தீவிரவாதிகளின் உரிமைகளும், தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர் மற்றும் பாதிக்கப்படுபவர்களின் உரிமைகளும் – குடியரசு தினத்திற்கு முன்பாக மற்றும் பின்பாக “தி இந்து” வக்காலத்து வாங்கியது!
தீவிரவாதிகளின் உரிமைகளும், தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர் மற்றும் பாதிக்கப்படுபவர்களின் உரிமைகளும் – குடியரசு தினத்திற்கு முன்பாக மற்றும் பின்பாக “தி இந்து” வக்காலத்து வாங்கியது!
ஜனவரி 26 குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு பிரெஞ்சு ஜனாதிபதி பிங்கோயிஸ் ஹோலேன்டே [French President Francois Hollande] வந்த முன்பு, பெங்களூரு பிரஞ்சு தூதரகத்திற்கு, அவர் இந்தியாவுக்கு வரவேண்டாம் என்ற எச்சரிக்கைக் கடிதம் வந்தது[1]. இதனால், இந்திய அரசு பலத்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டன. தீவிரவாதிகளால் பாரிஸ் தாக்கப்பட்டது தெரிந்த விசயமே, எனவே, நிச்சயமாக இத்தகைய நடவடிக்கைகளைக் குறை சொல்ல முடியாது. ஆனால், “தி இந்து” போன்றவை 25-01-2016 அன்றே, சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகளின் உரிமைகளைப் பற்றி வக்காலத்து வாங்கி, தலையங்கத்தை வெளியிட்டது[2]. 27-01-2016 அன்று தமிழிலும் தலையங்கமாக வெளிட்டது. பிரெஞ்சு ஜனாபதி வருகிறார் எனும்போது, நிச்சயமாக அந்நாட்டு தீவிரவாத-எதிர்ப்புத் துறை, எச்சரிக்கையாக, இந்திய அரசுக்கு, சில விவரங்களைக் கொடுத்திருக்கும். என்.ஐ.ஏவும் விசாரிக்காமல், முகாந்திரம் இல்லாமல் வெறும் சதேகத்தின் பேரிலேயே அனைவரையும் கைது செய்து விட்டதாக ஆகாது. உத்தரக்காண்டத்தில், ரூர்கி நகரில் கைது செய்யப்பட்ட அக்லக் உர்-ரஹ்மான் (20), மொஹம்மது அஜிம்முஸன் (20), மொஹம்மது மீரஜ் என்கின்ற மோனு (20), ஒசாமா மொஹம்மது என்கின்ற ஆதில் (18) மூலம் தான் விவரங்கள் தெரியவந்தன. இவர்கள் எல்லோருமே சிரியாவைச் சேர்ந்த அன்ஸார்-உத் தௌஹீத் பி பிலால் அல்-ஹிந்த் [Ansar-ut Tawhid fi Bilal al-Hind] என்ற அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்தனர். அதன் பிறகுதான் மற்ற கைதுகள் பெங்களூரு, ஹைதரபாத், மும்பை முதலிய இடங்களில் நடந்தன.
தி இந்துவின் வக்காலத்து வாங்கும் போக்கு (தி இந்து, 27-06-2016)[3]: தி இந்து, தீவிரவாதத்திற்கு வக்காலத்து வாங்கியுள்ள தன்மை, அதன் தலையங்கத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது: “உலகை அச்சுறுத்தும் ஐ.எஸ். பயங்கரவாதம் இந்தியாவில் கால் பதிக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் சமீபத்தில் தெரிய வந்திருக்கின்றன. அந்த அமைப்புக்கு ஆதரவானவர்கள் என்று கருதப் படும் 18 பேர், நாச வேலைகளின் ஈடுபடத் திட்டமிட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் உத்தராகண்ட் மாநிலத்திலிருந்து டெல்லி காவல் துறையாலும், மற்றவர்கள் ‘தேசியப் புல னாய்வு முகமை’ (என்.ஐ.ஏ.) அமைப்பாலும் கைதுசெய்யப்பட்டனர்.
பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த பயிற்சி முகாம்களுக்கான ஏற்பாடுகளில் 14 பேரும் ஈடுபட்டிருந்ததாக என்.ஐ.ஏ. தெரிவிக்கிறது. ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் உள்ள ‘அன்சருல்-தவ்ஹீத்’ என்ற பெயருள்ள பயங்கரவாதக் குழுவின் தலைவர் ஷஃபி அர்மார் என்கிற யூசுஃப் என்பவருடன் இந்த 18 பேரும் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்திய முஜாஹிதீன் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களில் சிலர் ‘அன்சருல்-தவ்ஹீத்’ அமைப்பிலும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. |
தெரிவிக்கிறது, கூறப்படுகிறது, தெரியவந்துள்ளது, தெரிய வந்திருக்கின்றன என்று சொல்வதிலிருந்து, உலகத்தில், இந்தியாவில் நடப்பது, ஒன்றுமே தெரியாது என்ற பாணியில் எழுதியுள்ளது. இந்தியாவில் என்ன இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்கவில்லையா, அதனால், அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் சாகவில்லையா? அவையெல்லாமே பொய்யாகி விட்டனவா? அவர்களது உரிமைகளைப் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை? |
அண்டை நாடான வங்கதேசத்தில் சில ஐ.எஸ். அனுதாபிகள் தாக்குதல்களை நடத்தியிருக்கும் சூழலில், இவ்விஷயத்தில் இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்”, என்கிறது[4].
கெடுபிடிகளைக் காட்டாமல் அடையாளம் காண வேண்டும் (தி இந்து, 27-06-2016): அதேசமயம், அளவுக்கு மீறி அரசு பலத்தைப் பிரயோகிக்காமல், சந்தேகத்துக்குரியவர்களிடம் கெடுபிடிகளைக் காட்டாமல் இந்த பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்களையும், அவர்கள் செயல்படும் குழுக்களையும், எந்த அமைப்பிலும் சேராமல் தனித்து இயங்கக்கூடியவர்களையும் அடையாளம் காண வேண்டும்.
இத்தகைய விசாரணைகளின்போது அப்பாவிகளை அலைக்கழிக்காமலும் சட்டபூர்வ உரிமைகளை மீறாமலும் வெகு கவனமுடன் செயல்பட வேண்டும். தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் வெளிப்படையாகவும், தொழில்முறையிலும் விசாரணைகள் நடைபெறுவதை மத்திய உள்துறை அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும். அப்படிச் செய்வது பொது அமைதியைக் காப்பதுடன், சந்தேகத்தின்பேரில் விசாரணைக்கு உள்ளாவோரின் தனிப்பட்ட சுதந்திரத்துக்கும் ஊறு நேராமல் காப்பாற்றும். |
குண்டுகளை தயாரிப்பதில், குண்டுகளை வெடிக்க வைத்ததில், அப்பாவி மக்களைக் குரூரமாகக் கொன்றதில், பலத்தை பிரயோகிக்கவில்லையா? அவர்கள் அவ்வாறு செய்வதை சட்டங்களை மீறியதாகாதா? வெளிப்படையாகவும், தொழில்முறையிலும் அவர்கள் அறிவித்தா குண்டுகளை வெடித்து கொன்றார்கள்? ஜிஹாதிகள் அப்படித்தான் தனிப்பட்ட சுதந்திரத்துக்கும் ஊறு நேராமல் காப்பாற்றினார்களா? ஜிஹாதிகளின் கொலைவெறி வன்முறைக்கு முன்னால் அஹிம்சை போராட்டமா நடத்த முடியும்? |
பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுவோரை அரசு அமைப்புகள் நடத்தும் விதத்தில்தான் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் வெற்றி அல்லது தோல்வி கிடைக்கும் என்பது உலக அனுபவம்.

1993 Mumbai blast- who pay for the victims.1
வன்முறைச் சிந்தனைகளுக்கு ஆளானோருக்குக் கூட பேசியே தீர்த்துக்கொள்ள வழியிருப்பதும் புலனாகும் (தி இந்து, 27-06-2016): குற்றம்சாட்டப்படுவோருக்கு எதிரான விசாரணைகளும், குற்றப்பத்திரிகைத் தாக்கல்களும் காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டு முடிக்கப்பட வேண்டும்.
வழக்கு விசாரணையும் விரைவாக நடந்து தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும். பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியாவுக்கு உள்ள அக்கறையுடன், மக்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசுக்குள்ள பொறுப்பும் சேர்ந்து வெளிப்பட வேண்டும். அதே சமயம் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குக்கூட அரசியல் சட்டம் அளிக்கும் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம். |
காலவரம்பு நிர்ணயித்தா குண்டுகள் வைத்டுக் கொன்றார்கள்? அந்த பயங்கரவாதிகளின் பெற்றோர், மற்றோர் எந்த பொறுப்புடன் அவ்வாறு ஈடுபட வைத்தார்கள்? “குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குக்கூட அரசியல் சட்டம் அளிக்கும் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம்” என்று வெட்கமில்லாமல் வக்காலத்து வாங்கும் போது, ஜிஹாதி குரூரத்தால் கொலையுண்டவர்களின் சட்டப் பாதுகாப்பு என்னவாயிற்று? |
இதனால் வன்முறைச் சிந்தனைகளுக்கு ஆளானோருக்குக் கூட இந்திய ஜனநாயகத்தின் மாண்பும், எந்தக் குறை இருந்தாலும் அதை பேசியே தீர்த்துக்கொள்ள வழியிருப்பதும் புலனாகும்.

1993 Mumbai blast- who pay for the victims.3
அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு இழைத்த அநீதிக்குப் பதிலடியாகத்தான் நாசவேலைகளில் ஈடுபட நேர்கிறது (தி இந்து, 27-06-2016): தங்கள் கோரிக்கைகளும் மனவருத்தங்களும் நியாயமானவை தான் என்றும், பாராமுகமாக இருக்கும் அரசுக்கு எதிராக நேரடி நடவடிக்கைகளில் இறங்க நேர்கிறது என்றும் கருதும் இளைஞர் குழுக்களும் தனிநபர்களும் இப்படி நாச வேலைகளில் இறங்குவதை வரலாறு நமக்கு உணர்த்திக் கொண்டேயிருக்கிறது.
அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு இழைத்த அநீதிக்குப் பதிலடியாகத்தான் நாசவேலைகளில் ஈடுபட நேர்கிறது என்று அவர்கள் கருதுகிறார்கள். 1990-களிலிருந்து மத அடிப்படையிலான பயங்கரவாதத் தாக்குதல்கள் நாட்டில் 3 முறை நடந்துள்ளன. பயங்கரவாதச் செயல்களில் நாட்டமுள்ள இளைஞர்களுக்கு எதிரான வழக்குகளை நியாயமான, வெளிப்படையான, விரைவான நடைமுறைகள் மூலம் நடத்தி முடிப்பது மிக முக்கியம். |
ஜிஹாதி குரூர கொலையாளின் கோரிக்கைகளும் மனவருத்தங்களும் நியாயமானவை என்று யார் தீர்மானித்தது? “பாராமுகமாக இருக்கும் அரசுக்கு எதிராக நேரடி நடவடிக்கைகளில் இறங்க நேர்கிறது” என்றால், இந்தியர்கள் எல்லோருமே இறங்கலாமே? உதாரணத்திற்கு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் அவ்வாறே செயல்படலாமே? அவர்களின் கோரிக்கைக்கள், பாதிப்புகள் என்ன என்பதன இத்தனை ஆண்டுகள் யாரும் கவலைப்படவில்லையே? |
இந்த ஆபத்தை எதிர்கொள்வதற்கு இதைவிட சிறந்த வழி இப்போதைக்கு இல்லை. “தி இந்து” இப்படி வக்காலத்து வாங்கிய ஐந்தே நாட்களில் அதன் தோழமை என்.டி.டிவி, இவ்வாறு பயங்கரவாத ஆதரிப்பை வெளிப்படுத்தியுள்ளது.

huji Bangaladesh
தீவிரவாதிகளின் உரிமைகளும், தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர் மற்றும் பாதிக்கப்படுபவர்களின் உரிமைகளும்: பொதுவாக மனித உரிமைகள் போர்வையில், “தி ஹிந்து” போன்ற ஊடகங்கள் எப்பொழுதும் சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் உரிமைகளைப் பற்றி அதிகமாகவே கவலைப்படுவது, செய்திகளை வெளியிடுவது என்ற போக்கில் இருந்து வருகிறது. ஆனால், தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர் மற்றும் பாதிக்கப்படுபவர்களின் உரிமைகளைப் பற்றி பேசுவதே இல்லை. எய்ட்ஸ் வரும் அதனால், கான்டம் போட்டுக் கொள் என்று, அதனை எப்படி ஆண்கள் மாட்டிக் கொள்ளவேண்டும் என்று செய்து காட்டி விளக்கம் அளிக்கும் போது, அதனை பாராட்டுகிறார்கள். என்ன இப்படி பொது இடத்தில் பலருக்கு முன்னிலையில், அதிலும் பெண்கள் இருக்கும் போது, இப்படியெல்லாம் செய்து காட்டுகிறார்களே என்று யாரும் எதிர்க்கவில்லை. விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று அனுமதிக்கப்பட்டது, படுகிறது. ஆனால், தீவிரவாதிகள் இப்படி இருப்பார்கள், அவர்கள் குண்ட் தயாரிப்பார்கள், குண்டுவெடித்தால் சாவு ஏற்படும், அதனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், தீவிரவாதிகளை கண்டுகொள்ள வேண்டும் என்று யார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்? பிறகு முன்னெச்சரிக்கை கைதுகளை எதிர்ப்பதேன்?
வேதபிரகாஷ்
06-02-12016
[1] http://www.firstpost.com/world/letter-cautions-french-president-on-india-visit-says-bengaluru-police-2593784.html
[2] http://www.thehindu.com/opinion/editorial/nias-crackdown-on-is-terror-suspects-alert-fair-transparent/article8148224.ece?ref=relatedNews
[3] தி இந்து, வெளிப்படையான விசாரணை தேவை, தலையங்கம், Published: January 27, 2016 09:34 ISTUpdated: January 27, 2016 09:35 IST.
[4]http://tamil.thehindu.com/opinion/editorial/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/article8157012.ece
Explore posts in the same categories: 2008 குண்டு வெடிப்பு, ஃபத்வா, இணைதள ஜிஹாத், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்குறிச்சொற்கள்: இஸ்லாமிய தீவிரவாதம், உரிமை, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐஸில், குண்டு வெடிப்பு, சிரியா, சிறுபான்மையினர், தி இந்து, தீவிரவாதி உரிமை, பட்கல், பாகிஸ்தான், பெங்களுரு, மனித உரிமை, முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லீம்கள்
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்