சென்னையிலிருந்து பெங்களூர் வழியாக ஐசிஸ்.சில் சேர சென்ற ஜிஹாதிகள்!

சென்னையிலிருந்து பெங்களூர் வழியாக ஐசிஸ்.சில் சேர சென்ற ஜிஹாதிகள்!

Muslim youth become ISIS supporters, warriors

தமிழக ஜிஹாதிகள் துருக்கிக்குச் சென்றது எப்படி?: இருவரையும் தொடர்ந்து கண்காணித்து வரும் உளவு துறை அதிகாரிகள் அவர்கள் துருக்கி வரை செல்ல உதவி செய்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்[1]. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில், தமிழக வாலிபர்கள் சேர முயன்ற விவகாரம் போலீசாரிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்காசிய நாடுகளான இதுகுறித்து ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூறியதாவது[2]: “சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்த பி.காம்., பட்டதாரியும், சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்த, கரூரைச் சேர்ந்த அவனது நண்பனும் .எஸ்., அமைப்பில் சேர முயன்று, துருக்கியில் பிடிபட்டு, நாடு கடத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வாலிபர்களின் குடும்ப பின்னணி, நண்பர்கள் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்து வருகிறோம். மேலும், .எஸ்., அமைப்புக்கு, தமிழகத்தில் ஆள் பிடிக்கும் ஏஜன்ட்கள் உள்ளனரா; வாலிபர்கள் துருக்கி வரை செல்ல பண உதவி செய்தது யார்; விசா பெற்றுத் தந்தோருக்கு, .எஸ்., பயங்கரவாதிகளுடன் நேரடி தொடர்பு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விரிவாக விசாரணை நடக்கிறது”, இவ்வாறு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூறினர்[3]. முதலில் அவர்கள் போலீஸார் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. பிறகு, அவர்களது குடும்பத்தாரை வரவழைத்தபோது, அழுது கொண்டே விசயங்களை வெளியிட்டனர். தாங்கள் வேலைதேடித்தான் சென்றோம் என்று கூறினர்.

ISIL Chennai terror nexus - The Hindu - a tale of two friends

தமிழ்நாடும், .எஸ் தொடர்புகளும்: தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் ஐ.எஸ் பற்றிய வழக்குகள் பல நிலுவையில் உள்ளன[4]. ஆகஸ்ட்.2014ல், ராமநாதபுரம் மசூதி முன்பாக 26 முஸ்லிம் இளைஞர்கள் ஐ.எஸ் டி-சர்ட் போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு, சமூகவலைதளத்தில் பரப்பினர். விசாரித்து எச்சரித்து அவர்கள் அனுப்பப்பட்டனர். செப்டம்பர் 2014ல், சென்னையைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் இளைஞன் தற்கொலை குண்டுவெடிப்பில் கொலையுண்டது தெரியவந்தது. ஆகஸ்ட் 2014ல், வேலூரைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் இஞ்சினியர் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் ஐ.எஸ்.சில் சேர்ந்ததாக தெரிந்தது. தென்னிந்தியாவில் 150 ஐசிஸ் ஆதரவாளர்கள் உள்ளனராம்[5]. அப்படியென்றால், தமிழகத்தில் சுமார் 50 பேராவது இருக்க வேண்டும். “தி இந்து”, “இரு நண்பர்களின் கதை” என்று ஒரு கதையை “ஐ.எஸ் பைல்” என்ற படத்துடன் வெளியிட்டுள்ளது. இருவரும் ஜிஹாதித்துவத்தில் ஊறியவகளாக, தீவிரவாதிகளாக இருந்தாலும், ஏதோ “இரு நண்பர்களின் கதை” என்ற ரீதியில், தனக்கேயுரிய பாணியில் வெளியிட்டுள்ளது. அவர்கள் இருவரும் சென்னையில் நியூ காலேஜில் படித்தவர்கள் தாம். அக்கதை சுருக்கம் பின்வருமாறு:

ISIL Chennai terror nexus - The Hindu graphics

இரு .எஸ் தீவிரவாதிகளின் கதை: ஹாஜா பக்ருத்தீன் உஸ்மான் அலி [Haja Fakkrudeen  Usman Ali] மற்றும் குல் மொஹம்மது மராச்சி மரக்காயர் [Gul Mohamed Maracachi Maraicar] இருவரும் பறங்கிப்பேட்டை அரசு பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். பிறகு ராயப்பேட்டை நியூ காலேஜில் சேர்ந்தனர். மரைக்காயர் ஐந்து வருடங்கள் சவுதி அரேபியாவில் இருந்து 2007ல் சிங்கப்பூருக்கு வந்தான். அதாவது 2002-07 வருடங்களில் அங்கிருந்திருக்கிறான். சிங்கப்பூரில் சாப்ட்வேர் வேலையில் இருந்தான். பிறகு, சில வருடங்கள் கழித்து இருவரும் சிங்கப்பூரில் சந்தித்தனர். 2008ல் அலி சிங்கப்பூர் குடிமகனானான்[6]. ஆனால், நவம்பர் 2013ல் சிரியாவுக்குச் சென்றதாக தெரிகிறது. இருவரும் முஸ்லிம்களின் நிலைப்பற்றி விவாதித்தனர். பிப்ரவரி 27, 2014 அன்று பக்ருத்தீனை தீவிரவாதத்திற்குட்படும் வகையில் முயன்றதாகவும், வன்முறையில் ஈடுபட தூண்டியதாகவும் மரைக்காயர், சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டான்[7]. பக்ருத்தீன் அலியின் மனைவி, குழந்தைகளுடன் ஜனவரி.22, 2014 அன்று அபுதாபி வழியாக துருக்கிற்கு சென்றான். அலி இப்பொழுது சிரியா-துருக்கி எல்லையில் இருக்கிறான்[8]. அலி சிரியாவில் இருந்தாலும், அடிக்கடி சென்னைக்கு வந்துள்ளான். சென்னையில் டிசம்பர் 2013 மற்றும் ஜனவரி 2014 காலத்தில் இருந்தபோது, சில நியூ காலேஜ் மற்றும் இதர மாணவர்களை தீவிரவாதத்திற்கு இழுத்துள்ளான். கடலூரில் ஒரு குரான் பள்ளிக்கூடத்தை நடத்தி வருகிறான். இவன் ஜிஹாதிகளை சேர்க்க ஒரு குழுவை நடத்தி வருகிறான். மாத சம்பளம் ரூ.20,000/- மற்றும் ஜிஹாதில் இறக்க நேர்ந்தால் ரூ.20 லட்சம் குடும்பத்திற்கு கொடுக்கப்படும் என்ற விவரங்களும் அறியப்பட்டன[9]. இப்பொழுது பக்ருத்தீன் ஐசிஸ்.சிக்காக போராடுகிறான், மரக்காயர் சிறையில் இருக்கிறான்[10].  நான் இப்படி எழுதி முடிக்கும் வேலையில், “தி ஹிந்து” தமிழிலும் அக்கதையை விவரமாக வெளியிட்டுள்ளது.

பக்ருத்தீன், மரக்காயர் சிரியா தொடர்புகள்- போட்டோ

பரங்கிப்பேட்டையிலிருந்து .எஸ். முகாம் வரை: இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதை (தி இந்து)[11]: தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டைதான் இவர்கள் இருவரும் பிறந்து வளர்ந்த ஊர். பால்ய நண்பர்களாகிய இவர்கள் உள்ளூர் அரசுப் பள்ளியில் உயர் கல்வியை முடித்தனர். பின்னர் இருவருமே சென்னை புதுக் கல்லூரியில் (நியூ காலேஜ்) பட்டம் பயின்றனர். பட்டப்படிப்புக்குப் பின்னர் சில பல ஆண்டுகள் உருண்டோடின. மரைக்காயர் சவுதியிலும், ஃபக்ருதீன் சிங்கப்பூரிலும் பணியாற்றி வந்தனர். இந்தநிலையில் இருவரும் சிங்கப்பூரில் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். அந்த சந்திப்பில் அவர்கள் உணர்ச்சிகரமாக விவாதித்தனர். உலகளவில் முஸ்லிம்கள் சந்திக்கும் இன்னல்கள் என்னவென்பதே அந்த விவாதத்தின் கருப்பொருளாக இருந்தது. அந்த விவாதம் இருவரின் வாழ்க்கை திசையையும் மாற்றியது. நண்பர்கள் இருவரில் ஒருவர் இப்போது இந்தியச் சிறையில் இருக்கிறார். மற்றொருவர் சிரியாவில் ஐ.எஸ். படையில் தன்னை இணைத்துக் கொண்டுவிட்டார். அவர் எந்த களத்தில் போரில் இருக்கிறாரோ?! சிங்கப்பூர் நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் ஹாஜா ஃபக்ருதீன் இப்போது சிரியாவில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது நண்பர் முகமது மரகாச்சி மரைக்காயர் சிறையில் இருக்கிறார். இவர்கள் இருவரின் கதையும் சமூக வலைதளங்கள் வாயிலாக ஐ.எஸ். கொள்கை உலகளவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

© வேதபிரகாஷ்

23-11-2015

[1] http://www.maalaimalar.com/2015/11/21120740/intelligence-investigation-2-t.html

[2] தினமலர், .எஸ்., அமைப்பில் தமிழக வாலிபர்கள், நவம்பர் 22, 2015.02:57.

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1392623

[4] http://indianexpress.com/article/india/india-news-india/two-chennai-men-deported-from-turkey-for-trying-to-join-is/

[5] http://www.thehindu.com/news/national/150-is-supporters-in-south-india/article7904410.ece?ref=relatedNews

[6] https://www.youtube.com/watch?v=4lxEp4D8FTs

[7] http://timesofindia.indiatimes.com/nri/other-news/Singapore-Indians-involvement-in-Syrian-conflict-being-probed/articleshow/32542736.cms

[8] Singapore has deported an Indian-origin man for radicalising and helping a compatriot go to strife-torn Syria and have launched a probe into his journey “with the intention to undertake violence”. The Singapore Ministry of Home Affairs deported Gul Mohamed Maracachi Maraicar, 37, for radicalising Haja Fakkurudeen Usman Ali, 37, and helping him to go to Syria. Gul is a permanent resident of Singapore and had worked there as a system analyst. Ali, who worked as a supermarket manager and became a citizen of Singapore in 2008, allegedly left the country last November to fight against forces loyal to Syrian President Bashar al-Assad, the Ministry said Saturday. Officials were informed of his trip only once he left Singapore. The ministry, however, refused to comment on the investigation and deportation of Gul, a report in The Sunday Times said.

http://indianexpress.com/article/india/india-others/singapore-deports-indian-man-for-syrian-links/

[9] http://www.thehindu.com/news/national/is-files-a-tale-of-two-friends-one-makes-it-to-syria-the-other-cools-his-heels-in-jail/article7900874.ece?ref=relatedNews

[10]  The Hindu, A tale of two friends: ne makes it to Syria, the other cools his heels in jail, reported by Josy Joseph, New Delhi, November 21, 2015.11:14 IST.

[11]http://tamil.thehindu.com/india/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/article7903456.ece

Explore posts in the same categories: ஃபேஸ்புக், அடிப்படைவாதம், இந்திய முஜாஹித்தீன், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய நாடு, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ்ஐஎஸ், ஐசிஸ், Uncategorized

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: