தவ்ஹீத் ஜமாஅத் சென்னையில் நடத்திய சிறை நிரப்பும் போராட்டமும் (28-01-2014), ஆம் ஆத்மியின் தில்லி தெருக்களில் நடத்திய போராட்டமும் (22-01-2014 வரை)!
தவ்ஹீத் ஜமாஅத் சென்னையில் நடத்திய சிறை நிரப்பும் போராட்டமும் (28-01-2014), ஆம் ஆத்மியின் தில்லி தெருக்களில் நடத்திய போராட்டமும் (22-01-2014 வரை)!
“மைனாரிடி”களுக்கு “இடவொதிக்கீடு” நடக்கும் போட்டாபோட்டி: சச்சார் கமிஷன் அறிக்கைக்குப் பிறகு, முஸ்லிம்கள் “இடவொதிக்கீடு” விசயத்தில் தீவிரமாகியுள்ளனர். “மைனாரிடி” என்றாலே, “முஸ்லிம்கள்” என்ற நிலை போய், இப்பொழுது “ஜைனர்கள்” கூட “மைனாரிடி” அந்தஸ்த்தைக் கேட்டுள்ளனர். காங்கிரஸ் ஒப்புக் கொண்டு பரிந்துரைத்துள்ளது. இருப்பினும் நீதிமன்றங்களில் இதைப் பற்றிய வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேபோல, மாநிலங்களில் ஏற்கெனவே முஸ்லிம்களுக்கு “பிற்பட்டவர்” பட்டியிலில் “இடவொதிக்கீடு” கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எஸ்.சிக்கான “இடவொதிக்கீடிலிருந்து” கருணாநிதி 3.5% முஸ்லிம்கள் மற்ரும் கிருத்துவர்களுக்கு கொடுத்தார். இதை எதிர்த்தும் வழக்குகள் நிலுவையில் மற்ற மாநிலங்களில் உள்ளன.
தவ்ஹீத்ஜமாஅத்சிறைநிரப்பும்போராட்டம்: இந்நிலையில், கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு கோரி நடத்தப்பட்ட சிறை நிரப்பும் போராட்டத்தில் 15 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்[1] என்ற செய்திகள் வந்துள்ளன. கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு மத்தியில் 10 சதவீதமும், தமிழகத்தில் 7 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிறை நிரப்பும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதை வலியுறுத்தி சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. விளம்பரங்கள் அளவிற்கு அதிகமாகவே செய்யப்பட்டது. சுவர்கள், சுவரொட்டிகள் என இருந்தன. அவர்களின் வாகனங்களில் கூட பதாகைகள் வைக்கப் பட்டன. பிரச்சாரமும் செய்யப்பட்டது.
போராட்டத்திற்குஅனுமதிவழங்ககூடாதுஎன்றுசிலஇந்துஅமைப்புகள், போலீஸ்கமிஷனர்அலுவலகத்தில்புகார்அளித்தன: இந்த போராட்டத்தால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும். எனவே, போராட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என்று சில இந்து அமைப்புகள், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தன[2]. என்று தினகரன் குறிப்பிட்டாலும், அனுமதி கொடுக்கப்பட்டதா அல்லது மறுக்கப் பட்டதா என்று குறிப்பிடவில்லை. சென்ற ஆண்டு, இதே பாணில்யில் பெட்ரோல் விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று பாஜ மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்தார், “கிறிஸ்தவர், முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது. கடந்த ஆண்டு தமிழகத்துக்கு ரூ.58 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த கல்வி உதவித் தொகையை ஏழை இந்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி ஜூலையில் போராட்டம் நடைபெறும். பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும் தமிழக பாஜ சார்பில் வரும் 22ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறுகிறது. புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் கே.பி.என்.சீனிவாசனை ஆதரிக்கிறோம். சென்னை மருத்துவக் கல்லூரியில் பயிற்சி டாக்டரை தாக்கியவர்களை உடனே கைது செய்ய வேண்டும். தேர்தல் ஆணையரை நியமிக்க குழு வேண்டும் என்று அத்வானி கூறிய கருத்தை திமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளதை பாராட்டுகிறேன்”, என்றார்[3]. ஆனால், என்னவாயிற்று என்று தெரியவில்லை.
தமிழகத்தில் முஸ்லிம்கள் நடத்திய ஆர்பாட்டம் (28-01-2014): முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (28-01-2014) போராட்டம் நடத்தினர். இதில் சுமார் 62 ஆயிரம் பங்கேற்றனர்[4]. சென்னையில் நடந்த போராட்டத்தில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மத்திய அரசு 10 சதவீத இட ஒதுக்கீடும், மாநில அளவில் 7 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் செவ்வாய்க்கிழமை சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய 4 இடங்களிலும், மும்பை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் என மூன்று இடங்களிலும் சிறைச் செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பி.ஜைனுல்ஆபிதீன்தலைமையில் சென்னையில் நடந்த ஆர்பாட்டம்: சென்னை எழும்பூர் மார்ஷல் சாலையில் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே நடைபெற்ற இப்போராட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து அந்த அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக பங்கேற்றனர்[5]. போராட்டத்துக்கு அந்த அமைப்பின் நிர்வாகி பி. ஜைனுல் ஆபிதீன் தலைமை வகித்து பேசுகையில் ‘கடந்த சட்டமன்ற தேர்தலில் எங்களுக்குரிய இட ஒதுக்கீட்டை தர ஏற்பாடு செய்வதாக அதிமுக மற்றும் திமுக உறுதியளித்தது. ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. வரும் தேர்தலில் எங்களுக்குரிய இட ஒதுக்கீட்டை யார் தருகிறார்களோ அவர்களுக்கே ஆதரவு அளிப்போம். மற்றவர்களுக்கு எதிராக வாக்களிப்போம்‘ என்றார்[6]. இவரது பேச்சை இங்கு கேட்கலாம்[7]. போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. யாரையும் போலீசார் கைது செய்யவில்லை. இதனால் அனைவரும் கலைந்து சென்றனர். ஆகவே, வரும் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டும், இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர் என்று தெரிகிறது.
போராட்டம்காலை 10 மணிக்குதொடங்கிநண்பகல் 2 மணிவரைநடைபெற்றதால்எழும்பூர்பகுதியிலும், அண்ணாசாலையிலும்போக்குவரத்துபாதிக்கப்பட்டது: இந்த போராட்டத்தில் சுமார் 16 ஆயிரம் பேர் பங்கேற்றதால், மார்ஷல் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வேறு சாலைகள் வழியாக போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர்[8]. மேலும் போராட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி நண்பகல் 2 மணி வரை நடைபெற்றதால் எழும்பூர் பகுதியிலும், அண்ணாசாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில்ஆர்ப்பாட்டம்நடத்தியதமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத்அமைப்பினர் –கைதுஇல்லை: சிறை நிரப்பும் போராட்டம் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் போராட்டக்காரர்கள் கலைந்துச் சென்றனர். ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை. கோவை, நெல்லை: இதேபோல கோவை, திருச்சி, நெல்லையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லையில் 25 ஆயிரம் பேரும், திருச்சியில் 15 ஆயிரம் பேரும் கோவையில் 8 ஆயிரம் பேரும் பங்கேற்றனர். புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற்ற போராட்டத்தில் 100 பெண்கள் உள்பட 500 பேர் பங்கேற்றனர். இதையடுத்து போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்[9].
சிறை நிறப்பும் போராட்டம்: இந்த சித்தாந்தமே முறையற்றதாக, சட்டவிரோதமாக இருக்கிறது, ஏனெனில், இருக்கின்ற சட்டங்கள், விதிமுறைகள் முதலியவற்றை மீறினால், கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டால், பிறகு மாஜிஸ்ட்ர்ரெட் / நீதிமன்றம் காவலில் வைக்க ஆணையிட்டால்தான் சிறையில் வைக்க முடியும். ஆனால், அவையெல்லாம் இல்லாமலேயே, ஊர் முழுக்க இப்படி விளம்பரம் செய்து கலாட்டாவில் இறங்கியிருப்பதனால், இது முழுக்க பிரச்சார ரீதியில் செய்யப்பட்ட ஆர்பாட்டமே என்றாகிறது. இல்லை, அவ்வாறு நாங்கள் சட்டங்களை மீறுவோம் என்றால், அவ்வாறும் ஒன்றும் செய்யவில்லை, கத்தி, போக்குவரத்தை பாதிக்க வைத்து, அலுவலகங்களுக்கு செல்பவர்களை தொந்தரவு செய்து, கலைந்து சென்றுள்ளனர். ஆனால், இதற்கு ஏகப்பட்ட அளவில் விளம்பரத்தைச் செய்துள்ளனர், ஆடகளை வண்டிகளில் கூட்டி வந்துள்ளனர். இதற்கு இப்படி லட்சக்கணக்கில் செலவு செய்யவேண்டிய அவசியம் என்ன? இப்படி எல்லோரும் கலாட்டா செய்தால், கேட்டது கிடைத்துவிடுமா? தவ்ஹீத் ஜமாஅத் சென்னையில் நடத்திய சிறை நிரப்பும் போராட்டமும் (28-01-2014), ஆம் ஆத்மியின் தில்லி தெருக்களில் நடத்திய போராட்டமும் (22-01-2014 வரை) ஒரே மாதிரியாக இருப்பதாகத் தெரிகிறது. தங்களுக்கு விளம்பரம் கிடைக்க வேண்டும், பொது மக்கள் அவதிப்பட வேண்டும். இந்த அளவிற்கு ஒற்றுமை இருப்பதால் தான், ஒரு முஸ்லிம் சையது ஜுபைர் அஹமது [Syed Zubair Ahmad] ஒரு முஸ்லிம், “அரவிந்த கேசரிவால் பிறப்பால் இந்துவாக இருந்தாலும், நடைமுறையில் முஸ்லிமாக இருக்கிறார்”, என்று எடுத்துக் காட்டியுள்ளார்[10].
வேதபிரகாஷ்
© 29-01-2014
[2] தினகரன், 15 ஆயிரம்பேர்திரண்டனர்முஸ்லிம்களுக்குகல்வி, வேலைவாய்ப்பில் 7 சதவீதஇடஒதுக்கீடுகோரிசிறைநிரப்பும்போராட்டம், 29-01-2014
[4]http://www.dinamani.com/edition_chennai/chennai/2014/01/29/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/article2025596.ece
[8] மாலைமலர், சிறைநிரப்பும்போராட்டம்: சென்னையில்ஆயிரக்கணக்கில்திரண்டமுஸ்லிம்கள், பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, ஜனவரி, 29-01-2014.
[9] தினமணி, முஸ்லிம்களுக்கானஇடஒதுக்கீட்டைஅதிகரிக்கக்கோரிதவ்ஹீத்ஜமாஅத்ஆர்ப்பாட்டம், By dn, சென்னை, First Published : 29 January 2014 02:53 AM IST
குறிச்சொற்கள்: சிறை, சென்னை, போக்குவரத்து, போராட்டம், முஸ்லிம்
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்