ஐசிஸ் – தமிழக தொடர்புகள் – பரங்கிப்பேட்டையுடன் ஏன் ஐசிஸ் மற்றும் தீவிரவாதம் அதிகமாக சம்பந்தப்படுகிறது?
ஐசிஸ் – தமிழக தொடர்புகள் – பரங்கிப்பேட்டையுடன் ஏன் ஐசிஸ் மற்றும் தீவிரவாதம் அதிகமாக சம்பந்தப்படுகிறது?
பரங்கிப்பேட்டையில் தீவிரவாதி கைது – பரங்கிப்பேட்டை பக்கீரிமாலிமார் தெருவில் உள்ள பள்ளி வாசலில் வெளிமாநில வாலிபர் ஒருவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவல்[1]: ஹாஜா பக்ருத்தீன் உஸ்மான் அலி [Haja Fakkrudeen Usman Ali] மற்றும் குல் மொஹம்மது மராச்சி மரக்காயர் இருவரும் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் என்றால், இங்கு ஏற்கெனெவே தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னையில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் மே.1, 2014 அன்று கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலின் 2 பெட்டிகளில் குண்டுகள் வெடித்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பக்கீரிமாலிமார் தெருவில் உள்ள பள்ளி வாசலில் வெளிமாநில வாலிபர் ஒருவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து சிதம்பரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையிலான போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்து அந்த வாலிபரை பிடித்தனர். விசாரணையில், அவர் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி (வயது 39) என்பதும், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்த வழக்கில் தேடப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. பின்னர் அஷ்ரப் அலியை கடலூரை அடுத்த தூக்கனாம் பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று அவரிடம் விடிய, விடிய போலீசார் விசாரணை நடத்தினார்கள். தீவிரவாதி அஷ்ரப் அலிக்கு அடைக்கலம் கொடுத்து, அவருக்கு உறுதுணையாக இருந்த 9 பேரையும் போலீஸார் தங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவந்தனர். இவர்களிடம் கடலூர் மாவட்டப் போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்[2].
ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அஷ்ரப் அலி[3]: விசாரணையில் அவருக்கும் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்தது. அஷ்ரப் அலி பிடிபட்ட தகவல் அறிந்து ராஜஸ்தான் மாநிலம் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு குசால்சிங், இன்ஸ்பெக்டர் புஷ்பேந்திரசிங் ரத்தோர் மற்றும் போலீசார் கடலூர் வந்தனர். விசாரணைக்கு பின்னர் மே.2, 2015 அன்று மதியம் கடலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அஷ்ரப் அலியை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது தீவிரவாதி அஷ்ரப் அலிக்கு ஜோத்பூர் கோர்ட்டு ஏற்கனவே பிடிவாரண்டு பிறப்பித்து இருப்பதால் அவரை ராஜஸ்தான் மாநிலத்துக்கு அழைத்து செல்வதற்கு அனுமதி வழங்கக்கோரி நீதிபதியிடம் ராஜஸ்தான் போலீசார் மனு கொடுத்தனர். இந்த மனுவை ஏற்றுக்கொண்டு அஷ்ரப் அலியை 5 நாட்களுக்குள் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோபர் உத்தரவிட்டார். இதை அடுத்து தீவிரவாதி அஷ்ரப் அலியை போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் சென்னைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து விமானம் மூலம் ஜோத்பூருக்கு அழைத்து செல்லப்பட்டார்[4].
பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளியான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரியாஷ் பட்டேல் என்பவனுக்கும் அஷ்ரப் அலிக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு: கைது செய்யப்பட்ட தீவிரவாதி அஷ்ரப் அலி பற்றிய திடுக்கிடும் தகவல்களை ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பேந்திரசிங் ரத்தோர் நிருபர்களிடம் கூறினார். அவர் கூறியதாவது: “இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுகிறவர்களை அழிக்க வேண்டும் என்பதற்காக இளைஞர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி ஆலோசனை வழங்குவது தான் தீவிரவாதி அஷ்ரப் அலியின் வேலை. ஜோத்பூரில் பல்வேறு இடங்களில் இதுபோன்று இளைஞர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி இருக்கிறார். இதுபோன்று ஆலோசனை வழங்கும் அமைப்புக்கு அவர் தலைவராக இருந்துள்ளார். பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளியான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரியாஷ் பட்டேல் என்பவனுக்கும் அஷ்ரப் அலிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ரியாஷ் பட்டேல் சொல்வதைத்தான் அஷ்ரப் அலி செய்வான். அஷ்ரப் அலியும் அவனது கூட்டாளிகளும் போலியான முகவரி கொடுத்து செல்போன்களை பயன்படுத்தி இருப்பதை கண்டுபிடித்தோம். அந்த செல்போன் சிம்கார்டுகளை வைத்து ரியாஷ் பட்டேலுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதை அறிந்து கொண்டோம்”.
மதபோதகர் போர்வையில் பரங்கிப்பேட்டை மசூதிக்கு வந்த அஷ்ரப் அலி: “தமிழகத்தில் மதபோதனை செய்வதற்காக டெல்லியில் இருந்து ஒரு குழுவினர் கடந்த ஏப்ரல் 2–ந் தேதி டெல்லியில் இருந்து ரெயில் மூலம் தமிழகம் வந்தனர். அந்த குழுவில் அஷ்ரப் அலியும் எப்படியோ இணைந்து கொண்டான். மதபோதகர் போர்வையில் அவனும் தமிழகம் வந்துள்ளான். தமிழகம் வந்த அந்த குழுவில் 9 பேர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள். 3 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இவர்கள் கடலூர் மாவட்டம் சிதம்பரம், பின்னூர் ஆகிய பகுதிகளில் மதபோதனை செய்துவிட்டு கடந்த 28–ந் தேதி பரங்கிப் பேட்டைக்கு வந்துள்ளனர். இதையடுத்து அஷ்ரப் அலியை பிடிப்பதற்காக நாங்கள் தமிழ்நாட்டு போலீஸ் உதவியை நாடினோம். சிதம்பரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாராம் மற்றும் போலீசார் தீவிரவாதி அஷ்ரப் அலியை பொறி வைத்து பிடித்துள்ளனர். அஷ்ரப் அலியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த இருக்கிறோம். அப்போது அவன் இதற்கு முன்பு எங்கெல்லாம் சென்று கூட்டம் நடத்தி சதி திட்டம் தீட்டி இருக்கிறான் என்பது தெரியவரும்”, இவ்வாறு அவர் கூறினார்[5].
சிதம்பரம் பகுதியில் பல்வேறு பள்ளிவாசல்களில் தங்கியிருந்தார் தீவிரவாதி அசரப் அலி[6]: போலீஸாரால் தேடப்பட்டு வந்த அசரப்அலி புதுதில்லியிலிருந்து தமிழகத்திற்கு வந்த மதபோதகர்கள் குழுவினருடன் பல்வேறு பள்ளிவாசல்களில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சிதம்பரம், பின்னத்தூர், லால்பேட்டை, பரங்கிப்பேட்டையில் உள்ள பள்ளிவாசல்களில் கடந்த ஏப்.20-ம் தேதி முதல் தங்கியிருந்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அசரப்அலியுடன் பரங்கிப்பேட்டை பள்ளிவாசலில் தங்கியிருந்த 12 மத போதகர்களை போலீஸார் கடலூர் அருகே உள்ள தூக்கனாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் மதபோதகர்களுக்கும், தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பில்லை என உறுதி செய்த போலீஸார் மத போதர்கள் 12 பேரையும் சிதம்பரம் வ.உ.சி தெருவில் உள்ள பள்ளிவாசலில் ஒப்படைத்தனர். இவர்கள் அனைவரும் தில்லிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும் என போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.
© வேதபிரகாஷ்
23-11-2015
[1] மாலைமலர், கைதான தீவிரவாதி அஷ்ரப் அலி பாகிஸ்தான் உளவாளியுடன் தொடர்புடையவர், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, மே 03, 2014. 10:46 AM IST
http://www.maalaimalar.com/2014/05/03104632/Pakistani-spy-arrested-militan.html
[2]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article5972545.ece
[3] http://www.dinamani.com/latest_news/2014/05/03/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1/article2203914.ece
[4] தினமணி, சிதம்பரம் பகுதியில் பல்வேறு பள்ளிவாசல்களில் தங்கியிருந்தார் தீவிரவாதி அசரப் அலி, By ஜி.சுந்தர்ராஜன், சிதம்பரம், First Published : 03 May 2014 06:55 PM IST.
[5] தமிழ்.இந்து, பரங்கிப்பேட்டையில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி கைது, Published: May 3, 2014 10:24 IST, Updated: May 3, 2014 10:24 IST
[6] தினமணி, சிதம்பரம் பகுதியில் பல்வேறு பள்ளிவாசல்களில் தங்கியிருந்தார் தீவிரவாதி அசரப் அலி, By ஜி.சுந்தர்ராஜன், சிதம்பரம், First Published : 03 May 2014 06:55 PM IST.
Explore posts in the same categories: அரேபியா, இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதம், இராக், இரான், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய நாடு, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசிஸ்குறிச்சொற்கள்: அவமதிக்கும் இஸ்லாம், அஷ்ரப் அலி, இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐசிஸ், குண்டு வெடிப்பு, ஜிஹாத், ஜெய்ப்பூர், துருக்கி, பரங்கிபேட்டை, பாகிஸ்தான், புனிதப்போர், முகமதியர், முஸ்லீம்கள்
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்