பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (11)
பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (11)
என்.ஐ.ஏ மேற்கு வங்காளத்தில் மிரட்டப் படுகிறதா?: திங்கட் கிழமை (10-11-2014) அன்று கொல்கொத்தாவில் என்.ஐ.ஏவின் அலுவலகத்திற்கு வெளியே ஒரு குண்டு வெடித்தது[1]. அது என்.ஐ.ஏவின் புலன் விசாரணை மற்றும் நடவடிக்கைகள் குறைத்து கொள்ள வேண்டும் அல்லது மெதுவாக வேலை செய்ய வேண்டும் என்று எச்சரிப்பதற்கானது என்று சொல்லப் படுகிறது. மேற்கு வங்காளத்தில் நடக்கும் குண்டுவெடிப்புகள் பற்றிய விவரங்கள் மறைக்கப் படுகின்றன. மெடியாப்ரஸ் என்ற இடத்தில் 2012க் குண்டுவெடிப்பு நடந்தபோது, அவ்வீட்டில் ஷகீல் அஹமது இருந்தான். அவன் தான் இப்பொழுது அக்டோபர் 2, 2014 அன்று குண்டுவெடித்ததில் கொல்லப்பட்டுள்ளான். பிப்ரவரி 2013ல் கார்டன் ரீச் என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ரஞ்சித் ஷீல் என்ற டி.எம்.எஸ் கவுன்சிலரின் மகன் கொள்ளப்பட்டுள்ளான். ஆனால், இவற்றின் விவரங்கள் மறைக்கப் படுகின்றன[2]. அப்துல் ஹகீம் என்பவன் காக்ராகர், பர்தவானில் இருந்த தொழிற்சாலையில், ராக்கெட் லாஞ்சர் தயாரிப்பதற்கான ஆய்வுக்கூடம் இருந்தது என்று ஒப்புக் கொண்டுள்ளான்[3]. இவ்விவரங்கள் உள்ளூர் பிஜேபி தலைவர் சித்தார்த நாத் சிங் [BJP leader Siddharth Nath Singh] கூறியுள்ளதாக வெளியிடுகிறது. உள்ளூர் விவகாரங்கள், உள்ளூர் ஊடகக் காரர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும், எனவே, அவற்றை பிஜேபி மூலம் தான் தெரிந்தது போல காட்டிக் கொள்வது ஏனென்று புரியவில்லை. ஊடகங்கள் இவ்வழக்கை அரசியலாக்குகின்றனவா அல்லது அரசியல்வாதிகளே அவ்வாறு செய்கின்றனரா என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
சஜித் ஷேக் முதலியோர் கைது (08-11-2014: சனிக்கிழமை (08-11-2014) அன்று பர்த்வான் குண்டு தொழிற்சாலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக தேடப்பட்டு வந்த சஜித் ஷேக் [Sajid Sheikh] பிதாநகர் போலீஸாரால் கைது செய்யப் பட்டு, என்.ஐ.ஏவிடம் ஒப்படைத்தனர்[4]. கடந்த இரண்டு தினங்களில் மூன்று பேர் சிக்கியுள்ளனர் –
- ஜியா உல் ஹக், காலிசக், மால்டா [Zia-ul-Haque of Kaliachak in Malda],
- சுஜனா பேகம், பார்பேடா, கௌஹாத்தி [Sujana Begum from Barpeta in Guwahati],
- இப்பொழுது சஜீத் [Sajid from the outskirts of Kolkata].
ஜியா உல் ஹக், தான் ஜே.எம்.பியின் சஜித் மற்றும் சகீப் போன்றோருடன் தொடர்புள்ளதை ஒப்புக் கொண்டான். இதேபோல, பங்களாதேசத்தில், சாதர் உபசிலா ரெயில் நிலையத்தில் அப்துன் நூர் என்ற தடை செய்யப்பட்ட ஜே.எம்.பியின் ஆள் மற்றும் அவனது கூட்டாளிகள் மூன்று பேர் வெவ்வேறு இடங்களில் விரைவு நடவடிக்கைப் படையினரால் [RAB] கைது செய்யப்பட்டனர். இத்தகைய எல்லைகளைக் கடந்த தீவிரவாதம் எப்படி கண்டுகொள்ளாமல் வளர்ந்து வர ஏதுவாகியது என்பது விசித்திரமாக இருக்கிறது. மாநில போலீஸார், உளவுத்துறை, மக்கள் குடியேற்றம் பிரிவு அதிகாரிகள் முதலியோர்களுக்குத் தெரியாமல் இந்த அளவிற்கு தொடர்ந்து எல்லைகளை ஊடுருவி மக்களும், பொருட்களும் சென்று வந்திருக்க முடியாது.
கேரளாவுக்கு வேலைக்குச் சென்ற கரீம் ஷேக் எப்படி பர்த்வான் குண்டுவெடிப்பில் இறந்தான்?: நாற்பது நாட்களுக்குப் பிறகு, கரீம் ஷேய்க் என்பவனுடைய உடல் [Karim Sheikh of Kaferpur village of Birbhum district] 12-11-2014 அன்று அடையாளம் காணப்பட்டுள்ளது[5]. அமிருல் ஹொஸைன் [Amirul Hossain] என்ற அவனது சகோதரன், உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால், அடையாளம் காணுவதற்கு கஷ்டமாக இருந்தது என்றார். கபேர்பூர், பர்த்வான் மாவட்டத்தைச் சேர்ந்த இவன் அக்டோபர் 2ம் தேதி குண்டுவெடிப்பில் இறந்தான். பிறகு அவனது உடல் குடும்பத்தாருக்கு இறுதி சடங்கு நடத்த கொடுக்கப்பட்டது[6]. குடும்பத்தார் கரீம் ஷேய்க்கின் தீவிரவாத நடவடிக்கைப் பற்றி தங்களுக்கு ஒன்றும் தெரியாது, கேரளாவிற்கு வேலை நிமித்தமாக சில மாதங்களுக்கு முன்னர் சென்று வந்தார் என்று தான் கூறுகின்றனர். ஆனால், கேரளாவுக்கு வேலைக்குச் சென்ற கரீம் ஷேக் எப்படி பர்த்வான் குண்டுவெடிப்பில் இறந்தான், என்பது விசித்திரமாக இல்லை போலும்! மேலும், கரீம் ஷேய்க் கேரளாவுக்கு வேலைத் தேடித்தான் சென்றானா அல்லது தீவிரவாதிகளுடன் தொடர்பு கொள்ள, பயிற்சி பெற சென்றானா என்று தெரியவில்லை. 9/11 குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட டேவிட் கோல்மென் ஹெட்லி, மூணாறில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் தங்கியிருப்பது தெரிய வந்தது. எனவே தீவிரவாதிகளில் கேரள தொடர்புகள் விவரமாகத்தான் இருந்து வருகின்றன.
பங்களாதேசத்திலும் பர்த்வான் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்டவர்கள், கூட்டாளிகள் கைது (11-11-2014): பர்த்வான் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளி என சந்தேகிக்கப்படும் ஷேக் சாதிக் என்ற சாஜித்தின் சகோதரர் முகமது முனாயமை வங்கதேச அரசு 11-11-2014 அன்று கைது செய்துள்ளது. மேற்கு வங்க போலீசார் சாஜித்தை கைது செய்தபின்னர், வங்கதேசத்தில் அதிவிரைவுப் படை பட்டாலியன் போலீசார் தீவிர சோதனை நடத்தி வந்தனர். இன்று அதிகாலையில் நடத்தப்பட்ட சோதனையில், நாராயண்கஞ்ச் துறைமுக நகரமான பராசிகண்டாவில் முனாயம் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வங்கதேசத்தில் தடை செய்யப்பட்ட ஜமாத்துல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்தவர் ஆவார்[7]. ஜே.எம்.பியின் தொடர்புகள் ஏற்கெனவே எடுத்துக் காட்டப் பட்டன. 2007ல் இது அங்கு தடை செய்யப் பட்டவுடன், இந்தியாவில் வேரூன்ற ஆரம்பித்தது, அதற்கு மேற்கு வங்காள முஸ்லிம் அரசியல்வாதிகள் நன்றாக உதவியுள்ளார்கள். மற்ற அரசியல் கட்சிக் காரர்கள் “முஸ்லிம் ஓட்டு வங்கி” என்ற ஒரே எண்ணத்தில், எல்லாவற்றையும் மறைத்து வைத்தனர். அதனால், எதேச்சையாக குன்டு வெடித்து அவர்களைக் காட்டிக் கொடுத்து விட்டது. அதிலும் அக்டோபர் 2, 2014 – காந்தி பிறந்த நாளில் குண்டு வெடித்து அம்பலமாகியது. மேற்கு வங்க மாநிலம், பர்த்வான் மாவட்டம் கராகார்க் நகரில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் கடந்த மாதம் 2-ம்தேதி குண்டு வெடித்தது. இதில் 2 பேர் பலியாகினர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு வங்காளதேசத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளின் சதித்திட்டம்தான் காரணம் என்பது தேசியப் புலனாய்வு அமைப்பினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், இவ்விரங்கள் மேலும் தெரிய வந்துள்ளன.
தீவிரவாதம், மதம், நிறம், சித்தாந்தம்: தீவிரவாதத்தைத் தனித்துப் பார்க்கவேண்டும், அதனை எந்த மதத்துடன் தொடர்புப் படுத்திப் பார்க்கக் கூடாது. அதற்கு வண்ணமும் கொடுக்கக் கூடாது என்றெல்லாம் இந்தியாவில் அடிக்கடி போதனைகள் செய்வது உண்டு. ஆனால், காவி தீவிரவாதம் என்று காங்கிரஸ்காரர்கள் பேசி, அது ஊடகங்களில் பிரயோகம் செய்யப் பட்டது. ஆனால், பச்சைத் தீவிரவாதம் என்று முஸ்லிம்களின் தீவிரவாதத்தையோ, சிவப்புத் தீவிரவாதம் என்று கம்யூனிஸ (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட், நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் முதலிய இத்யாதிகள்) தீவிரவாதத்தையோ, கருப்புத் தீவிரவாதம் என்று திராவிடக்குழுக்களின் தீவிரவாதத்தையோக் குறிப்பிடவில்லை. ஆனால், இவையெல்லாம் நன்றாகத் தெரிந்தவைதான். வடகிழக்கு மற்றும் ஒரிஸாவில் கிருத்துவத் தீவிரவாதம் கூட வெளிப்பட்டுள்ளது. ஆனால், அதுவும் நிறத்துடன் ஒப்பிடவில்லை. இப்பொழுது, பர்த்வான் குண்டுவெடிப்பு, குண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், மதரஸாக்களே அதற்கு உபயோகப் படுத்தப் பட்டது, பெண்கள், ஜோடி-ஜோடிகளாக குண்டுகள் தயாரிப்பு, விநியோகங்களில் ஈடுபட்டது என்று பல விசயங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும் சித்தாந்தவாதிகள் மௌனமாகவே இருக்கிறார்கள். பல அரசியல்வாதிகள் தங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்பது போல நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
© வேதபிரகாஷ்
18-11-2014
[1] http://zeenews.india.com/news/india/explosion-outside-nia-office-in-kolkata-warning-against-burdwan-probe_1497114.html
[2] “Mamata tried to cover up all the bomb blasts at hideouts of JuMB in West Bengal. Prior to the Burdwan blast on October 2, there had been two explosions. One was at Metiabruz here at a home in 2012 which was then occupied by Shakil Ahmed, the JuMB terrorist who died in Burdwan blast. In February 2013, there was another blast at Garden Reach in which the son of a TMC councillor Ranjit Shil died.”
[3] Singh said that the injured JuMB terrorist Abdul Hakim, now in NIA custody, during interrogation, had revealed that the house at Khagragarh in Burdwan was a lab for manufacturing rocket launchers also.
[4] http://indianexpress.com/article/india/india-others/burdwan-blast-mastermind-arrested/
[5] http://www.hindustantimes.com/india-news/second-victim-of-burdwan-blast-identified/article1-1285328.aspx
[6] http://www.business-standard.com/article/pti-stories/body-of-burdwan-blast-accused-handed-over-to-family-114111200723_1.html
[7] http://www.maalaimalar.com/2014/11/11231755/Bangladesh-arrests-Burdwan-bla.html
Explore posts in the same categories: குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, சஜித், சிமி, சுவாமி விவேகானந்தர், பங்காளதேசம், பர்கா, பர்துவான், பர்த்வான், பர்மா, பாபுலர் பிரென்ட் ஆப் இந்தியா, பி.எப்.ஐ, மூணாறு, விவேகானந்தர், ஷேக் ரஹமத்துல்லா, ஹுஜி பங்களாகுறிச்சொற்கள்: ஃபத்வா, அவமதிக்கும் இஸ்லாம், இஸ்லாம், குண்டு வெடிப்பு, சிறுபான்மையினர், சுவாமி விவேகானந்தர், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், பர்துவான், பர்த்வான், புனிதப்போர், முஸ்லீம்கள், விவேகானந்தர், ஹுக்கா
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்