ஹைதராபாத் மாட்யூலும், ஐஎஸ் தொடர்புகளும் – ரம்ஜான் நேரத்தில் தீவிரவாத வெளிப்பாடுகள்!
ஹைதராபாத் மாட்யூலும், ஐஎஸ் தொடர்புகளும் – ரம்ஜான் நேரத்தில் தீவிரவாத வெளிப்பாடுகள்!
என்ஐஏ சோதனையில் ஹைதராபாதில் தீவிரவாதிகள் பிடிபட்டனர்: மாதிரி தீவிரவாதி குழுமம் [module] என்று அமைக்கப்பட்டு, தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவில் ரகசியமாக செயல்பட்டு வருகின்றன. என்னத்தான் முஸ்லிம்கள் தங்களுக்கும், தீவிரவாதத்திற்கும் சம்பந்தமில்லை, இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கிறது என்றெல்லாம் வாத-விவாதங்கள் புரிந்தாலும் அத்தகைய காரியங்களை செய்யும் ஆட்கள் முஸ்லீம்களாகத்தான் இருக்கிறார்கள். இரண்டாவது முறையாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் பழைய ஹைதராபாத்தில் 28-06-2016 அன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு நடத்திய அதிரடி சோதனையில் 11 ஐஎஸ் தீவிரவாதிகள் பிடிபட்டனர்[1]. ஹைதராபாத் நகரின் மீர் சவுக், பவானி நகர், மொகுல்புரா, பர்காஸ் உள்ளிட்ட பல பகுதிகளில், தெலங்கானா மற்றும் ஹைதராபாத் போலிஸாருடன் என்ஐஏ அதிகாரிகள் கூட்டாக இணைந்து 30-06-2016 புதன்கிழமை அன்று காலையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்[2]. இதில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 11 பேர் கைது செய்யப் பட்டனர்[3].
ஐ.எஸ்சுடன் தொடர்புகள்: ஜனவரியில் இதே போன்ற நடவடிக்கையில் 25 பேர் பிடிபட்டனர். இந்திய முஜாஹித்தீன் [Indian Mujahideen (IM)] தீவிரவாத இயக்கத்திலிருந்து பிரிந்த அன்சர்-உல்-தவ்ஹீத் [Ansar-ul-Tawhid (AuT)] என்ற கூட்டத்தைச் சேர்ந்த இவர்கள், ஐஎஸ்சுடன் தொடர்புகள் வைத்துள்ளனர். ஐஎஸ்சுக்கு இந்த ஆட்கள் மிகவும் பாதுகாக்கப்படும் இணைதளம் மூலம் கடந்த மூன்று மாதங்களில் வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்[4]. இவர்களிடமிருந்து துப்பாக்கிகள், வெடிபொருட்கள், ரூ.15 லட்சம் ரொக்கம், 23 செல் போன்கள், 3 லேப்டாப்கள், போலி அடையாள ஆவணங்கள், அமிலங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன[5]. ஐந்து மாதங்களுக்கு முன்பு, ஹைதராபாத்தில் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இப்போது இந்த கைது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[6]. ஹைதராபாத் நகரில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் மேற்கொண்ட சதி முறியடிக்கப்பட்டது.
முன்னர் கண்காணீத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது: ஹைதராபாத் நகரின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வைப்பது உள்பட பல்வேறு வழிகளில் தாக்குதல் நடத்த ஐஎஸ் பயங்கரவாதிகள் சதி செய்துள்ளதாகவும், அதற்காக அந்நகரில் உள்ள இளைஞர்களை ரகசியமாகப் பயன்படுத்தி வருவதாகவும் உளவுத் தகவல் கிடைத்தது[7]. ஜூன் மாத ஆரம்பத்திலேயே அத்தகைய எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு, இலங்கையில் உள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை வைத்து ஆந்திராவில் பெரும் நாச வேலையில் ஈடுபடத் திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை எச்சரித்தது[8]. தற்போது இந்தத் தீவிரவாதிகள் ஐஎஸ்ஐயின் உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் ஐபி எச்சரித்தது. குறிப்பாக விசாகப்பட்டனத்தில் இந்தத் தாக்குதல் நடைபெறலாம் என்றும் ஐபி எச்சரித்தது. இதையடுத்து விசாகப்பட்டனத்தில் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டது. இலங்கையிலிருந்து ஊடுறுவி வரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று ஐபி கூறியது. இந்த விவகாரம் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது அரசின் உயர் அமைச்சர்கள், உயர் காவல்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். விசாகப்பட்டனத்தில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்ட அவர் கண்காணிப்பையும் தீவிரப்படுத்த உத்தரவிட்டார்[9]. 22-06-2016 அன்றே முதல் தகவல் அறிக்கையை பல சட்டங்களின் கீழுள்ள பிரிவுகளில் பதிவு செய்து, நடவடிக்கையை ஆரம்பித்தது[10].
ரம்ஜான் காலத்தில் தீவிரவாதம் ஏன்?: பொதுவாக, இந்தியாவில் பண்டிகைகள், விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் நேரங்களில் வதந்திகளைப் பரப்புதல், குழப்பம் உண்டாக்குதல், இணைதளம் மற்றும் செல்போன்களில் போலியான தயாரிக்கப்பட்ட புகைப்படங்கள்-வீடியோக்கள் போட்டு பரப்புதல், கலவரங்களை ஏற்படுத்துதல், போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ரம்ஜான் மாதத்தில், இத்தகைய கொலை-குண்டுவெடிப்பு முதலியவற்றால் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொன்றால் சொர்க்கம் கிடைக்கும் என்று மூளைசலவையும் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தான், இந்த ரம்ஜான் நேரத்தில் உலகம் முழுவதும் அத்தகைய குரூர குண்டுவெடிப்புகள் நடைப்பெற்று வருவதை கவனிக்கலாம். “ஓநாய் போன்ற தாக்குதல்” என்ற முறையை பயன்படுத்தி, கலவரங்கள், நாசவேலைகள் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது[11]. நகரத்தில் உள்ள எல்லா வழிபாட்டு ஸ்தலங்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடு செய்வதிலும் பிரச்சினைகள் உள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்[12]. அதாவது, ரம்ஜான் நேரத்தில், அத்தகைய முறைகளை முஸ்லிம்கள் விரும்பமாட்டார்கள் என்று அரசியல்வாதிகள் கருதுகிறார்கள். தங்களைக் கண்காணிக்கத்தான், பாதுகாப்பு என்றா போர்வையில் போலீஸாரை மசூதிகளுக்குள் நுழைய ஏற்பாடு செய்கின்றனர் என்று முஸ்லிம்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
© வேதபிரகாஷ்
01-07-2016
[1] தி.இந்து, 11 ஐஎஸ் தீவிரவாதிகள் ஹைதராபாத்தில் கைது, Published: June 30, 2016 08:12 ISTUpdated: June 30, 2016 09:07 IST.
[2] http://tamil.thehindu.com/india/11-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article8791075.ece
[3] புதியதலைமுறை.டிவி, ஹைதராபாத்தில் 11 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது, பதிவு செய்த நாள் : June 30, 2016 – 10:02 AM; மாற்றம் செய்த நாள் : June 30, 2016 – 10:05 AM.
[4] All the recruitments were done through the Internet and secure web-based applications. The accused were under surveillance for the past three months.
[5] http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/india/7/35539/11-isis-terrorist-arrested-in-hyderabad
[6] தமிழ்.ஒன்.இந்தியா, ஹைதராபாத்தில் என்.ஐ.ஏ அதிரடி ரெய்டு.. அடுத்தடுத்து 11 ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் 11 பேர் கைது, By: Veera Kumar, Published: Wednesday, June 29, 2016, 10:28 [IST].
[7] தினமணி, ஹைதராபாதில் தாக்குதல் நடத்த சதி:ஐ.எஸ். தொடர்புடைய 11 இளைஞர்கள் கைது, First Published : 30 June 2016 04:06 AM IST.
[8] தமிழ்.ஒன்.இந்தியா, ஆந்திராவில் நாச வேலையில் ஈடுபடத் தயாராகும் லஷ்கர் தீவிரவாதிகள்… எச்சரிக்கும் ஐபி, By: Sutha, Published: Thursday, June 2, 2016, 11:44 [IST].
[9] http://tamil.oneindia.com/news/india/isi-s-sri-lanka-module-waiting-strike-andhra-pradesh-intelligence-bureau-255073.html
[10] A First Information Report (FIR) was registered by the NIA on June 22 under various sections of Indian Penal Code, the Explosive Substances Act and the Unlawful Activities Prevention Act (UAPA). The FIR, available with The Hindu, says: “The accused and their accomplices from Hyderabad and other parts of the country have entered into a criminal conspiracy to wage war against government of India by collecting weapons and explosive materials to target prominent places, public places, religious places, malls, markets, public properties and in particular sensitive government buildings in Hyderabad and other places.” It also read: “It is also reliably learnt that they have acquired weapons and explosive materials to carry out violent terrorist attacks and related subversive activities. The members of this group are in constant touch with each other on the Internet and are using various other communication platforms within India and have linkages abroad. Information has also been received to the effect that the group members are in communication with a terrorist organisation namely IS, which is a proscribed organisation.”
[11] It was clear that Syria-based IS handlers were luring the 11 suspects to join the group. Many individuals owing allegiance to IS or supporting their fight had carried out lone wolf attacks — springing up at public places and shooting at people with firearms — in different parts of the world recently.
[12] “We cannot poke them continuously to improve their alertness, as they accuse us of harassment,” a Task Force official says.
Explore posts in the same categories: அன்சர்-உல்-தவ்ஹீத், அமைதி, அமைதி என்றால் இஸ்லாமா, அல்லா, அழிப்பு, அழிவு, இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இப்தார், இராக், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசிஸ், ஐதராபாத், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், கைது, கைபேசி, தீவிரவாத திட்டம், மாட்டிறைச்சி, மாட்யூல், Uncategorizedகுறிச்சொற்கள்: அன்சர்-உல்-தவ்ஹீத், அவமதிக்கும் இஸ்லாம், இஸ்லாமிய தீவிரவாதம், கலவரம், காஷ்மீர், குண்டு வெடிப்பு, கொலை, ஜிஹாத், தீவிரவாத திட்டம், மாட்டிறைச்சி, மாட்யூல், முகமதியர், முஸ்லிம்கள், முஸ்லீம்கள், ஷியா, ஹைதராபாத்
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்