பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (9)
பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (9)
மம்தாவின் மறைப்பு வேலைகள் (05-11-2014 அன்றைய பேச்சு)[1]: இவ்வளவு நடந்தும், மம்தா இவ்விசயத்தை அரசிய ரீதியிலேயே திரித்து விளக்கம் கொடுத்துக் கொண்டுருக்கின்றார். 05-11-2014 (புதன்கிழமை) கட்சியின் தொண்டர்களுக்கு முன்பாக 24-பர்கானாவில் பேசும்போது, “துர்கா பூஜை மற்றும் ஈத் பண்டிகைகளின் போது கூட குண்டு வெடித்தது, ஆனால் யாரும் பாதிக்கப் படவில்லை. தீவிரவாதிகள் ஒரு தனி இனத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களுக்கு எந்த மதமும் கிடையாது……… ஆனால், மேற்கு வங்காளத்தில் மக்களை மதரீதியில் பிரிக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நான் பங்களாதேசத்தை விரும்புகிறேன், ஆனால், எல்லை ஊடுருவல்களை எதிர்க்கிறேன்…………..ஆனால், ஊடுருவல்கள் நடக்கும் எல்லைகளுக்கு யார் காவல்?”, என்று வினவினார். அதாவது, தேசிய எல்லை பாதுகாப்புப் படையினர் தாம் பொறுப்பு என்ற தோணியில் பேசினார். “எல்லா முஸ்லிம்களும் ஜிஹாதிகள் போல குறிப்பிடுகிறார்கள். ஆனால், எல்லைகளைத் தாண்டி எனது மாநிலத்தில் வந்து பிரச்சினையைக் கிளப்புகிறார்களே, ஏன்”, என்று கேட்டுவிட்டு, “நாங்கள் சுவாமி விவேகானந்தரின் தத்துவத்தை நம்புகிறோம். விவேகானந்தர் ஒரு முஸ்லிம் வீட்டிற்குச் சென்று ஹுக்கா புகைத்தார், தனது ஜாதி போய் விட்டதா என்று உறுதி செய்தார். உங்கள் மதத்தை விரும்புங்கள், அதே போல மற்ரவர்களின் மதங்களையும் விரும்புங்கள்”, என்று உபன்யாசம் செய்தார். எல்லாம் சரிதான், ஆனால், முஸ்லிம்கள் அவ்வாறில்லையே? பிறகு அவர்களுக்குத்தானே இந்த அறிவுரைகளை சொல்ல வேண்டும்?
ஷேக் அஸினாவுக்கு மம்தா என்ன பதில் சொல்வார்?: பங்களாதேச பிரதம மந்திரி இவ்விவகாரத்தில் கூறியிருப்பது நோக்கத்தக்கது[2], “பங்களாதேசத்துத் தீவிரவாதிகள் மேற்கு வங்காளத்தில் தாராளமாகத் தங்கியிருப்பதும், அவர்கள் எங்களது அரசுக்கு எதிராக செயல்படுவதும், மிக்க வருத்தத்தை அளிக்கிறது”. முதலில் அவர்கள் இந்தியாவிலிருந்து வெளியேற்றப் படவேண்டும் என்றார். “மேற்கு வங்காளத்தில் தாராளமாகத் தங்கியிருக்க” எப்படி மம்தா மற்றும் முந்தைய அரசியல்வாதிகள் உதவியிருக்க வேண்டும்? இதே நேரத்தில், ஜம்மு-காஷ்மீரத்தில் சட்டத்திற்குப் புறம்பாக “இடம் பெயந்த வேலையாட்கள்” என்ற ரீதியில் தங்கியிருக்கும் பங்காளதேசத்தவர்களும் பிடிபட்டுயுள்ளனர்[3]. இதில் பங்காளதேசத்து இரட்டை வேடங்களையும் கவனிக்க வேண்டும், ஏனெனில், அங்கு வேலையில்லை, இடமில்லை போன்ற காரணங்களை வைத்துக் கொண்டு, பங்களாதேசத்து ராணுவமே, மக்களை இந்தியாவிற்குள் விரட்டியடிக்கின்றது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. முன்பு ஊடுருவல் ஏன் என்றதற்கு, தமது நாட்டில், மக்கள் பொங்கி வழிகின்றனர், அவ்வாறு வழியும் போது, சிதறி மக்கள் பக்கத்தில் உள்ள இந்திய பகுதிகளில் சிந்தத்தான் செய்வார்கள், என்று தத்துவ விளக்கம் அளிக்கப் பட்டது. ஆனால், அவர்கள் மக்களாக இல்லாமல், முஸ்லிம்களாக இருந்து, அவர்கள் அவ்வாறே அடிப்படைவாதத்துடன் இருந்து, ஜிஹாதிகளுடன் சேந்து, இந்தியவிரோத செயல்களில் ஈடுபடும் போது தான், அத்தகைய சிதறல்கள், இயற்கையானது அல்ல, திட்டமிட்டு செய்யப் படும் வேலை என்றாகிறது.
“பெங்காளி” எனப்படுகின்ற இந்திய முஜாஹித்தின் திட்டமும், ஜே.எம்.பியின் ஜிஹாதி–வடிவமைப்பும்: மேற்கு வங்காளம், அசாம் மற்றும் பங்காளதேசம் இவற்றை இணைத்து ஒரு செயல்திட்டத்தை, பாகிஸ்தானை ஆதரமாகக் கொண்டு இயங்கி வரும் இந்திய முஜாஹித்தீன் இணைதள பரிமற்றங்கள், இ-மெயில் உரையாடல்கள் மூலம் கடந்த ஜூலை 2013 காலத்திலேயே வெளிவந்தது. இவற்றில் பங்கு கொண்டவர்கள் – அஹமது சித்திபாபா அல்லது யாஸின் பட்கல், ஆபீப் ஜிலானி மோடா, மீட்ஜா ஷாதாப் பேக், அசதுல்லா அக்தர் முதலியோர். அது பி.என்.ஜி “bng” என்று குறிப்பிடப்பட்டுள்ளது, மேற்கு வங்காளத்தைக் குறிக்கும் என்று, அந்த பெங்காளி -“Bengali”- திட்டத்தை ஆராய்ந்த என்.ஐ.ஏ குழுவினர் எடுத்துக் காட்டினர். ஜே.எம்.பியும் அதே முறையில் 2007லிருந்து செயல்பட்டு வந்துள்ளது. பர்த்வான் குண்டுவெடிப்பு வழக்கில் ஷைகுல் இஸ்லாம் அல்லது அப்துல்லா அசாமில் கைது செய்யப் பட்டான். இவன் ஷகீல் அஹமது அல்லது ஷமீன் என்கின்ற ஜே.எம்.பியின் கூட்டாளி. இவர்கள் எல்லோருமே, ஒருவரையொருவர் அறிந்தவர்களே. யாஸின் பட்கல் கொல்கொத்தாவில் கைது செய்யப் பட்டு, விடுவிக்கப் பட்டதும், திட்டத்தின் அங்கமாக இருக்கலாம். சுமார் 50 மேற்கு வங்காள அரசில்வாதிகள் இவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளனராம். ஆகவே, “பெங்காளி” எனப்படுகின்ற இந்திய முஜாஹித்தின் திட்டமும், இந்த ஜே.எம்.பியின் ஜிஹாதி-வடிவமைப்புடன் ஒத்துப் போகிறது.
40 அரசியல்வாதிகளின் தொடர்பு, 27 வழிதடங்கள், 57 தீவிர அமைப்புகள்: பர்த்வான் குண்டுவெடிப்புத் தொழிற்சாலை விசயத்தில் சுமார் 40 அரசியல்வாதிகள் சம்பந்தப் பட்டிருப்பதாக என்.ஐ.ஏ அதிகாரி தெரிவித்துள்ளார்[4]. இதை மம்தா பேனர்ஜியை சந்தித்த போதும் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள். பங்காளதேசத்திலிருந்து, உள்ளே நுழைந்து, வெளியே செல்ல 27 வழிதடங்களை உபயோகப்படுத்தியதையும் கண்டறிந்துள்ளார்கள். அவையாவன –
- ஒரு மாவட்டத்திலிருந்து, இன்னொரு மாவட்டத்திற்குள் நுழைவது-வெளியே செல்வது.
- ஒரு மாநிலத்திலிருந்து, இன்னொரு மாநிலத்திற்குள் நுழைவது-வெளியே செல்வது.
- நேபாளம் மற்றும் பங்களாதேசம் நாடுகளின் எல்லைகளில் உள்ள பிரதேசங்களுக்குள் நுழைவது-வெளியே செல்வது.
மேற்கு வங்காளத்தில் மொத்தம் 57 தீவிர அமைப்புகளை பர்த்வான், மூர்ஷிதாபாத், பிர்பும், ஜல்பைகுரி, கொச்-பிஹார், ஹௌரா, வடக்கு மற்ரும் தெற்கு 24-பர்கானா மாவட்டங்களில் ஏற்படுத்தியுள்ளார்கள். இவை உபி, பிஹார், ஜார்கெண்ட் மற்றும் சிக்கிம் மற்றும் நேபாளம் மற்றும் பங்களாதேசம் முதலிய இடங்களுக்குச் சென்று வர ஏதுவாக அமைத்திருக்கிறார்கள்[5]. 2007-14 வரை, இந்த அளவிற்கு அவர்களால் முடிந்துள்ளது என்றால், உள்ளூர்வாசிகள் எந்த அளவிற்கு ஒத்துழைத்துள்ளார்கள் என்பதும் தெரிகிறது. அதாவது முஸ்லிம்கள், முஸ்லிம்கள் என்ற வகையில் தான் உதவி, செயபட்டிருக்கிறார்களே அன்றி, இந்தியர்களாக அவர்களைக் காட்டிக் கொடுக்கவில்லை. முஸ்லிம்கள், முஸ்லிம் தீவிரவாதிகளை, தீவிரவாதிகளாகவே கருதவில்லை. ஜிஹாதிகளை ஷஹீதுகளாக/உயிர்த்தியாகிகளாகத்தான் பார்த்து வருகின்றனர் என்பது புரிகிறது.
இளம் ஜோடிகள் ஜிஹாதியில் ஈடுபட்டுள்ள விசயம்[6]: இவ்வழக்கில் பல இளம் ஜோடிகள் ஈடுப்பட்டுள்ளது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 12-ஜோடிகள் இதில் சம்பந்தப் பட்டிருப்பதுஇரான் மற்றும் இராக் நாடுகளில் ஈடுபடுத்தப் படும் பெண் ஜிஹாதிகள் மற்றும் ஐசிஸ் வேலைப்பாடு போன்று தோன்றுகிறது. இருப்பினும், முஸ்லிம்கள் பிரச்சினை போன்று செக்யூலரிஸ ஊடகங்கள், அறிவிஜீவிகள், சமூகவியல் பண்டிதர்கள் முதலியோர் மௌனம் காக்கின்றனர்.
- பாத்திமா-ஸஜித்.
- ஆயிஸா-யூசுப்.
- மோனியா பேகம்- தல்ஹா ஷேக்
- ரஸியா பீவி – ஷகில் அஹமது.
- அலினா பீவி – ஹஸான் சாஹிப்
- சமீனா-நஸிருல்லாஹ்
- அலிமா-ஹலான்
- கைஷா-நயீம்
- செலினா பேகம்- கலாம்.
- ரபியா-ஹபிபூர்
- சய்மா-லத்தீப்
- கதீஜா-ஷேய்க்கு
இப்படி 12 ஜோடிகள் வெடிகுண்டு ஜிஹாதியில் பயிற்சி பெற்றுள்ளதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஆனால், இதில் ஆண்களில் பெரும்பாலோர் வங்காளதேசத்தினராக இருப்பதும், பெண்கள் இந்தியர்களாக இருப்பதும் வியப்பை அளிக்கிறது. மேலும் இந்திய பெண்களின் விவரங்கள் அறியப்படாமல் இருக்கின்றன. இவர்கள் எப்படி ஒட்டு மொத்தமாக ஜிஹாதி சித்தாந்தாத்தை ஏற்று வேலை செய்ய ஆரம்பித்தார்கள் என்பது புதிராக உள்ளது. என்.ஐ.ஏ, உள்துறை அமைச்சகத்திற்க்கு கொடுத்துள்ள ஆரம்ப கட்ட அறிக்கையில் ஜே.எம்.பி பற்றியோ, ஷேக் ஹஸீனா மற்றும் காலிதா ஜியா இவர்களை கொல்ல சதி போன்ற விவரங்களைக் குறிப்பிடவில்லையாம். ஆனால், வெடிகுண்டு தயாரிப்பு ஜிஹாதில் ஈடுபட்ட 14 பெண்களின் அடையாளத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்களாம்! அசாம் முதலமைச்சர் தருண் ககோய் செய்தியாளர்களிடம் 04-11-2014 (செவ்வாய்கிழமை) சொன்னதாவது[7], “ஜே.எம்.பி இங்கு முஸ்லிம் பெண்களிடம் பர்கா / பர்தா துணிகளை விற்கும் போர்வையில் ஒரு பெண்கள் பிரிவை ஏற்படுத்த முயன்றுள்ளார்கள். பார்பேடா மற்றும் நல்பாரி ஊர்களில் உள்ள இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று ஜிஹாதி பயிற்சி பெற்றுள்ளனர்.” அதாவது, முஸ்லிம் பங்களாதேசத்து பெண்களும், இந்திய மாநிலங்களில் நுழைந்து ஜிஹாதிகளுக்கு உதவி வருகிறார்கள் என்று தெரிகிறது[8]. பெண்கள் ஜிஹாதிகளாக மாறுவது, ஜிஹாதிகளாக வேலை செய்வது, இப்படி ஜோடிகளாக இணைந்து வேலை செய்வது, ஒரு திட்டமிட்ட மனப்பாங்கை, தீர்மானமாக உள்ள போக்கைக் காட்டுகிறது.
பெண் ஜிஹாதிகள் உருவாகும், உருவாக்கும் முறை: மேற் குறிப்பிட்ட 12-ஜோடிகளிடம் மேற்கொண்ட விசாரணையில் அறியப் படுவதாவது[9]:
- பெண்களை வைத்து பெண்களை இந்த வேலைக்கு அமர்த்துகிறார்கள். முஸ்லிம் பெண்கள் என்பதாலும், சட்டம்-காவல் துறையினர் உடனடியாக அவர்களிடம் விசாரணை, சோதனை முதலியவற்றை மேற்கொள்ள முடியாது. பர்கா அணிந்து கொண்டிருப்பதால், பலதுறைகளில் அவர்களது அடையாளம் மறைக்கப் படுகிறது.
- முதலில் மதரீதியில் ஆரம்பித்து ஊக்குவிப்பது, அவர்களது மனங்களை மாற்றி நம்பிக்கையை ஏற்படுத்துவது, பிறகு ஜிஹாதிக்கு தயார் செய்வது.
- முதலில் உடல் பயிற்சி, சித்தாந்த வகுப்புகள், சொற்பொழிவுகள், முதலியவற்றில் ஈடுபடுத்துதல்.
- மதத்திற்காக எதையும் செய்வேன் என்ற நிலையை உருவாக்குவது – ஷயீத் தத்துவத்தை ஏற்க வைத்தல்.
- பிறகு படிப்படியாக துப்பாக்கி சுடுதல், குண்டுகள் தயாரித்தல் முதலியவற்றைச் சொல்லிக் கொடுத்தி, ஜிஹாதியில் ஈடுபடுத்துதல்.
- அதற்கான ரசாயனப் பொருட்கள் வாங்குவது, ஜாக்கிரதையாகக் கொண்டு வருவது, அதற்கு பர்கா உடையை பயன்படுத்துவது.
- பணத்திற்காக, கள்ளநோட்டுகளை உபயோகித்தல், விநியோகித்தல், மாற்றுதல் முதலியவற்றில் ஈடுபடுத்துதல்.
- பயிற்சி பெற்ற பெண்கள், மற்ற பெண்களுக்கு பயிற்சி கொடுப்பது. இதற்கு வீடியோக்கள், புத்தகங்கள் முதலியவை அதிகமாகப் பயன் படுத்தப் படுவது.
- முடிந்த வரையில் குடும்பம் அல்லது நெருங்கிய உறவினர்களை இச்செயல்களில் ஈடுபடுத்துதல்.
- எந்த நேரத்திலும் ரகசியத்தைக் காப்பது – அல்லாவின் பெயரால் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்வது, ஜிஹாதிகளுக்குக் கட்டுப்படுவது முதலியன.
© வேதபிரகாஷ்
16-11-2014
[1] http://www.newindianexpress.com/nation/Mamata-Plays-Down-Blast-Lambasts-BJP/2014/11/06/article2509368.ece
[2] Prime Minister Sheikh Hasina said it was painful to know that “Bangladesh’s terrorists are getting sanctuary in West Bengal and hatching a conspiracy against the government.”
[3] http://www.thehindu.com/news/cities/kolkata/bengali-migrant-workers-released-by-jk-police/article6551473.ece
[4] In their report to NIA DG Sharad Kumar, sleuths hinted at the involvement of at least 40 politicians helped these terrorists gain a foothold in Bengal.
[5] http://timesofindia.indiatimes.com/city/kolkata/NIA-hints-at-link-of-40-netas-with-terror-module/articleshow/44964492.cms
[6] Yatish Yadav, NIA Probe in Burdwan Finds Jihad a Family Business in West Bengal, Published in Indian Express: 02nd Nov 2014 06:07:00 AM
[7] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-otherstates/bangladesh-outfit-trying-to-set-up-womens-wing-in-assam/article6565371.ece
[8] Assam Chief Minister Tarun Gogoi on Tuesday said that terror outfit Jamaat’ul Mujahideen of Bangladesh (JMB) was trying to establish a women’s wing in the state under the garb of selling burkhas to Muslim women. Assam districts of Barpeta and Nalbari. He said some youth from these two districts had also gone abroad for undergoing training in jihadi activities.
[9] http://www.newindianexpress.com/thesundaystandard/NIA-Probe-in-Burdwan-Finds-Jihad-a-Family-Business-in-West-Bengal/2014/11/02/article2503641.ece
Explore posts in the same categories: நாட்டுப் பற்று, நிகாப், பங்காள தேசம், பத்வா, பர்தா, பர்தா அணிவது, பர்துவான், பர்த்வான், பர்மாகுறிச்சொற்கள்: ஃபத்வா, அழகிய இளம் பெண்கள், இஸ்லாமியத் தீவிரவாதம், காக்ரகார், குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, கையெறி குண்டுகள், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், பர்துவான், பர்த்வான், ஹிஜாப்
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்