“இறைதூதர் கருணாநிதி” என்ற திராவிட மேடை பேச்சும், அடிப்படைவாதப் பிரச்சினையும், தீவிரவாத பின்னணியும்!

“இறைதூதர் கருணாநிதி” என்ற திராவிட மேடை பேச்சும், அடிப்படைவாதப் பிரச்சினையும், தீவிரவாத பின்னணியும்!

இறைதூதர் கருணநிதி

எங்கள் இனத்தைக் காப்பாற்ற வந்த தூதர் என்று எஸ்.டி.பி.., மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் சேர்ந்து வந்திருருக்கிறார்கள்: மார்ச் 28ம் தேதி 2016 சேலம் கோட்டை மைதாணத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் தீப்பொரி ஆறுமுகம், நாகை நாகராஜன் முதலியோர் பேசினர். தீப்பொரி ஆறுமுகம் 1960களில் பேசும் அலாதியே தனிதான். மெட்ராஸ் பாஷை, கெட்ட வார்த்தை முதலியவை சரளமாக வரும். நாகை நாகராஜன் பேசும் போது, முஸ்லிம் கட்சிகள் எல்லாமே ஒட்டு மொத்தமாக கலைஞரிடம் கூட்டு சேர்ந்துள்ளன, என்று விவரிக்க ஆரம்பித்தார். ராஜ் தொலைக்காட்சி அகடவிகடம் பேச்சரங்க நிகழ்ச்சியின் நடுவர் கலைமாமணி கவிஞர் நாகை நாகராஜன், “இந்தத் தேர்தலில் தான் சிறுபான்மை இனத்திலே மிகப்பெரிய இனமான இஸ்லாமிய இனத்தின் அத்தனை அமைப்புகளும் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியைப் பார்த்துநீங்கள் தான் நபிகள் நாயகத்திற்குப் பிறகு எங்கள் இனத்தைக் காப்பாற்ற வந்த தூதர் என்று எஸ்.டி.பி.., மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் சேர்ந்து வந்திருருக்கிறார்கள்,” என்று பேசியுள்ளார்[1]. இந்த வீடியோவிலும் அப்பேச்சைக் கேட்கலாம்[2]. திமுகவிடம் கூட்டு வைத்துக் கொண்டு, கெஞ்சி-கூத்தாடி அதிகமான சீட்டுகளை வாங்கிக் கொண்டுள்ளன முஸ்லிம்களின் பிளவுபட்ட கட்சிகள். ஒருவேளை வெளியில் சண்டைப் போட்டுக் கொள்வது போன்று நாடகம் ஆடி, இவ்வாறு அரசியல் செய்கின்றனரா என்று “செக்யூலரிஸ்டுகளுக்கு” தோன்றுகிறது.

நாகை நாகராஜன், கருணாநிதி, முஸ்லிம் கட்சிகள் கூட்டுமனித நேயக்கட்சி அறிவித்த கண்டனம்: கடந்த மார்ச் 28ம் தேதி 2016 சேலம் கோட்டை மைதாணத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் திமுக நூல் வெளியீட்டுக் குழு உறுப்பினர் நாகை நாகராஜன் பேசும் போது நபிகள் நாயகத்திற்கு பிறகு முஸ்லிம் இனத்தை பாதுகாக்க வந்த இறைதூதர் தலைவர் கருணாநிதி என்று கூறியதாக பத்திரிக்கையில் செய்தி வந்தது[3]. சமூக வலைதளங்களிலும் இச்செய்தி வேகமாக பரவியது. நபிகள் நாயகத்திற்கு பிறகு இறைதூதர் வரமுடியாது என்பதில் உறுதியான கொள்கை உடையவர்கள் முஸ்லிம்கள் . எனவே நாகை நாகராஜனின் பேச்சை பற்றி செவியுற்ற அனைத்து முஸ்லிம்களுமே வேதனை அடைந்துள்ளனர். எனவே இது தவிர்க்க பட வேண்டும், கண்டிக்க பட வேண்டும். தனது கருத்துக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று உடனடியாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேர, ஜவாஹிருல்லாஹ் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் மூலமாக திமுக தலைமைக்கு செய்தியை புகராக கொண்டு சென்றார். மேலும் வாழும் மனிதர்களை புகழ வேண்டும் என்பதற்காக மத உணர்வுகளை புண்படுத்தும் வார்த்தைகளை யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும் அரசியல் ரீதியான அணுகுமுறைகளுக்காக எந்த நிலையிலும் அடிப்படை கொள்கைகளை விட்டுத் தர மாட்டோம் என்பதையும் தெளிவு படுத்தியுள்ளோம். திமுக தலைமையையும் நேரில் சந்தித்து இது பற்றி புகார் அளிக்க உள்ளோம். எனவே யாரும் பதட்டம் அடையவேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். என்று மனித நேயக்கட்சி தலைமையகம் அறிவித்தது[4].

கருணாநிதி இறைதூதர் - தமிழ்நாடு இமாம் கவுன்சில் எதிர்ப்பு - -7-04-2016எவரையும் எங்கள் மாநபியோடு ஒப்பிட்டு பேசுவதை ஒருபொழுதும் அனுமதிக்க முடியாது. – ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ்நாடு.![5]: ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில தலைவர் மௌலவி ஆபிருத்தீன் மன்பஈ ஹலரத்அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை “சேலத்தில் நடந்த கூட்டத்தில் திமுக பேச்சாளர் நாகை நாகராஜன் அவர்கள் பேசும் போது முஸ்லிம்களின் கொள்கையோடு மோதக்கூடிய பேச்சை வரம்புமீறி பேசியுள்ளார் இந்த பேச்சு வன்மையாக கண்டிக்க தகுந்தது மிகவும் கண்டனத்திற்குரியது.  இத்தகைய வாரத்தை எங்களது கொள்கைக்கு எதிரானது எலும்பில்லாத நாவுதானே எதுவேண்டுமானாலும் சொல்லலாம் மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் அமைதியாக இருந்துவிடுவார்கள் என்று எண்ணினால் அது மாபெரும் தவறு. எவரையும் எங்கள் மாநபியோடு ஒப்பிட்டு பேசுவதை ஒருபொழுதும் அனுமதிக்க முடியாது.  திமுக நாகை நாகராஜன் அவர்களை கட்சியின் பொறுப்புகள், மற்றும் அடிமட்ட உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் அவரை நீக்கிவிட வேண்டும். தமிழக அரசு திமுக பேச்சாளர் நாகை நாகராஜன் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்,” இப்படிக்கு மௌலவி செய்யது முஹம்மது உஸ்மானி, மாநில செய்தி தொடர்பாளர், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ்நாடு[6].

இறைதூதர் கருணாநிதி - நாகை நாகராஜன்- முஸ்லிம்கள் எதிர்ப்பு 07-04-2016போலீஸ் புகார் கொடுக்காமல் மிரட்டும் முஸ்லிம் கட்சிகள்: கட்சியின் பொறுப்புகள், மற்றும் அடிமட்ட உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் அவரை நீக்கிவிட வேண்டும், உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்லியிருப்பது நல்ல தமாஷாகத் தெரிகிறது. ஏனெனில், இப்படியெல்லாம் மிரட்டும் இவர்கள் போலீஸாரிடம் உரிய புகார் கொடுத்ததாகத் தெரியவில்லை. உண்மையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், அவ்வாறு புகார் கொடுத்திருக்கலாம். வழக்குப் பதிவு செய்திருக்கலாம். நீதிமன்றத்தில் இப்பிரச்சினை வரும் போது, விவரங்கள் அலசப்படும் போது, பேசியது உண்மையிலேயே இந்தி சட்டங்களின் பிரிவுகளை மீறியவையா, குற்றமாகுமா, எந்த தண்டனை கொடுக்கலாம் என்று வாத-விவாதங்கள் உண்டாகும். ஆனால், அவற்றைத் தடுக்கவே முஸ்லிம் கட்சிகள் இவ்வாறி மிரட்டி அமுக்கி வாசிக்கின்றன என்று தெரிகிறது. மேலும், இதை பிரச்சினையாக்கினால், முஸ்லிம் கட்சிகளின் ஒதுக்கீடு காலியாகி விடும், ஒரு சீட்டுக் கூட ஜெயிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டு விடும்.

கரு முஸ்லிம் லீக், குழுக்களுடன்இந்திய தேசிய லீக் மாநில தலைவர் தடா ரஹீம் அறிவிப்பு: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சென்னை கோபாலபுரம் வீட்டை முற்றுகை இடப்போவதாக இந்திய தேசிய லீக் கட்சி அறிவித்துள்ளது[7]. இது குறித்து இந்திய தேசிய லீக் மாநில தலைவர் தடா ரஹீமை தொடர்பு கொண்டு கேட்டபோது,   “சமீபத்தில் தி.மு.க. பேச்சாளர் நாகராஜ் என்பவர், கருணாநிதியை இறைதூதர் என்று குறிப்பிட்டு பேசினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மட்டுமே இசுலாமியர்கள் இறைதூ தராக நினைக்கிறார்கள்.  ஆகவே நாகராஜை கண்டிக்க வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கருணாநிதிக்கு கோரிக்கை வைத்தோம். அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆகவே கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி, இன்று (08-04-2016) மாலை நான்கு மணி அளவில் அவரது கோபாலபுர இல்லத்தை முற்றுகையிடப்போகிறோம்” என்றார்[8].

Fight among the mohammedan parties in Tamilnadu

முஸ்லிம் மக்கள் ஜவாஹிருல்லா மீது கொதிப்பு[9]: காலைமலர் என்ற இணைதளம், “முஹம்மது நபி அவர்களை திமுக பேச்சாளர் நாகை நாகராஜன் என்பவர் கலைஞருடன், இணைத்து இழிவு படுத்திய போது பொங்காத பேராசிரியர்! தன்னுடை மமக கட்சியை தீவிரவாத இயக்கம் என்று சொன்ன ஹைச்.ராஜாவை நோக்கி பொங்காத பேராசிரியர்! கலைஞரை ஜாதியை சொல்லி இழிவு படுத்திய விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட வைகோவை நோக்கி மட்டும் டிவி சேனலில் பொங்க காரணம் என்ன? நாயவான்களே! நீங்களே சொல்லுங்கே! சீட்டு, பதவிக்காக தன்னையே மறந்து செயல்படும் ஜவாஹிருல்லாஹ்வின் செயல்பாடுகள் அவரின் மோசமான அரசியலை பிரதிபலிக்கின்றது. அரசியலுக்காக கலைஞரை இவர் மட்டும் இறை தூதராக ஏற்றுக் கொண்டாரோ? என்று முஸ்லிம் மக்கள் ஜவாஹிருல்லா மீது கொதிப்படைந்து உள்ளனர்”, என்று சாடியுள்ளது[10]. இது ஜவாஹிருல்லாஹுக்கு எதிராக செயல்படும் முஸ்லிம் கூட்டம் போலிருக்கிறது.

Karus warning to Nagai Nagarajan for comparing Mohammed and himself 08-04-2016

தி.மு.. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: “சேலத்தில் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய நாகை நாகராஜன் என்பவர், இஸ்லாமிய மதம் குறித்து தவறான கருத்துக்களை பேசியதாக வார இதழ் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமை கழகப் பேச்சாளராக நாகை நாகராஜன் என்றொருவர் இருப்பதாக எனக்கு தெரியவில்லை[11]. இருந்தாலும், கழக மேடைகளில் உரையாற்றுவோர் நமது இயக்கத்திற்குரிய கண்ணியத்தோடும், நாகரீகத்தோடும் பேச வேண்டும். ஆர்வம் மிகுதியால் மத சம்பந்தமாக ஏதாவது தவறாக பேசினால், அதை மிகைப்படுத்திட, மாற்று கட்சியினர் இருக்கிறார்களோ இல்லையோ, ஒரு சிலர் அதற்காகவே இருக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்[12]. ஒன்றை பத்தாக்கி, பத்தை நூறாக்கி கழகத்தின் மீது அவதூறு வீசிட அவர்கள் எப்போது நேரம் கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டே இருப்பார்கள். எனவே கழக கூட்டங்களில் பேசுவோர் “யாகாவாராயினும் நா காக்க” என்று அய்யன் திருவள்ளுவர் வழங்கியிருக்கும் அறிவுரையை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு பேச வேண்டும். நாகை நாகராஜன் தவறாக எதுவும் பேசியிருந்தால், அது கழகத்தின் கருத்தல்ல என்று மறுப்புத் தெரிவிப்பதோடு, அந்த குறிப்பிட்ட பேச்சாளரும் இதனையை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு இனி கழக மேடைகளில் மிகுந்த கவனத்துடன் பேச வேண்டும்”, இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

10-04-2016

 

[1] http://www.seythigal.com/?p=9486; https://youtu.be/Rdj8_gblPD8

[2] https://www.facebook.com/1416474845231879/videos/1695088387370522/

[3] முக்கண்ணாமலைப்பட்டி அறிவிப்பு, இறைதூதர் தலைவர் கருணாநிதி, Muckanamalaipatti, 00:38, ஏப்ரல்.2016.

[4] http://muckanamalaipatti.blogspot.in/2016/04/blog-post_88.html

[5] http://vkalathurone.blogspot.in/2016/04/blog-post_81.html

[6] http://vkalathurone.blogspot.in/2016/04/blog-post_81.html

[7] பத்திரிக்கை.காம், இன்று மாலை கருணாநிதி வீடு முற்றுகை: இந்திய தேசிய லீக் அறிவிப்பு, Posted by : டி.வி.எஸ். சோமு, on Friday, April 8, 2016 @ 11:03 am.

[8] https://www.patrikai.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F/

[9] காலைமலர்.நெட், கலைஞரை இறைதூதர் என்று சொன்னதை ஜவாஹிருல்லா ஏற்றுக்கொண்டாரா? By Mathiyalagau, Apr 7, 2016.

[10] http://kaalaimalar.net/kalingar-javahi-is-no-comment/

[11] பிபிசி.தமிழ்.நியூஸ், தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய நாகை நாகராஜன் யார் என்று எனக்கு தெரியாது-கருணாநிதி, பதிவு செய்த நாள்: 07 Apr 2016 11:05 am

By : Sam Kumar.

[12] http://www.tamilnewsbbc.com/2016/04/07/532916.html

Explore posts in the same categories: அடிப்படைவாதம், அதிமுக, அத்தாட்சி, அரேபியா, அல் - உம்மா, அல்-உம்மா, அவதூறு, இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இறை தூதர், இறைதூதர், ஈ. வே. ரா, எஸ்.டி.பி.ஐ, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐசிஸ், ஓட்டுவங்கி, கருணாநிதி, நபி, நாகராஜன், நாகை நாகராஜன், முகமது நபி, Uncategorized

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

One Comment மேல் ““இறைதூதர் கருணாநிதி” என்ற திராவிட மேடை பேச்சும், அடிப்படைவாதப் பிரச்சினையும், தீவிரவாத பின்னணியும்!”

  1. vedaprakash Says:

    இனத் துரோகத்தின் அடையாளமாகி, உலகத்
    தமிழர்களால் கருணா என்றழைக்கப்படுகிற
    கருணாநிதியை வெகுவாக குளிர்விக்க நினைத்த
    அவரோட கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளரான
    நாகை நாகராஜன் என்பவர் கருணாநிதி ஒரு இறை
    தூதர் என்று பேசிவிட, அவ்விவகாரம் இசுலாமிய
    மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
    இதென்னடா வம்பாப் போச்சுன்னு சுதாரிச்சுக்கிட்ட
    கருணாநிதி, ஒரே போடாப் போட்டாரு! அது
    என்னன்னா, நாகை நாகராஜன் என்ற ஒருவர் என் கட்சியில் இருப்பதே
    எனக்குத் தெரியாது என்பதுதான் ஆரூரார் அடித்த அந்த அந்தர்பல்டி!
    அதுசரி, உடனே, அந்த நாகை நாகராஜனை தொடர்புகொண்ட உள்ளூர்ப்
    பத்திரிகையாளர்கள், கட்சிக்காக இவ்வளவு நாளாக நீ மேடையிலே பேசிக்கிட்டு
    அலையுற… ஆனா உங்கத் தலைவரு உன்னை யாருன்னே தெரியாதுன்னு
    சொல்லிட்டாராமே… என்று கேட்க,
    அதற்கு, “அடப் போங்கய்யா புரியாத ஆட்களா, என் தலைவனுக்கு ஒரு
    ஆபத்து வந்தா கட்டுன மனைவி ராசாத்தியையே தெரியாதுன்னுவாரு, பெத்த
    மகள் கனிமொழியையே தெரியாதுன்னுவாரு, பெற்ற மகன் அழகிரியை தன்
    மகனில்லைன்னு சொன்னவரு, அப்படியிருக்க… இந்த நாகை நாகராஜனைத்
    தெரியாதுன்னு சொல்றதுல என்னய்யா பெரிய அதிசயம் இருக்கு?” என்று
    பொட்டில் அறைந்தாற்போல் ஒரு போடு போட்டாராம் அந்த நாகை நாகராஜன்!
    ஓகோ இதுதான் தலைவனின் தரம் அறிந்த தொண்டன் என்பதோ!
    http://drnamadhumgr.com/katturai/viewkatturai/30.html


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: