ஆம்பூர் கலவரம் – முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைப்பது ஏன் – அப்பிரச்சினை இல்லாதிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? (4)

ஆம்பூர் கலவரம்முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைப்பது ஏன்அப்பிரச்சினை இல்லாதிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? (4)

ஆம்பூர் பவித்ரா.- பழனி

ஆம்பூர் பவித்ரா.- பழனி – தம்பதியராக இருந்தவர்களை பிரித்தது எது?

இந்திய கூட்டுக் குடும்பங்கள், கணவன்மனைவி உறவுகள் மறக்கப்படுகின்றனவா?: இந்திய கூட்டுக் குடும்பங்கள், குடும்பங்கள், கணவன்-மனைவி உறவுகள், தாய்-குழந்தை பாச-பந்தங்கள், இவையெல்லாம் மறக்கப்படுகின்றனவா, மறுக்கப்படுகின்றனவா, மறைக்கப்படுகின்றனவா, அவ்வாறான நிலைக்கு யார் காரணம் என்று தான் இவ்விசயத்தில் கவனிக்க வேண்டியுள்ளது. இப்படி குறிப்பிட்டால், பழமைவாதம் என்று கூட முத்திரைக் குத்துவார்கள். பெண்களை அடிமைப்படுத்தும் வழி என்றும் விளக்கம் கொடுப்பார்கள். ஊடகங்கள், டிவி-சீரியல்கள் கூட இத்தகைய முறைகளை கிண்டலடிக்கின்றன, தாக்குகின்றன, ஏன் கேவலப்படுத்தவும் செய்கின்றன. கணவன்-மனைவி உறவுகள் தேவையில்லை, திருமண பந்தங்கள் தேவையில்லை, தாலி தேவையில்லை, விருப்பம் இருந்தால், எந்த பெண்ணும், எந்த ஆணுடனும் சேர்ந்து வாழலாம்[1], தேவையில்லை என்றால் பிரிந்து விடலாம், வேறு ஒருவரை நாடி போகலாம், என்றெல்லாம் பேசி, வாழ்க்கை நடத்தவும் ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், அத்தகைய கூடி வாழ்ந்த காலங்களில் குழந்தைகள் பிறந்தால், அவற்றை என்ன செய்வார்கள், யார் அவர்களைப் பார்த்துக் கொள்வார்கள் என்பது பற்றி அவர்கள் விளக்குவது கிடையாது. இல்லை, அப்பிரச்சினையே வரக்கூடாது என்று குழந்தைகளைப் பெற்றெடுத்துக் கொள்ளாமல் இருந்து விடுவார்களா? இதைப் போன்ற கேள்விகளுக்கு விடை இல்லை.

லிவ் இன் வாழ்க்கை

லிவ் இன் வாழ்க்கை – சேர்ந்து வாழும் வாழ்க்கை என்ற மேனாட்டு “விபச்சாரத்தை” ஆதரிக்கும் சில இந்திய அறிவுஜீவிகள்

பெருகி வரும் லிவ்இன் உறவுமுறை[2]: இக்கட்டுரை மாலைமலரிலேயே வந்துள்ளதால், இங்கு கொடுக்கப் படுகிறது. “இப்போது திருமணம் செய்யப் போகும் தம்பதியரோ அல்லது காதலித்துக் கொண்டிருக்கும் ஆண்பெண் இருவருமோ திருமணத்திற்கு முன்னரே சேர்ந்து வாழும் வகையிலான உறவை ஏற்படுத்தியுள்ளலிவ்இன்முறை திருமண பந்தத்தை புதியதொரு நிலைப்பாட்டிற்கு கொண்டு சென்றுள்ளது. மேற்கத்திய உலகில் பரவலாக இருந்து வந்த இந்த உறவு லிவ்இன் முறை, இன்று பல்வேறு கலாச்சாரங்களையும் சேர்ந்த திருமண உறவுகளிலும் ஊடுருவியுள்ளது. லிவ்இன் உறவு என்பது அடிப்படையாகவே ஒரு சட்ட ரீதியில் அங்கீகரிக்கப்படாத திருமணமாகவும் மற்றும் இருவர் ஒன்று சேர்ந்து வாழ்வது என்றும் கருதப்படுகிறது. லிவ்இன்உறவு இன்னும் பல நாடுகளில் அங்கீகரிக்கப்படாத உறவாகவே விளங்குகிறது. இதற்கான சட்டங்களும், விதிமுறைகளும் இன்னும் உருவாக்கப்படவில்லை. இவ்வாறு இரண்டு பேர் உறவில் திருமணமின்றி வாழ்வது கிழக்கத்திய கலாசாரங்களின் படி இன்னும் தடை செய்யபட்டதாகவே இருக்கின்றது. எப்படியாயினும் மேற்கத்திய கலாசாரத்தில் இதை ஏற்றுக் கொண்டு இளைஞர்களில் பெரும்பாலானோர் பின்பற்றும் செயலாக இந்த உறவு முறை உள்ளது. இதன் வசதிகள் மற்றும் பிரச்சனையின்மை காரணமாக பெரும்பாலான இளைஞர்கள் இந்த லிவ்இன் வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகின்றனர். திருமணம் அதிகமான நேரமும், பொருளாதாரமும் தேவைப்படும் மிகுந்த விலையுயர்ந்த உறவாகும். திருமணம் தோல்வியில் முடிந்தால் அதற்கு விவாகரத்து செய்வதற்கும் அதிக செலவு தான். அப்படி இருக்கையில்லிவ்இன்உறவு திருமணத்திற்குப் பின் நாம் எவ்வாறு வாழப் போகிறோம் என்பதை ஒத்திகை பார்ப்பதை போன்ற அனுபவமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் இந்த உறவு நமக்கு உகந்ததாய் இருக்குமா. இல்லையா என்பதை புரிந்து கொள்ளவும் தீர்மானிக்கவும் முடியும். விருப்பமிருந்தால் திருமணம் அல்லது எந்த சலனமுமின்றி பிரிந்து விடலாம் என்பதே இவ்வுறவின் சாராம்சமாகும். ஆனால் இந்த உறவைப் பற்றிய பார்வைகளும், எண்ணங்களும் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகின்றன. சுதந்திரமும் வளைந்து கொடுக்கும் தன்மையும் உடைய இந்த உறவு முறை தான் இளைஞர்களை வெகுவாக கவர்கின்றது. இந்த உறவில் வாழும் தம்பதிகள் சிக்கல்களில் பிடிபடாமல் திருமண சட்ட திட்டங்களில் உட்படாமல் வாழ்வதை விரும்புகின்றனர்”.

கற்பு, குஷ்பு, இந்தியா, குடும்பம்

கற்பு, குஷ்பு, இந்தியா, குடும்பம் – கற்ப்பைப் பற்றி விளக்கம் கொடுத்த சினிமா நடிகை.

லிவ்இன் நிஜமா, கானல் நீரா?: “லிவ்இன் உறவில் வாழ்பவர்கள் பிள்ளைகளை பெறுவதைப் பற்றியோ, புதிய உறவினர்களை கவனிக்கும் முறைக்காவோ அல்லது அனைத்தையும் பகிர்ந்து கொள்வது என எந்தவிதமான முன்னேற்பாடுகளும் செய்யத் தேவையில்லாததால், தொந்தரவுகள் இல்லாத உறவு முறையாக உள்ளது. இப்படித் தான் நாம் வாழ வேண்டும் என்ற கட்டாயமும் இதில் கிடையாது. இருவரது பொறுப்பையும் சரி சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் கூட இல்லை. அனைவரும் ஒரே நபருடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று எண்ண மாட்டார்கள். ஒரு நபருடன் சிறிது காலம் வாழ்ந்த பின் மிகவும் சோர்வுற்று வேறு நபருடன் வாழ வேண்டும் என்று எண்ணுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்குலிவ்இன்முறையே மிக சிறந்த வழியாகும். திருமணத்துடன் ஒப்பிடும் போதுலிவ்இன்உறவை முறிப்பது மிகுந்த சுலபமான மற்றும் தொல்லை இல்லாத அனுபவமாக இருக்கும். பிரிவதற்கு முன் எந்த ஒரு சட்ட ரீத்யான செயல்களையும் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. உங்களது உணர்வுகளை மட்டும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளுதல் அவசியம். கடைசியாக மற்றும் மிகவும் முக்கியமான விபரம் என்னவென்றால்லிவ்இன்உறவில் விவாகரத்து தேவையில்லை. சில காலம் ஒன்றாக வாழ்ந்த பின்னும் இருவருக்குள்ளும் ஒத்துப் போகாவிடில் அவர்கள் பிரிந்து போவதற்கு முடிவு செய்து விட்டு, எந்த ஒரு சலனமுமின்றி பிரிந்து செல்லலாம். இதற்காக விவாகரத்து போன்ற விஷயங்களை நாடிச் செல்லத் தேவையில்லை[3].

Chastity-belt-wallpaper

Chastity-belt-wallpaper – கற்ப்பை எப்படித்தான் காப்பாற்றுவதோ?

ஆணை கற்பழிப்பாளியாக ஆக்குவது யார்?: மூன்று வயது குழந்தை கற்பழிக்கப்படுகிறது, இந்தியாவில் தினமும் இத்தனை பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள் என்றெல்லாம், பட்டியிலிட்டு, புள்ளி விவரங்களுடன் விவரங்களைத் தருகிறார்கள். ஆனால், பெண்கள் முறையாக ஆடை அணியவேண்டும், பள்ளி-கல்லூரிகளில் மாணவர்களுடன் பழகும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று யாராவது பேசினால், அவர்கள் மீது பெண்ணிய வீராங்கனைகள் பாய்கிறார்கள். மூன்று வயது குழந்தை கற்பழிக்க ஒரு ஆணுக்கு வக்கிரம் ஏன் வருகிறது என்று பொறுமையுடன் ஏன் ஆராயமல் இருக்கிறார்கள்? பந்த-பாசம், ஈவு-இரக்கம் முதலிய குணங்கள் இருந்தால், அவர்கள் அவ்வாறு செய்வார்களா? தாய்-சகோதரி முதலியவர்களோடு தானே, அம்மனிதனும் வாழ்கிறான், பிறகு, இன்னொரு பெண்ணை எப்படி தன்னுடைய பலிக்கடாவாகக் கருத முடியும், அவ்வாறே நடத்த முடியும்? அவ்வாறு ஒரு ஆண் உருவாகிறான் என்றால், அவனை உருவாக்குவது யார்? அவனுடைய தாயா, சகோதரியா, மனைவியா, மகளா, யார்?

Joint family - Illustration

Joint family – Illustration இத்தகைய அழகான கூட்டுக் குடும்பங்களைப் பிரிப்பது ஏன்?

பெண்கள் ஜாலியாக, சுதந்திரமாக வாழ வேண்டும் என்றால் என்ன?: நன்றாக சம்பாதிக்க வேண்டும், வாழ்க்கையினை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தைப் பெண் பெறும் போது, அவள் மற்றவற்றைக் கொடுக்கத் தயாராகிறாள். புகழும் வேண்டும் எனும்போது, இன்னும் கொடுக்க தயாராகி விடுகிறாள். மேலும், இன்று குறுக்குவழி என்று ஏதாவது இருந்தால் அல்லது பணம், இன்பம், புகழ் முதலியவற்றை பெறுவதற்கு அத்தகைய முறைகள், வழிகள் இருந்தால், அவற்றைப் பின்பற்றவவும் தயங்காமல், தயாராக இருக்கும் பெண்களையும் பார்க்க முடிகிறது. இங்கு கற்பு என்று பேசினால், 100% கற்புடன் எந்த பெண்ணும் இருக்க முடியாது, இல்லை என்ற வாதங்களை வைக்கப்படுகிறது[4]. இந்தியாவில், திருமணத்திற்கு முன்பாகவே, பல பெண்கள் உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள். இதனை ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன என்றும் எழுத ஆரம்பித்து விடுகிறார்கள்.  வாங்கும்-விற்கும் பொருட்களுக்கு தரநிர்ணயம், கட்டுப்பாடு, போன்ற முறைகளை வைத்துக் கொண்டிருக்கும் போது, பெண்களுக்கு ஏன் வைக்கக் கூடாது என்றால், ஆஹா, இது இந்தியாவில் தாலிபான்கள் வந்து விட்டார்கள் என்றும் விளக்கம் கொடுப்பார்கள்.

ஆம்பூர் பவித்ரா, ரிஷிதா, பழனி

ஆம்பூர் பவித்ரா, ரிஷிதா, பழனி – இக்குடும்பத்தை சீரழித்தது யார்? தாய்-குழந்தை விரோதத்தை உருவாக்கியது யார்?

பவித்ராவை வளர்த்து, பெரியாக்கியது அவளது பாட்டிதான். இப்பொழுது, அவளது மகளையும் வளர்ப்பது பாட்டிதான். இது கூட்டுக் குடும்பம் சிதறினாலும், இல்லையென்றாலும், உறவுகள் மறப்பதில்லை, மறுப்பதில்லை. அங்குதான், இந்திய பாரம்பரியம் வாழ்கிறது எனலாம். அப்பாட்டி, இதெல்லாம் என்னுடைய வேலையில்லை, நான் ஒன்றும் ஆயா இல்லை, இவ்வேளையை நான் பார்க்க முடியாது, என்றெல்லாம் பேச ஆரம்பித்தால், அப்பட்டியை யாராவது குறை கூற முடியுமா? பவித்ராவைப் பொறுத்த வரைக்கும், நாகரிகம், அந்நிய-மேனாட்டு தாக்கம், ஜாலியாக வாழ வேண்டும் என்ற போக்கு முதலியவை, திசை மாற வைத்து, சீரழித்துள்ளன. தன் மகளிடம் மிக்க பாசமும், அன்பையும் கொண்டுள்ள பழனியைப் பொறுத்த வரைக்கும், இன்றைக்கும், பவித்ராவை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பது போலிருக்கிறது. ஒருவேளை பழனியும் மற்ற பெண்களுடன் திரிய ஆரம்பித்திருந்தால், என்னவாகியிருக்கும்? பவித்ராவுக்கு, அதைச் சொல்லிக் காட்டி, வாதம் புரிய நன்றாக இருந்திருக்கும். நீதிமன்றத்தில், நீதிபதி அந்த அளவிற்கு காட்டமாக, அவளிடம் பேசியிருக்க முடியாது. ஒருவேளை, பழனியே மனு போட்டிருக்க தேவையில்லாமல் போயிருக்கும்.

© வேதபிரகாஷ்

07-08-2015

[1] http://cinema.dinamalar.com/tamil-news/30418/cinema/Kollywood/What-wrong-with-living-together-says-Nithya-Menon.htm

[2]  மாலைமலர், பெருகி வரும் லிவ்இன் உறவுமுறை, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, நவம்பர் 30, 11:04 AM ISTஇ

[3] http://www.maalaimalar.com/2013/11/30110410/Mounting-Live-In-relationship.html

[4] குஷ்பு, “சென்னையிலுள்ள பெண்கள் செக்ஸ் பற்றிய மனத்தடைகளைக் கடந்து வருகிறார்கள். பப்களிலும் டிஸ்கோதேக்களிலும் ஏராளமான பெண்களைப் பார்க்க முடிகிறது. ஒரு பெண் தனது பாய்பிரெண்ட் பற்றி உறுதியாக இருக்கும் போது அவள் தனது பெற்றோரிடம் சொல்லிக் கொண்டே அவனுடன் வெளியே போகலாம். பெண்கள் திருமணமாகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களிலிருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் போகிறவள் கன்னித்தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பாக்க மாட்டான். ஆனால் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது கர்ப்பமாகாமலும் பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்” .

Explore posts in the same categories: அம்பத்தூர், ஆம்பூர், கூட்டுக் குடும்பம், சகோதரி, செக்ஸ், சேர்ந்து வாழும், டெட்டா ஷூ, டெல்டா ஷூ, தாய், தாலி, பழனி, பவித்ரா, பாட்டி, பேத்தி, மோசம், லிவ்-இன், வாழ்க்கை, விவாக ரத்து

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: