அல்-உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில் “ஹாலிவுட் ஸ்டைலில்” போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம் – என்கவுண்டர் அச்சமும், ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷனும் முன்பே நடந்த கதை தான்!
அல்–உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில் “ஹாலிவுட் ஸ்டைலில்” போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம் – என்கவுண்டர் அச்சமும், ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷனும் முன்பே நடந்த கதை தான்!
புழல் சிறை மோதல் எதற்காக, என்கவுன்டருக்கான ஒத்திகையா…?- பிலால் மாலிக் சகோதரர் சந்தேகம்: பிலால் மாலிக் உள்ளிட்டவர்களை என்கவுன்டர் செய்யவே, புழல் சிறையில் போலீசார் மோதல் நாடகம் நடத்தி இருக்கலாம் என பிலால் மாலிக்கின் சகோதரர் கஜினி முகம்மதுசந்தேகம் எழுப்பியுள்ளார்[1]. “போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், பண்ணா இஸ்மாயில் உள்ளிட்டோர் இவர்கள் உயர் பாதுகாப்பு சிறையில் தனியாக அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் 25-09-2015 அன்று ஜெயிலர் இளவரசனை இவர்கள் தாக்கியதாகவும், அவரை காப்பாற்ற சென்ற வார்டன்கள் முத்துமணி, ரவிமோகன், செல்வின் தேவராஜ் ஆகியோர் அவர்களை திருப்பி தாக்கியதாகவும், பதிலுக்கு வார்டன்களை தீவிரவாதிகள் தாக்கியதாகவும் சிறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் காயம் அடைந்த சிறை அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறைத்துறை ஏடிஜிபி திரிபாதி, இரவு சிறைக்கு சென்று கைதிகளிடம் சமாதானம் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், டி.வியில் காயம்பட்ட சிறை அதிகாரிகளைத்தான் காட்டுகிறார்களே தவிர, போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், இஸ்மாயில் இவர்களை காட்டவில்லை”.
ஆயுதங்களுடன் இருக்கும் சிறை அதிகாரிகளை தாக்கும் அளவுக்கு நமது காவல்துறை பலவீனமானதா?: இப்படி கேள்வி கேட்டு தொடர்கிறார் கஜினி முகமது, “சிறைக்குள் வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள இவர்கள் எப்படி ஒன்றாக சேர முடியும். அப்படியே சேர்ந்தாலும் ஆயுதங்களுடன் இருக்கும் சிறை அதிகாரிகளை இவர்களால் தாக்க முடியுமா? அவ்வளவு பலவீனமானதா நமது காவல்துறை?’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்[2]. புழல் சிறை அதிகாரி இளவரசன் மிகவும் மோசமாக நடந்து கொள்வதாக குற்றம்சாட்டியுள்ள கஜினி முகம்மது[3], இந்த வழக்கை மெதுவாக நடத்தி வருவதாகவும், இருக்கிற கொலை வழக்கு அனைத்தையும் இவர்கள் மீது போட்டுள்ளதாகவும் போலீசார் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்[4]. இப்போது சிறையில் நடந்திருப்பதாக சொல்லப்படும் தாக்குதலில் போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், இஸ்மாயில் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கலாம் என கஜினி சந்தேகம் எழுப்பியுள்ளார். மேலும், இவர்களை சிறைக்கு மாற்றுவதாக அறிவித்திருப்பது வழக்கை நடத்த முடியாமல் என்கவுன்டர் செய்ய திட்டமிட்டிருப்பதுபோல் தெரிகிறது. தமிழக அரசு, கைதிகளை ஒரே மாதிரியாக அணுகி அவர்களை காப்பாற்ற வேண்டும்” என்றும் கஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்[5]. மாதம் ஒருமுறை இவர் சென்று வருவதினால், இவருக்கு மேலும் விசயங்கள் தெரியும் போலிருக்கிறது.
என்கவுண்டர் அச்சமும், ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷனும்: பா.ஜ.க. மூத்த தலைவர் எல். கே. அத்வானி கொலை முயற்சி வழக்கில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள பக்ருதீனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது[6], ஆனால் தள்ளுபடி செய்யப்பட்டது. தீவிரவாதிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு, இத்தகைய பீதியைக் கிளப்பி விடுவது வழக்கமான வேலையாக இருக்கிறது. ஆனால், குண்டு வைத்தது உண்மை, அத்தகைய தீவிரவாத எண்ணம் உள்ளது உண்மை, அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற திட்டம் தீட்டியது உண்மை; கொலைகள் நடந்திருப்பது உண்மை; குண்டுகள் வெடித்திருப்பது உண்மை; அப்பாவி மக்கள் இறந்திருப்பது உண்மை; எல்லாவற்றையும் மறைத்து ஒன்றுமே இல்லை, நடக்கவில்லை என்று சொல்லித் தப்பித்துக் கொண்டால், நடந்தது நடக்கவில்லை என்றாகுமா?[7]. நீதிமன்றத்திலேயே, இவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் கொடுக்கப்படுகிறது.
நீதிமன்றத்தில் சட்டமீறல்கள்: அத்வானியைக் கொலை செய்ய திட்டமிட்ட ஜிஹாதிகளுள் ஒருவன் ஜாஹிர் ஹுஸைன் என்ற குற்றவாளி நீதிமன்றத்தில் செய்த கலாட்டாவால் பரப்பரப்பு ஏற்பட்டது. மாஜிஸ்ட்ரேட் முன்பு கொண்டுவரப்பட்ட அவன் பிளேடினால் தனது கழுத்தை அறுத்துக் கொள்ள முயன்றான். உடனே, போலீஸார் தடுத்து அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறிய காயத்துடன் அவன் தப்பினான். கடந்த ஏப்ரல் மாதம் கூட இதே மாதிரி தற்கொலை முயற்சியில் அவன் ஈடுபட்டான்[8]. அப்பொழுது தன்னை விடுவிக்குமாறு முறையீடு செய்திருந்தான். ஆனால் நீதிபதி அவனது மனுவை தள்ளுபடி செய்தார்[9]. அதாவது, இவ்வாறு கலாட்டா செய்வதே அவர்களுக்கு வாடிக்கையாக இருக்கிறது என்பதற்காக எடுத்துக் காட்டப்படுகிறது. நீதிமன்றத்தையே மதிக்காதவர்கள் சிறைச்சாலையை, சிறை போலீஸாரை எப்படி மதிப்பர்?
முகமது அனிபா டிஎஸ்பியைத் தாக்குதல் (08-07-2013): திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள கட்டகாமன்பட்டி எடமலையான் கோவில் அடிவாரத்தில் பதுங்கியிருந்த அத்வானி செல்லும் பாதையில் குண்டு வைத்த வழக்கில் முகமது அனீபாவை, டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் திங்கள்கிழமை 08-07-2013 அன்று மடக்கி பிடித்தனர்[10]. அப்பொழுது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்த முகமது அனீபா, டி.எஸ்.பி. கார்த்திகேயன் மீது வீசினார். இதில் டி.எஸ்.பி. கார்த்திகேயன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்[11]. இதனால் அந்த இடத்தில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவனை மடக்கி பிடித்த போலீசார், அவனிடம் வெடிமருந்து, ஜெலட்டின் குச்சிகள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். வத்தலகுண்டு காவல்நிலையத்தில், தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், வெடிமருந்து மற்றும் ஜெலட்டின் குச்சிகள் வைத்திருந்தாகவும், இந்து முன்னணி தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டு தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சி செய்தது உட்பட 5 வழக்குகள் முகமது அனீபா மீது டி.எஸ்.பி. கார்த்திகேயன் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ளது[12]. அன்று டி.எஸ்.பியை தாக்கியவர்களின் மனப்பாங்குதான், புழல் சிறையில் போலீஸாரைத் தாக்கியவர்களின் மனப்பாங்குடன் இயைந்து போகிறது. குற்றவாளிகள் மேன்மேலும் குற்றங்களை செய்து கொண்டே இருந்தால், ஒன்றும் செய்ய முடியாது என்ற போக்கும் அவர்களிடையே உள்ளது.
© வேதபிரகாஷ்
27-09-2015
[1] ஒன்.இந்தியா, புழல் சிறை மோதல் எதற்காக, என்கவுன்டருக்கான ஒத்திகையா…?- பிலால் மாலிக் சகோதரர் சந்தேகம், Posted by: Jayachitra, Published: Sunday, September 27, 2015, 12:21 [IST].
[2] விகடன்.காம், புழல் சிறை மோதல் என்கவுன்டருக்கான நாடகமா? சந்தேகம் எழுப்பும் பிலால் மாலிக் சகோதரர், Posted Date : 16:05 (26/09/2015)
Last updated : 16:05 (26/09/2015).
[3] புழல் சிறைக்கு இவர்கள் மாற்றப்பட்டதில் இருந்து சிறை அதிகாரி இளவரசன் ரொம்பவும் மோசமாக நடந்து கொள்கிறார். நான் மாதம் ஒரு தடவை பார்க்க செல்வேன். என்னையே கடுமையாக திட்டுவார். http://www.vikatan.com/news/article.php?aid=52934
[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/bilal-malik-s-brother-questions-puzhal-prison-clash-incident-236563.html
[5] http://www.vikatan.com/news/article.php?aid=52934
[6] Claiming himself to be a friend of Fakruddin, M Abdulla of Chennai alleged that he was arrested by CB-CID SIT on November 2 and was being kept in “illegal” custody in violation of Article 21 and 22 of the Constitution.
http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=5580797
[7] https://islamindia.wordpress.com/2011/11/11/plan-to-kill-advani-arrest-haeabus-corpus-petition-legal-warangles/
[8] http://zeenews.india.com/news/tamil-nadu/accused-in-advani-bomb-planting-case-causes-flutter-in-court_861146.html
[9] http://www.business-standard.com/article/pti-stories/accused-in-advani-bomb-planting-case-causes-flutter-in-court-113070901058_1.html
[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=753374
[11] http://www.dnaindia.com/india/1858935/report-one-more-case-filed-for-trying-to-plant-bomb-during-lk-advani-s-yatra-in-tamil-nadu-in-2011
[12] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=103304
Explore posts in the same categories: அப்துல்லா, இஸ்மாயில், என்கவுன்டர், கஜினி, கஞ்சா, கலவரம், குற்றச்சாட்டு, கைதி, செல்போன், ஜிஹாதித்தனம், ஜிஹாத், ஜெயிலர், ஜெயில், பண்ணா, புழல், மத-அடிப்படைவாதம், முகமது, முன்னா, வார்டன்குறிச்சொற்கள்: அல் - உம்மா, அவமதிக்கும் இஸ்லாம், ஆம்பூர், இந்திய முஜாஹித்தீன், இமாம், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஊடகத் தீவிரவாதிகள், கலவரம், குண்டு, குண்டு வெடிப்பு, குரான், கைதி, கைது, கொலை, கொலைவெறி, சிறை, ஜெயிலர், ஜெயில், புழல், வார்டன்
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்