மனித மக்கள் நேயக் கட்சி உள்-குற்றச்சாட்டுகள், சண்டை, பிளவு, முதலியன எதைக் காட்டுகிறது?
மனித மக்கள் நேயக் கட்சி உள்–குற்றச்சாட்டுகள், சண்டை, பிளவு, முதலியன எதைக் காட்டுகிறது?
ஜவாஹிருல்லா தமிமும் அன்சாரியை போலி என்று குற்றஞ்சாட்டினார்: பொதுக்குழு கூட்டம் நடந்த பிறகு, போட்டிக் குழுக்கள் ஜவாஹிருல்லா தமிமும் அன்சாரியையும், தமிமும் அன்சாரி ஜவாஹிருல்லாவையும் வெளியேற்றி தீர்மானங்களை நிறைவேற்றின. ஜவாஹிருல்லா தமிமும் அன்சாரியை போலி என்று குற்றஞ்சாட்டினார்[1]. கடந்த அக்டோபரில் அவர் அடிப்படை உறிப்பினர் நிலையிலிருந்து நீக்கப்பட்டார். அனவரி 2015லேயே அவரது மூன்றாண்டு தலைவர் காலம் முடிவடைந்தது. அவருக்கு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பட்டு, கட்சியிலிருந்து நவம்பர் 13, 2015ல் மதுரையில் அடந்த கூட்டத்தில் வெளியேற்றப்பட்டார். இப்பொழுது, மாநில அவை தம்மை அங்கீகாரத்துள்ளதால், மனித மக்கள் நேயக் கட்சி [Manithaneya Makkal Katchi (MMK)] உடையாத நிலையில் தான் உள்ளது. வட மரைக்காயர் தெருவில் அலுவலகத்தைக் கொண்டு இயங்கி வருகிறது என்று ஜவாஹிருல்லா தெரிவித்தார்[2].
ஜவாஹிருல்லா தமிமும் அன்சாரிக்கு எச்சரிக்கை[3]: மனிதநேய மக்கள் கட்சியின் அவசர பொதுக்குழுக் கூட்டத்தை ஜவாஹிருல்லா சென்னை தாம்பரத்தில் கடந்த அக்டோபர்.6-ம் தேதி நடத்தினார். இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்த தமீமுன் அன்சாரி, பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமீமுன் அன்சாரி, தஞ்சையில் நாளை மமக பொதுக்குழுக் கூட்டம் நடக்கும் என்று அறிவித்தார். இதற்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அறிக்கையினையும் வெளியிட்டார்: மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைப் பொதுக்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ஜே.எஸ்.ரிபாயி தலைமையில் மேற்கு தாம்பரத்தில் கடந்த 6-ம் தேதி நடந்தது. மமக நிர்வாகக் குழுவை கலைக்க பொதுக்குழுவில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நடந்த தேர்தலில் கட்சித் தலைவராக எம்.எச்.ஜவாஹிருல்லாவும், பொதுச் செயலாளராக ப.அப்துல் சமதுவும், பொருளாளராக ரஹமதுல்லாஹ்வும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில், எனது தலைமையிலான மமகவுக்கு போட்டியாக தஞ்சையில் அக்டோபர் 11-ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானதாகும். அந்தக் கூட்டத்தில் பங்கேற்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மனிதநேய மக்கள் கட்சி தலைமையின் அனுமதியில்லாமல் கட்சியின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்துவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்[4].
அதிமுக, திமுக, ஊட்டணிகளில் மனிதநேய மக்கள் கட்சி:[5] மனிதநேய மக்கள் கட்சி தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. இரண்டு இடங்களில் இன்று பொதுக்குழு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் குழப்பம் உருவாகியுள்ளது. தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பினர் அரசியல் நிலைப்பாட்டிற்காக ‘மனிதநேய மக்கள் கட்சி’ என்ற புதிய அரசியல் அமைப்பை கடந்த தேர்தலின் போது துவக்கினர். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 3 இடங்களில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி 2 இடங்களில் வெற்றிபெற்றது. கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா, அஸ்லம் பாஷா ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ஒரு இடத்தில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி தோல்வியடைந்தது. இதன் பின்னர் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது. மதிமுக,கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் அடங்கிய மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்தில் இணைந்து பல போராட்டங்களில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்றது.
மூன்றாவது அணி பிரச்சினையும், மனிதநேய மக்கள் கட்சியும்[6]: மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் தேர்தல் கூட்டணியாக மாறும் என்று வைகோ அறிவித்ததும், மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா இதற்கு மறுப்பு தெரிவித்தார். மூன்றாவது அணிக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்றவர், தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆகிய இரு கட்சி கூட்டணி தான் தமிழகத்தில் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார். இதனால் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மக்கள் கூட்டியக்க போராட்டங்களில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரிக்கும், கட்சி தலைமைக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனால் கட்சி இரண்டாக உடையும் நிலை உருவாகியது. இதன் ஒரு பகுதியாக இரண்டு இடங்களில் பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டது.
மனித நேய மக்கள் கட்சியில் பிளவு ஏற்படும் சூழல் ஏற்பட்டது: இது தொடர்பாக கட்சியின் மூத்ததலைவர் மமக பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி சென்னை எழும்பூரில் நாளை மமக பொதுக்குழுவை அறிவித்து இருக்கிறார். இந்நிலையில், மமக மாநிலத்தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தாம்பரத்தில் மமக பொதுக்குழுவை அறிவித்துள்ளார்[7]. கூட்டணி குறித்த முரண்பாடு தொடர்பாக இருவரும் தனித்தனியே கூட்டம் நடத்துவதாக தகவல். மமக கூட்டணி உடைகிறதா என்ற கேள்வி எழுந்தது[8].
இப்பிளவின் பின்னால், திமுக அல்லது அதிமுக இல்லை என்று அன்சாரி தெளிவாக கூறினார்: இது குறித்து ஜவஹிருல்லா, 92 சதவீத நிர்வாகிகள் மனிதநேய மக்கள் கட்சியில் தான் உள்ளனர். போட்டி பொதுக்குழு நடத்த திட்டமிட்டுள்ள தமீம் அன்சாரி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நாளைய பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும். கட்சியை உடைக்க சதி நடக்கிறது. 2011- தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த போது நல்ல முறையில் தான் நடத்தினர்’’ என்று தெரிவித்துள்ளார்[9]. இது குறித்து தமீம் அன்சாரி, ’’ஜவாஹிருல்லா நாளை கூட்ட உள்ள பொதுக்குழு சட்டவிரோதமானது. எனது தலைமையில் நாளை நடக்க உள்ள பொதுக்குழு தான் அதிகாரப்பூர்வமானது. கட்சியின் பொதுச்செயலர் என்ற முறையில் எனக்கு தான் பொதுக்குழு கூட்ட அதிகாரம் உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்[10]. இப்பிளவின் பின்னால், திமுக அல்லது அதிமுக இல்லை என்று அன்சாரி தெளிவாக கூறினார்[11]. இப்பிரிவு தங்களது அலுவலகத்தை சூரையாடியது என்று குற்றஞ்சாட்டியது[12].
முஸ்லிம்கள் கட்சிகள் என்று தமிழகத்தில் பல பிரிவுகள் இருந்தாலும், எப்படியாவது இரண்டு-மூன்று எம்.பி, எம்.எல்.ஏ என்று கிடைக்குமாறு அரசியல் பேரங்கள் நடக்கின்றனட் அவ்வாறே சாதித்தும் வருகின்றானர். ஆனல், இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களால், ஒரு எம்.பி, எம்.எல்.ஏ கூட வருவதில்லை. இந்துக்கள் நலனிற்காக, எந்த கட்சி எம்.பி, எம்.எல்.ஏ பாடுபடுவதில்லை. கடந்த 60 ஆண்டுகள் ஆட்சியில், இந்துக்கள் படாத பாடு பட்டனர். கோவில்கள், கோவில் சொத்துகள் சூரையாடப்பட்டன. இந்துக்கள் – அல்லாதவர்களே அவற்றை அனுபவிப்பதுடன், ஆக்கிரமித்தும், சட்டத்தை வளைத்து வாங்கியும் வருகின்றனர். முதலமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு திராவிட நாத்திகத் தலைவர்கள் பல அவதூறு பேச்சுகளை பேசியுள்ளானர், செயல்களையும் செய்துள்ளனர்.
[1] The Hindu, Ansari, a rank imposter: Jawahirullah, Chennai, January 25, 2016 , Updated: January 25, 2016 08:00 IST.
[2] http://www.thehindu.com/news/cities/chennai/ansari-a-rank-imposter-jawahirullah/article8149593.ece
[3] ஹமிழ்.இந்து, மமக பெயரில் பொதுக்குழு கூட்டினால் சட்டப்படி நடவடிக்கை: ஜவாஹிருல்லா எச்சரிக்கை, Published: October 10, 2015 20:58 ISTUpdated: October 10, 2015 20:58 IST.
[4] http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article7747518.ece
[5] அதிரை எக்ஸ்பிரஸ், ம க கட்சி இரண்டாக உடைந்தது?, Posted by அதிரை எக்ஸ்பிரஸ் on 10/06/2015 10:50:00 AM in a-adirai, mujeeb.
[6] http://www.adiraixpress.in/2015/10/blog-post_16.html – .VqXWqvl97IU
[7] நக்கீரன், தமீமுன் அன்சாரி – ஜவாஹிருல்லா: ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு, பதிவு செய்த நாள் : 5, அக்டோபர் 2015 (23:41 IST); மாற்றம் செய்த நாள் :5, அக்டோபர் 2015 (23:41 IST).
[8] தினமலர், கட்சியை உடைக்க சதி: ஜாவஹிருல்லா குற்றச்சாட்டு, அக்டோபர்.5,2015.21.17.
[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1357512
[10] http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=152475
[11] Dismissing allegations that the DMK was behind the split, Ansari said, “Neither Kalaignar nor Jayalalithaa are behind this. The rift happened because of Jawahirullah’s jealousy.”. In the same breath, supporters of Jawahirullah confided that though they don’t suspect the hand of DMK behind the episode, Ansari’s recent actions given enough to suspect a DMK role in this.
[12] http://www.news7india.com/videos/teaser/jawahirullah-damaged-manithaneya-makkal-katchi-office-at-pudhupet-tamim-ansari-supporters-2/
Explore posts in the same categories: அன்சாரி, இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், ஜவாஹிருல்லாகுறிச்சொற்கள்: அன்சாரி, இஸ்லாம், சிறுபான்மையினர், ஜவாஹிருல்லா, தமிமும் அன்சாரி, தமீம் அன்சாரி, மனித நேய கட்சி, முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லீம்கள்
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்