ஒரு பெண்ணை உள்ளூர் பையன்கள் கலாட்டா செய்துள்ளனர் – ஆனால், ராணுவ வீரன் பாலியல் தொந்தரவு செய்தான் என்று வதந்தி உண்டாக்கி, கலவரத்தை ஏற்படுத்தியுள்ள பிரிவினைவாதிகள்!

ஒரு பெண்ணை உள்ளூர் பையன்கள் கலாட்டா செய்துள்ளனர் – ஆனால், ராணுவ வீரன் பாலியல் தொந்தரவு செய்தான் என்று வதந்தி உண்டாக்கி, கலவரத்தை ஏற்படுத்தியுள்ள பிரிவினைவாதிகள்!

Kupwaraa, Handwara JK map

வீடியோ மூலம் வதந்தி, கலவரம் ஆரம்பித்து வைக்கும் போக்கு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், 12-04-2016 செவ்வாய் கிழமை அன்று, இளம் பெண் ஒருவரிடம் ராணுவத்தினர் பாலியல் வன்முறையில் ஈடுபட முயற்சி செய்ததாக யாரோ சிலர் வேண்டும் என்றே வதந்தியை கிளப்பிவிட்டனர்[1]. ஹந்த்வாரா நகரில் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மாணவிக்கு/ சிறுமிக்கு ஒருவர் ராணுவ வீரரால் பாலியல் சில்மிஷம் செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதற்குள் ஒரு இளம்பெண் கற்பழிக்க பட்டாள் என்பது போன்ற வதந்திகள் வாட்ஸ்-அப், பேஸ்புக் முதலியவற்றில் மொபைபோன்கள் மூலம் பரப்பி விடப்பட்டன. நம்பிய இளைஞர்கள் இதனை கண்டித்து பாதுகாப்பு படை வீரர்கள் மீது கல்வீச்சீல் ஈடுபட்டனர். “கல்லடி கலாட்டா” என்பது கலவரத்திற்கு ஆரம்பம் என்பது அறிந்ததே. சிறுவர்கள்-பெண்களை முன் வைத்து, பிரிவினைவாதிகள் பின்னிருந்து செய்யும் கலவரம் ஆகும். பிறகு கண்டித்து பல்வேறு நகரங்களில் தொடர் போராட்டம் நடைபெற்றது[2].

Scene after massive stone-pelting in Handwara on Tuesday 1204-2016- Firdous Hassan-GK

வழக்கம் போல பிண ஊர்வலத்தை வைத்து கலவரத்தைப் பெரிதாக்கியது: ஆனால், இதற்கு பிரிவினைவாதிகளின் சதிதிட்டம் இருப்பது ராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குள் கலவரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அன்றே துப்பாக்கி சூட்டில் ராஜா பேகம் என்ற பெண் காயமடைந்தாள். 13-04-2016 புதன் கிழமை அன்று, மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டாலும், பலனின்று இறந்ததும், அவளது பிணம் லங்கேட் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டதும், கலவரம் ஆரம்பித்தது. இவ்வாறு யாதாவது ஒரு அப்பாவி இறப்பது, அப்பிண ஊர்வலத்தை சாக்காக வைத்துக் கொண்டு, மறுபடியும் இன்னொரு கலவரத்தை ஏற்படுத்துவது, மனித உரிமைகள் மீறல் என்ற வாதங்களை வைப்பது, உடனே அவற்றை ஊடகங்கள் பெரிதாக்கி, செய்திகளை போடுவது, பரப்புவது என்பனவெல்லாம் வாடிக்கையாகி விட்டன.

18_Monday_2016_Police acts against the members of Tehreek-e-Hurriyat who were taking out a protest march against the killing of four persons in Handwaraபிரிவினைவாத கோஷங்கள் எழுப்புவது, போலீஸார்ராணுவ வீரர்களைத் தாக்குவது முதலியன: ஹந்த்வாராவுக்கு அருகே உள்ள டிரக்மல்லா பகுதியில் 13-04-2016 அன்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில், சுதந்திரத்துக்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பப்பட்டன, என்று ஊடகங்கள் செய்திகளைப் போட்டாலும், பிரிவினைவாத-தேசவிரோத கோஷங்கள் என்று குறிப்பிடுவதை மறைக்கும் போக்கை கவனிக்க வேண்டும். இதைத்தொடர்ந்து மாநில போலீசாரும், பாதுகாப்பு படையினரும் சேர்ந்து போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். இதில் பலன் எதுவும் ஏற்படாததால், கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. இப்படி வழக்கமாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை, நல்லெண்ணம் படைத்த காஷ்மீர் அறிவிஜீவுகள் யாரும் கண்டிப்பதாகவோ, தடுப்பதாகவோ தெரியவில்லை. கலவரம் ஏற்பட வேண்டும், அதில் யாராவது சாக வேண்டும், அதை வைத்து மேலும் கலவரத்தை பெரிதாக்க வேண்டும் என்ற போக்கு சகஜமாகவே கடந்த 35 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இதில் ஒரு குண்டு ஜெகாங்கிர் அகமது என்ற வாலிபரின் தலையில் பாய்ந்தது. இதில் காயமடைந்த அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே ராணுவத்தை கண்டித்த ஹந்த்வாரா, குப்வாரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்தது. இதனால் பதற்றத்தை தணிக்க பொதுமக்கள் பிரதிநிதிகளுடன் ராணுவம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. தொடர்ந்து அங்கு பதட்டமான நிலையே நீடித்து வருகிறது[3].

Activists from the Muslim Khawateen Markaz -MKM-take part in a protest in Srinagar over the killing of youth in Handwara-AFP Photoமொபைல் இன்டர்நெட் சேவை ரத்து: இப்பொழுதெல்லாம், இப்பிரிவினைவாத-தேசவிரோத செயல்களுக்கு பலரை வேலைக்கு அமர்த்தி இன்டெர்நெட் மூலமும் பிரச்சாரம் நடந்து வருகிறது. அங்கங்கு எடுத்த புகைப்படங்கள், விடியோக்கள் முதலியவற்றை கலந்து, தூண்டிவிடும் பேச்சுகள் முதலியவற்றைச் சேர்ந்து பரப்பி விடுகின்றனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் சமூக விரோத சக்திகளால் வதந்திகள் பரப்பி விடப்படுவதை தடுக்க மொபைல் இன்டர்நெட் சேவை தடை செய்யப்பட்டு உள்ளது. மொபைல் இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக சேவை நிறுவனங்கள் எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆனால் சமூக விரோத சக்திகளால் வதந்திகள் பரப்பி விடப்படுவதை தடுக்க சேவை நிறுத்தப்பட்டு உள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குப்வாரா, பாராமுல்லா, பாந்திபோரா, கந்தர்பால் ஆகிய மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை தடை செய்யப்பட்டு உள்ளது[4]. ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீர் மக்களும் இன்டர்நெட் சேவையை அணுக முடியவில்லை என்று தெரிவித்து உள்ளனர். அங்கு நிலை சீரடைந்த பின்னர் சேவை வழங்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Army attacked by the JK youth 12-04-2016கலவரம் பெரிதாகி, துப்பாக்கி சூட்டில் ஐந்து பேர் இறத்தல்: அங்கு கலவரம் வெடிக்க, இன்று ஸ்ரீநகரில் முழு அடைப்புக்கு பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்தனர்[5]. இது வெறும் வதந்தி தான் உண்மை அல்ல என்பதை உணராத கந்தர்பால் மாவட்ட மக்கள் மற்றும் போராட்டகாரர்கள் சிலர் ராணுவத்தினரை தாக்க முயன்றனர்[6]. அப்போது ராணுவத்தினருக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த வன்முறையில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர்  சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை கண்டித்து காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். சில இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். இதனால் காஷ்மீர் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது, கூடவே முழு அடைப்புப் போராட்டமும் நடைபெற்று வருகிறது.

Handwara, Kupwara, JK girl stated no molestation 12-04-2016.முதலமைச்சர், துணைமுதலமைச்சர், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து ஆறுதல் கூறியது: துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அம்மாநில முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி மற்றும் துணை முதல்வர் நிர்மல் குமார் சிங் சந்தித்து பேசினர். ராணுவத்தினர் எந்த காரணத்திற்காக இத்தகைய காரியங்களில் ஈடுபடுவதை ஒப்புக்கொள்ள முடியாது என்பதனைதான் ராணுவ அமைச்சரிடம் கூறியுள்ளதாக தெரிவித்தார்[7]. வன்முறையை ஒருபோதும் ஏற்றுகொள்ளமுடியாது என்று அப்போது அவர் கூறினார்[8]. மேலும் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் மாகம், லங்காடே, ஹண்ட்வாரா, குப்வாரா உள்ளிட்ட இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கலவரம் காரணமாக ஸ்ரீ நகரில் கூடுதல் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்[9]. ராணுவ வீரரின் தவறு நிரூபிக்கப்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[10].

Handwara, Kupwara, JK girl viedo turned riot 12-04-2016.பாத்ரூம் சென்ற பெண்ணை கலாட்டா செய்து பொய் செய்தியை பரப்பிய விதம்: அதன் பிறகு சம்பந்தபட்ட பெண் கூறுகையில், தன்னை யாரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை என விளக்கம் கொடுத்தார்[11]. உண்மையில் அவள் தன் தோழியுடன் பொதுக்கழிப்பறை / பாத்ரூம் சென்று வரும் போது, சில இளைஞர்கள் அவளிடம் கலாட்டா செய்துள்ளனர். பள்ளி சீறுடை அணிந்த ஒருவன் அவளது பையினைப் பிடுங்கிக் கொண்டு, “ராணுவ வீரருடன் உனக்கென்ன பேச்சு, காஷ்மீரில் என்ன பையன்களா இல்லை”, [அதாவது எங்களை விடுத்து ஏன் மற்றவர்களிடம் போலீஸார்-ராணுவத்திடம் செல்கிறாய்] என்று நக்கலாக பேசி, கன்னத்தில் அறைந்துள்ளனர். ஹிலால் என்ற பையன் “நீ அங்கு என்ன செய்து கொண்டிருந்தாய்?…………………..” [தான் யாருடனோ உறவு கொண்டிருப்பதைப் போன்ற தொணியில்] பேசினான்[12]. அவர் என்ன சொல்ல வருகிறார் என நான் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தேன். இந்நிலையில் பல மாணவர்கள் அங்கு கூடினர். அப்போது அருகில் போலீஸ் காவலர் ஒருவர் நின்றிருந்தார். அவரை சுட்டிக்காட்டி புத்தகப் பையை தராவிடில் அவருடன் நான் காவல் நிலையம் செல்வேன் என்றேன். உடனே அந்த மாணவர் எனது பையை தராமல் என்னை கெட்ட வார்த்தைகளால் பேசினார். இதையடுத்து பிற மாணவர்களும் பிரச்சினை செய்யத் தொடங்கினர். அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு சதிச் செயலில் ஈடுபட்டதாக கருதுகிறேன்” என்றார்[13]. உண்மையில் அங்கு ராணுவத்தினர் யாரும் இல்லை என்று விளக்கினாள்[14]. ஆனால், ஒருவேளை, இதனை வேறு கோணத்தில் வீடியோ எடுத்து, அதற்கு வசனத்தையும் சேர்த்து வாட்ஸ்-அப்பில் பரப்பியிருக்கலாம்.

© வேதபிரகாஷ்

19-04-2016

[1] வெப்துனியா, ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மோதல் வெடித்தது, திங்கள், 18 ஏப்ரல் 2016 (04:51 IST)

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=210714

[3] http://www.dailythanthi.com/News/India/2016/04/14112558/Mobile-internet-services-suspended-in-Kashmir.vpf

[4] தினத்தந்தி, காஷ்மீரில் மொபைல் இன்டர்நெட் சேவை தடை செய்யப்பட்டது, மாற்றம் செய்த நாள்: வியாழன், ஏப்ரல் 14,2016, 11:25 AM IST; பதிவு செய்த நாள்: வியாழன் , ஏப்ரல் 14,2016, 11:25 AM IST

[5] http://www.4tamilmedia.com/newses/india/36206-2016-04-13-06-18-32

[6] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/jammu-kashmir-girl-denies-molestation-by-army-soldier-116041800005_1.html

[7] http://www.thehindu.com/todays-paper/more-troops-sent-to-kashmir-valley/article8484421.ece

[8] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=210593

[9] தினகரன், காஷ்மீரில் நீடிக்கிறது வன்முறை: பதட்டம் நீடிப்பதால் ராணுவம் குவிப்பு, ஏப்ரல்.17, 2016.09.09.51.

[10] தமிழ்மீடியா, காஷ்மீரில் ராணுவத்துக்கு எதிராக பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு, WEDNESDAY, 13 APRIL 2016 08:18.

[11] http://www.indiatvnews.com/news/india-no-molestation-girl-clarifies-after-2-protesters-killed-seeking-arrest-of-army-jawan-323730

[12] தமிழ்.தி.இந்து, உள்ளூர் இளைஞர்கள்தான் தொந்தரவு செய்தனர்: ராணுவ வீரர் பாலியல் தொல்லை தரவில்லைகாஷ்மீர் பள்ளி மாணவி விளக்கம், Published: April 14, 2016 10:07 ISTUpdated: April 14, 2016 10:08 IST.

[13]http://tamil.thehindu.com/india/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article8475117.ece

[14] “I went to the (public) washroom and handed my bag to a friend. When I came back, a Kashmiri student heckled me and snatched my bag. The boy in school uniform slapped me and asked ‘if there were no boys in the valley’ (angrily insinuating that the girl was in a relationship with a soldier). I was shocked and confused about what he had said. Suddenly, several boys gathered. The boy asked me to go to the police station with him. There was a police uncle nearby. I told the boy to return my bag so that I could go to police station with the cop. He said he would not return my bag and started abusing me.” There was no soldier there (near or in the washroom). I saw Hilal (an acquaintance). He slapped me and asked me what I was doing there. I asked him how he too could accuse me of any such thing (allegation of an illicit relationship) knowing me and our family. He too started abusing. It seemed that they had conspired in advance. The boy instigated all other boys too to create trouble,” the girls says in the video.

http://timesofindia.indiatimes.com/india/JK-firing-Handwara-girl-says-no-soldier-molested-her-accuses-local-youth-of-harassment/articleshow/51808725.cms

Explore posts in the same categories: அடி உதை, அப்சல் குரு, ஆர்பாட்டம், இந்தியா, இஸ்லாம், உடைப்பு, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, ஊர்வலம், எச்சரிக்கை, எதிர்ப்பு, கலவரங்கள், கலவரம், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, கொடி எரிப்பு, சுதந்திரம், Uncategorized

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: