கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன் – குற்றங்கள் அதிகம் பதிவு, கைது, முற்றுகை சகஜமாக இருந்து வரும் நிலை – ஆனால் போலீசாருக்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்பாட்டம், முற்றுகை என்பதெல்லாம் புதிராக உள்ளன!

கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன் – குற்றங்கள் அதிகம் பதிவு, கைது, முற்றுகை சகஜமாக இருந்து வரும் நிலை – ஆனால் போலீசாருக்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்பாட்டம், முற்றுகை என்பதெல்லாம் புதிராக உள்ளன!

கேணிக்கரை போலீஸ் ன்டேஷன்

கேணிக்கரை போலீஸ் ன்டேஷன்

கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள குற்றங்கள் – அவற்றில் வெளிப்படும் விசயங்கள் 2010 முதல் 2014 வரை: கேணிக்கரைப் பகுதிகளில் முஸ்லிம்கள் கலாட்டா செய்வதும், பிடிபடுவதும், ஆர்பார்ட்டம் செய்வதும் சகஜமாகவே இருந்து வருகின்றது. அதுமட்டுமல்லாது, கைது செய்யப் படும் போது, போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிடுவது, ஆர்பாட்டம் செய்வது முதலியனவும் வழக்கமாகி உள்ளது. போதாகுறைக்கு, போலீசார் முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்கும் பட்சத்தில், முஸ்லிம்கள் பெரும்பாலும் வழக்குகளில் சிக்கும் போது, மதரீதியில் திருப்ப உள்ளூர் முஸ்லிம்கள் முயன்று வருகின்றனர். இதற்கு எஸ்.டி.பி.ஐ, பாப்புலர் பிரன்ட் போன்ற இயக்கங்கள் ஊக்குவிக்கின்றன. மற்றும் பிரச்சினையை பெரிதாக்க விரும்புகின்றன. பயிற்சி முகாம் நடத்திய பாப்புலர் பிரன்ட்டைச் சேர்ந்தவர்களை பெரியப்பட்டிணத்திலிருந்து கைது செய்யப்பட்டு பிறகு பெயிலில் விடப்பட்டுள்ளார்கள்[1]. பெட்ரோல் குண்டுகள் எரிவது, கொலை செய்வது, வெட்டிக் கொள்வது, முதலியனவும் சகஜமாக இருக்கின்றன. சம்பந்தப் படுபவர்கள் முஸ்லிம்கள் மற்றும் அவ்வழக்குகளை விசாரிக்கும் போது மற்ற விசயங்கள் வெளிவருகின்றன என்பதனால், அவற்றை மறைக்க இந்த முஸ்லிம் இயக்கங்கள் திசைத்திருப்ப மதசாயத்தைப் பூசப் பார்க்கின்றன.

TMMK Ramanathapuram illustration

TMMK Ramanathapuram illustration

ஆதிலாபானு கொலை வழக்கு மூலம் வெளிவந்த விவரங்கள் (நவம்பர் 2010)[2]: இப்பிரச்சினை முழுக்க-முழுக்க முஸ்லிம்களின் பிரச்சினையாக இருந்தாலும், பெரிது படுத்தப் பட்டது.  ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஆதிலாபானு (24). இவர் குப்பான்வலசையைச் சேர்ந்த முத்து மகன் முத்துச்சாமியை காதலித்து திருமணம் செய்தார். இதற்கு சாத்தான்குளத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரும் குப்பான்வலசையில் குடியேறினர். முத்துச்சாமி மதம் மாறி, அகமது என, பெயரை மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு முகமது அஸ்லம் (7) அஜிராபானு (5) என்ற குழந்தைகள் இருந்தனர். வேலைக்காக முத்துச்சாமி அகமது மலேசியா சென்ற நிலையில், ஆதிலாபானுவுக்கு சிலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கணவன், மனைவி இடையே மனகசப்பு ஏற்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன் (ஆகஸ்ட் 2010), தாய் ஹம்சத்நிஷா மற்றும் குழந்தைகளுடன் ராமநாதபுரம் பாரதிநகரில் ஆதிலாபானு குடியேறினார். கடந்த நவ., 8ம் தேதி ஆதிலாபானு, குழந்தைகள் மாயமாகினர். ஹம்சத்நிஷா கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். விசாரணையில், தனது மகளுடன் தொடர்புள்ள சிலர் மீது சந்தேகிப்பதாக தெரிவித்திருந்தார். அதாவது தாய்க்கு தனது மகளின் கள்ள உறவுகள் தெரிந்தே இருக்கிறது. இந்நிலையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நான்குவழிச்சாலை மதுரை நோக்கிச் செல்லும் வழியில் கட்டக்குளம் பிரிவு தரைப்பாலத்தின் கீழ், 11-11-2010 அன்று அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு பிணமாக கிடந்தார். அருகே மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் பின்புறம் விராலிபட்டி பிரிவு பாலத்தின் கீழ், வெள்ளை வேட்டியில் சுருட்டி கட்டப்பட்ட நிலையில் குழந்தைகள் முகமது அஸ்லம், அஜிராபானுவின் உடல்கள் அழுகிய நிலையில் கிடந்தன. கேணிக்கரை இன்ஸ்பெக்டர் கணேசன், பானுவின் தாயை அழைத்துக்கொண்டு வாடிப்பட்டி சென்றார்[3]. பிறகு சாகுல் அமீது என்பவர் கொலை செய்தது தெரிய வந்தது. இக்கொலையின் மூலம் – முஸ்லிம்களுக்குள் உள்ள கோஷ்டி மோதல்[4], பணபரிமாற்றம் போன்ற – பல விசயங்கள் வெளிவந்தன[5]. இதனை முஸ்லிம்கள் விரும்பவில்லை[6].

Allah quran etc symbolism

பெட்டிக்கடையில்  தகராறு: இருவாலிபர்களுக்கு  வெட்டு (ஜூன்.2012) போலீஸ் நிலையம் முற்றுகை: ராமநாதபுரமம் அருகே முன் விரோதத்தில் இரு வாலிபர்கள் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதை கண்டித்து கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன் முற்றுகையிடப்பட்டது.ராமநாதபுரம் அருகே மேலக்கோட்டை ரமலான் நகரை சேர்ந்த சைபுல்லாகான் மகன் ஜலாலுதீன், 24. இவர், நேற்று முன்தினம் நண்பர் ராஜாஉசேனுடன் காட்டூரணி பகுதியில் உள்ள பெட்டிக்கடைக்கு சென்றார். கடையில் இருந்த வேங்கைமாறனிடம் “தண்ணீர் பாக்கெட்’ கேட்டனர். விலை கூறியதில் மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. விலக்க வந்த பக்கத்து வீட்டுக்காரர் பெருமாளிடம், இருவரும் தகராறு செய்தனர். ஆத்திரமுற்ற வேங்கைமாறன், கடைக்குள் இருந்த அரிவாளை எடுத்து ராஜாஉசேனையும், ஜலாலுதீனையும் வெட்டினார். காயமடைந்த ராஜாஉசேன் மதுரை அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஜலாலுதீன் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக, கேணிக்கரை எஸ்.ஐ., பாண்டி, வேங்கைமாறனை கைது செய்தார். தப்பியோடிய பெருமாளை போலீசார் தேடி வருகின்றனர். இரண்டு நாட்களாகியும் பெருமாளை கைது செய்யாத போலீசாரை கண்டித்து கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷனை, ஜலாலுதீன் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்[7]. அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதில் கலைந்து சென்றனர்.

CBCID raid at Kichan Buhari office

ராமநாதபுரம் அருகே தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை (ஜூன் 2012)[8]: ராமநாதபுரம் மாவட்டம் காரிக்கூட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பதுருசமான், தொழிலதிபர். இவரது மனைவி மைமுன்ராணி (வயது38). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் மலேசியாவில் உள்ளனர். 1998-ம் ஆண்டு பதுருசமான் இறந்துவிட்டார். பதுருசமான் தனது சொத்துக்களை மைமுன் ராணிக்கு எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பதுரு சமானின் முதல் மனைவியான ஜமுனா பீவி அவரது மகன் காஜா முஜிதின், மைமுன் ராணிக்கும் இடையே சொத்து பிரச்சினை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இது சம்மந்தமாக நேற்று கேணிக்கரை போலீஸ் நிலையத்தில் இருதரப்பினரிடையே போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் மைமுன் ராணியின் வீட்டின் மீது “மர்ம” கும்பல் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டது[9]. இதில் அவரது வீட்டின் முகப்பு தீ பிடித்து எரிந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து தீயை அணைத்தனர். இது குறித்து கேணிக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சொத்து பிரச்சினை காரணமாக மைமுன்ராணி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேணிக்கரை  காவல்  நிலையம்  இடமாற்றம்  செய்யப்படுமா? (மார்ச் 2010)[10]: ராமநாதபுரம் பட்டணம் காத்தான் பகுதியில் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் உள்ள கேணிக்கரை காவல்நிலையம் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என பொதுமக்கள், வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர். ராமநாதபுரம் நகரில் கேணிக்கரைப் பகுதி காவல்நிலையம் 1981-ல் துவங்கப்பட்டது. வாடகைக் கட்டடத்தில் இயங்கிவந்த இக்காவல் நிலையம், கடந்த 1.1.2006 முதல் ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன்புறமாக காவல்துறைக்குச் சொந்தமான கட்டடத்தில் இயங்கிவருகிறது. ராமநாதபுரத்திலிருந்து தேவிபட்டணம் செல்லும் சாலையில் கேணிக்கரைப் பகுதியில் காவல்நிலையம் செயல்பட்டு வந்தபோது, அக் காவல் நிலையத்திற்கு கேணிக்கரை என்ற பெயர் இருந்தது பொருத்தமாக இருந்தது. ஆனால் இப்போது அக்காவல் நிலையம் பட்டணம்காத்தான் பகுதிக்கு மாறுதலாகி 4 ஆண்டுகள் ஆனப் பிறகும் கேணிக்கரை காவல்நிலையம் என்ற பெயரிலேயே செயல்பட்டு வருகிறது. நகைக் கடைகள், வங்கிகள், பேருந்து நிலையம் மற்றும் முக்கியப் பேருந்து நிறுத்தங்கள், முக்கியக் கோயில்கள், குடியிருப்புகள் ஆகிய அனைத்தும் கேணிக்கரை பகுதியில் தான் அதிகமாக உள்ளன. இவை அனைத்துக்கும் பாதுகாப்பாக இருந்த காவல்நிலையம் பட்டணம்காத்தானுக்கு மாறிச் சென்றது பொதுமக்களுக்கு பயன்படாத நிலையில் இருப்பதாக பலரும் கருதுகின்றனர். நகரில் திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் பெரும்பாலானவை கேணிக்கரை பகுதியில் தான் நடந்துள்ளன. எனவே இக்காவல் நிலையத்தை பட்டணம்காத்தான் பகுதியிலிருந்து மீண்டும் கேணிக்கரை பகுதிக்கே மாற்றம் செய்ய வேண்டும் என்று வர்த்தகர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர்.

குற்றங்கள் அதிகமாக பதிவாகும் கேணிக்கரை காவல் நிலையம்: இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது: “பட்டணம்காத்தான் மிக வேகமாக வளர்ந்து வரக்கூடிய பகுதியாகவும் உள்ளது. இப்பகுதியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் குடியிருப்புகள் உள்ளன. ஆட்சியர் அலுவலகம், எஸ்.பி. அலுவலகம் மற்றும் நீதிமன்ற அலுவலகங்களும் உள்ளன. இவை அனைத்தையும் பாதுகாக்க வேண்டிய முழுப் பொறுப்பும் கேணிக்கரை காவல்நிலையத்தைச் சேர்ந்தது. வாணி விலக்கு சாலை, வழுதூர் விலக்கு சாலை உள்ளிட்ட இடங்களில் விபத்துகள் அடிக்கடி நடந்துவருவதால் கேணிக்கரை பகுதியிலிருந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக வருவதற்கு நீண்ட நேரமாகிவிடும். எனவே போலீஸôரின் பாதுகாப்பு பணிக்கு இப்போது இருக்கும் இடமே வசதியானது. ஒரு வருடத்திற்கு கேணிக்கரை காவல்நிலையத்தில் மட்டும் 700 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக கேணிக்கரை பகுதியில் காவல்நிலையம் இயங்கி வந்தபோது மாத வாடகையாக ரூ.8000 வரை கொடுத்து வந்தோம். காவல்நிலையத்தை காலி செய்யுமாறு கட்டட உரிமையாளர் நீதிமன்றத்திற்கு சென்றதால் மாற்றம் செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது வாடகை இல்லாமல் சொந்தக் கட்டடத்தில் இயங்கி வருவதால் அரசு நிதி வீணாவதும் தடுக்கப்பட்டுள்ளது”, என்றார்[11].

கேணிக்கரை  அருகே  ஓடும்  பஸ்சில்  பெண்ணிடம்  நகைபறிப்பு (ஜூன் 15, 2013)[12]: பரமக்குடி அருகே உள்ள பா.இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி காந்திமதி (வயது 32). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 2 பெண் குழந்தைகள் உள்ளதால் அரசின் நிதியை பெற ராமநாதபுரம் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு காந்திமதி சென்றுள்ளார். அங்கிருந்து தனியார் மினி பஸ்சில் ஊருக்கு திரும்பிய அவர் டிக்கெட் எடுக்க பர்சை எடுத்தபோது அதில் வைத்திருந்த நகை மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கேணிக்கரை போலீசில் காந்திமதி புகார் செய்தார். அதில் ஓடும் பஸ்சில் 6 1/2 பவுன் நகை ஜேப்படி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதற்குப் பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை. ஆனால், பெண்களின் நகைகளைத் திருடும் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட திட்டத்துடன் தான் செயல் பட்டு வருகிறது என்று போலீசார் கண்டறிந்துள்ளனர்.

பள்ளிவாசலுக்கு  தீவைப்பு: ராமநாதபுரத்தில்  பதற்றம் (ஜூலை 2013): ராமநாதபுரத்தில்ƒ உள்ள  பள்ளிவாசல்ƒ ஒன்றில்ƒ மர்ம நபர்கள்„ தீவைத்ததால்ƒ பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  தனியார் பள்ளி வளாகத்தில் முஸ்லிகள் தொழுகை தொழுவதற்கான பள்ளிவாசல் ஒன்றுள்ளது. இங்கு நேற்று இரவு சில மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர். தொப்பிலகள், பாய்கள் நாசமாகின. மேலும் அங்கு இருந்த மின்சிறிகளும் சேதமாயின. இன்று காலை தொழுகை நடத்தச் சென்ற முஸ்லிம்கள் இதனைக் கண்டுž அதிர்ச்சியடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது மீது நடவடிக்கை எடுக்க எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் புகார் கொடுத்தனர். மர்ம நபர்களைப் பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன[13]. இதுவும் அவர்களின் உள்பிரச்சினை என்றே தோன்றுகிறது, ஏனெனில் அவர்களது இணைத்தளங்களே, பரஸ்பர குற்றச்சாட்டுகளை வைத்துள்ளன.

ராமநாதபுரம்  தம்பீர்  முகமது  மீதுகேணிக்கரை  போலீஸார்  வழக்கு  பதிவு (July 2013)[14]: கோவையில் உள்ள மசூதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் கேணிக்கரை சந்து பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ராமநாதபுரம் ஓம்சக்தி நகரைச் சேர்ந்த மைதீன் கான் என்பவர் மகன் தம்பீர் முகமது (40) என்பவர் காவல்துறையினரையும், இந்து அமைப்புகளையும் தரக்குறைவாகப் பேசி…யதுடன் மிரட்டல் விடுத்தாராம். இதை அடுத்து இவர் மீது கேணிக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இவர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மலேசிய மண்டல பொறுப்பாளர் ஆவார். “மக்கள் கருத்து” என்று முஸ்லிம் இணைத்தளம் இவ்வாறு சேர்த்துள்ளது: பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசிய காவி கயவர்களை கைது செய்ய மும்முரம் காட்டாமல் நடந்த கொடுமைகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட தமுமுக நிர்வாகி மீது வழக்கு பதிவது எந்த வகையிலும் நியாயம் இல்லை. தமுமுக நிர்வாகி மீது அநியாயமாக போடப்பட்ட வழக்கை அரசே முன்வந்து வாபஸ் பெறவேண்டும். இல்லையென்றால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயம் கோவையை நோக்கி படையெடுக்கும் சூழ்நிலை உருவாகும். இங்கும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது தெரிகிறது. இதே மாதிரியான போக்கு இப்பொழுதும் புலப்படுகிறது.

வழக்கம் போல மோதல் (பிப்ரவரி 2014): ராமநாதபுரத்தில் நேற்று முன்தினம் சின்னக்கடை பகுதியை சேர்ந்த சிலருக்கும், புளிக்காரத்தெருவை சேர்ந்த சிலருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில் சிலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சின்னக்கடை பகுதியை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். முஸ்லீம்கள் அதிகம் வாழுகின்ற பகுதியான சின்னக்கடை பகுதியில் இரவு நேரத்தில் புகுந்த சில சமூக விரோதிகள், உறங்கி கொண்டிருந்த முஸ்லீம்களின் வீடுகளை கற்களாலும் கம்பிகளாலும் உடைத்துள்ளனர். அவசர சிகிச்சைக்கு பயன்படுத்துகின்ற ஆம்புலன்ஸ் ஒன்றையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இந்நிலையில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்வதற்கு பதிலாக, அன்று இரவு படம் பார்த்து விட்டு வந்து கொண்டிருந்த 3 முஸ்லீம் இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் அழைத்து சென்ற காவல் துறையினர் நடந்த சம்பவத்துக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத இம்மூவர் மீதும் நேற்று வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்[15].

ஆம்புலன்  சுசேதம்: இந்த நிலையில் நேற்று முன் தினம் நடைபெற்ற மோதல் சம்பவத்தின் போது ராமநாதபுரம் கண்ணன் கோவில் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்சை மர்ம நபர்கள் தாக்கி சேதப்படுத்தி விட்டதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர் செயலாளர் சாதுல்லாகான் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்[16]. சின்னக்கடை பகுதியை சேர்ந்த சிகிச்சைக்கு பயன்படுத்துகின்ற ஆம்புலன்ஸ் ஒன்றையும் அடித்து நொறுக்கியுள்ளனர் என்றுள்ளது.

ராமநாதபுரத்தில் காவல்துறை  அத்துமீறல்: அப்பாவி  முஸ்லிம்கள்  மீதுதடியடி: எஸ்.டி.பி.ஐ  கண்டனம்: செய்தியறிந்து நியாயம் கேட்க நேற்று (03.02.2014) கேணிக்கரை காவல் நிலையம் சென்ற அவர்களது உறவினர்கள் மீது சார்பு ஆய்வாளர் ஜெயபால் தலைமையிலான காவல்துறையினர் தடியடி நடத்தி மேலும் 7 நபர்களை கைது செய்துள்ளனர்[17]. பெண்கள் மீதும் தடியடி நடத்தபட்டுள்ளது. சட்டத்தை பாதுகாக்க வேண்டியது காவல்துறையின் கடமை என்பதை மறந்து சட்டத்திற்கு புறம்பாக, உண்மை குற்றவாளிகளை விட்டு விட்டு அப்பாவிகளை கைது செய்து ஒரு தலைப்பட்சமாக ராமநாதபுரம் காவல்துறை செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பது ஒரு போதும் ஏற்புடையது அல்ல.எஸ்.டி.பி.ஐ கட்சி இதனை வன்மையாக கண்டிக்கிறது. எனவே தமிழக முதல்வர் இவ்விசயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.மேலும் உண்மை குற்றவாளிகளை கைது செய்யாமல் அப்பாவிகளை கைது செய்து ஒருதலைப்பட்சமாக செயல்பட்ட கேணிக்கரை சார்பு ஆய்வாளர் ஜெயபால் மற்றும் அவரது தலைமையிலான காவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் எல்லோரும் முஸ்லிம்களாக இருப்பது: இதைத் தொடர்ந்து கைது செய்யப் பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கேணிக்கரை போலீஸ் நிலை யத்தை முற்றுகையிட்டனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஆத்திரமடைந்த சிலர் போலீசாரை தள்ளிவிட்டு போலீஸ் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றனர். இதனை தடுத்த கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்களாம். ராமநாதபுரம், மோதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு அத்து மீறி நுழைய முயன்ற 7 பேரை கேணிக்கரை போலீசார் கைது செய்தனர்[18]. இந்த சம்பவம் குறித்து சப்- இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி வழக்கு பதிந்து –

  1. பாசிப் பட்டரைக்காரத்தெருவை சேர்ந்த இம்ரான் (வயது 21),
  2. பாசிப் பட்டரைக்காரத்தெருவை சேர்ந்த அகமது அலி (23),
  3. கைக்கொள்வார் தெரு இமாம் அலி என்ற முகமது அலி (24),
  4. கைக்கொள்வார் தெரு பாம்பூரணி முகமது ரியாஸ்,
  5. தெற்குத்தரவை தாரிக் உசேன் (21),
  6. பரமக்குடி சிக்கந்தர்கனி (30),
  7. வாணி சகுபர் சாதிக் (32)

ஆகிய 7 பேரை கைது செய் தார். மேலும் இது தொடர்பாக ஜஹாங் கீர், ஜபாருல்லா ஆகி யோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சட்டதிட்டங்களுக்குக் கட்டுப் படாமல் முஸ்லிம்கள் நாங்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்வோம், எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல ஆக்ரோஷ்மாக நடந்து கொள்ளும் போக்கு வியப்பாக இருக்கிறது. போலீஸ்காரர்கள் தங்களது கடமைகளை செய்து வருகிறார்கள். மேலும் புகார் கொடுப்பதினால் தான், அவர்கள் நடவடிக்கை எடுக்கிறார்கள், விசாரிக்கிறார்கள். பிறகு, மதசாயம் பூசுவது இல்லை தாங்கள் முஸ்லிம்கள் என்பது போல காட்டிக் கொண்டு நடந்து கொள்வது, “எங்களை யார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்?”, என்று மிரட்டுவது, முதலமைச்சர், பிரதம மந்திரி என்று புகார் செய்வது, ஆர்பாட்டங்கள் செய்வது, போலீசாரை தூண்டி விட்டு நடவடிக்கை எடுக்கும் போது, தடுப்பது, முறைப்பது, வாதிப்பது, சண்டை போடுவது, வீட்டில் ஆள் இல்லை என்பது, அந்நிலைகளில் வீடியோ, புகைப்படங்கள் எடுப்பது போன்ற காரியங்களில் இடுபட்டு வருகின்றனர். இவ்வாறு சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வது, ஆனால், போலீசாரை சட்டப் படி வேலை செய்யமுடியாமல் தடுப்பது போன்ற காரியங்கள் நடைப் பெற்றுவருவது நல்லதல்ல.

வேதபிரகாஷ்

© 09-02-2014


[9] மலைமலர், ராமநாதபுரம் அருகே தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை, பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஜூன் 13, 2012, 11:37 AM IST

[11] தினமணி, கேணிக்கரை காவல்நிலையம் இடமாற்றம் செய்யப்படுமா?, First Published : 22 March 2010 12:32 AM IST

[16] தினத்தந்தி, கைதானவர்களைவிடுவிக்கக்கோரிபோலீஸ்நிலையத்தைமுற்றுகையிட்டுஅத்துமீறிநுழையமுயன்ற 7 பேர்கைது, பதிவு செய்த நாள் : Feb 05 | 04:34 am

[17] தமிள்-ஒன்-இந்தியா, ராமநாதபுரத்தில் காவல்துறை அத்துமீறல்: அப்பாவி முஸ்லிம்கள் மீது தடியடி: எஸ்.டி.பி.ஐ கண்டனம்,  Posted by: Sudha, Published: Tuesday, February 4, 2014, 13:04 [IST]

Explore posts in the same categories: கேணிக்கரை, கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன் – குற்றங்கள் அதிகம் பதிவு, சகஜமாக இருந்து வரும் நிலை, சண்டை போடுவது, முற்றுகை, முஸ்லிம்கள் ஆர்பாட்டம், முஸ்லிம்கள் முற்றுகை, வாதிப்பது

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: