் வகையில்  மொபைல் இண்டர்நெட் சேவையும் தற்காலிகமாக முடக்கப்பட்டது. உள்மாவட்டங்களுக்கு இடையில் ஓடும் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவி வந்த நிலையில், அங்குள்ள டிரால் நகரில் வானியின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது[7].  நான்கு ஹிஜ்புல் முஜாஹித்தீன் வீரர்கள் வானத்தை நோக்கி சுட்டனர். ராணுவம், போலீஸார் முதலியோர் இருக்கு போதே, இவ்வாறு ஹிஜ்புல் முஜாஹித்தீன் எப்படி துப்பாக்கிகளோடு வந்தனர் என்று தெரியவில்லை. வானியின் தந்தை, அதை “அல்லாவின் சேவையில் ஷஹீதானான்”, என்று தனது மகனை போற்றினார்[8]. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதால் பெரும் பரபரப்பு நிலவியது. பாதுகாப்பு படையினரின் கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி மாற்று வழியில் வந்து பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்[9]. சட்டத்தை மீறியது பற்றி எந்த மனித உரிமை மற்றும் செக்யூலரிஸ பழங்கள் தங்களது கருத்துகளை வெளியிடவில்லை. இந்த கூட்டத்தினரிடையே பேசுவதற்காக சில பிரிவினைவாதிகள் வர முயற்சித்தனர். அதாவது சாவிலும் ஆதாரம் தேடத்தான் அந்த ஜிஹாதிகள் இருக்கிறார்கள் என்பதை, அந்த முஸ்லிம்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது வினோதம் தான். ஆனால், பலத்த பாதுகாப்பை மீறி பிரிவினைவாதிகளால் அங்கு செல்ல முடியவில்லை.

© வேதபிரகாஷ்

10-07-2016


[1] தினமணி, ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி பர்ஹன் வானி சுட்டுக் கொலை: காவல்துறை டிஜிபி, By dn-First Published : 09 July 2016 11:31 AM IST

[2]http://www.dinamani.com/latest_news/2016/07/09/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA/article3521154.ece

[3] விகடன், ஃபேஸ்புக்கில் ஆள் பிடிப்பார்:ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட புர்கான்!, Posted Date : 16:59 (09/07/2016).

[4] Burhan Wani managed in five years, to create a band of 60-70 young locally recruited terrorists. Many were well educated and technically proficient to exploit social media for their cause. Their photographs in combat fatigues with weapons went viral on Facebook and Whatsapp.

http://www.dailyexcelsior.com/death-renegade-burhan-wanis-killing-aftermath/

[5] http://www.vikatan.com/news/india/65996-dead-in-protests-after-terrorist-burhan-death.art

[6] தினத்தந்தி, பர்ஹான் வானி இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு, காஷ்மீரில் தொடர்ந்து பதட்டமான சூழல், பதிவு செய்த நாள்: சனி, ஜூலை 09,2016, 2:28 PM IST; மாற்றம் செய்த நாள்: சனி, ஜூலை 09,2016, 2:28 PM IST.

[7] Tral is notorious for its alienation and use of violence over the last 26 years. The Wagad ridge to its West and the Dachigam Forest to the North afford excellent hideouts. Despite presence of a full RR unit here along with CRPF the area has only been passingly under control. Burhan belonged to Tral and last year in April his brother was killed in an encounter when he was mistakenly taken to be Burhan even as he had gone to the forest to meet his renegade brother.

http://www.dailyexcelsior.com/death-renegade-burhan-wanis-killing-aftermath/

[8] At the funeral in Tral Eidgah, eyewitnesses said three to four armed Hizbul Mujahideen militants fired a gun salute. Wani’s father Muzaffar called his son a “martyr in the service of Allah”.

http://timesofindia.indiatimes.com/india/11-killed-200-hurt-as-Valley-erupts-over-Wanis-death/articleshow/53135735.cms

[9] http://www.dailythanthi.com/News/India/2016/07/09142807/Thousands-Gather-at-Tral-For-Funeral-of-Hizbul-Militant.vpf

Explore posts in the same categories: ஃபிதாயீன், அமைதி, அல் - கொய்தா, அல்-முஹாஜிரோன், அல்லா, அல்லா பெயர், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதம், இந்திய விரோதி ஜிலானி, இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இந்துக்கள் கொல்லப்படுதல், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், கல் வீச்சு, கல்லடி ஜிஹாத், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காபிர், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, கிலானி, கிலாபத், ஜாகிர் நாயக், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி வெறியாட்டம், Uncategorized

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: