2003ல் ஜாகிர் நாயக்குடன் ஏற்பட்ட அனுபவம் – கைதேர்ந்த, மிக்க பயிற்சி பெற்ற, மிக-சரளமாக பேசும் வல்லமையுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதி என்பது தெரிந்தது!
2003ல் ஜாகிர் நாயக்குடன் ஏற்பட்ட அனுபவம் – கைதேர்ந்த, மிக்க பயிற்சி பெற்ற, மிக-சரளமாக பேசும் வல்லமையுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதி என்பது தெரிந்தது!
ஜாகிர் நாயக்குடன் என்னுடைய அனுபவம் (2003): “அமைதி விழா” என்ற போர்வையில், இவரது “பேசும் விழாக்கள்ளேற்பாடு செய்யப்பட்டன. 2003ல் சென்னையில், கிருஷ்ணா கார்டன் என்ற இடத்தில் (திருமங்கலம் செல்லும் சாலையில், பாலத்தைத் தாண்டியவுடன் இடது பக்கத்தில் இருந்த மைதானம்) நடந்த ஜாகிர் நாயக்கின் கூட்டத்தில் சில முஸ்லிம் நண்பர்கள் அழைப்பிற்கு இணங்க கலந்து கொண்டேன். அது ஒரு “ஏற்பாடு” செய்யப்பட்டக் கூட்டம் என்று அறிந்து கொண்டேன். தெரிந்தவர்கள் மூலம், அறிமுகப்படுத்தினால் மட்டுமே கலந்து கொள்ள முடியும். “யாஹோ குழு”வில் இதைப் பற்றி பதிவு செய்திருந்தேன்[1].
Thie following is appearing in Posting No. 15391.
But I could not get the 2003 postings in IC /HC[2]. But, I remember of giving details from History journals. VEDAPRAKASH. Dear friends, After attending Chennai meeting,as per the request of Immediately (in 2003), I posted in IC/HC warning about Cominmg to Mohammed’s references in Hindu scriptures Thus, the group started interpolated some Hindu In fact, they also manufactured books depicting Therefore, Hindus have to analyse carefully and remove VEDAPRAKASH> |
பெரிய கூடாரம், விளக்குகள், உள்ளேயே பார்க்க வசதியாக டிவிக்கள், ஆண்கள்-பெண்கள் தனித்தனியாக உட்கார்ந்து கொள்ள இருக்கைகள் என்று சகல வசதிகளோடு இருந்தது. பத்து-பதினைந்து கன்டைனர்களில் அவை அடங்கி விடும். எல்லா நாடுகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன. இத்தகைய கூட்டங்கள் ஏற்பாடு செய்யப் பட்டன. ஜாகிர் நாயக் ஆங்கிலத்தில் தான் பேசினார். வேதங்கள், உபநிஷத்துகள் முதலியவற்றில் குறிப்பிட்ட சுலோகங்களை நன்றாக மனப்பாடம் செய்து கொண்டு ஒப்பித்தார், அதற்கு விளக்கமும் அளித்தார். அவர் பேசும் விதத்திலேயே அது தெரிந்தது. பல ஆண்டுகளாக பயிற்சி செய்து, நன்றாக உழைத்து அத்தகைய திறமையைப் பெற்றிருந்தார். ஆங்கிலத்தில் மிகவும் சரளாமாக, எப்படி வேண்டுமானாலும், மாற்றி-மாற்றி பேசும் வல்லமை பெற்றிருந்தார். இந்துக்களில் இவ்வாறு திறமையாக பேசுபர் என்றால், அருண்ஷோரியை சொல்லலாம். இப்பொழுது அவர் கூட்டங்களில் பேசுவதை நிறுத்துவிட்டார் போலும்.
சங்கடமான கேள்விகள் கேட்டால் அழைப்பிதழ் / அனுமதி கிடைக்காது: கேள்வி-பதில் என்றபோது, நான் கேள்வி கேட்க யத்தனித்தபோது, அருகில் உட்காரவைத்தார்கள். ஆனால், ஒரு பேப்பரில் கேள்வியை எழுதி கொடுக்க சொன்னார்கள். கொடுத்தேன், ஆனால், அதற்கு பதில் சொல்லவில்லை. கேட்டதற்கு நேரம் இல்லை என்றார்கள். ஜாகிர் நாயக் அருகில் சென்று கேட்டபோது, இ-மெயிலில், கேள்வியை அனுப்புங்கள், பதிலைக் கொடுக்கிறேன் என்றார், ஆனால், பதில் வரவில்லை. பல “ரெமைன்டர்கள்” அனுப்பினேன், ஒன்றும் பிரயோஜனம் இல்லை. ஆகவே, அதுதான், அவரது பதில் சொல்லும் லட்சணம் என்று தீர்மானித்துக் கொண்டேன். அதறகுப் பிறகும், காமராஜர் அரங்கம், ஓ.எம்.ஆர் சாலை என்று கூட்டங்கள் நடந்தன. ஆனால், அழைப்பில்லை. அதற்குள் எவ்வளாவோ நடந்து விட்டன.
ஜாகிர் நாயக்கின் மற்ற கருத்துகள், மனோபாவம் முதலியன[3]: மற்ற கருத்துகளைக் கவனிக்கும் போது, இவர் ஒரு கடைந்தெடுத்த இஸ்லாமியவாதி என்பதனை அறிந்து கொள்ளல்லாம். பேசும் திறனை வளர்த்துக் கொண்டு, ஆங்கிலத்தில் உரையாடி வருவதால், அமெரிக்கா-ஐரோப்பா போன்ற நாடுகளில் உள்ள இளைஞர்களை ஈர்த்து வந்துள்ளது தெரிகிறது. ஆனால், இந்தியாவில் எடுபடவில்லை எனலாம்.
- இந்தியா ஷரியா சட்டத்தின் படி ஆட்சி நடத்த வேண்டும் என்கிறது ஜாகிர் நாயக்கின் கருத்தையும் மேலும் மதக் கொள்கைகளை மீறுவதால் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்ற ஜாகிர் நாயக்கின் கருத்தைவால் ஸ்டிரீட் ஜர்ணல் பத்திரிகையில் எழுத்தாளர் சதானந்த் துமே (Sadanand Dhume) விமர்சிக்கிறார்.
- மேலும் முஸ்லீம் அல்லாதவர்கள் வழிபாட்டுத் தலங்கள் கட்டக் கூடாது என்றும்ஆப்கானிஸ்தானில்பாமியன் புத்தர் சிலைகள் வெடிவைத்துத் தாக்கப்பட்டதையும் சாகீர் நாயக் நியாயப்படுத்துகிறார்.
- சாகீர் நாயக்கைஇங்கிலாந்து மற்றும்கனடா நாடுகள் தடை செய்துள்ளன. இவரது பேச்சுகள் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக அமைந்துள்ளதால் இங்கிலாந்து அரசு இவரைத் தடை செய்தது.
- தாருல் உலூம்எனும் இஸ்லாமிய அமைப்பு சாகிர் நாயக்கிற்கு ஃபத்வா விதித்துள்ளது.
- ஜாகிர் நாயக் ஒரு சர்ச்சைக்குரிய பேச்சாளர் என பேராசிரியர்டோர்கெல் ப்ரெக்கெல் (Torkel Brekke) குறிப்பிடுகிறார். மேலும் இந்திய உலமாக்களில் பலர் இவரை வெறுக்கின்றனர் எனக் குறிப்பிடுகிறார்.
- ஜாகிர் நாயக் முஸ்லீம்களை தவறாக வழிநடத்துகிறார், மேலும் உண்மையை இஸ்லாமிய ஞானிகளிடமிருந்து உணரவிடாமல் செய்கிறார் எனஇந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் சுன்னி பிரிவைச் சேர்ந்த முல்லாக்கள் கூறுகின்றனர்.
- அல் காயிதாஅமைப்பை ஜாகிர் நாயக் ஆதரிக்கிறார் என பாகிஸ்தானிய அரசியல் விமர்சகர் காலித் அஹமது (Khaled Ahmed) குற்றஞ்சாட்டுகிறார்.
- 2008 ஆம் ஆண்டுலக்னோவைச் சேர்ந்த இஸ்லாமியக் கல்வியாளர் ஷாகர் க்வாஸி அப்துல் இர்ஃபான் ஃபிராங்கி மகாலி (shahar qazi Mufti Abul Irfan Mian Firangi Mahali) ஜாகிர் நாயக் ஒசாமா பின் லாடனை ஆதரிக்கிறார் என்றும் மேலும் இவருடைய பேச்சுகள் இஸ்லாம் அல்ல என்றும் இவர் மீது ஃபத்வா விதித்தார்.
- லஷ்கர்-ஏ-தொய்பாஅமைப்பிடமிருந்து ஜாகிர் நாயக் பண உதவி பெற்றிருக்கிறார் என பத்திரிகையாளர் ‘ப்ரவீண் சாமி கூறுகிறார். மேலும் இவரது செய்திகள் இஸ்லாமியர்களை மூளைச்சலவை செய்து அவர்களை தீவிரவாதிகளாக்குகிறது என்றும் இந்திய ஜிகாதிகளை உருவாக்கும் உள்நோக்கம் கொண்டது என்றும் சொல்கிறார்.
© வேதபிரகாஷ்
09-07-2016
[1] https://groups.yahoo.com/neo/groups/hinducivilization/conversations/messages/19690
[2] “இந்தியன் சிவிலைசேஷன்” என்று நடத்தப்பட்ட குழு, ஸ்டீப் ஃபார்மர் போன்றவர்களால், இரண்டாக பிரிந்து, “ஹிந்து சிவிலைசேஷன்” மற்றும் “இன்டோ-யூரேஷியா” என்று செயல்பட்டு வருகிறது.
[3] விகிபீடியா கொடுக்கும் விவரங்கள் – எடுத்தாளப்பட்டுள்ளன.
Explore posts in the same categories: ஃபத்வா, ஃபிதாயீன், அடிப்படைவாதம், அமைதி, அல் - காய்தா, அல்-முஜாஹித்தீன், அல்லா, இந்தியா, இந்து-முஸ்லிம், இந்துக்கள், இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், இந்துக்கள் கொல்லப்படுதல், இந்துக்கள் சித்திரவதை, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாம், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசிஸ், ஒசாமா பின் லேடன், ஒசாமா பின்லேடன், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், குண்டு, குண்டு வெடிப்பது, குண்டுவெடிப்பு, சலாபிசம், சலாபிஸம், ஜமாத்-உத்-தாவா, ஜாகிர் நாயக், ஜிஹாதி அமெரிக்கர்கள், ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதித்துவம், ஜிஹாத், பீஸ் டிவி, Uncategorizedகுறிச்சொற்கள்: ஃபத்வா, அமைதி, இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கலவரம், காபிர், குண்டு வெடிப்பு, குரான், சுன்னி, செக்யூலரிஸம், ஜாகிர், ஜாகிர் நாயக், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், பரவும் தீவிரவாதம், பாகிஸ்தான், புனிதப்போர், முஜாஹித்தீன், முஸ்லீம்கள்
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்