அன்சாரின் பலதார திருமணங்களும், பெண்கள் படும் பாடும் – காரணம் இஸ்லாமா, பெண்களா, திருமணமுறையா?

அன்சாரின் பலதார திருமணங்களும், பெண்கள் படும் பாடும் – காரணம் இஸ்லாமா, பெண்களா, திருமணமுறையா?

 

Nellai Muslim married 4 and tries for 5 - 2014

Nellai Muslim married 4 and tries for 5 – 2014

நதிரா பானு என்ற பெண் அன்சார் என்பவர் மீது புகார் (மார்ச்.2014): நெல்லை தச்சநல்லூர் பகுதியில் கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நதிராபானு (வயது 25). இவர் தனது 3 குழந்தைகள் மற்றும் மாதர் சங்க நிர்வாகிகளுடன் நெல்லை கலெக்டர் மாவட்ட அலுவலகத்திற்கு வந்து 5வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றிய ஓட்டல் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: “எனக்கும், மேலப்பாளையத்தைச் சேர்ந்த அன்சார் (48) என்பவருக்கும் கடந்த 30.5.2009 அன்று இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்தது. அன்சார் நெல்லையில் பல இடங்களில் ஓட்டல் நடத்தி வருகிறார். தனது முதல் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்பதாலேயே, என்னை திருமணம் செய்து கொள்வதாக அன்சாரி கூறியிருந்தார். ஆனால், ஏற்கனவே அவருக்கு ஏற்கெனவே இரண்டாவது மனைவி நூர்ஜஹான், மற்றும் மூன்றாவது மனைவி என்று மொத்தம் மூன்று மனைவிகள் இருப்பது பின்னர் தெரியவந்தது[1]. இதுதவிர அவர் ஏராளமான பெண்களுடன் தகாத தொடர்பு வைத்துள்ளார் என்பதும் எனக்கு தெரிய வந்தது”. நான்கு மனைவியர் கூட ஐந்து, அதுவில்லாமல் மற்ற பெண்களிடம் தகாத தொடர்பு வைத்துள்ளது என்றால், இஸ்லாம் எப்படி இவற்றை அனுமதிக்கிறது, மற்றும் அதற்கும் குரான், ஷதீஸ் மற்றும் ஷரீயத்தில் ஆதாரம் உள்ளது என்று காட்டுவார்களா, அப்படியென்றால், முஸ்லிம் பெண்களின் கதியென்ன?

 

அன்சார் பிரச்சினை இஸ்லாமா இல்லையா 2014

அன்சார் பிரச்சினை இஸ்லாமா இல்லையா 2014

5வது திருமணம் செய்ய முயன்ற போது, 4வது மனை புகார்: நதிராபானு தொடர்கிறார், “சில நாட்கள் கழித்தே எனது கணவர் என்னை 4வதாக திருமணம் செய்தது தெரியவந்தது.  எனக்கு 10 பவுன் நகை சீதனமாக எனது பெற்றோர் கொடுத்தனர்[2]. எங்களுக்கு 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் என்னிடம், ‘‘எனக்கு 4 மனைவிகள், 14 குழந்தைகள் உள்ளனர். இதை உன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் என்னுடன் நீ வாழ முடியாது”, என்றார். ஏழ்மை காரணமாக என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்நிலையில் திடீரென அவர் வேறு பெண்ணை திருமணம் செய்ய போகிறேன் என்று கூறி என்னை கையெழுத்து போட சொல்கிறார். நான் மறுக்கவே சாப்பாடு போடாமல் என்னை பட்டினி போடுகிறார். அவரது கொடுமை தாங்காமல் பெற்றோர் வீட்டுக்கு சென்றேன்”[3]. அதாவது நான்காவதாகத்தான் இப்பெண்னை திருமணம் செய்து கொண்டுள்ளார், பிறகு வற்புறுத்தி ஒப்புதல் கடிதம் வாங்கிக் கொண்டு, இன்னொருத்தியை நிக்காஹ் செய்து கொள்ள முயல்கிறார் என்றாகிறது.

 

நதிரா பானு - அன்சார் - 5-நிக்காஹ் 2014

நதிரா பானு – அன்சார் – 5-நிக்காஹ் 2014

4வது மனைவியைக் கொடுமைப் படுத்தியது: நதிராபானு தொடர்கிறார், “இதைத் தட்டிக் கேட்ட என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். இதுகுறித்து எனது அவரிடம் கேட்ட போது என்னை அடித்து சித்ரவதை செய்து தொடர்ந்து துன்புறுத்தி வந்தார். ஒரு முறை என்னிடம் கையெழுத்து மட்டும் வாங்கிக் கொண்டு, விரட்டியடித்தார். பின்னர் மறுபடியும் என்னிடம் வந்து தனியாக வீடு வாங்கி காஞ்சிபுரத்தில் குடிவைத்தார். என்னுடன் சேர்ந்து வாழ்வதாக கூறி அழைத்து சென்றார். மீண்டும் நான் கார்ப்பமானோன். ஆனால் அவர் கட்டாயப்படுத்தி அதை கலைத்தார் அங்கு வீட்டு வேலைக்காரியுடன் தொடர்பை வளர்த்து கொண்டார். இதை நான் கண்டித்தபோது, என்னை வீட்டில் அடைத்து வைத்து மேலும், மேலும் சித்ரவதை செய்தார். இந்நிலையில் குழந்தைகளை கொன்று விடுவதாகவும் மிரட்டி வருகிறார். தற்போது மீண்டும் வீட்டை விட்டு என்னை அடி த்து துரத்தி விட்டார்”[4].

 

5வது திருமணம் முஸ்லிம்

5வது திருமணம் முஸ்லிம்

முதல் மனைவி, அவரது மகன், கணவன் என்று எல்லோரும் கூட்டு சேர்ந்துள்ளது எதைக் காட்டுகிறது?: நதிராபானு தொடர்கிறார், “அதன் பின் அந்த வீட்டை காலி செய்து விட்டு மேல்பாளையம் வந்தோம். அங்கும் வேறொரு பெண்ணை அழைத்து வந்தார். தட்டி கேட்ட என்னை அடித்து மிதித்து வீட்டின் உள்ளே வைத்து பூட்டி சென்று விட்டார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று அதில் கூறியுள்ளார். எனவே  அடித்தும் மிரட்டியும் சித்ரவதை செய்த என் கணவர் அன்சாரி மீதும் அவருக்கு உடந்தையாக உள்ள மூத்த மனைவி நூர்ஜஹான், அவரது மகன் ரஷீத் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மனுவில் கூறியுள்ளார்[5]. இந்த சம்பவத்தால் மேலப்பாளையமே அதிர்ந்து போய் கிடக்கிறது.  மனு அளிக்கும் இயக்கத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாளையங்கோட்டை தாலுகா செயலாளர் ஸ்ரீராம் உடன் இருந்தார். முதல் மனைவி, அவரது மகன், கணவன் என்று எல்லோரும் கூட்டு சேர்ந்துள்ளது, முறையான தாம்பத்தியத்தை, இல்லறத்தைக் காட்டுகிறாதா அல்லது அதற்கும் மீறிய காரியங்களைக் காட்டுகிறதா என்று மனசாட்சியுடன் சம்பந்தப்பட்டவர்கள் தாம் விளக்க வேண்டும்.

 

இஸ்லாம் பலதார மணத்திற்கு உபயோகப் படுத்தப் படுகிறது

இஸ்லாம் பலதார மணத்திற்கு உபயோகப் படுத்தப் படுகிறது

இது இஸ்லாம் பிரச்சினையா, பெண்கள் பிரச்சினையா அல்லது சமூகப் பிரச்சினையா?: மறைந்த அதிமுக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம்பிச்சைக்கு மூன்று மனைவிகள். அவரது மகன் ஆசிக் மீராவின் மீது தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்து சில நாட்கள் தாம் ஆகியுள்ளன[6]. அதற்குள் இப்படி இன்னொரு புகார் வந்துள்ளது. முன்னர் யுவன் சங்கர் ராஜாவே பலதார திருமணத்திற்காக இஸ்லாம் மாறினார் என்ற செய்திகள் வந்தன[7]. இணைதளங்களில் முஸ்லிம்கள், இதை ஏதோ பெரிய வெற்றி போல விவரங்களை வாரி அளித்தனர்[8]. ஆர். எஸ். அந்தணன் என்ற புனைப்பெயரில் இஸ்லாம் ஏதோ சாதிக்கிறது என்பது போல வரைந்து தள்ளினர்[9]. பைசூல்-பர்வீன் விவகாரமும் எப்படி இஸ்லாம் பலதார மணத்திற்கு உதவுகிறது, பெண்களை ஒரு அற்ப செக்ஸ்-பண்டமாக உபயோகப் படுத்த பயன்படுத்தப் படுகிறது என்று அவர்களே எடுத்துக் காட்டிக் கொண்டார்கள்[10]. அதில் ஒரு முஸ்லிம் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் செக்ஸுக்கு உட்படுத்தி கொள்ளலாம், பணம் கொடுத்து சரிகட்டலாம், நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டலாம் என்றெல்லாம் கூட வெளியாகின[11]. இவ்விவகாரத்தைப் பற்றிய என்னுடைய முந்தைய பதிவுகளை இங்கே பார்க்கவும்:

 1. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (1)[12]
 2. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (2)[13]
 3. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (3)[14]

இவ்விவகாரத்தில் குறிப்பாக, பைசூல் திருமணம் செய்து கொள்ளாமலேயே பர்வீனுடல் குடும்பம் நடத்தி வந்தார், உடலுறவு கொண்டார், அதனை வீடியோ எடுத்து பர்வீனை மிரட்டினார் என்ற குற்றங்கள் இருப்பதுக் கவனிக்கத் தக்கது.

 

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது

முஸ்லிமாக  மாறி  ஒன்றிற்கு  மேலாக  மனைவியை  வைத்துக்  கொள்ள  சினிமாக்காரர்கள்  பயன்படுத்தி  வருகிறார்கள்[15]: இந்தியா ஒரு செக்யூலரிஸ நாடு, ஒருவர் எந்த மதத்தையும் பின்பற்றலாம். அதனால், மதம் பற்றிப் பிரச்சினை இல்லை. அதிலும் சினிமாக்காரர்கள் மதம் மாறுவதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அது அவர்களுக்கு ஒரு சட்டையைக் கழட்டி, இன்னொரு சட்டையை மாட்டிக் கொள்வது போலத்தான். ஆனால், சினிமாக்காரர்கள் மதம் மாறுவது எப்பொழுதுமே பலதார திருமண விசயமாகத்தான் இருந்து வந்துள்ளது. அதிலும் முஸ்லிமாக மாறி ஒன்றிற்கு மேலாக மனைவியை வைத்துக் கொள்ள அது பயன் படுத்தப் பட்டு வருகின்றது. இதை கிஷோர் குமார், தர்மேந்திரா போன்ற பிரபல நடிகர்கள் கூட பின்பற்றினார்கள். கிஷோர் குமாருக்கு நான்கு மனைவிகள் – ரூமா குஹா தாகுர்தா, மதுபாலா (முஸ்லிம்), யோகிதா பாலி, லீனா சந்தவர்கர். தர்மேந்திராவுக்கு பிரகாஷ் கௌர், ஹேமாமாலினி முதலியோர்.   இந்து திருமணச் சட்டத்தின்படி இரண்டு மனைவிகளை வைத்துக் கொள்ள முடியாது அல்லது முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதால் தான், இந்தியாவில் நடிகர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் இஸ்லாத்திற்கு மாறுவது குறுக்குவழி போல பின்பற்றி வருகிறார்கள்[16]. இப்பிரச்சினை  பல உச்சநீதி மன்ற தீர்ப்புகளிலும் அலசப்பட்டு தான் 1995ல் பொது சிவில் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதி மன்ற ஒரு தீர்ப்பில் ஆணையிட்டது[17]. 2003 தீர்ப்பிலும் இது மறுபடியும் கூறப்பட்டது[18].

 

© வேதபிரகாஷ்

12-03-2014

 


[17] Smt Sarla Mudgal vs UOI & Ors – 1995 AIR 1531

[18] July 23, 2003: The Supreme Court today called for a common civil code for all citizens of the country, holding that it would not go against the two key constitutional provisions governing religion. The court said the effort to secure a uniform civil code across India — Article 44 — would not come in the way of the right to freedom of religion or the freedom to manage religious affairs as laid down in Articles 25 and 26 of the Constitution. Rather, it would “help the cause of national integration”.

http://www.telegraphindia.com/1030724/asp/frontpage/story_2194921.asp

Explore posts in the same categories: அன்சார், கங்கையம்மன் கோவில், தச்சநல்லூர், தலாக், நதிராபானு, நிக்காஹ், நெல்லை, பீவி, பேகம்

குறிச்சொற்கள்: , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

8 பின்னூட்டங்கள் மேல் “அன்சாரின் பலதார திருமணங்களும், பெண்கள் படும் பாடும் – காரணம் இஸ்லாமா, பெண்களா, திருமணமுறையா?”

 1. நஞ்சுண்டமூர்த்தி Says:

  /// இந்தியாவில் நடிகர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் இஸ்லாத்திற்கு மாறுவது குறுக்குவழி போல பின்பற்றி வருகிறார்கள் ///

  பெண்ணுக்காக இஸ்லாத்துக்கு வர வேண்டிய அவசியமில்லை. ஹிந்து திருமண சட்டப்படி ஒருவனுக்கு ஒருத்தியென்றாலும், எவ்வளவு வப்பாட்டி, ஆசைநாயகிகள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். வப்பாட்டிக்கும் அவளுடைய குழந்தைகளுக்கும், ஹிந்து திருமண சட்டப்படி சொத்தில் சல்லிக்காசு பங்கு கிடையாது.

  இஸ்லாத்தில் வப்பாட்டிகள் ஹராம். வசதியுள்ள ஆண் நான்கு மணைவியர் வரை திருமணம் செய்து கொள்ளலாம்.
  உனக்கு நல்ல வாழ்வு தரும் ஆண்மகனை தேர்ந்தெடு என ஷரியா சட்டம் அறிவுறுத்துகிறது.

  அனைத்து மணைவிகளுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு. திருமணத்துக்கு முன்னரே மஹர் எனும் வரதட்சனை மூலம் தேவையான வீடு வாசல்களை நீ மணக்கப் போகும் ஆணிடமிருந்து பெற்றுக்கொள் என ஷரியா சட்டம் எச்சரிக்கிறது.

  இதன் மூலம் ஒரு ஏழை பெண்ணுக்கு வசதியான வாழ்க்கை வாழும் வாய்ப்பு கிடைக்கிறது.

  சொத்து குவிப்பு எனும் பேராசைக்கார சித்தாந்தம் உடைந்து சொத்து பகிர்தலெனும் சமூக நீதிக்கு வழி பிறக்கிறது.

  விதவைகள் எளிதாக மறுமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு உருவாகிறது.

  தலாக் ஆகிவிட்டால், மஹரை சட்டப்படி திருப்பித்தர வேண்டியதில்லை. மஹரை திருப்பி வாங்குவது ஹராம்.
  ————————–

  இந்த பெண்கள் ஏமாற்றப் பட்டிருக்கிறார்கள். எமாற்ற நினைப்பவன் எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றுவான்.

  ஷரியா சட்டம் பெண்ணின் சொத்துரிமையை பகிரங்கமாக, தெள்ளத்தெளிவாக பாதுகாக்கிறது. அவசரப்பட்டு முந்தானை விரிப்பதற்கு முன் இந்த பெண்கள் தஙகளுக்கு வேண்டிய வீடு வாசலை சட்டப்படி எழுதி வாங்கியிருந்தால், இந்த அவல நிலை வந்திருக்குமா?.

  “வரு முன் காக்க” என்று பெண்களுக்கு ஷரியா சொல்லிக் கொடுக்கும் இந்த ரகசியம் தெரிந்தால், வப்பாட்டியெனும் பாழுங்கிணற்றில் தள்ளப்படும் ஹிந்து சகோதரிகள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்துக்கு வந்து விடுவர்.

 2. நஞ்சுண்டமூர்த்தி Says:

  இன்றைய தினம் 40 வயதாகியும் வரதட்சனை, வேலையின்மை, குடும்பச்சுமை, போதிய வருமானமின்மை போன்ற காரணங்களால் பல நடுத்தர குடும்பத்து ஹிந்து பெண்கள் திருமணமாகாமல் அவதியுறுகின்றனர்.

  திருமண வயதைக் கடந்த பெண்களையும், விதவைகளையும் முதல் தாரமாக திருமணம் செய்ய எத்துனை ஆண்கள் முன்வருவர்?. அவர்கள் வசதியுள்ள ஆணை இரண்டாம் தாரமாக திருமணம் செய்தால் என்ன தவறு?. பலதார மணத்தை ஹிந்து வேதங்கள் தடுப்பதில்லை. கீதையை போதித்த கண்ணனுக்கு 16,108 மணைவிகள், ராமரின் தந்தை தசரதனுக்கு 60,000 மணவிகள், அர்ஜுனனுக்கு 4 மணைவிகள், முருகனுக்கு 2 மணைவிகள், கருணாநிதி, எம்ஜிஆருக்கு மூன்று மணவிகள் என்பதையெல்லாம் மறந்து விடக்கூடாது.

  ஹிந்து கடவுள்களும் ஆட்சி அதிகாரம் செல்வாக்குள்ளவனும் எவ்வளவு திருமணம் செய்தாலும் உங்களூடைய ஹிந்து சட்டம் விளக்கு பிடிக்கும். சாதாரண மனிதன் செய்தால், ஹிந்து கங்காணிகள் “அய்யோ ஹிந்து மதம் அழிஞ்சு போச்சு, அழிஞ்சு போச்சு”னு அலறுவார்கள். என்ன நியாயம் இது?.

  ஹிந்து திருமண சட்டம் பலதார மணத்தை அனுமதித்தாலொழிய “வப்பாட்டி, தேவதாசி, சின்ன வீடு” போன்ற இழிவான நிலைக்கு உங்கள் ஹிந்து பெண்கள் தள்ளப்படுவதை எந்த ஜென்மத்திலும் தடுத்து நிறுத்த முடியாது. வேறு வழியில்லாவிட்டால், பலதார மணத்துக்காக ஹிந்துக்கள் இஸ்லாத்துக்கு வருவதையும் தடுக்க முடியாது.

  • S. P. M. Saivapporali Says:

   ஆந்திராவில் ஒரு முஸ்லிம்பெண்ணே, ஒரு துலுக்கப் பயலைப் போட்டு சாத்து-சாத்து என்று சாத்தினாள்.

   அது மாதிரி, தமிழகத்திலும் பெண்கள் துலுக்கன்களை அடிக்க ஆரம்பித்தால், மரியாதையாக மூடிக் கொண்டு இருப்பார்கள்.

   யுபியில் பெண்கள் துலுக்கனை அடிப்பதை இங்கே பார்க்கலாம்:

   • நஞ்சுண்டமூர்த்தி Says:

    அமெரிக்காவை நம்பி ஆப்கானுக்கு 4 லட்சம் காபிர் கூலிகளை இந்தியா அனுப்பியுள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் தாலிபானிடமே ஆட்சியை ஒப்படைத்து விட்டு துண்டைக் காணோம் துணியைக் காணோமென அமெரிக்கா ஓடத்தயாராகி விட்டான்.

    அடுத்து காஷ்மீர் ஜிஹாத்துக்கு தாலிபான்கள் தயாராக உள்ளனர். காபிர்களை ஆப்கானில் பொலி போடும் நாள் நெருங்கி விட்டது. நாட்களை எண்ணிக் கொள்.

    மலேசியா முதல் அரேபியா வரை முசல்மான் உனக்கு கஞ்சி ஊத்துகிறான். உன்னை உதைத்தால் அண்டை மாநிலத்தில் கூட ஏனென்று கேட்க நாதியில்லை. ஈழத்தில் நடந்தது போல் இந்திய ராணுவம், சீனா, பாக்கிஸ்தான், தாலிபான், ஜிஹாதிகளென்று அனைவரும் சேர்ந்து உன்னை ஆப்படித்து விடுவார்கள்.

    எங்கள் மாவீரர் தாலிபானைப் பார்த்தால், அங்கேயே நீ கழிந்து விடுவாய். கிழிந்த பாவாடையும் பட்டனில்லாத சட்டையும் அணிந்துகொண்டு, சிங்கள வெறியன் முன்னால் ஒரு கையால் மார்பை மறைத்துக்கொண்டு ஒரு வேளை கஞ்சிக்கு தட்டேந்தி நிற்கும் உனது தொப்புள் கொடி உறவுகளின் நிலை உனக்கும் வந்து விடும்.

    ஒன்று மட்டும் நிச்சயம். ஒரு நாள் இல்லை ஒரு நாள், ஒரு இறுதி காபிர்-முசல்மான் ஜிஹாத் நடந்தே தீரும். அப்படி நடந்தால், தமிழ்த்தேசம், காஷ்மீர், காலிஸ்தான், நக்ஸல்புரி, தலித்தேசம், ஆரிய வர்த்தா, இஸ்லாமிஸ்தான் என்று அனைவரும் சேர்ந்து பாரதமாதாவுக்கு சங்கு ஊதிவிடுவார்கள்.

    அப்புறம் நீ, என்ன கொண்டு வந்தாய் இழப்பதற்கென்று சொல்லிக்கொண்டு உஞ்ச விருத்தி செய்ய வேண்டியதுதான்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: