“திருமணம் என்னும் நிக்காஹ்” படம், ஷியா முஸ்லிம்கள் எதிர்ப்பு, முஸ்லிம் பண்டிகைகள் சினிமாவில் காட்டுவதில் என்ன பிரச்சினை?

“திருமணம்  என்னும் நிக்காஹ்”  படம்,  ஷியா முஸ்லிம்கள் எதிர்ப்பு,  முஸ்லிம் பண்டிகைகள் சினிமாவில் காட்டுவதில் என்ன பிரச்சினை?

திருமணம் என்னும் நிக்காஹ்.2

திருமணம் என்னும் நிக்காஹ்.2

இந்து பையன், முஸ்லிம் பெண் காதல் முதலியன:  “திருமணம் என்னும் நிக்காஹ்” என்ற தலைப்பும்,  அது எதைப் பற்றிய கதை என்ற தகவலும் வெளியானதிலிருந்தே,  அந்தப் படத்துக்கு ஏதாவது ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆட்சேபணை தெரிவிக்கும் என எதிர்ப்பார்க்கப் பட்டது[1] என்று “தமிள்.ஒன்.இந்தியா” போட்டு வைத்தது.  சென்ற வருடமே வெளிவந்திருக்க வேண்டிய படம் வெளிவரவில்லை,  காரணமும் சொல்லப் படவில்லை[2]. மே 15  வெளிவருகிறது என்று அறிவித்தார்கள்,  ஆனால்,  தேதி தள்ளிவைக்கப்பட்டது என்றார்கள்[3]. “தி இந்துவில்”  வந்த விமர்சனம் இப்படத்தின் கதையை அலசியுள்ளது.  ஒரு இந்து பிராமண பையன், முஸ்லிம் பெண்ணைக் காதலிக்கிறான்.  இரு குடும்பங்களை மையமாக வைத்துக் கொண்டு விவரணங்கள் செல்கின்றன.  இத்தகைய படங்களை எடுப்பதில் அபாயம் இருக்கிறாதா என்ற கேள்வியை எழுப்பி, படத்தில் சரிசமமாக எல்லாவற்றையும் வைத்துக் கொள்ள வேண்டும். இப்படத்தில் மொஹ்ஹரம்,  ரம்ஜான் மற்றும் நிக்காஹ் விழாக்கள் விவரமாகக் காட்டப்படுகின்றன. அதேபோல, ஆவணிஆவட்டம்,  நவராத்திரி, கொலு போன்ற விழாக்களும் சித்தரிக்க ப்பட்டுள்ளன.  இது தவிர முர்ஸீத் என்ற இஸ்லாமிய கொலு போன்ற விழா பற்றியும் விளப்படுகிறது[4]

 

Indian Express photo

Indian Express photo

ஷியா முஸ்லிம்கள் இயக்கம் எதிர்ப்பு, நீதிமன்றத்தில் மனு: இம்மாதம்  14ம் தேதி வெளியிடுவதாக இருந்தது,  வெளிவரவில்லை[5].  ஆனால், கதை தொடர்ந்தது.  நஸ்ரியாவுக்கு இது திருப்புமுனை என்றெல்லாம் அளந்தார்கள்.  அந்நிலையில் தான், ஷியா முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். நடிகர் ஜெய்,  நடிகை நஸ்ரியா நடித்துள்ள திருமணம் என்னும் நிக்காஹ் படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார், அனீஸ் இயக்கியுள்ளார். “திருமணம் எனும் நிக்காஹ்’  திரைப்படத்துக்கு தடைவிதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு சென்னை போலீஸ் ஆணையர்,  திரைப்பட மத்திய தணிக்கைக் குழு மற்றும் ஆஸ்கார் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது[6].  இது தொடர்பாக தமிழ்நாடு ஷியா முஸ்லிம் ஜமாத்தின் துணைத்தலைவர் டேப்லெஸ் /  டப்ளஸ்  அலிகான் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: “திருமணம் எனும் நிக்காஹ்’  திரைப்படத்தை ஆஸ்கார் பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளது. அதன்  உரிமையாளர் வி. ரவிசந்திரன்.  அதை மே மாதம் 30-ஆம் தேதி திரையிடவும் முடிவு செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.  அந்தத் திரைப்படத்தில் முஸ்லிம்கள் தரக்குறைவாக சித்திரிக்கப் பட்டுள்ளனர்.  அதிலும்,  ஷியா பிரிவு முஸ்லிம்களை மிகவும் இழிவு படுத்தி சித்திரித்துள்ளனர். இதனால் மதக்கலவரம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.  எற்கெனவே,  இந்த படத்தின் தயாரிப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் கடந்த 20–ந்தேதி புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை[7].எனவே,  இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்”, என மனுவில் கோரப் பட்டுள்ளது.

 

Muharram festival

Muharram festival

விடுமுறை  நீதிமன்ற  இடைக்கால  நடவடிக்கை:  இந்த மனு விடுமுறைக் கால நீதிபதி எஸ். வைத்தியநாதன் முன்பு வியாழக்கிழமை (மே 29) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ஜூன் 3- ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சென்னை போலீஸ் ஆணையர்,  திரைப்பட மத்திய தணிக்கைக் குழு மற்றும் ஆஸ்கார் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்[8]. மனுவுக்கு ஜூன் 4– ந் தேதிக்குள் பதிலளிக்கும்படி போலீஸ் கமிஷனருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்[9].  போற போக்கைப் பார்த்தால் எல்லா தமிழ்ச் சினிமாவையும் இனிமேல் கோர்ட்டு தான் ரிலீஸ் செய்யும் போலிருக்கு..  திருமணம் என்னும் நிக்காஹ் படத்துக்கு தடைகேட்டு இன்றைக்கு கோர்ட் படியேறியிருக்கிறது, ஒருகூட்டம்[10] என்று காட்டமாகக் கூட ஒரு இணைதளம் கமென்ட் அடித்துள்ளது.

 

M2U00474

M2U00474

சினிமா தயாரிப்பாளர் விளக்கம்[11]: பட சர்ச்சை குறித்து ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் கூறுகையில்,  ‘‘படத்துக்கு தணிக்கைக் குழு ‘யு’  சான்றிதழ் தந்துள்ளது.  குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தி படம் எடுத்திருந்தால் தணிக்கைக் குழு அனுமதிக்குமா? இது இஸ்லாம் மதத்துக்கு பெருமை சேர்க்கும் படம்.  படத்தை இயக்கியவர்,  இசையமைத்தவர், குறிப்பிட்ட நடிகர்கள் எல்லோரும் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்கள்.  படம் வெளிவரும் முன்பே அவதூறாக கூறியாரும் விளம்பரம் தேடக்கூடாது. திட்டமிட்டபடி படம் வெளிவரும்.  எப்போது ரிலீஸ் என்பதை சனிக்கிழமை அறிவிப்போம்’’  என்றார்.

 

Muharram Hyderabad 2009

Muharram Hyderabad 2009

முஸ்லிம் பண்டிகைகள் சினிமாவில் காட்டுவதில் என்ன பிரச்சினை?:  ஷியா முஸ்லிம்கள் இப்படத்தை எதிர்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது.  மொஹரம்,  ரம்ஜான் மற்றும் நிக்காஹ் முதலியவை சினிமாவில் காட்டுவதில் என்ன எதிர்ப்பு இருக்கிறது என்று தெரியவில்லை!   முதலில் இவற்றிற்கெல்லாம் விடுமுறை கூட இல்லை, ஆனால், செக்யூலரிஸ ஆட்சியாளர்கள் விடுமுறை அளித்து,  பிறகு அவற்றை தேசிய விடுமுறைகளாக்கினர். முஸ்லிம் நாடுகளிலேயே அவ்வாறு விடுமுறை அளிப்பது கிடையாது.  இப்படத்தில் மொஹ்ஹரம்,  ரம்ஜான் மற்றும் நிக்காஹ் விழாக்கள் விவரமாகக் காட்டப் படுகின்றன. அதேபோல,  ஆவணி ஆவட்டம்,  நவராத்திரி, கொலு போன்ற விழாக்களும் சித்தரிக்கப் பட்டுள்ளன.  இது தவிர முர்ஸீத் என்ற இஸ்லாமிய கொலு போன்ற விழா பற்றியும் விளப்படுகிறது[12].  ஆக  அந்த “முர்ஸித் / கொலு” தான் பிரச்சினை போலும்! ஒருவேளை, சுன்னி முஸ்லிம்கள் தூண்டி விட்டு, ஷியாக்கள் எதிர்த்திருக்கலாம். “மாரடி விழா” முதலிய ராயப்பேட்டையிலேயே மக்கள் பார்த்திருக்கிறார்கள். ஹைதரபாதில் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். மற்ற வட இந்திய நகரங்களில் அமர்க்களமாகக் கொண்டாடுவார்கள். ஆகவே, இவற்றைக் காண்பிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆகவே, வேறு பிரச்சினையை மதப்பிரச்சினையாக்கி, இவ்வாறு செய்கிறார்களா என்று தெரியவில்லை.

 

திருமணம் என்னும் நிக்காஹ்.3

திருமணம் என்னும் நிக்காஹ்.3

© வேதபிரகாஷ்

30-05-2014

[1] http://tamil.oneindia.in/movies/news/petition-seeks-ban-on-thirumanam-ennum-nikkah-202275.html

[2] http://www.deccanchronicle.com/140514/entertainment-kollywood/article/thirumanam-ennum-nikkah-release-soon

[3] http://www.kollytalk.com/video/video-news/jai-nazriyas-thirumanam-ennum-nikkah-postponed-153313.html

[4] Are there any risks in making such a film? “The key is to ensure there is balance. While the film features the Muharram, Ramzan and Nikkah festivities in great detail, it also features Avani Avattam and Navarathiri Golu celebrations. In fact, I have even showcased a lesser known festival, the Murshid, which I believe is the Islamic equivalent of the Golu and celebrated privately in homes.” In fact, this is one of the reasons the film has been delayed so much. “I had to wait for these festivals,” he says.

http://www.thehindu.com/features/cinema/marriage-by-any-name/article5996427.ece

[5]Rumours were rife that Anis’s Thirumanam Ennum Nikkah, starring Jai and Nazriya, was postponed from May 15, the date slated for release, due to certain issues. However, when DC quizzed the director on it, he said, “There were plans of postponing it owing to trivial reasons. However, going by the present scenario, it is highly likely that the movie might release on the fixed date itself.” Thirumanam Ennum Nikkah, produced by Aascar Ravichandran, bagged a ‘U’ certificate recently. The songs scored by Ghibran has already topped the charts.

[6]தினமலர்,  “திருமணம்எனும்நிக்காஹ்திரைப்படத்துக்குதடைகோரிவழக்கு, By dn, சென்னை, First Published : 30 May 2014 03:09 AM IST

[7]தினத்தந்தி,திருமணம்என்னும்நிக்ஹாபடத்துக்குதடைவிதிக்கவேண்டும்; சென்னைஐகோர்ட்டில்வழக்கு, பதிவுசெய்தநாள் : May 30 | 12:20 am

[8]http://www.dinamani.com/cinema/2014/05/30/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/article2253242.ece

[9] http://www.dailythanthi.com/2014-05-30–marriage-nikha-film-to-be-banned-case-in-the-madras-hc

[10] http://www.tamilcinetalk.com/some-muslims-ask-ban-on-thirumanam-ennum-nikkah/

[11]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/article6064424.ece

[12] Are there any risks in making such a film? “The key is to ensure there is balance. While the film features the Muharram, Ramzan and Nikkah festivities in great detail, it also features Avani Avattam and Navarathiri Golu celebrations. In fact, I have even showcased a lesser known festival, the Murshid, which I believe is the Islamic equivalent of the Golu and celebrated privately in homes.” In fact, this is one of the reasons the film has been delayed so much. “I had to wait for these festivals,” he says.

http://www.thehindu.com/features/cinema/marriage-by-any-name/article5996427.ece

Explore posts in the same categories: ஆதாரம், ஆஸ்கார், ஆஸ்கார் பிலிம்ஸ், இசை, உருவம், உரூஸ், காதல், தடை, நநஸ்ரியா, நஸ்ரியா, நிக்காஹ், மாரடி, முர்ஸித், ரம்ஜான், ரவிச்சந்திரன், விஜய், ஹஸன், ஹுஸைன்

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: