அன்ஸார்-உத் தௌஹீத் பி பிலால் அல்-ஹிந்த் 2013லிருந்து செயல்பட்டுவருவது எப்படி பெற்றோர், உற்றோர், மாற்றோர்களுக்குத் தெரியாமல் இருந்தது?

அன்ஸார்உத் தௌஹீத் பி பிலால் அல்ஹிந்த் 2013லிருந்து செயல்பட்டுவருவது எப்படி பெற்றோர், உற்றோர், மாற்றோர்களுக்குத் தெரியாமல் இருந்தது?

Muddabir Mushtaq Sheikh, Shafi armanஎன்டிடிவியின்  தீவிரவாதஆதரவு நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் சொல்வது: சையது அன்ஸார் ஷா காஸ்மி என்ற இஸ்லாமிய வெறியூட்டும் பேச்சாளர். இவரது ஆயிரக்கணக்கான பேச்சுகள் உள்ளன. இவற்றையெல்லாம் பெங்களூரு போலீஸ் கமிஷனர் கேட்டுள்ளார், அதில் இந்திய-விரோதமாக எதுவும் இல்லை, ஆனால், என்.ஐ.ஏக்கும் மட்டும் கிடைத்துள்ளது, என்று ஒரு முஸ்லிம் கேட்கிறார். கைது செய்யப்பட்டுள்ளவரின் சொந்தக்காரராகிய இன்னொரு இளம்பெண், “அந்த பேச்சுகளைக் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு, அவரது பேச்சைக் கேட்காமல், மற்ற மதத்தலைவரின் பேச்சையா கேட்பார்கள்?”, என்று காட்டமாக , கிண்டலாகக் கேட்கிறார். முஸ்லிம்கள் மசூதிகளுக்குச் செல்லட்டும், மதரஸாக்களுக்குச் செல்லட்டும், யார் பேச்சை வேண்டுமானாலும் கேட்கட்டும், ஆனால், ஐசிஸ் தொடர்புகள் எவ்வாறு உருவாகியுள்ளன, 2013லிருந்து செயல்படுகின்றன என்பதையெல்லாம் இப்பெண்மணிகள் ஏன் பொறுப்பாக கண்காணித்து, தடுக்கவில்லை?

Shafi arma recruits and contactsஇன்ஜினியரிங், பிஏ, ஆயுர்வேத மருத்துவம் படிப்படிக்கும் மாணவர்கள். சிரியா மற்றும் ஈராக்கைச் சேர்ந்த ஐஎஸ்., தலைவர்களுடன், வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் ஏன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்க வேண்டும்?: கைது செய்துள்ளதன் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் வந்திருப்பதாக டில்லி போலீஸ் அறிவித்தது. இவர்கள், குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் விதமாகவும், ஹரித்வாரில் நடக்கும் அரித் கும்பமேளா, முக்கிய ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டது. ஹரித்வாரில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்த 4 இளைஞர்களை டில்லி போலீசார் 20-01-2016 அன்று கைது செய்தனர்.

  1. அக்லக் உர்-ரஹ்மான் (20),
  2. மொஹம்மது அஜிம்முஸன் (23),
  3. மொஹம்மது மீரஜ் என்கின்ற மோனு (21),
  4. ஒசாமா மொஹம்மது என்கின்ற ஆதில் (18)

விமாரணையில் அவர் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இவர்களின் வயது 19 முதல் 23 வரை. இவர்கள் 4 பேரும் இன்ஜினியரிங், பிஏ, ஆயுர்வேத மருத்துவம் படிப்படிக்கும் மாணவர்கள். சிரியா மற்றும் ஈராக்கைச் சேர்ந்த ஐஎஸ்., தலைவர்களுடன், வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பது தெரிய வந்தது. எந்த இடத்தில் எவ்வாறு தாக்குவது, அதற்கான ஆயுதங்களை எவ்வாறு கையாள்வது என்ற விபரங்கள் இவர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

சர்வே நடத்தியது பற்றி பேசாதது: 26-01-2016 அன்று குடியரசு தின விழாவின் போதும், ஹரித்வார் அரித் கும்பமேளா, டில்லியில் மக்கள் அதிகம் கூடும் ஷாப்பிங் மால்கள், டிஎல்எப் சுற்றுலா சாலை, நொய்டாவில் உள்ள கிரேட் இந்தியா பகுதி உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது தெரிய வந்துது[1]. இந்தோனேஷியாவின் ஜகர்த்தாவில் சமீபத்தில் நடத்தப்பட்டது போன்று மக்களோடு மக்களாக கலந்து தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது தெரியவந்தது. பிப்ரவரி 8ம் தேதி ஹரித்வாரில் நடக்கும் ஹரித்வாரா கும்பமேளாவின் போது, தினமும் ஆயிரக்கணக்கானர்கள் வந்து செல்லும் மால் ஒன்றை தகர்க்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு திட்டமிடுவதற்காக எங்கெல்லாம் மக்கள் அதிகம் கூடுகிறார்கள் என்பதை கண்டறிய சர்வே ஒன்றையும் இந்த பயங்கரவாதிகள் குழு நடத்தி உள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக, குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் 20-01-2016 அன்று எச்சரிந்தது குறிப்பிடத்தக்கது[2].

அந்நிலையில் 14 பேர் கைது செய்யப்பட்டனர்: இந்நிலையில், இந்தியாவில் வரும் 26ம் தேதி குடியரசுத் தினம் கொண்டாடபட்டது. இதையொட்டி, நாடு முழுவதும், என்ஐஏ மற்றும் காவல்துறையினர் சேர்ந்து பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டனர்[3]. இந்த சோதனையில், கர்நாடகா, ஹைதராபாத், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் 14 கைது செய்யப்பட்டனர். இந்த தகவலை மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது[4]. கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள பஜ்பேயில் தேசிய புலனாய்வுத்துறையினர் வியழக்கிழமை இரவு 21-01-2016 அன்று நடத்திய தேடுதல் வேட்டையில் நஜ்மல் ஹூடா [Najmul Huda] என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டான்[5]. கைதான தீவிரவாதி பதன்கோட் தாக்குதலில் தொடர்புடையவரா என அதிகாரிகள், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்[6].  தும்கூரிலிருந்து சையது ஹுஸைன் [Syed Husain] கைது செய்யப்பட்டான்[7].

அன்ஸார்உத் தௌஹீத் பி பிலால் அல்ஹிந்த் 2013லிருந்து செயல்பட்டுவருவது: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்ட 16 ஐஎஸ் ஆதரவாளர்கள், இராக், சிரியா நாடுகளில் செயல்படும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைமையுடன் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மும்பையில் முத்தாபிர் முஸ்தாக் செயிக் [Muddabir Mushtaq Shaikh, 33] என்பவன் கைது செய்யப்பட்டான். இவனுக்கு, ஐசிஸ் தலைவன் அபு பக்கர் அல்-பாக்ததியுடன் [Abu Bakr Al-Baghdadi] நேரிடை தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. பாக்தாதியின் ஆலோசனையின் பேரில் இந்தியாவில் புதிய பயங்கரவாத அமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்துவதற்கு துருக்கி, சிரியா வழியாக ஷேக்குக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது[8]. இதனால், இந்தியாவில் உள்ள முஸ்லிம் இளைஞர்களை இவன் தான் அனுப்பி வைக்கிறான் என்று அவனது மனைவி உஜ்மா [Ujma, 30] கூறுகிறாள்[9]. ஒன்றரை வருடத்திற்கு முன்பாக ஒரு தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் ரூ.50,000/-க்கு வேலைப் பார்த்து வந்தவன், திடீரென்று வேலையை விட்டு விட்டான். ஆனால், வங்கியில் மட்டும் ரூ.30 லட்சம் வரை இருப்பதால், குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறான் என்றெல்லாம் விவரங்கள் தெரியவந்தன[10].  அன்ஸார்-உத் தௌஹீத் பி பிலால் அல்-ஹிந்த் [Ansar-ut Tawhid fi Bilal al-Hind] என்ற அமைப்பு, ஐசிஸ்சின் இந்திய பிரிவாக 2013ல் உருவாக்கி, அதற்கு தலைவனாக, முத்தாபிர் முஸ்தாக் செயிக் நியமிக்கப்பட்டான். இதை ஷபி அர்மான் [Shafi Arman] என்பவன் சிரியாவிலிருந்து கண்காணித்து வந்தான்[11].

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆளெடுக்கும் ஷபி அர்மார்: ஷபி அர்மார் என்ற இந்த இளைஞருக்கு26 வயதுதான் ஆகிறது. ஆனால் இந்த வயதில் இந்த இளைஞர் செய்துள்ள “சாதனை” நடுநடுங்க வைக்கிறது என்று ஆரம்பிக்கிறது தமிழ்.ஒன்.இந்தியா[12]. இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆளெடுக்கும் நபர்களுக்கும், அந்த அமைப்புக்கும் இடையே முக்கிய இணைப்புப் பாலமாக விளங்கி வருகிறாராம் அர்மார். இவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்களை அனுப்புவதில் முக்கியப் பங்கு வகிக்கும் நபர் என்றும் விசாரணை அதிகாரிகள் கூறுகிறார்கள். இவர் குறித்து இன்டர்போல் போலீஸ் பிறப்பித்த உத்தரவில், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது, நிதி சேகரித்தது, ஆட்களைத் திரட்டிது உள்ளிட்ட பல்வேறு புகார்களை அடுக்கியுள்ளது. கர்நாடக மாநிலம் பத்கலைச் சேர்ந்தவர் அர்மார். இவரது பெயர் முகம்மது ஷபி. அர்மார் என்பது குடும்பப் பெயராகும். ஆங்கிலம், அட்டகாசமாக பேசுவார். அது போக கன்னடம், உருது, இந்தி ஆகியவையும் நன்றாகத் தெரியும். இவரது புனை பெயர் யூசுப் அல் ஹிந்தி. இவர் அன்சர் உல் தவாஹித் என்ற அமைப்பின் நிறுவனரான சுல்தான் அர்மாரின் சகோதர் ஆவார். இந்த அமைப்புதான் ஐஎஸ்ஐஎஸ் மைப்புக்கு ஆட்களைத் திரட்டி அனுப்பும் அமைப்பாகும். தனது சகோதரரின் நிழலில்தான் ஆரம்பத்தில் வாழ்ந்து வந்தார் ஷபி. தனது சகோதரருடன் சேர்ந்துதான் அவர் ஆட்களைத் திரட்டும் வேலையில் ஈடுபட்டார். சமீபத்தில்தான் அதிலிருந்து வெளியே வந்துள்ளார்.

வேதபிரகாஷ்

06-02-12016

[1] தினமலர், இந்தியாவில் .எஸ்., பயங்கரவாதிகள் : மக்கள் கூடும் இடங்களில் தாக்க திட்டம், ஜனவரி.21.2016,09.08.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1438428

[3] விகடன், இந்தியாவில் ஐஎஸ் ஆதரவாளர்கள் 14 பேர் கைது: மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!, 20-01-2016.

[4] http://www.vikatan.com/news/india/57984-india-is-supporters-arrested-central-government.art

[5] நியூச்.7, மங்களூரில் பதுங்கி இருந்த ஐஎஸ் தீவிரவாதி கைது, Updated on January 22, 2016.

[6] http://ns7.tv/ta/entrenched-extremist-arrested-mangalore.html

[7] http://www.livemint.com/Politics/QJF46lkYM8YlxceQ1BOIDL/Four-arrested-for-alleged-ISIS-links-in-Karnataka.html

[8]http://www.dinamani.com/india/2016/01/25/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-16-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/article3243241.ece

[9] https://www.youtube.com/watch?v=NqWwt_6bvcE

[10] http://www.ndtv.com/india-news/arrested-mumbra-mans-wife-reveals-her-husbands-isis-links-1269639

[11] The structure of the outfit was decided by Shafi Arman, the handler of recruitments in India operating from Syria, in 2013, and Sheikh, 33, was made the amir (chief) of Ansar-ut Tawhid fi Bilal al-Hind, ISIS’s wing in India.

http://www.hindustantimes.com/india/nia-crackdown-reveals-arrested-mumbra-man-is-chief-of-isis-india-wing/story-XrrUznTbYiLH7tvregWCHP.html

[12] தமிழ்.ஒன்.இந்தியா, அர்மார்இந்தியாவில் ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் 26 வயது இணைப்புப் பாலம்!, Posted by: Jayachitra, Published: Thursday, February 4, 2016, 17:51 [IST].

Explore posts in the same categories: 2008 குண்டு வெடிப்பு, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, ஆயுதப்படை, இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாமும் இந்தியாவும், என்டிடிவி, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐதராபாத், சபி அர்மார், ஷபி அர்மார், Uncategorized

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: