பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (12)
பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (12)
இந்திய-விரோத அந்நிய சக்திகளில் வடகிழக்கு மாநிலங்களில் சதிதிட்டங்களை செயல்படுத்தி வருவது: வடகிழக்கு மாநிலங்களில் நடந்து வரும் இந்திய-விரோத செயல்கள், தீவிரவாத காரியங்கள், உள்ளூர் மக்களுக்கு எதிராக அவிழ்த்து விடப்பட்டுள்ள பயங்கரவாத வேலைகள் முதலியவற்றில், பெரும்பாலும் அந்நிய சக்திகள் பின்னணியில் இருந்து கொண்டு, இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. அவற்றில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ, அல்-குவைதா, தலிபான், வங்காளதேசத்தின் ஜமாத்-உல்-முஜாஹித்தீன், கிருத்துவ மிஷனரிகள், இடதுசாரி-கம்யூனிஸ்ட் சித்தாந்த போடோலாந்து தீவிரவாதிகள், நக்சல்பாரிகள் முதலியோர் அடங்கும். கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக இக்காரயங்கள் நடந்து வந்தபோதிலும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், இப்பொழுது திரிணமூல் கட்சி இவ்விசயங்களில் மெத்தனமாகவே செயல் பட்டு வந்துள்ளன. இதனால், வங்காளதேசத்திலிருந்து முஸ்லிம்கள் ஊடுருவி, அசாம் மாநிலங்களில், நிரந்தரமாகத் தங்கி வாக்காளர் அட்டை, ரேஷ்னகார்ட் முதலியவற்றைப் பெற்று ஆளும் கட்சிகளுக்கு ஓட்டு வங்கியாக செயல்பட்டு வருவதுடன், கடத்தல், கள்ளநோட்டு-போதை மருந்து விநியோகம், மனிதகடத்தல் (பெண்கள்-குழந்தைகளையும் சேர்த்து) முதலிய காரியங்களிலும் ஈடுபட்டு, அதில் வரும் பணத்தின் பங்கை அரசியல்வாதிகளுக்குக் கொடுத்து வருவதால், அவர்களும் அமைதியாகவே இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் மறுபடியும் அந்நிய சக்திகள் தலைவிரித்தாட ஆரம்பித்துள்ளன.
ஒரே நாளில் இம்பால் குண்டுவெடிப்பில் மூன்று பேர் சாவு, பஸ்கா மாவட்டத்தில் 10 கையெறிகுண்டு கண்டுபிடிப்பு: 21-12-2014 அன்று மணிப்பூரின் தலைநகரான இம்பாலில் ஒரு குண்டு வெடித்து, மூன்று பேர் கொல்லப்பட்ட அதே நாளில்[1], அசாமில், பார்பேடாவில், நாம்பாரா மாவட்டத்தில், பதசர்குச்சி என்ற கிராமத்தில் ஷாஹநூர் ஆலத்தின் [Sahanur Alom] கையாளியான நூர்ஸலால் ஹக் [Nurjamal Haque வயது 25] என்பவன் கொடுத்த வாக்குமூலத்தின் மூலம் குறிப்பிட்ட இடத்தில், மறைத்து வைக்கப்பட்ட தோண்டிப் பார்த்ததில் 10 நாட்டு கையெறி-வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன[2]. அக்குண்டுகள் பஸ்கா மாவட்டத்தில், பன்பரா கிராமத்தில் உள்ள ஒரு வாழைத்தோப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன[3]. வெடிகுண்டுகள் தவிர, கையெறி குண்டுகளும் தயாரிக்கப்படுகின்றன என்று தெளிவாகிறது. சஹநூர் ஆலத்தின் வீட்டிற்கருகில் சுமார் 500 மீ தொலைவில் ரூபோஹி நதிக்கரையில் பாலிதீன் உறைகளில் சுற்றி அவை புதைக்கப்பட்டிருந்தன[4]. அதாவது, சோதனைக்கு வருகிறார்கள் என்பதும், அவர்களுக்கு முன்னமே தெரிந்திருக்கிறது என்றாகிறது. 90க்கும் மேற்பட்ட குண்டுகள் மறைத்து வைக்கப் பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது[5]. இருப்பினும் கண்டெடுக்கப்பட்ட குண்டுகள் சோதனைக்குப் பின்னர் அழிக்கப்பட்டன.
மதரஸாவின் முதல்வரே குண்டுகள் விசயத்தில் கைது: ஜிஹாதி நோட்டிசுகள், கையேடுகள், சிறுபுத்தங்களும் குழிகளில் கண்டெடுக்கப்பட்டன. முஸ்லிம் இளைஞர்களை ஜிஹாதி இயக்கத்திற்கு சேர்ப்பது, அவர்களை இத்தகைய பிரச்சார இலக்கியங்களினால் வெறிகொள்ள செய்வது, தீவிரவாதிகளாக மாற்றுவது போன்ற வேலைகளில் தான் மதரஸாக்கள் ஈடுப்பட்டுவருகின்றன என்பது தெளிவாகிறது. நூர்ஸலால் ஹக் இரண்டு வாரங்களுக்கு முன்னர் பஸ்கா மாவட்டத்தில், சல்பாரி கிராமத்தில் 12-12-2014 வெள்ளிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டான். இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப் பட்டனர்[6]. இன்னொரு கூட்டாளியான நஜ்முல் இஸ்லாம் [ Nazmul Islam] என்பவன் ஞாயிற்றுக்கிழமை 14-12-2014 அன்று பார்பேடாவில் கைது செய்யப்பட்டான்[7]. இவன் கோராகுரி அஞ்சாலிக் மதரஸாவின் பிரின்சிபால் ஆவான்[8]. அதாவது, மதரஸாக்கள் எப்படி ஜிஹாதி-தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்தப் பட்டு வருகின்றன என்பதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.
அனைத்து அசாம் மாணவர்கள் குழுமத்தின் அறிக்கையில் வெளியாகும் தகவல்கள்: அடுத்த நாள் (22-12-2014), அனைத்து அசாம் மாணவர்கள் குழுமம் [The All Assam Students’ Union (AASU)] அல்-குவைதா, ஜமாத்-உல்-முஜாஹித்தீன் போன்ற தீவிரவாத அமைப்புகளை வேரறுக்க வேண்டுமானால், சட்டத்திற்குப் புறம்பாக, வங்காளதேசத்திலிருந்து ஊரடுருவியுள்ள முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்ற தனது கோரிக்கையை மறுபடியும் வைத்தது[9]. அரசே பார்பேடா, நல்பாரி மற்றும் பஸ்கா போன்ற மாவட்டங்களில் தீவிரவாதிகள் வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள் என்று ஒப்பொஉக் கொண்டுள்ளதால், உடனடியாக, அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டது[10]. அசாம் உடன்படிக்கையை அரசு செயல்படுத்தத் தயங்கியதால், பாகிஸ்தானிலிருந்து வரும் ஐ.எஸ்.ஐ ஆட்களும் அந்த போர்வையில், வங்காளாதேசத்தின் வழியாக, எல்லைகளைக் கடந்து அசாமில் வந்து நுழைந்துள்ளார்கள்[11]. மேலும் உச்சநீதி மன்றம் சட்டவிரோதமாக உள்நுழைந்த-இடம் பெயர்ந்தவர்களை அடையாளம் காணும் சட்டத்தை [Illegal Migrants (Determination by Tribunals) Act] திரும்பப்பெற்றதால், அசாம் வெளியிலிருந்து தாக்குதல்களையும், உள்ளே கலவரத்தொந்தரவுகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்று எடுத்துக் காட்டியுள்ளதையும், அனைத்து அசாம் மாணவர்கள் குழுமம் தமது அறிக்கையில் சுட்டிக் காட்டியது[12].
மதரஸாக்களைக் குறைகூறக்கூடாது என்றால், அவை ஏன் குண்டு தொழிற்சாலையாக, கிடங்குகளாக செயல்படவேண்டும்?: மதரஸாக்களை ஒட்டு மொத்தமாகக் குறைகூறக்கூடாது என்று எதிர்க்கும் முஸ்லிம்கள், மதரஸாக்கள் இவ்வாறு தீவிரவாதத்திற்கு உபயோகப்படுத்தப் படுவதை ஏன் எதிர்ப்பதில்லை, போலீஸாரிடம் புகார் கொடுப்பதில்லை அல்லது முளையிலேயே கிள்ளி எரிவதில்லை என்ற வினாக்களிலிருந்தே, அவர்களது, நேரிடையான மற்றும் மறைமுக ஆதரவு வெளிப்படுகிறது. முன்பு பர்த்வானிலேயே பெரிய கூட்டம் போட்டு, அதில் சில இந்துக்களையும் ஆதரவாகப் பேசவைத்ததை நினைவு கூறவு, இப்பொழுது, அவர்கள் எல்லோருமே அமைதியாகி விடுவர். இதனை எதிர்த்துக் கூட்டம் போடமாட்டார்கள், கண்டன-அறிக்கைகளையும் வெளியிட மாட்டார்கள். அதுதான், அவர்களது தங்களது செக்யூலரிஸத்தை வெளிப்படுத்தும் விதம் போலும். உண்மையில், இத்தகைய செக்யூலரிஸாத்தால் தான் ஜிஹாதித்துவ-தீவிரவாதம், ஊக்குவிக்கப்படுகிறது, ஆதரிக்கப்படுகிறது மற்றும் வளர்க்கப்படுகிறது,

Photo taken on the occasion of signing of memorandum of settlement on the Assam problem between the Government representatives and representatives of the All Assam Students Union and the all Assam Gana Sangram Parishad in New Delhi on August 15, 1985.
மதரஸாக்கள் தீவிரவாதிகளின் பயிற்சிக்கூடமாக செயல்பட்டது: அசாமில் உள்ள பல கிராமங்களில் தீவிரவாத செயல்களுக்கு, முஸ்லிம்களை தயாராக்கி வைத்திருக்கிறார்கள். லார்குச்சியில் உள்ள மதரஸா அதற்காகப் பயன்படுத்தப் பட்டது. பல இளைஞர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு ஜிஹாதி பயிற்சி அளிக்கப்பட்டது[13]. கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது, இவர்கள் மிகவும் திட்டமிட்டு, இக்காரியங்களை செய்ய ஆரம்பித்துள்ளனர் என்று தெரிகிறது. ஒருவேளை, அக்டோபர்.2, 2014 அன்று குண்டுவெடித்து, அவர்கள் மாட்டிக் கொண்டிருக்காவிட்டால், இவர்கள் நாடு முழுவதும், பல குண்டுவெடிப்புகளை நடத்தியிருப்பார்கள் என்று தெரிகிறது. மேலும், அவர்கள், ஜிஹாதி எண்ணங்களில் ஊறியுள்ளது, அவர்களது பேச்சுகள் எடுத்துக் காட்டுகின்றன. ஏதோ தீவிரவாத செயல்களை செய்கிறோமோ என்ற எண்ணமே இல்லாமல், புனித காரியத்தைச் செய்கிறோம் என்ற நிலையில் உள்ளார்கள். அப்பாவி மக்களைக் கொல்வதும், அவர்களுக்கு புனித காரியமாகவே தோன்றுகிறது.
வழக்கம் போல திரிணமூல்-பிஜேபி பரஸ்பர குற்றச்சாட்டுகள்: 21-12-2014 அன்று ஷகீல் அஹமதுவின் உடலும் புதைக்கப் பட்டது[14]. முன்பு உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் கலாட்டா செய்து வந்தனர். தீர்ணமூல் காங்கிரஸ் தொடர்ந்து தனக்கும், இந்த குண்டுவெடிப்புகள், தொழிற்சாலை, ஜே.எம்.பி தீவிரவாத ஊக்குவிப்பு முதலியவற்றில் தொடர்பில்லை என்று வாதிட்டு வந்தாலும், அவற்றிற்கிடையே உள்ள சம்பந்தங்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்பொழுது சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி பணமும், இதற்கு உபயோகிக்கப்பட்டுள்ளது என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது[15]. வழக்கம் போல மம்தா இது பிஜேபியின் சதி, ராவின் மூலம் தான் இவையெல்லாம் செய்யப்பட்டது என்று கூறிவருவது, மிக்க வியப்பாகவும், பொறுப்பற்ரதாகவும் இருக்கிறது. மதகலவரங்களை உருவாக்கவே இவையெல்லாம் செய்யப் பட்டு வருகின்றன என்றும் குற்றஞ்சாட்டினார்[16]. அதற்கு மேலும் டெரிக் ஓபராய் என்ற அக்கட்சி ஊடக தொடர்பாளர், தமதிச்சைக்கேற்றபடி பேசி வருவதும் வியப்பாக உள்ளது. அக்கட்சியின் எம்.எல்.ஏ, அமைச்சர் என்று பலருடைய தொடர்புகள் இதில் மெய்ப்பிக்கப்பட்டும், இருவரும் அப்பட்டமாக இல்லவே இல்லை என்று சாதித்து வருகின்றனர்.
© வேதபிரகாஷ்
25-12-2014
[1] http://www.assamtribune.com/dec2114/at044.txt
[2] The Special Operation Unit of the state police recovered the bombs that were hidden in Nampara village in Patacharkuchi following the alleged confession of Nurzalal Haque who is an alleged associate of Shahnoor Alam, the prime accused in the October 2 Burdwan blast. Alam, who was arrested nearly two weeks ago by the National Investigation Agency from the state, was the face of jihadi terror in Assam, according to the police.
[3] In a major breakthrough, the Assam Police today managed to recover 10 bombs of the Jamaat-ul-Mujaheedin, Bangladesh (JMB). Police sources said that the crude bombs were kept concealed inside a banana plantation in Panpara village in Baksa district. The recoveries were made following the confessions of JMB militant Nurjamal, who was arrested on Friday. Sources said that Nurjamal was a trained cadre of the JMB and he was a close associate of Sahanur Alom, one of the key men of the Bangladesh based militant outfit in the State. http://www.assamtribune.com/dec2214/at051.txt
[4] Based on Sahanur’s confession, the National Investigation Agency (NIA) recovered the grenades near Rupohi river, about 500 metre from his house in Salbari sub-division, NIA sources said.
[5] http://www.deccanchronicle.com/141221/nation-current-affairs/article/burdwan-blast-case-nia-recovers-10-hand-grenades
[6] http://www.telegraphindia.com/1141222/jsp/frontpage/story_4732.jsp#.VJjNKULY8
[7] NDTV, 10 Crude Bombs Found in Assam After Alleged Confession of Burdwan Blast Accused All India | Edited by Mala Das (with inputs from Agencies) | Updated: December 22, 2014 11:32 IST
[8] Police today arrested Nazmul Islam, principal of Koraguri anchalik madarsa in Barpeta district, based on the confession of Haque.
http://www.telegraphindia.com/1141222/jsp/frontpage/story_4732.jsp#.VJjNKULY8
[9] The All Assam Students’ Union (AASU) today reiterated its demand for uprooting the fundamentalist organisations like Al-Qaeda and Jamaat-ul-Mujahideen Bangladesh and also for deporting the illegal Bangla migrants from Assam. http://www.assamtribune.com/dec2314/at055.txt
[10] http://www.assamtribune.com/dec2314/at055.txt
[11] Illegal Bangla migrants, members of the fundamentalist organisations and even members of the intelligence organisation of Pakistan are entering Assam taking advantage of its porous border with Bangladesh. This is because of the failure of the Government to implement the Assam Accord, it said. http://www.assamtribune.com/dec2314/at055.txt
[12] It reminded the Central as well as the State Government of the observation made by the Supreme Court of India while repealing the infamous Illegal Migrants (Determination by Tribunals) Act. The apex court had, interalia, said in its verdict that due to illegal migration, Assam is facing external aggression as well as internal disturbances, said the student body. http://www.assamtribune.com/dec2314/at055.txt
[13] http://indianexpress.com/article/india/india-others/burdwan-blast-probe-key-suspect-shahnoor-alam-arrested/
[14] http://www.oneindia.com/india/body-of-another-burdwan-blast-accused-buried-1599494.html
[15] http://articles.economictimes.indiatimes.com/2014-12-21/news/57280801_1_saradha-scam-trinamool-rajya-sabha-trinamool-congress
[16] http://www.ndtv.com/article/india/centre-stage-managed-burdwan-blast-to-trigger-riots-in-bengal-claims-mamata-banerjee-624484
Explore posts in the same categories: ஃபத்வா, அசாம், அடிப்படைவாதம், அல் - காய்தா, அல் முஹம்மதியா, இந்திய முஜாஹத்தீன், இந்திய விரோதத் தன்மை, இந்தியத் தன்மை, இந்தியர்களை ஏமாற்றுதல், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, குண்டு, குண்டு வெடிப்பது, பார்பேடா, மணிப்பூர்குறிச்சொற்கள்: அசாம், அல்-குவைதா, இந்திய முஜாஹித்தீன், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஊடகத் தீவிரவாதிகள், கிறிஸ்தவ மிஷினரிகள், ஜமாத்-உல்-முஜாஹித்தீன், ஜிஹாத், நக்சபாரி, நக்சலைட், பார்பேடா, போடோலாந்து, மதரஸா, முஸ்லிம் ஊடுவல்
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்