தாய்மார்கள் தங்கள் மகன்களை என்கவுன்டரில் கொலை செய்ய்யப் படுவார்களோ என்று அச்சப்படுகின்றனரே – அப்படியென்றால் அவர்களால் கொலை செய்யப் பட்டவர்களின் தாய்மார்கள், மனைவிமார்கள், சகோதரிகள் என்ன பாட்டு பாட்டிருப்பர், இன்றும் தவித்துக் கொண்டிருப்பர்?
தாய்மார்கள் தங்கள் மகன்களை என்கவுன்டரில் கொலை செய்ய்யப் படுவார்களோ என்று அச்சப்படுகின்றனரே – அப்படியென்றால் அவர்களால் கொலை செய்யப் பட்டவர்களின் தாய்மார்கள், மனைவிமார்கள், சகோதரிகள் என்ன பாட்டு பாட்டிருப்பர், இன்றும் தவித்துக் கொண்டிருப்பர்?
புழல் சிறை மோதல் எதற்காக, என்கவுன்டருக்கான ஒத்திகையா…?- பிலால் மாலிக் சகோதரர் சந்தேகம்[1]: பிலால் மாலிக் உள்ளிட்டவர்களை என்கவுன்டர் செய்யவே, புழல் சிறையில் போலீசார் மோதல் நாடகம் நடத்தி இருக்கலாம் என பிலால் மாலிக்கின் சகோதரர் கஜினி முகம்மதுசந்தேகம் எழுப்பியுள்ளார்[2]. “போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், பண்ணா இஸ்மாயில் உள்ளிட்டோர் இவர்கள் உயர் பாதுகாப்பு சிறையில் தனியாக அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் 25-09-2015 அன்று ஜெயிலர் இளவரசனை இவர்கள் தாக்கியதாகவும், அவரை காப்பாற்ற சென்ற வார்டன்கள் முத்துமணி, ரவிமோகன், செல்வின் தேவராஜ் ஆகியோர் அவர்களை திருப்பி தாக்கியதாகவும், பதிலுக்கு வார்டன்களை தீவிரவாதிகள் தாக்கியதாகவும் சிறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் காயம் அடைந்த சிறை அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறைத்துறை ஏடிஜிபி திரிபாதி, இரவு சிறைக்கு சென்று கைதிகளிடம் சமாதானம் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், டி.வியில் காயம்பட்ட சிறை அதிகாரிகளைத்தான் காட்டுகிறார்களே தவிர, போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், இஸ்மாயில் இவர்களை காட்டவில்லை”. இவையெல்லாம் யாரோ சொல்லிக் கொடுத்து பேசப்பட்டவை என்று நன்றகவே தெரிகிறது[3].
ஆயுதங்களுடன் இருக்கும் சிறை அதிகாரிகளை தாக்கும் அளவுக்கு நமது காவல்துறை பலவீனமானதா?: இப்படி கேள்வி கேட்டு தொடர்கிறார் கஜினி முகமது, “சிறைக்குள் வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள இவர்கள் எப்படி ஒன்றாக சேர முடியும். அப்படியே சேர்ந்தாலும் ஆயுதங்களுடன் இருக்கும் சிறை அதிகாரிகளை இவர்களால் தாக்க முடியுமா? அவ்வளவு பலவீனமானதா நமது காவல்துறை?’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்[4]. புழல் சிறை அதிகாரி இளவரசன் மிகவும் மோசமாக நடந்து கொள்வதாக குற்றம்சாட்டியுள்ள கஜினி முகம்மது[5], இந்த வழக்கை மெதுவாக நடத்தி வருவதாகவும், இருக்கிற கொலை வழக்கு அனைத்தையும் இவர்கள் மீது போட்டுள்ளதாகவும் போலீசார் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்[6]. இப்போது சிறையில் நடந்திருப்பதாக சொல்லப்படும் தாக்குதலில் போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், இஸ்மாயில் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கலாம் என கஜினி சந்தேகம் எழுப்பியுள்ளார். மேலும், இவர்களை சிறைக்கு மாற்றுவதாக அறிவித்திருப்பது வழக்கை நடத்த முடியாமல் என்கவுன்டர் செய்ய திட்டமிட்டிருப்பதுபோல் தெரிகிறது. தமிழக அரசு, கைதிகளை ஒரே மாதிரியாக அணுகி அவர்களை காப்பாற்ற வேண்டும்” என்றும் கஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்[7]. மாதம் ஒருமுறை இவர் சென்று வருவதினால், இவருக்கு மேலும் விசயங்கள் தெரியும் போலிருக்கிறது. பன்னா இஸ்மாயில் நேற்று மதியம், மதுரை சிறைக்கு கொண்டு வரப்பட்டார். அவர் ரிமாண்ட் கைதிகள் உள்ள 2 வது ‘செல்’லில் அடைக்கப்பட்டார். அவரை சிறை காவலர்கள் மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது[8].
பக்ருதீனின் தாய் சையது மீரான், பிலால் மாலிக்கின் தாய் மும்தாஜ் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி: சிறை நிலவரம் குறித்து மதுரை நெல்பேட்டையை சேர்ந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதற்கிடையில் பக்ருதீனின் தாய் சையது மீரான், பிலால் மாலிக்கின் தாய் மும்தாஜ் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது[9]: “சிறையில் போலீசார் தாக்கப்பட்டது குறித்து டி.வி.யில் பார்த்து தெரிந்து கொண்டேன். பாதுகாப்பு மிகுந்த சிறையில் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிறைக்காவலர்களை எப்படி தாக்க முடியும். காயம்பட்ட அவர்களை மட்டும் காண்பிக்கிறார்கள். கடந்த முறை நாங்கள் அவர்களை சந்திக்க முயன்ற போது, ஜெயிலர் எங்களை மோசமாக நடத்துகிறார். நோன்பு கஞ்சியை கூட சரியாக தருவதில்லை. மேலும் எங்களிடம் வேண்டுமென்றே வம்பு செய்கிறார் என்று கூறினார்கள். நாங்கள் இது குறித்து உயர் அதிகாரியிடம் தெரிவித்தோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. மேலும் அங்கு கலவரம் ஏற்படுத்தி, அவர்களை என்கவுண்ட்டர் செய்ய தான் திட்டம் தீட்டி உள்ளனர். முதியவர்களாகிய நாங்கள் வெகு தூரத்திற்கு சென்று அவர்களை சந்திக்க முடியவில்லை. எனவே அரசு அவர்களை நாங்கள் எளிதில் சந்திக்கும் வண்ணம் மதுரை அல்லது திருச்சி சிறைக்கு மாற்ற வேண்டும். நாங்கள் அடிக்கடி சந்திப்பதால் அவர்கள் திருந்த அதிக வாய்ப்பு உள்ளது. அதை விட்டு, விட்டு அவர்களை தனித்தனியாக பிரித்து என்கவுண்ட்டர் செய்ய சதி நடப்பதாக எங்களுக்கு தகவல் வருகிறது. திருந்தி வாழ நினைக்கும் அவர்களின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட கூடாது. அவர்களை அருகில் உள்ள சிறைக்கு மாற்ற வேண்டும்”, இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்[10]. பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள உயர் பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், ஜாகிர் உசேனை அடித்து கலாட்டா செய்து, கலவரம் உண்டாக்கி ஜெயிலர், வார்டன் மற்றும் போலீஸாரைத் தாக்கியதால், அவர்கள் வெவ்வேறு சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
“திருந்தி வாழ நினைக்கும் அவர்களின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட கூடாது”: குண்டுவெடிப்பு, கொலைகள், அப்பாவி மக்களின் உயிர்பலி, குடும்பங்கள் அதோகதி, தந்தையர்களை இழந்த மகன்கள் – மகள்கள், கணவர்களை இழந்த மனைவிகள், மகன்களை இழந்த தாயார்கள், சகோதர்களை இழந்த சகோதரிகள், இவர்களைப் பற்றி இந்த தாய்மார்கள் யோசித்துப் பார்த்திருப்பார்களா? பிறகு மகன்களை தீவிரவாத செயல்களில் ஈடுபட எப்படி சம்மதம் கொடுத்தனர், ஒப்புக் கொண்டனர்? அவர்களது நடவடிக்கைகளில் சந்தேகப்பட்டு, அவஎகளை அப்பொழுதே திருத்தி இருக்கலாமே? ஏன் அவ்வாறு செய்யவில்லை? “திருந்தி வாழ நினைக்கும் அவர்களின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட கூடாது”, என்று வேறு குறிப்பிட்டிருக்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாமானது? இவர்கள் திருந்தியிருந்தால், புழல் ஜெயிலில் இத்தகைய கலவரம், தாக்குதல், முதலியன நடந்திருக்காதே? சித்தூரில் குடும்பம் முழுவதும் சேர்ந்து கொண்டு தானே இதே தீவிரவாதிகளுக்கு உதவி செய்தனர்? குழந்தைகளை முன் வைத்து, தப்பிச் செல்லப்பார்த்தனரே? அவர்களுக்கு உண்மைகள் எல்லாமே தெரிந்து தானே இருந்திருக்க வேண்டும். இல்லாமலா அவர்கள் போலீஸாரையும் எதிர்த்து வேலை செய்திருக்கிறார்கள்?
© வேதபிரகாஷ்
28-09-2015
[1] தினமலர், பிலால் மாலிக், பக்ருதீன் உயிருக்கு ஆபத்து போலீஸ் மீது சகோதரர் குற்றச்சாட்டு, செப்டம்பர்.26, 2015: 22.29.
[2] ஒன்.இந்தியா, புழல் சிறை மோதல் எதற்காக, என்கவுன்டருக்கான ஒத்திகையா…?- பிலால் மாலிக் சகோதரர் சந்தேகம், Posted by: Jayachitra, Published: Sunday, September 27, 2015, 12:21 [IST].
[3] முன்பு பெங்களூரு குண்டுவெடிப்பில் கைதானவர்களை, எங்களுக்கு முன்பாக கொண்டு வந்து காட்ட வேண்டும் என்று கைதானவர்களின் மனைவிகள் வழக்கு போட்டார்கள், பேட்டி கொடுத்தார்கள், ஆனால், குற்றவாளிகள் தாம் என்றவுடன் அமைதியாகி விட்டன. விளம்பரம் கொடுத்த ஊடகங்களும் அடங்கிவிட்டன.
[4] விகடன்.காம், புழல் சிறை மோதல் என்கவுன்டருக்கான நாடகமா? சந்தேகம் எழுப்பும் பிலால் மாலிக் சகோதரர், Posted Date : 16:05 (26/09/2015)
Last updated : 16:05 (26/09/2015).
[5] புழல் சிறைக்கு இவர்கள் மாற்றப்பட்டதில் இருந்து சிறை அதிகாரி இளவரசன் ரொம்பவும் மோசமாக நடந்து கொள்கிறார். நான் மாதம் ஒரு தடவை பார்க்க செல்வேன். என்னையே கடுமையாக திட்டுவார். http://www.vikatan.com/news/article.php?aid=52934
[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/bilal-malik-s-brother-questions-puzhal-prison-clash-incident-236563.html
[7] http://www.vikatan.com/news/article.php?aid=52934
[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1350856&Print=1
[9] மாலைமலர், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக்கை என்கவுண்டர் செய்ய சதி: உறவினர்கள் பேட்டி, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 27, 6:23 PM IST.
[10] http://www.maalaimalar.com/2015/09/27182331/Police-Fakhruddin-Bilal-Malik.html
Explore posts in the same categories: அடிப்படைவாதம், அடையாளம், அல் - உம்மா, அல்லா, அவமதிக்கும் இஸ்லாம், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்து-முஸ்லிம் உரையாடல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்துக்களைக் கொல்வது, இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல், என்கவுன்டர், காவலர், குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, கொலை, சிறை, ஜெயிலர், ஜெயில், புழல், வார்டன்குறிச்சொற்கள்: ஃபத்வா, அல்லா, அவமதிக்கும் இஸ்லாம், இந்திய முஜாஹித்தீன், இந்துக்கள், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், என்கவுன்டர், கலவரம், காபிர், சிறை, சிறைச்சாலை, ஜிஹாதி, ஜெயிலர், ஜெயில், புழல், போலீஸார், வார்டன்
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்