தடைசெய்யப்பட்ட சிமி தீவிரவாதிகள் தொடர்ந்து செயல்படுவது எப்படி – தெலிங்கானா என்கவுன்டர்கள், முன்னர் நடந்த கொலைகள், கொள்ளைகள், குண்டுவெடிப்புகள் (1)
தடைசெய்யப்பட்ட சிமி தீவிரவாதிகள் தொடர்ந்து செயல்படுவது எப்படி – தெலிங்கானா என்கவுன்டர்கள், முன்னர் நடந்த கொலைகள், கொள்ளைகள், குண்டுவெடிப்புகள் (1)
வாராங்கல் ஜெயிலிலிருந்து நீதிமன்றத்திற்கு செல்லும்போது, 5 சிமி தீவிரபவாதிகள் சுட்டுக்கொலை: தெலுங்கானா மாநிலம் வரங்கல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 5 சிமி தீவிரவாதிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் ஐதராபாத் அழைத்துச் சென்றனர். அலெர்–ஜான்கான் ஆகிய இடங்களுக்கு இடையே போலீசாரை தாக்கி 5 பேரும் தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் 5 பேரையும் சுட்டுக் கொன்றனர் . தெலங்கானா தலைநகர் ஹைதராபாதைச் சேர்ந்தவர் விக்ருதீன் அகமது (30). தெரீக்-கல்பா-இ-இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்பை உருவாக்கிய அவர் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார். இரண்டு போலீஸாரை சுட்டுக் கொன்றது, குஜராத் உள்துறை அமைச்சர் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவர் மீது உள்ளன . பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் விக்ருதீன் அகமதுவுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. தலைமறைவாக இருந்த அவர் கடந்த 2010-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளிகள் முகமது ஹனீப், சையது அகமது அலி, இஷார் கான், முகமது ஜாஹிர் ஆகியோரும் கைது செய்யப் பட்டனர். இவர்கள் விசாகப்பட்டினம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அங்கு வன்முறையில் ஈடுபட்ட தால் வாரங்கல் சிறைக்கு மாற்றப் பட்டனர். இந்நிலையில் விக்ருதீன் அகமது உள்ளிட்ட 5 பேரையும் ஹைதராபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸார் நேற்று அழைத்துச் சென்றனர். அப்போது போலீஸாரை தாக்கிவிட்டு அவர்கள் தப்பிக்க முயன்றபோது 5 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர் .
என்கவுன்ட்டர் நடத்தியது / நடந்தது எப்படி?: இந்த என்கவுன்ட்டர் குறித்து தெலங்கானா போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: வாரங்கல் சிறையில் இருந்து காலை 8.30 மணிக்கு விக்ருதீன் அகமது உள்ளிட்ட 5 பேரையும் வேனில் ஏற்றிக் கொண்டு போலீ ஸார் புறப்பட்டனர். அவர்களுடன் 17 போலீஸார் பாதுகாப்புக்கு சென்றனர். ஹைதராபாத்-வாரங்கல் நெடுஞ் சாலையில் கண்டிகாடா தண்டா என்ற இடத்தில் காலை 10.25 மணிக்கு வேன் வந்தபோது இயற்கை உபாதை கழிப்பதற்காக வேனை நிறுத்துமாறு விக்ருதீன் அகமது கோரினார். அந்த இடத்தில் போலீஸார் வேனை நிறுத்தினர். ஐந்து பேரும் கீழே இறங்கியவுடன் அருகில் நின்ற போலீஸாரின் துப்பாக்கியை பறித்து சுட முயன்றனர். சுதாரித்துக் கொண்ட மற்ற போலீஸார் அவர் கள் ஐந்து பேரையும் சுட்டு வீழ்த்தினர் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சம்பவ இடத்தில் வாரங்கல் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஏ.கே.ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநில போலீஸ் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். ஐந்து தீவிரவாதிகளின் உடல்களும் ஜாங்கோன் நகர அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.
2-வது என்கவுன்ட்டர் சம்பவம்: சில நாட்களுக்கு முன்பு நலகொண்டா மாவட்டம், சூர்யாபேட்டை பஸ் நிலையத்தில் நின்றிருந்த 2 போலீஸாரை சிமி தீவிரவாதிகள் இரண்டு பேர் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்துக்கு உட்பட்ட சூரியபேட் பஸ் நிலைய பகுதியில் கடந்த ஏப்ரல் 2–ந்தேதி அதிகாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு பஸ்சில் இருந்த மர்ம நபர்கள் 2 பேரை போலீசார் இறக்கி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசார் மீது திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு, அவர்களிடம் இருந்த துப்பாக்கியையும் பறித்து விட்டு தப்பி ஓடினர். இதில் ஒரு போலீஸ்காரர் மற்றும் ஒரு ஊர்க்காவல் படை வீரர் என 2 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒரு இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர் . விசாரணையில் இவர்களுக்கும் மற்ற சிமி தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது . போலீஸார் நடத்திய தீவிர வேட்டையில் 2 தீவிரவாதிகளும் [Aslam Ayub and Mohammed Aijajuddeen] 04-04-2015 அன்று சனிக்கிழமை அன்று என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்ட்டர் நடைபெற்ற ஒரு வாரத்துக்குள் வாரங்கல் மாவட்டத்தில் ஐந்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். தெலிங்கானாவில் இத்தகைய நிகழ்சிகள் நடப்பது கவலைக்குரியதாக உள்ளது. தெலிங்கானாவில் முஸ்லிம்களின் ஜனத்தொகை 12.4%மாக இருப்பதாலும், மஜ்லிஸ் கட்சி பொதுவாக அடிப்படைவாதத்தை ஆதரித்து வருவதாலும், இப்பகுதியில் இஸ்லாமிய தீவிரவாதம் அதிகமாகும் என்று தீவிரவாதம் பற்றி ஆயும் வல்லுனர்கள் எச்சரித்துள்ளார்கள்.
பொய்யான என்கவுன்டர், உண்மையில் போலீஸ் பாதுகாப்பில் அவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்: தில்லியிலிருந்து வந்த ஒருவன் இவர்களை சந்தித்துள்ளதாகத் தெரிகிறது . ஆனால், விக்ருத்தீனின் தந்தை மற்றவர்கள், இதெல்லாம், பொய்யான என்கவுன்டர், உண்மையில் போலீஸ் பாதுகாப்பில் இருக்கும்போதே அவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டினர் . அகில இந்திய மஜ்லீஸ்-இ-முஷாவரத் என்ற அந்த அமைப்பின் தலைவர் ஜாஃபருல் இஸ்லாம், 09-04-2015 வியாழக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : “மோதல் நடைபெற்றபோது, உயிரிழந்தவர்களின் கைகள் விலங்கிடப்பட்டிருந்ததாக பல்வேறு தரப்பினரும் கூறியுள்ளனர். சர்வதேச பயங்கரவாத அமைப்புகளால் கவரப்படாமல், இந்திய இளைஞர்கள் தங்களை தற்காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், பயங்கரவாத அமைப்புகளில் சேரும் அளவுக்கு முஸ்லிம் இளைஞர்களுக்கு அரசின் பாதுகாப்புப் படைகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. இந்தக் கருத்தை மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மூத்த அமைச்சர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். இது, கடந்த காலங்களில் நடைபெற்ற ஹாஷிம்புரா, பாட்லா ஹவுஸ் போன்ற போலி மோதல் சம்பவங்களைப் போன்றதாகும். இந்தச் சூழ்நிலை பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்”, என்றார் ஜாஃபருல் இஸ்லாம்.
பொறுப்புள்ள முஸ்லிம்கள் கேள்விகளைத் தவிர்ப்பது: குண்டுவெடிப்புகள் நடந்திருப்பது, கொள்ளைகள் நடந்தது, ஜெயிலிருந்து ஆயுதங்களுடன் தப்பியோடியது, போலீஸார் கொல்லப்பட்டது, சாதாரண அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது இவையெல்லாம் பொய்யா? இவர்களது உரிமைகளைப் பற்றி யாரும் பேசமாட்டார்களா? உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரது உரிமைகள் என்னாவது? ஐசிஸில் சேரத்துடிக்கும் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளார்களே? அதேபோலத் தானே, இந்திய முஜாஹித்தீன் வேலை செய்து கொண்டு வருகிறது. பிறகு ஏன், எப்படி இந்திய முஸ்லிம்கள் அதனை ஆதரித்து வருகிறார்கள்? உள்ளூர் தீவிரவாதம் அதிகமாகி, பெருகிவருவது அவர்களுக்கு மகிழ்ச்சியாகவா இருக்கிறது? இன்னும் எத்தனை ஆண்டுகள் இத்தகைய குண்டுவெடுப்புகளை ஆதரித்துக் கொண்டிருப்பர்? தொடர்ந்து நடந்து வரும் இத்தகைய காரியங்களை ஏன் அவர்களது பெற்றோர்ருறவினர், மற்றோர் தடுப்பதில்லை? இவற்றையெல்லாம் விடுத்து, “சர்வதேச பயங்கரவாத அமைப்புகளால் கவரப்படாமல், இந்திய இளைஞர்கள் தங்களை தற்காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், பயங்கரவாத அமைப்புகளில் சேரும் அளவுக்கு முஸ்லிம் இளைஞர்களுக்கு அரசின் பாதுகாப்புப் படைகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. ” என்று வாதிடுவது, அத்தகையவரை ஊக்குவிப்பதாகத்தான் அமையுமே தவிர, அமைதியை உண்டாக்காது.
2013 சிறையிலிருந்து தப்பி வந்ததிலிருந்து கொள்ளைகள், குண்டுவெடிப்புகள்: அக்டோபர் 2013ல் கந்த்வா என்ற சிறையிலிருந்து ஐந்து சிமி பயங்கரவாதிகள் தப்பித்ததிலிருந்து, தொடர்ந்து நடந்து வரும் திருட்டுகள் மற்றும் குண்டுவெடிப்புகள் முதலியவற்றை பொலீஸார் கவனித்து வருகின்றனர் . அக்டோபர் 7ம் தேதி காலை நேரத்தில் ஜெயில் பாதுகாவலர்களைத் தாக்கி துப்பாக்கிகள், வயலெஸ் செட் முதலியவற்றை அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர் . இவர்கள் உபி, தெலிங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, மேற்குவங்காளம் என்று தொடர்ந்து தங்களது இடங்களை மாற்றிக் கொண்டு வருகிறார்கள். இதிலிருந்து அங்கங்குள்ள அவர்களது உறவினர்கள் மற்ற தொடர்பாளிகள் ஆதரித்து வருகின்றனர் என்றாகிறது. கர்நாடகாவில் ஹோஸ்பெட் என்ற இடத்தில் பார்த்தபோது, அடையாளம் காணப்பட்டனர். மெஹ்பூப் அப்பொழுது தனது தாய் நஜ்மாபீபியுடன் தங்கியிருந்தான்ளதாவது பெற்ற தாயே, மகனை தீவிரவாதத்தில் ஈடுபடாதே என்று கண்டிப்பதை விடுத்து, அவனுடனே பல இடங்களுக்குச் சென்று வருவது வியப்பாக இருக்கிறது. 2008ல் பாட்லா என்கவுன்டரில் முக்கியமான அதீப் அமீன் [Atif Ameen] என்பவனும் மற்றவர்களும் கொல்லப்பட்டவுடன் இந்திய முஜாஹித்தீனின் செயல்கள் கொஞ்சம் குறைந்திருந்தன. யாசின் பட்கல் [Yasin Bhatkal, ஆசதுல்லா அக்தர் [Asadullah Akhtar], தேஸின் அக்தர் [Tehsin Akhtar] மற்றும் ஹைதர் அலி [ Haider Ali] முதலியோர் இதற்குப் பிறகு கைதாக உதவியது.
வேதபிரகாஷ்
© 11-04-2015
குறிச்சொற்கள்: ஆந்திரா, ஐதராபாத், குட்டு, கைது, சிமி, தெலிங்கானா, தெலுங்கானா, பிஜ்னோர், பூனா, வாராங்கல்
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்