ஒரு பெண்ணை உள்ளூர் பையன்கள் கலாட்டா செய்துள்ளனர் – ஆனால், ராணுவ வீரன் பாலியல் தொந்தரவு செய்தான் என்று வதந்தி உண்டாக்கி, கல்லடி கலாட்டா, கலவரம், கண்ணீர் குண்டு, துப்பாக்கி சூடு இத்யாதிகள்!

ஒரு பெண்ணை உள்ளூர் பையன்கள் கலாட்டா செய்துள்ளனர் – ஆனால், ராணுவ வீரன் பாலியல் தொந்தரவு செய்தான் என்று வதந்தி உண்டாக்கி, கல்லடி கலாட்டா, கலவரம், கண்ணீர் குண்டு, துப்பாக்கி சூடு இத்யாதிகள்!

Handwara, Kupwara, JK girl said no molestation 12-04-2016.

தன் பெண்ணை காணவில்லை என்று மனு கொடுத்த தாய்: 16-04-2016 அன்று அப்பெண்ணின் தாய் நீதிமன்றத்தில் தன் பெண்ணை விடிவிக்க வேண்டும் என்று மனு போட்டார். இதுவும் திட்டமிய்ட்ட செயல் போன்றே தெரிகிறது. காஷ்மீரில் அத்தகைய நிலை ஏற்படாமல் ஒவ்வொரு தாயும், தந்தையும் இருந்திருக்க வேண்டும். ஆனால், நடைபெற்று வரும் கலவரங்கள், கொலைகள், முதலியவற்றைப் பார்க்கும் போது, அவர்களும் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பிரிவினைவாதிகள், தேச-விரோதிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், ஜிஹாதிகள் போன்றோருக்கு ஆதரவு கொடுப்பது தெரிந்த விசயமாகி விட்டது. எனவே, தாய் புகார்-மனு கொடுத்திருக்கிறாள். ஆனால், அன்றே, அப்பெண் மாஜிஸ்ட்ரேடிட் முன்னர் நடந்ததை கூறினாள், வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது. இதனால் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் உண்மையினை வெளியிடாமல், சில தமிழ் ஊடகங்கள், “காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் குப்வாரா மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் ராணுவ வீரரால் பாலியல் தொல்லை செய்யப்பட்டார்[1]. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று கூடி அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை கலைப்பதற்காக ராணுவம் குவிக்கப்பட்டது”, போன்ற செய்திகளை வெளியிட்டுள்ளன[2].

Army protecting school girls - but accused ofஉண்மை தெரிந்த பிறகும், கலவரம் தொடர்தல்: இந்த நிலையில், அங்கு போராட்டகாரர்களை அடக்க நடைபெற்ற துப்பாக்கி சூட்டில், மேலும் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. குப்வாரா மாவட்டம் டிரெக்காம் பகுதியில் நடைபெற்ற கலவரத்தில் 2 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஸ்ரீநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர் போராட்டம் காரணமாக வதந்தி பரவுவதை தவிர்க்க செல்போன், இணையதள சேவை தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்ரீநகரில் இயல்பு நிலை திரும்பியுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்[3]. இதனால் சிலபகுதிகளில் விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இயல்பான வாகன போக்குவரத்தும் இருந்தது. பிடிபி-பிஜேபி பலவித சித்தாந்தப் பிரச்சினைகளுக்குப் பிறகு, மறுபடியும் கூட்டணி ஆட்சியாக இப்பொழுது தான் மறுபடியும் பதவி ஏற்றுக் கொண்டுள்ளது. இதனை விரும்பாத பிரிவினைவாதிகள், தேச-விரோதிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், ஜிஹாதிகள் இத்தகைய கலவரங்களை தோற்றுவித்துப் பிரச்சினை ஏற்படுத்த முயல்கிறார்கள் என்று தெரிகிறது.

Police protecting JK girlsஇந்திய ஊடகங்களில் பாரபட்சமான செய்திகள் தயாரிப்பு, பிரச்சாரம் மற்றும் வெளியீடு: இந்திய-விரோத ஊடகங்கள் பல செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை எப்பொழுதுமே, இந்திய ராணுவம், பாதுகாப்புப் படை, போலீஸ் என்று அனைத்து வீரர்களையும் கேவலமாக, மோசமாக மற்றும் மனித உரிமைகளை மீறுபவர்களாத்தான் சித்தரித்து வருகின்றன. இப்பொழுது கூட “அப்பெண்ணை தூஷிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று தான், தலைப்பிட்டு எழுதி வருகின்றன[4].  . அதாவது, அவர்கள் அதைத்தான் விரும்புகிறார்கள் போலும். அப்பெண்ணின் தாய், தனது மகள் வற்புருத்தப்பட்டுத்தான் வாக்குமூலம் வாங்கப்பட்டிருக்கிறது என்று ஒரு வீடியோவைப் பரப்பி வருகின்றனர்[5]. இவ்வாறு தயாரிக்கப்படும் பாரபட்சம் மிக்க, தவறான, பிரச்சார ரீதியில் உள்ள செய்திகள் தாம், அந்நிய ஊடகங்களுக்கும் தீனியாகின்றன்ன[6]. மனித உரிமைகள் போர்வையில், அவை, தங்கள் “அறிக்கைகள்” என்று கதை விட ஆரம்பித்து விடுகின்றன. “தும்பை விட்டு வாலைப் பிடிக்கும்” ரீதியில், காரணம் என்ன என்பதனை விட்டு, விளைவுகள் விமர்சிக்கப் படுகின்றன.

Kupwara, Handwara JKகலவரத்திற்கு காரணமான பையன்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது அல்லது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை: உண்மையில் அப்பெண்ணை இம்சித்த பையன்களைக் கண்டிப்பதாக இல்லை. மேலும் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது அல்லது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று யாரும் கேட்பதா இல்லை. இங்கு, அப்பெண்ணை சதாய்த்த, அடித்த, கலாட்டா செய்த மாணவர்கள், பையன்கள் என்னவானார்கள், அவர்களை ஏன் போலீஸார் விசாரிக்கவில்லை, அவர்களால் தானே, இப்பிரச்சினை உருவாகி 5-6 உயிர்கள் போகக் காரணமாக இருந்திருக்கின்றனர் என்பதனை யாரும் கவனித்து விவாதிப்பதாகத் தெரியவில்லை. ஹுரியத் போன்ற அமைப்புகளின் தூண்டுதல்களின் மேல், அவர்கள் வேலை செய்வதானால், இவர்கள் மறைப்பார்கள் என்பதும் தெரிந்த விசயமே.

Kashmir school girls innocent looking and living isolatedஇந்திய ராணுவம், பாதுகாப்புப் படை, போலீஸ் முதலிய துறையினர், அவரது குடும்பத்தினடின் உரிமைகள் பேசப்படுவதில்லை: இந்திய ராணுவம், பாதுகாப்புப் படை, போலீஸ் முதலிய துறையினர் தங்களது உயிர்களை தியாகம் செய்து வேலை செய்து வருகின்றனர். தினமும் ஆஷ்மீர் மக்களின் அன்றாட வாழ்க்கை நடப்பதற்கு அவர்கள் தெருக்களில் இருந்து கொண்டு பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். மாணவ-மாணவியர் பள்ளி-கல்லூரிகள் சென்றுவர பாதுகாப்பு கொடுக்கின்றனர். அவர்கள் தேச-விரோதிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், ஜிஹாதிகள் முதலியோரால் கடந்த 60 ஆண்டுகளாக எப்படி குரூரமாகக் கொலைசெய்யப் பட்டு வருகின்றனர், அவர்களது குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன, அவர்களது மனித உரிமைகள் என்ன, என்பவற்றைப் பற்றியெல்லாம் விவாதிப்பதில்லை. காஷ்மீர் பெண்கள் ராணுவம் மற்ற பாதுகாப்புப் படையினரால் பாலியல் ரீதியில் தொல்லைக்குள்ளாகிறார்கள் என்று தான் எழுதப்பட்டு வருகின்றன[7]. நன்றி மறந்து அவர்கள் மீது அவதூறி ஏற்றி பேசுகிறார்கள், பிரச்சாரம் செய்கின்றனர். இறந்த பிறகு, உடல் இந்தியாவின் அவரது சொந்த ஊருக்கு அனுப்பப்படும் போது, ஏதோ செய்தியைப் போட்டு விட்டு, டிவி-செனல்களில் காட்டிவிட்டு, சமூக வலைத்தளங்களில் “வாழ்க” என்று பதிவிட்டு மறந்து விடுகின்றனர். ஆனால், அக்குடும்பத்தினரைப் பற்றி யார் கவலைப்படுவது? தவிர இந்துபெண்களின் கதி அவர்களுக்கு ஞாபகத்தில் இருக்கிறதா?

Kashmir school girls innocent lookingஅமெரிக்காவின் இந்தியாவின் மீதான அறிக்கை: போலீஸார் மற்றும் பாதுகாப்பு படையினரின் அத்துமீறல்தான் இந்தியாவின் மிகப் பெரிய மனித உரிமை பிரச்னை என்று அமெரிக்க ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு பல்வேறு நாடுகளில் நிலவிய மனித உரிமை பிரச்சனைகள் குறித்த ஆய்வு அறிக்கையினை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி நேற்று வெளியிட்டார். கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். இதற்கு காரணாமானவர்கள் மீது நவடவடிக்கை எடுக்க குஜராத் அரசு தவறிவிட்டது என்று மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர். சிறைச்சாலையில் ஏற்படும் மரணங்கள், சித்திரவதைகள், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட போலீஸார் மற்றும் பாதுகாப்பு படையினரால் செயயப்படும் அத்துமீறல்கள்தான் இந்தியாவின் மிகப்பெரிய மனித உரிமை மீறல் பிரச்னை. மேலும், ஊழல், பெண்கள், குழந்தைகள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்ற வழக்கு விசாரணையில் போதிய கவனம் செலுத்தாமல் இருப்பதும் இந்தப் பிரச்னைகளில் அடங்கும். ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதிகள், சட்டவிரோதமாக ஊடுருவோர், பயங்கரவாதிகள் ஆகியோர் பிரச்னையாக உள்ளனர். வடகிழக்கு மாநிலங்களிலும், மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு படையினர், போலீஸார், அரசு அதிகாரிகள் பொதுமக்கள் ஆகியோர் கொல்லப்படுவது இன்னொரு முக்கிய மனித உரிமை மீறல் பிரச்னையாகும் என்று அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது[8].

© வேதபிரகாஷ்

19-04-2016

[1] வெப்துனியா, இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ வீரர்: கிராம மக்கள் போராட்டம், துப்பாக்கி சூடு, Last Modified: புதன், 13 ஏப்ரல் 2016 (15:55 IST).

[2] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/young-woman-sexual-harassment-soldier-protest-firing-116041300042_1.html

[3] தினகரன், காஷ்மீரில் இயல்புநிலை திரும்பியது, திங்கட்கிழமை.18, 2016:00.20.55.

[4] http://www.risingkashmir.com/news/stop-maligning-handwara-girl-new/

[5] https://youtu.be/gx2KdBpVc70?list=PLBakoVCXUgX8B6aJb777TtHag_f37VHeT&t=2

[6] தினமணி, காவல்துறையினரின் அத்துமீறலே இந்தியாவின் முக்கிய மனித உரிமை பிரச்னை: அமெரிக்க ஆய்வறிக்கை, By DN, வாஷிங்டன், First Published : 15 April 2016 11:30 AM IST

[7] http://kashmirreader.com/2016/04/harassment-molestation-of-women-by-govt-forces-rife/

[8]http://www.dinamani.com/india/2016/04/15/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1/article3381650.ece

Explore posts in the same categories: உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், ஊரடங்கு உத்தரவு, ஊர்வலம், கலவரங்கள், கலவரம், கலாட்டா, கல் வீச்சு, கல்லடி ஜிஹாத், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காஃபிர், காஷ்மீர், சுதந்திரம், செல், செல்போன், ஜிஹாதித்துவம், ஜிஹாத், Uncategorized

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: