பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (2)
பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (2)
குண்டு தயாரிப்பு தொழிற்சாலை நடத்தும் ஜிஹாதிகள்: “பர்த்வானில் வீடு ஒன்றில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை தயாரித்தபோது, திடீரென குண்டுகள் வெடித்து சிதறியதில் 2 தீவிரவாதிகள் பலியாகினர்”, என்று போலீஸாரே ஒப்புக் கொண்ட பிறகு, இதைப் பற்றி மற்றவர்கள் ஆராயத் தொடங்கினர். அதன் மூலம் பல விசயங்கள் வெளிவந்தன. ஜமாத்-உல்-முஜாஹித்தீன் வங்காளதேசம் [Jamaat-ul-Mujahideen Bangladesh (JMB)] இந்திய முஜாஹித்தீன் [ Indian Mujahideen (IM)] மற்றும் அல்-ஜிஹாத் [ Al Jihad, a new outfit with bases in Pakistan] பாகிஸ்தானின் புதிய ஜிஹாதி இயக்கம் முதலியன இந்த குண்டு தயாரிப்பு தொழிற்சாலையில் தொடர்பு கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது[1]. அதாவது அண்டைநாடுகளிலுள்ளா ஜிஹாதி அமைப்புகள் கைகோர்த்துக் கொண்டு வேலை செய்கின்றன என்றும் தெரிகிறது. இருப்பினும், முஸ்லிம்கள் இவ்வாறு தீவிரவாத செய்களில் ஈடுபட்டு வருவதை, மற்ற முஸ்லிம்கள் கண்டிப்பதாகத் தெரியவில்லை. மாறாக அவர்களுக்கு உதவி வருவது தான், விசாரணையில் மறுபடி-மறுபடி தெரிய வருகிறது.
தீவிரவாத குற்றங்களில் அரசியல் நுழைப்பது: இது பற்றிய விவரங்கள் வெளி வந்தாலும், திரிணமூல் காங்கிரஸ்காரர்கள் தங்களுக்கும், அதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று உறுதியாக வாதித்து வருகின்றனர். கம்யூனிஸ்ட் மற்றும் பிஜேபி கட்சியினர், என்.ஐ.ஏ இதில் புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், திரிணமூல் காங்கிரஸ் போலீஸார் தகுந்த நடவடிக்கை எடுத்தது மட்டுமல்லாது, இவ்விசயத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதால், மத்திய அரசு, என்.ஐ.ஏ மூலம் மூக்கை நுழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியதோடு, அதற்கு ஆதரவாக, ஒரு ஆர்பாட்டத்தையும் நடத்தியுள்ளனர். பதிலுக்கு பிஜேபி ஒரு ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளது. ஜிஹாதிகளின் கைவேலை மற்றும் அதன் தீவிரத்தைக் கண்டுகொள்ளாமல் இப்படு அரசியல் செய்து வருவது நடுநிலையாளர்களைத் திடுக்கிட வைத்துள்ளது. ஏற்கெனவே, திரிணமூல் காங்கிரஸ்காரர்கள், முஸ்லிம்களுக்கு பலமுறைகளில் தாஜா செய்து வருகிறார்கள் – பங்களாதேச அகதிகளை உள்ளே நுழைய வசதி செய்து தருகிறார்கள்; தேர்தல் ரேஷன் அட்டை, அடையாள அட்டை, முதலியவற்றைக் கொடுத்து அவர்களது குடியுரிமையினையும் உறுதி செய்து வருகிறார்கள்;
டு சர்க்கிள்ஸ் நெட்வொர்க் கொடுக்கும் விவரங்கள்[2]: இது முஸ்லிம் சார்புடைய இணைதளம் என்பதால், அவர்களது கருத்தையும் அறியும் வண்ணம் அவர்களது தகவல்கள் கொடுக்கப் படுகின்றன. மதரஸாவை தவறான முறையில் அடையாளங் காணப்பட்டுள்ளது என்பது இவர்களின் வாதம். இருப்பினும் அவர்கள் கொடுக்கும் விவரங்கள் மற்றும் மேலும் வெளிவரும் விவரங்கள் அவர்களது வாதத்திற்கு ஒவ்வாததாக இல்லை. 11-10-2014 அன்று TCN குழு அங்கு வந்தபோது பதட்டமான நிலையிருந்தது. போலீஸ்கார்ர்கள் அங்கு அதிகமாக குவிந்ததும், ஊடகக் காரர்கள் வந்ததும், அங்கிருக்கும் மக்களுக்கு சங்கடமாக இருந்தது. ஷாநவாஜ் கான் என்கின்ற சோடு [Shahnawaz Khan alias Chhotu] என்பவன் தான் இறந்த உடல்கள் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்ல போலீஸாருக்கு உதவினான். அவன் அங்கு பிளம்பராக வேலை செய்து வருகிறான். பர்த்வான் போலீஸ் கமிஷனர் – சையது மொஹம்மது ஹொஸைன் மீரஜஜ்[ Burdwan district police chief Syed Muhammad Hossain Meerza], கூடுதல் எஸ்பி – தருண் ஹால்தர் [Additional SP Tarun Halder], SDPO அம்லன் குசும் கோஷ் [SDPO Amlan Kusum Ghosh], அப்துல் கபூர் [IC of Burdwan Abdul Gaffar] முதலியோர் அங்கு வந்தனர். சோதனையிட்ட போது, கீழ்கண்டவை கெண்டெடுக்கப் பட்டன[3]:
- 59 உடனடி தயாரிப்பு வெடிகுண்டுகள் – உள்ளுரில் தயாரிக்கப்பட்டவை [59 improvised explosive devices (IEDs) or home-made bombs],
- 55 உடனடி தயாரிப்பு கை-வெடிகுண்டுகள் [55 improvised hand grenades],
- எக்கச்சக்கமான ஜிலேடின் குச்சிகள் [an undeclared number of gelatine sticks],
- ரசாயனப் பொருட்கள் [chemicals],
- குண்டுவெடிப்பு-குண்டுகள் தயாரிப்பது பற்ரிய புத்தகங்கள் [explosives-making literature],
- சிறு-குறும் புத்தகங்கள் [pamphlets, etc.]
- எரிந்த நிலையில் காணப்பட்ட காகிதங்களில் ஜிஹாத், செசன்யாவில் உள்ள நமது சகோதர்களுக்கு சலாம், முஜாஹித்தீன், ஜவாஹிரி…….போன்ற வார்த்தைகள் இருந்தன [.partially burnt papers that had Bangla script, some of which mention words and phrases such as “mujahid” and “salaam to our brothers in Chechnya”. Police said the pamphlets also mention “Zawahiri”, the al Qaida leader Ayman Al Zawahiri].
இப்படி பெரிய அதிகாரிகள் எல்லோரும் முஸ்லிம்களாக இருக்கும் போது தான், போலீஸார் ஒருவேளை அப்படி நடந்து கொண்டார்களா, என்ற கேள்வியும் எழுகின்றது.

Shahnawaz Khan alias Chhotu, a local plumber, one of the persons to enter the rented house after the blast. Courtesy – twocircles
மதரஸாவில் குண்டுகள், ஆயுதங்கள் முதலியவை எப்படி இருக்கும்?: குறிப்பிட்ட வீடு மாநில சி.ஐ.டி எட்டு நாட்களுக்கு 08-10-2014 முன்னர் சீல் வைத்துவிட்டு சென்றனர், ஆனால், இப்பொழுது 16-10-2014 அன்று என்.ஐ.ஏ திறந்து சோதனை நடத்திய போது 30 வெடிகுண்டுகள், வெடி மருந்து மற்ற சம்பந்தப் பட்ட பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன[4]. சிமுலியா [ madrasa at Simulia ] என்ற இடத்தில் இருந்த மத்ரஸாவில் தேடும் பணியில் ஈடுபட்டபோது தான் இவை கிடைத்துள்ளன. சிமுலியா கிராமம் பர்த்வான் மாவட்டத்தில், மங்கள் கோட் என்ற இடத்தில் உள்ளது. 12-10-2014 அன்று அங்கு நடத்திய சோதனையில் –
- காற்று துப்பாக்கி மூலம் வெடிக்கப் பட்ட குண்டுகளின் பாகங்கள் [Air gun pellets],
- கூர்மையான ஆயுதங்கள் [sharp-edged weapons],
- பணம் பெற்றுக் கொண்டற்கான ரசீதுகள் [money receipts],
- ஜிஹாதி இலக்கியங்கள் [jihadi literature],
- குறிப்பாக நல்ல இறப்பை அடைவது எப்படி என்ற வங்காள மொழியில் உள்ள புத்தகம் [including a Bengali book titled, “How To Die A Good Death”],
முதலியவை கண்டெடுக்கப் பட்டுள்ளன[5]. இதனால், அந்த மதரஸா ஜிஹாதிகளின் மையமாக, தலைமையகமாக செயல்பட்டு வந்தது உண்மையாகிறது[6]. மேலும் முக்கிய குற்றாவாளியான யூசுப் செயிக்கின் இரண்டு உறவினர்களும் கைது செய்யப் பட்டனர். ஹபிபுர் செயிக் என்பவன் அமீனா பீபி கொடுத்த எச்சரிக்கையின் படி கௌஸருடன் மூர்ஷிதாபாதில் உள்ள பாபர் பாக் என்ற மறைவிடத்திலுருந்து தப்பியோடி விட்டான். பிறகு புதன் கிழமை அன்று போல்பூர் நகரத்தில் புறப்பகுதியில் முலுக் என்ற இடத்தில் பிடிபட்டான். இவன் கௌஸாரின் மைத்துனன், இந்த பயங்கரவாத கும்பலின் தீவிரமான வேலையாள், சிமுலியா மதரஸாவில் பயிற்சி அளிக்கும் நிபுணர்களூள் ஒருவன் என்று பல அவதாரங்களைக் கொண்டுள்ளான்.[7]. மதரஸாக்கள் தீவிரவாதத்தை வளர்க்கின்றன என்று சொன்னால், சில முஸ்லிம்கள் சண்டௌக்கு வருகிறார்கள், இல்லை காரசாரமாக விவாதிக்க வருகிறார்கள், ஒரு நிலையில் மிரட்டவும் செய்கிறார்கள். ஆனால், இவ்வாறு நடக்கும் செய்திகள் வௌம் போது, மௌனியாகி விடுகிறார்கள்.
இன்னொரு வீட்டில் சோதனை: 08-10-2014 அன்று பாத்சாஹி தெருவில் உள்ள ரிஸ்வான் செயிக்கின் [Rizwan Sheikh] வீட்டை ரெயிட் செய்து, இரண்டு பெண்களை கைது செய்தனர். அப்பொழுது அந்த வீடு காலியாக இருந்தது. அங்கிருந்தவர்கள், கட்டிட வேலை செய்பவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள் சென்றுவிட்டனர். அவர்களில் ஒருவன் தான் ரெசூல் என்கின்ற ஜிஹாதி. ஆனால், 16-10-2014 அன்று தேசிய புலனாய்வு நிறுவனம் [the National Investigation Agency (NIA) ] மற்றும் தேசிய பாதுகாப்பு வீரர்கள் குழு [the National Security Guards (NSG) ] இவற்றின் மோப்ப நாய்கள் உதவியுடன் இந்த குண்டுகளைக் கண்டுபிடித்துள்ளனர். அதனால் தான் மாநில எதிர்கட்சிகள், திரிணமூல் காங்கிரஸ்காரர் சம்பந்தப் பட்டிருப்பதால், போலீஸும் பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்[8]. முதலமைச்சர் இவ்விசயத்தில் மெத்தனமாக இருப்பதும் வியப்பாக இருக்கிறது. தீவிரவாதத்தை எப்படி ஒடுக்க வேண்டும் என்றில்லாமல், சம்பந்தப் பட்ட அரசியல்வாதிகளை பாதுகாக்க நடந்து கொள்வது போல தான், நிகழ்சிகள் அங்கு நடந்து வருகின்றன.
© வேதபிரகாஷ்
17-10-2014
[1] http://bdnews24.com/bangladesh/2014/10/09/burdwan-blast-exposes-jmb-hit-squad
[2] http://twocircles.net/2014oct15/1413358352.html#.VEB9lfmSynU
[3] http://twocircles.net/2014oct15/1413358352.html#.VEB9lfmSynU
[4] http://www.ndtv.com/article/india/burdwan-blast-case-30-grenades-found-from-house-sealed-by-bengal-police-607941
[5] http://www.dnaindia.com/india/report-ammunition-recovered-from-house-in-west-bengal-2026809
http://zeenews.india.com/news/india/burdwan-blast-nia-team-expresses-security-concern-centre-to-send-bsf-company_1485663.html[6]
[7] Habibur Shiekh — an alleged operative of the terror module and ‘trainer’ at the Simulia madrassa — was nabbed from Muluk on the outskirts of Bolpur town on Wednesday. He had fled his hideout in Murshidabad’s Baburbagh, along with Kausar, soon after being tipped off by Amina Bibi within minutes of the Khagragarh blast on October 2. Habibur is a relative of Kausar’s brother-in law Kader Shiekh of Dakshin Nimra village — a stone’s throw from the home of President Pranab Mukherjee’s elder sister. A resident of Muluk, Habibur used to frequent the President’s native village, Kirnahar. In fact, Mukherjee was in the village for Durga Puja when the IEDs exploded in Khagragarh http://timesofindia.indiatimes.com/india/NIA-makes-first-arrest-in-Bardhaman-blast-probe/articleshow/44831211.cms
[8] http://indianexpress.com/article/india/india-others/bjp-on-offensive-bengal-says-no-terror-link-found-in-burdwan-blast/
Explore posts in the same categories: அரசியல்வாதிகள், அல் - காய்தா, அல் - கொய்தா, அல்-முஜாஹித்தீன், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இந்திய விரோதம், இந்தியத் தன்மை, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, ஜிஹாதி, ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்துவம், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, பர்த்வான்குறிச்சொற்கள்: அழகிய இளம் பெண்கள், இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், குண்டு, குண்டு வெடிப்பு, செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், பர்த்வான், முஜாஹித்தீன், முஸ்லிம்கள், வங்காளம்
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்