அஹிம்சை பௌத்தர்கள் மற்றும் மத-அடிப்படைவாத முஸ்லிம்கள் இவர்களுக்கு இடையே பர்மா அல்லது மியன்மாரில் ஏற்பட்டுள்ள மோதல்கள், அவற்றின் பின்னணி – உண்மைகளும், கட்டுக்கதைகளும் (1)

அஹிம்சை பௌத்தர்கள் மற்றும் மத-அடிப்படைவாத முஸ்லிம்கள் இவர்களுக்கு இடையே பர்மா அல்லது மியன்மாரில் ஏற்பட்டுள்ள மோதல்கள், அவற்றின் பின்னணி – உண்மைகளும், கட்டுக்கதைகளும் (1)

map-rohingya muslims activities

map-rohingya muslims activities

1942ல் தேசிய பௌத்தர்களுக்கும், ரோஹிந்திய முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட நடந்த மோதல்கள்[1]: இரண்டாம் உலகப்போரின் போது, ஜப்பானிய ராணுவம் ஆங்கில காலனியான பர்மாவின் மீது படையெடுத்தது. ஆங்கிலேயப்படைகள் பின்வாங்கியதால், பௌத்த ராங்கைன் மற்றும் முஸ்லிம் ரோஹிங்யர்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டன. ரோஹிங்க முஸ்லிம்கள் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாகவும், சுதந்திரம் விரும்பிய தேசிய பர்மிய பௌத்தர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும் செயல்பட்டதால், இவர்களுக்கு இடையே உள்ள பிளவுகள் அதிகமாகின. ஜப்பானிய படையெடுப்பின் போதும், ரோஹிங்க முஸ்லிம்கள் அவர்களை எதிர்ப்பதற்கு பதிலாக, அரக்கானில் உள்ள மக்களைத் தாக்கி கொல்ல ஆரம்பித்தார்கள். இதனால் மார்ச்.28, 1942 அன்று ஏற்பட்ட மோதல்களில் 5000 முஸ்லிம்கள் மற்றும் 20,000 அரக்கான் பிரதேச மக்களும் கொல்லப்பட்டனர். அந்நேரத்தில் நுழைந்த ஜப்பானிய ராணுவமும் அங்குள்ள மக்களைத் தாக்கியது. இந்நிலையில்ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வெளியேஇனார்கள் – 22,000 முஸ்லிம்கள் சிட்டகாங் வழியாக (ஒன்றிணைந்த) இந்தியாவில் நுழைந்தார்கள், 40,000 பேர் சிட்டகாங்கிலேயே தங்கிவிட்டார்கள். இவ்விதமாக இம்மக்களிடையே பிளவு ஏற்பட்டது அடிக்கடி கலவரங்களில் முடிந்து வருகின்றன.

A Mujahideen leader surrendered arm to Brigadier Aung Gyi as part of the government's peace process in Buthidaung, Arakan, on 4 July 1961

A Mujahideen leader surrendered arm to Brigadier Aung Gyi as part of the government’s peace process in Buthidaung, Arakan, on 4 July 1961

ரோஹிங்கர்களின் ஆயுத போராட்டமும், பர்மா தேசியமும்: ஆங்கிலேயர்கள் உலகம் முழுவதிலும், பலதரப்பட்ட மக்களை, விவசாயத்திற்கு, பண்ணை மற்றும் தொழிற்சாலை வேலைகளுக்கு, ஒரு பகுதியில் உள்ள மக்களை இன்னொரு பகுதிக்கு குடியேற ஊக்குவித்தனர் மற்றும் மறைமுகமாகத் தூண்டி விட்டனர். கடல் கடந்த பகுதிகளில் அடிமைகளாகக் கூட்டிச் சென்று குடியேற்றினர். இதனால், புதியபகுதிகளில் குடியேறிய மக்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் எப்பொழுதும் பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தன. இரண்டாம் உலகபோருக்குப் பிறகு, காலனிய சக்திகள், அவரவர் ஆதிக்கத்தில் இருந்த நாடுகளை விட்டு வெளியேற தீர்மானித்தனர். அப்பொழுதும் தேசிய மற்றும் தேசவிரோத பிரிவினை சக்திகளுக்கு, காலனிய சக்திகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் தூண்டி விட்டன, உதவின. இங்கும் ரோஹிங்க முஸ்லிம்கள், பர்மீய தேசியத்துடன் இணையாமல், தனிநாடு கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்டை பிரதேசங்களில் உள்ள முஸ்லிம்களின் தூண்டுதல்களினால், அவர்கள் ஆயுத போராட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆனால், திடீரென்று ஆங்கிலேயர்கள் இந்தியாவை பலப்பகுதிகளாகப் பிரித்து, அவற்றிற்கு சுதந்திரம் கொடுக்க முடிவெடுத்தனர். இதனால், திபெத், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் (1947), இந்தியா (1947), இலங்கை (1947), பர்மா (1948) என்று பல நாடுகள் உருவாகின. ஆங்கிலேயரது நிர்வாகத்திற்கு முன்பு, இவை ஒன்றாகத்தான் இருந்தன. இதனால், இந்த புதிய நாடுகளில் பிரச்சினைகள் உருவாகின. குறிப்பாக முஸ்லிம்கள் அதிகமாக இருந்த பகுதிகளில் தனிநாடு கோரிக்கைகள் எழுந்தன. அவ்வாறு எழுந்தது தான் ரோஹிங்கிய முஸ்லிம்களின் பிரிவினைவாத செயல்கள். ஆனால், தேசிய பர்மீய மக்கள் அதனை எதிர்த்தனர். இது இப்பொழுது பௌத்த-முஸ்லிம் மக்களுக்கிடையே நடக்கும் மதவாத மோதல்களாகக் கருதப்படுகின்றன.

Rohingya Muslims 50 years back

Rohingya Muslims 50 years back

ஆங்கிலேயரை ஆதரித்த ரோஹிங்கிய முஸ்லிம்கள் (1941-45): இம்முஸ்லிம்கள் 1941ம் ஆண்டில் இங்கிலாந்தை ஆதரித்து வந்ததால், இவர்களுக்கும், மற்றவர்களுக்கும் மோதல்கள் இருந்து கொண்டே இருந்தன. பர்மா தான் தாய்நாடு எனும்போது, அவர்கள் எதற்காக ஆங்கிலேயர்களை ஆதரிக்க வேண்டும் என்பதனையும் கவனிக்க வேண்டும். இந்தியாவில் ஜின்னா அவ்வாறு வேலைசெய்து தனிநாடு கேட்டுக் கொண்டிருக்கின்ற காலத்தில் இங்கு இவர்கள் இவ்வாறு தங்களது விசுவாசத்தை காலனிய ஆதிக்கக் காரர்களுக்குக் காட்டி வந்தால், அந்நாட்டு மக்களுக்கு, முஸ்லிம்கள் மீது சந்தேகம் வரத்தான் செய்யும். மியன்மாரில் 90% பௌத்தர்கள் இருப்பதால், முஸ்லிம்களின் செயல்பாடுகள் சந்தேகத்துடனே பார்க்கப்பட்டது, இன்றும் பார்க்கப்படுகிறது. 1978 மற்றும் 1991 ஆண்டுகளுக்கு இடையில் ராணுவத்தால் மேற்கொண்ட முயற்சிகளில் 4,50,000 முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். ஆனால், அதே காலத்தில், இம்மூஸ்லிம்களுள் உள்ள சிலர்களின் தீவிரவாத தொடர்புகளும் எளிப்பட்டன. ரோஹிங்கிய முஜாஹித்தீனின் செயல்பாடுகள் அறியப்பட்டன.

Rohinghya school started in Japan

Rohinghya school started in Japan

ரோஹிங்கிய முஸ்லிம்களின் இடம் எது?: ரோஹிங்ய முகமதியர் மேற்கு பர்மாவில் வசிக்கும் பத்து முதல் பதினைந்து லட்சம் மக்கள் ஆவர். அவர்களில் பெரும்பாலோர் வடக்கில் பங்களாதேசம் மற்றும் மேற்கில் வங்காள விரிகுடா என்றுள்ள ராகைன் மாகாணத்தில் வாழ்ந்து வருகிறார்கள். பர்மா ராணுவ ஆட்சியின் கீழ் வந்ததும், தேசவிரோத குழுக்களை அடக்க ஆரம்பித்தார்கள். இதனால், ரோஹிங்கிய ஆயுத போராளிகளை தாக்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு உதவும் மற்ற ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீதும் நடவடிக்கை எடுத்தார்கள். இதனால், இவர்களில் ஆயிரக்கணக்காணோர் பங்களாதேசம், சவுதி அரேபியா, பாகிஸ்தான், தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்கு ஓடிவிட்டார்கள். மேற்கில் பங்களாதேசத்தில் உள்ள சிட்டகாங் பிரதேசம் எல்லாவித தீவிரவாதச் செயல்களுக்கும் பெயர் போனது. ரோஹிங்கிய முஸ்லிம்களுள் சிலர் அவர்களுடன் தொடர்பு வைத்துள்ளது மற்றும் பங்களாதேசம் வழியாக இந்தியாவிலும் நுழைகின்றனர். பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் வெறும் அகதிகளாக செயல்பட்டால் பரவாயில்லை, ஆனால், தாங்கள் முஸ்லிம்கள் என்ற மனப்பாங்கில் தீவிரவாதிகளுக்கு உதவி வருவதால், சுற்றியுள்ள நாடுகள் அவர்களை ஏற்க தயங்குகின்றனர்.

British soldiers on patrol in the ruins of the Burmese town of Bahe during the advance on Mandalay, January 1945

British soldiers on patrol in the ruins of the Burmese town of Bahe during the advance on Mandalay, January 1945

ரோஹிங்கிய முஸ்லிம்கள் யார்?: பர்மாவின் 1982 குடிமைச் சட்டத்தின் படி இவர்கள் அந்நாட்டுப் பிரஜைகளாகக் கருதப்படுவதில்லை. அவர்கள் அவ்வாறு நிரூபிக்க வேண்டும் என்றால், 1823ம் ஆண்டுக்கு முன்னரே அவர்களது மூதாதையர் அங்கு வந்து குடியேறிவிட்டதாக ஆதாரங்களைக் காட்டவேண்டும். ஆனால், அவ்வாறு காட்டுவது கடினமான காரியம் ஆகும். சமீபத்தில் இப்பிரச்சினையை அலசும் தமிழக ஊடகங்கள் பாரபட்சமான, குழப்பமான விசயங்களைக் கொடுத்து வருகின்றன. புத்த இனவாத குழுக்களுக்கு அஞ்சி மியான்மரிலிருந்து ஆயிரக்கணக்கான  ரோஹ்ங்கிய மக்கள் கடல் வழியாக படகுகளில்வெளியேறி வருகின்றனர் என்று தினகரன் கூறுகிறது[2]. இவர்களுக்கு அண்டை நாடுகள் அடைக்கலம் கொடுக்க மறுப்பதால் பலர் நடுக்கடலில் உண்ண உணவின்றி படகிலேயே உயிரழக்கின்றனர். மியன்மாரில் பிரதான மூன்று வகையாக‌ முஸ்லிம்கள்  இருக்கின்றார்கள் .

  1. பான்தாய்கள் ( பர்மிய பூர்வீகக் குடிகள் )
  2. பஷுஷ் ( சீனா , தாய்லாந்து பூர்வீகத்தினர் )
  3. ரோஹிங்கியா ( இந்தியா , பங்களா தேஷ் பூர்வீகத்தினர் ) என அறியப்படுகிறது.

இதில் ரோஹிங்கியா முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள் பங்காளி இனத்தவர்கள் எனவும் அவர்கள் மியன்மார் இனத்தவர்கள் அல்ல என்ற கருத்து மியான்மரில்  1956ல் பரவ ஆரம்பித்து இதன் விளைவாக நாடு பூர்வமாகவும் முஸ்லீம்களுக்கெதிரான நடவடிக்கைகள் ஆரம்பித்தன . இதனால், அவர்களின் குழந்தைகள் பள்ளிகளில் படிக்கக் கூட அனுமத் மறுக்கப்படுகிறது. அதே போல அரசு அல்லது தனியார் வேலையும் அவர்களுக்குக் கொடுக்கப்படமாட்டாது. இதனால் அவர்களது போக்குவரத்து ராகைன் மாகாணத்தின் எல்லைகளுக்குள் அடக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சாலைகள் போடுவதற்காக கற்களை உடைப்பது போன்ற வேலைகளை சம்பளம் இல்லாமல் செய்ய அவர்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். அவர்கள் வெளியில் எங்காவது செல்ல வேண்டுமானால், பர்மா ராணுவ அதிகாரிகள் அவர்களுடைய விலங்குகள், பொருட்கள் முதலியவற்றை லஞ்சமாகப் பெற்றுக் கொள்கிறார்கள். அவர்களையும் தேசிய நீரோட்டத்தில் கலக்க விடாமல், அடிப்படைவாத, தீவிரவாத முஸ்லிம்கள் தங்களது அதிகாரத்தில் வைத்திருப்பதால், போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் நடப்பது வாடிக்கையான விசயங்களாகி விட்டன. இப்படி விடாகொண்டான், கொடாகொண்டான் போக்கில் முஸ்லிம்களும், பௌத்தர்களும் செயல்பட்டு வருவதால், அப்பாவி முஸ்லிம்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

Rohingya burmese fightings

Rohingya burmese fightings

ரோஹிங்கிய முஸ்லிம்கள் மியன்மாரின் குடிமக்களே[3]: அஹிம்சைவாதிகளான பௌத்தர்கள் ஆக்ரோஷமான முஸ்லிம்களைக் கொடுமைப் படுத்துகிறார்கள் என்ற விசித்திரமான செய்திகள் வந்து கொண்டிருக்கும் வேளையில், மியன்மார் அவர்கள் தங்கள் பிரஜைகள் இல்லை என்று மறுக்கும் நிலையில், அவர்களைப் பற்றி, “தி இந்து” அவர்கள் இப்படி இருக்கலாம், அப்படியும் இருக்கலாம் என்ற போக்கில் இவ்வாறு எழுதியுள்ளது, “மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் வாழ்ந்து வருபவர்கள் ரோஹிங்கிய மக்கள் ஆவர். இவர்கள் பேசும் மொழி ரோஹிங்கிய மொழி. இவர்கள் மியான்மர் மண்ணின் மைந்தர்கள் என்று கல்வியியாளர்கள் சிலரும், மற்ற வரலாற்றாசிரியர்கள் சிலர் இவர்களை வங்காளத்திலிருந்து வந்து குடியேறியவர்கள் என்றும் கூறிகின்றனர்.  அதாவது மியான்மர், பர்மாவாக இருந்த போது பிரிட்டீஷ் ஆட்சியில் ரோஹிங்கிய மக்கள் குடியேறியவர்கள் என்று ஒருதரப்பினரும், 1948-ம் ஆண்டு பர்மா விடுதலையடைந்த பிறகு சிறிய அளவில் குடிபெயர்ந்தவர்கள் என்றும் மேலும் வங்கதேசம் தனிநாடாக 1971-ம் ஆண்டு போருக்கு பிறகு, உருவான பிறகு, சிறிதளவும் மியான்மரில் குடியேறியவர்கள் என்றும் பல்வேறு விதமாக இவர்களைப் பற்றி வரலாற்றுக்குறிப்புகள் உள்ளன”. இப்படி பல்வேறு கருத்துகள் உள்ளன என்றால், உண்மை என்ன என்பது தெரியவில்லை என்றாகிறது, இல்லை மியன்மார் அரசு கூறுவது சரி என்றாகிறது, அதாவது அவர்கள் வெளியிலிருந்து மியன்மாரில் நுழைந்தவர்கள் என்றாகிறாது. விகிபீடியா இவ்வாறான தகவல்களைக் கொடுக்கும் போது, “இதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியது” என்ற எச்சரிக்கையுடன் போட்டுள்ளது. ஆனால், தமிழ் ஊடகங்கள் அவற்றைப் பற்றிக் கவலைப்படுவது கிடையாது.

© வேதபிரகாஷ்

30-05-2015

[1]  Chan (Kanda University of International Studies), Aye (Autumn 2005). “The Development of a Muslim Enclave in Arakan (Rakhine) State of Burma (Myanmar)” (PDF). SOAS Bulletin of Burma Research 3

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=147664

[3] http://tamil.thehindu.com/world/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article7251897.ece?ref=relatedNews

Explore posts in the same categories: அரக்கான், அஹிம்சை, சிட்டகாங், பர்மா, புத்த மதம், பௌத்தர், பௌத்தர்கள், மியன்மார், முஜாஹித்தீன், ராக்கைன், ரோஹிங்ய, ரோஹிங்யா, ரோஹிஞ்ச, ஹிம்சை

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: