தொடர்ந்து இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஊக்குவித்து வரும் “ஆம் ஆத்மி கட்சி” – தில்லி சட்டசபையில் கோட்டைக் கழட்டி மிரட்டும் சோஹைப் இக்பால்!

தொடர்ந்து இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஊக்குவித்து வரும் “ஆம் ஆத்மி கட்சி” – தில்லி சட்டசபையில் கோட்டைக் கழட்டி மிரட்டும் சோஹைப் இக்பால்!

 

जदयू विधायक शोएब इकबाल - Sohaib Iqbal threatened AAP Viswas

जदयू विधायक शोएब इकबाल – Sohaib Iqbal threatened AAP Viswas

குமார்  விஸ்வாஸ்  என்கின்ற  புதிய  அரசியல்வாதியின்  பல்டிகள்: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடப்போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் குமார் விஸ்வாஸ். இப்படி “ஆம் ஆத்மி கட்சி”யில் பல அரசியல் வேடிக்கைகளை நிகழ்த்திவரும் இவர்கள், முஸ்லிம்களிடம் மட்டும் தங்களது பருப்பு வேகவில்லை என்ற நிலக்கு வந்துள்ளார்கள். இந்நிலையில், இஸ்லாமியர்களின் ‘மொகரம்’ குறித்து அவர் விமர்சனம் செய்ததாக ஒரு வீடியோ காட்சி வெளியானது[1].  இதனால் டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறப்போவதாக ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ, சோஹைப் இக்பால் மிரட்டல் விடுத்தார்[2]. மொகரம் பற்றி இவ்வாறு கிண்டல் அடித்திதிருப்பது கண்டிக்கத் தக்கது. விஸ்வாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்[3]. முஸ்லிம் எம்.எல்.ஏ ஆயிற்றே, சும்மா இருப்பபார்களா, உடனே மன்னிப்புக் கேட்டாகி விட்டது.

 

கோட்டைக் கழட்டி அடிக்க வரும் முஸ்லிம் எம்.எல்.ஏ

கோட்டைக் கழட்டி அடிக்க வரும் முஸ்லிம் எம்.எல்.ஏ

குமார்  விஸ்வாஸின்  மன்னிப்புக்   கோரல்: மிரட்டிய நிலையில் குமார் விஸ்வாஸ் தனது கருத்தினை வாபஸ் பெற்றதுடன் மன்னிப்பும் கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது[4]: “மொகரம் குறித்து நான் பேசியதாக வெளிவந்துள்ள வீடியோ காட்சிகள் எனது பேச்சினை முழுவதுமாக காண்பிக்கப்படவில்லை. என் மீதான காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பா.ஜனதா கட்சி சில காட்சிகளை நீக்கிவிட்டு இஸ்லாமியர்களின் புனிதம் பற்றி தான் தவறாக பேசியிருப்பதாக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் வெளியிட்டுள்ளது. என்னை மக்கள் மத்தியில் கெட்டவனாகக் காண்பிக்கும் விதத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா ஆகிய கட்சிகள் இவ்வாறு செயல்படுகின்றன. எனினும், எனது கருத்து தவறாக கருதப்படுவதால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்”, இவ்வாறு அவர் கூறியுள்ளார். இவ்விவகாரம் குறித்து கெஜ்ரிவால் கூறும்போது, “கவியரங்கத்தில் பேசியபோது இவ்வாறு கூறியதாக விஸ்வாஸ் விளக்கம் அளித்துள்ளார். ஆனால், யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இல்லாததால் மன்னிப்பு கேட்டுள்ளார்” என்றார்[5].

TAUQEER REZA KHAN

2005ல் கிண்டல், 2013ல் வெளியீடு, 2014ல் மன்னிப்பு: 2005ல் ஒரு கவி சம்மேளத்தில், மொஹரத்தைப் பற்றி கிண்டல் அடித்ததாக / ஒரு கவி மொஹரத்தை கேலி செய்ததாக இருக்கும் வீடியோவின் பகுதி[6], பிஜேபி வெளியிட்டதாக கூறுகிறார். அப்பொழுது எந்த பிரச்சினையும் இல்லை. 2013ல் 48-நொடிகள் வீடியோ வெளியிடப்பட்டபோது, இப்பிரச்சினை கிளம்பியுள்ளது[7]. இதைப் பற்றி முழுமையான விவரங்களை இந்தி / ஆங்கில நாளிதழ்கள் வெளியிட வில்லை. “ஒரு கவி” எனும் போது, அது யார், கவி சம்மேளனம் என்றால் யார் நிகழ்த்தியது, யார் கவிதை படித்தது, இந்த ஆம் ஆத்மி கட்சிக்காரர் அங்கு எப்படி சென்றார் என்றெல்லாம் தெரியவில்லை.இன்னொரு தளத்தில் “ஹஜரத் இமாம் ஹுஸைஆம் ஆத்மி கட்சினை [Hazrat Imam Hussain] கிண்டல் அடித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Digvijay and Tauqeer together 2013

ரகளை, அடிதடி, கலாட்டாவிற்கு தயாராக இருக்கும் சோஹைப் இக்பால்: இதே சோஹைப் இக்பால் முன்னர் வியாழக்கிழமையன்று தனது கோட்டை அவிழ்த்து, ஆர். பி. சிங் என்கின்ற பிஜேபி எம்.எல்.ஏவைத் தரக்குறைவாகப் பேசி, சண்டைக்கு இழுத்தார்[8]. ராமர் கோவில், ஆர்.எஸ்.எஸ் பற்றி தகாத வார்த்தைகள் கூறி சட்டசபையில் பேசினார். இதனால், இக்பாலை சட்டசபையிலிருந்து மார்சல்கள் / காவலாளிகள் வெளியேற்றினர்[9]. இப்பொழுது, “ஆப்” விஸ்வாஸுக்கு ஆப்பு வைக்கத் துடிக்கிறார். “ஹஜரத் இமாம் ஹுஸைனுக்கு [Hazrat Imam Hussain] எதிராகக் கூறப்பட்ட விமர்சனத்தை ஒப்புக்கொள்ள முடியாது”, என்று கூறியதனால்[10], குமார் விஸ்வாஸ் மறுபடியும் இரண்டாவது முறையாக[11] மன்னிப்புக் கேட்டிருக்கிறாராம்! முஸ்லிம் என்றால் காலில் விழத்தாயாராகத்தான் இந்த துடப்பைக்கட்டைகளும் இருக்கின்றன. இனி எங்கே இவர்கள் சுத்தம் செய்யப்போகிறார்கள்?

Rahul Sam with Muslim kullas

தொடர்ந்து  இஸ்லாமிய  அடிப்படைவாதத்தை   ஊக்குவித்து  வரும்  ஆம்  ஆத் மி  கட்சி”: ஏற்கெனவே, அரவிந்த் கேசரிவால், அடிப்படைவாத முஸ்லிம்களுடன் கூட்டு வைத்துக் கொண்டுள்ளார். உபியின் அத்தகைய முஸ்லிம் தலைவரை அழைத்து ஆதரவு கேட்டு பேசினார். தமது கட்சிக்கு ஆதரவாக இந்த ஒரு முஸ்லிம் எம்.எல்.ஏவின் ஆதரவையும் வைத்துக் கொண்டு ஆட்சி நடத்த ஆரம்பித்துள்ளார். விஸ்வாஸ் விமர்சனம் ஷியா முஸ்லிம்களைப் பற்றியதாகையால் சுன்னிகள் இதனை எப்படி பிரச்சினையாக்குவார்கள் என்று தெரியவில்லை. உண்மையில் சுன்னிகள் ஷியாக்களின் சித்தாந்தத்தை, இறையியலை ஏற்றுக் கொள்பவர்கள் அல்லர். பாகிஸ்தானில் ஷியாக்கள் கொல்லப்படுகின்றனர், அவர்கள் மசூதிகள் இடிக்கப்படுகின்றன. ஆனால், முஸ்லிம்கள் மௌனிகளாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் மட்டும் இப்படி கலாட்டா செய்து மிரட்டி வருகிறார்கள். சட்டையைக் கழட்டி மிரட்டுகிறார்கள்.

 

வேதபிரகாஷ்

© 08-01-2014


[3] जदयू विधायक शोएब इकबाल ने कुमार विश्वास पर धार्मिक भावनाओं को चोट पहुंचाने का आरोप लगाते हुए आम आदमी पार्टी की सरकार से समर्थन वापसी की धमकी दी थी। शोएब इकबाल ने कहा था कि अगर कुमार विश्वास ने सार्वजनिक रूप से माफी नहीं मांगी तो वह अरविंद केजरीवाल की सरकार से समर्थन वापस ले लेंगे।

http://www.patrika.com/news/jdu-mla-shoaib-iqbal-threatens-to-withdraw-support-from-aap/979966

[5] उधर, मुख्यमंत्री अरविंद केजरीवाल ने कहा कि इस टिप्पणी के लिए कुमार विश्वास ने माफी मांग ली थी। ये मामला पहले ही उठा था। 4-5 महीने पहले ये बात उठी थी, तब कुमार ने कहा था कि अगर किसी इमाम की भावना को ठेस पहुंची तो मैं माफी मांगता हूं।http://khabar.ibnlive.in.com/news/114365/12

[6] Senior Aam Aadmi Party(AAP) leader Kumar Vishwas on Monday apologised for the second time for his controversial remarks in which the poet had reportedly mocked Muslim festival of Muharram.

http://daily.bhaskar.com/article/DEL-shoaib-iqbal-withdraw-support-aap-kumar-vishwas-apologise-muharram-4485640-NOR.html

[7] He said, “I had said this sometime in 2005, there was no controversy till today. But it surfaced first time in 2013. BJP edited it and uploaded the 48-second clip on their official handle.”

http://zeenews.india.com/news/delhi/after-jd-u-mla-shoaib-iqbal-threatens-to-withdraw-support-kumar-vishwas-apologises_901765.html

[11] Senior Aam Aadmi Party(AAP) leader Kumar Vishwas on Monday apologised for the second time for his controversial remarks in which the poet had reportedly mocked Muslim festival of Muharram. http://daily.bhaskar.com/article/DEL-shoaib-iqbal-withdraw-support-aap-kumar-vishwas-apologise-muharram-4485640-NOR.html

Explore posts in the same categories: ஆம் ஆத்மி கட்சி, குமார் விஸ்வாஸ், சோஹைப் இக்பால், முகரம், முஹரம், மொகரம், மொஹரம், ஹஜரத் இமாம் ஹுஸைன்

குறிச்சொற்கள்: , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: