பர்வீன்-பைசூல் விவகாரம் – போலீசாருக்கு குழப்பமாம், ஊடகக்காரகள் தெளிவாக இருக்கிறார்களாம்!
பர்வீன்-பைசூல் விவகாரம் – போலீசாருக்கு குழப்பமாம், ஊடகக்காரகள் தெளிவாக இருக்கிறார்களாம்!
பைசூலின் மீது மறுபடியும் புகார்: இந்த நிலையில், 30-12-2013 அன்று பகலில் நடிகை ராதா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புதிய புகார் மனுவை கொடுத்தார். அந்த மனுவில், பைசூல் மீது கொடுத்த புகார் மனுவை வாபஸ் பெறவில்லை என்றும், தன்னை கடத்திச்சென்று, மகாபலிபுரத்தில் ஒரு லாட்ஜில் சிறை வைத்து அடித்து துன்புறுத்தி, மிரட்டியதால் புகாரை வாபஸ் பெற்றேன் என்றும், பைசூல் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்[1]. புகாரில் ராதா கூறியதாவது: பைசூல் என்னுடன் 6 வருடம் குடும்பம் நடத்தினார். திடீரென என்னை வீட்டைவிட்டு துரத்தி விட்டு, என் பணத்தையும் பறித்துக் கொண்டார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தேன். கடந்த 18ம் தேதி பைசூலின் உறவினர் மாலிக், மற்றும் அவருடைய சகோதரர் ரஹ்மான் ஆகியோர் என் வீட்டுக்கு ஆசிட்டுடன் வந்தனர்[2].
புகார் வாபஸ் பெற வேண்டும், இல்லையென்றால் ஆசிட் வீசி கொன்று விடுவோம் என்று மிரட்டல்: பைசூல் மீது கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெற வேண்டும், இல்லையென்றால் உன் முகத்தில் ஆசிட் வீசி கொன்று விடுவோம் என, மிரட்டினர். இதை தொடர்ந்து, உயிருக்கு பயந்து நானும் புகாரை வாபஸ் வாங்குவதாக தெரிவித்தேன். பின்னர், கத்தி முனையில் என்னை காவல் நிலையத்துக்குஅழைத்துச் சென்று வழக்கை வாபஸ் பெற வைத்தனர். மேலும், என்னை காரில் ஏற்றிக் கொண்டு, பைசூல் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரும் என்னை தொடர்ந்து மிரட்டியதுடன், காவல்துறையில் எனக்கு செல்வாக்கு உள்ளது, உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என கூறினார்.
போலீஸ் பாதுகாப்பு வேண்டும்: என்னிடம் ஆள் பலமும், பண பலமும் உள்ளது. உடனடியாக ஊரை காலிசெய்துவிடு என தொடர்ந்து மிரட்டினார். உயிருக்கு பயந்து அவரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக நானும், சரி என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டேன். தற்போது என் உயிருக்கும், உடமைக்கும், ஆபத்து உள்ளது எனவே, போலீசார் எனக்கு உரிய பாதுகாப்பு அளித்து, பைசூலை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்[3].
போலீசாரைகுழப்பத்தில்ஆழ்த்திஇருக்கிறது: அவர் திடீரென்று இதுபோல் அதிரடி பல்டி அடித்து மீண்டும் ஒரு புகார் கொடுத்துள்ளது, போலீசாரை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பாவம், தமிழ் ஊடகப் புலிகளுக்கு மட்டும் குழப்பமே இல்லாமல் தெளிவாக இருக்கீறார்கள் போலும். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியிலும், நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்காமல் நின்று கொண்டே இருந்தார். ஒருவேளை உட்காருவதற்கறொன்றும் இல்லை போலிருக்கிறது. இந்த விஷயத்தில் அடுத்தகட்டமாக உயர் போலீஸ் அதிகாரிகளை கலந்து ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, வடபழனி போலீசார் கூறினார்கள்[4]. ஆமாம், இவ்விசயங்களுக்கு எல்லாம் இப்படி போலீஸ் சேவை சீரழிக்க வேண்டிய நிலையில் இருக்க வேண்டும் போலிருக்கிறது.
வேதபிரகாஷ்
© 08-01-2014
[3] தினகரன், பைசூல்மீதுநடிகைராதாமீண்டும்புகார் – முகத்தில்ஆசிட்வீசுவதாககூறிமிரட்டிவழக்கைவாபஸ்பெறவைத்தனர், 31-12-2013.
[4] மாலைமலர், தொழில்அதிபர்மீதானபுகாரைவாபஸ்வாங்கவில்லை: நடிகைராதாமீண்டும்புகார், பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 31, 9:19 AM IST
குறிச்சொற்கள்: அழகிய இளம் பெண்கள், ஊடகத் தீவிரவாதிகள், பர்வீன், பைசூல், முஸ்லிம், முஸ்லிம்கள், முஸ்லீம்கள், ராதா
You can comment below, or link to this permanent URL from your own site.
மார்ச் 13, 2014 இல் 12:45 முப
[…] [10] https://islamindia.wordpress.com/2014/01/08/radha-faizul-sex-scandal-drug-trafficking-confusion-conti… […]
ஏப்ரல் 7, 2014 இல் 7:40 முப
[…] [13] https://islamindia.wordpress.com/2014/01/08/radha-faizul-sex-scandal-drug-trafficking-confusion-conti… […]