பாட்னா தொடர் குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுக்கு பணபட்டுவாடா செய்ததில் சம்பந்தப் பட்டுள்ளவர்கள் வெறும் கைகூலிகளா, ஹவாலா பணமாற்றுக்காரர்களா?

பாட்னா தொடர் குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுக்கு பணபட்டுவாடா செய்ததில் சம்பந்தப் பட்டுள்ளவர்கள் வெறும் கைகூலிகளா, ஹவாலா பணமாற்றுக்காரர்களா?

Sithio villagers refused to take body - Patna_blastsஓய்வுபெற்றஇம்ரான்ஹஸன், அவர்வீட்டில்முஜாஹித்தீன்கூடிதிட்டம்போட்டனரா?:  பாட்னா ரெயில்வே ஸ்டேசனில் குண்டு வைத்துத் தப்பியோடிச் செல்லும் போது பிடிபட்டவனிடமிருந்து அறியப்பட்ட விவரங்களினின்று, ஒரு ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரிக்கும் இந்திய முஜாஹித்தீனுக்கும் தொடர்பு உள்ளதை விசாரித்து வருகின்றனர்[1]. இம்ரான் ஹஸன் [Imraan Hasan], ஜார்க்கெண்டில் டெபுடி சூபர்இன்டென்டென்ட் ஆப் போலீசாக இருந்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்[2]. அவன், முஜாஹித்தீனை நடத்தி வரும் டெஸ்ஸீன் அக்தர் [Tehseen Akhtar] மற்றும் ஹைதர் அலி [Haider Ali], அக்டோபர் 27, 2013 பாட்னா குண்டுவெடிப்புகளுக்கு திட்டம் தீட்டினர் என்றும், இம்ரான் ஹஸன் வீட்டில் சந்தித்தனர் என்றும் தேசிய புலனாய்சு ஏஜென்சி, தனது விசாரணைக்குப் பிறகு கூறியுள்ளது. இம்தியாஸ் அன்சாரி தான் இம்ரான் ஹஸன் வீட்டில் மற்றவர்களுடன் பலமுறை சந்தித்துள்ளதாக கூறினான்[3]. NIA இவர் வீட்டிற்கு சோதனைக்குச் சென்றபோது பூட்டியிருந்தது, அவர் வெளிநாடு சென்றுவிட்டதாக செய்திகள் கூறிகின்றன. சாதாரணமாக சென்றாரா அல்லது பறவை பறந்து விட்டதா என்று தெரியவில்லை.

Uzair Ahmed Khan in Ranchi on Wednesday - Prashant Mitraகக்கூசில்குண்டுவைத்து, தப்பியோடியதாரிக்பிடிபட்டுசொன்னவிசயங்களில்கிடைத்ததகவல்கள்: நவம்பர் 1 அன்று அயினுல் என்கின்ற தாரிக், மருத்துவ மனையில் இறந்து விட்டான். குண்டுவெடிப்புகளில் இவன்தான் பிரதான குற்றவாளி. ஆனால், இவனும் குண்டு வைக்கும் போது படுகாயம் அடைந்து இறந்து விட்டான். அக்டோபர் 27, 2013 அன்று பாட்னா ரெயில்வே ஸ்டேசனில் குண்டு வைத்துத் தப்பியோடிச் செல்லும் போது இவன் பிடிபட்டான். ராஞ்சியைச் சேர்ந்த இவனது கூட்டாளி இம்தியாஸ் அன்சாரியும் தப்பியோடும் போது பிடிபட்டான்[4]. ராஞ்சியில் [Ojair Ahmad] என்பவனை கைது செய்து விசாரித்ததில், மோதிஹரியில் கைது செய்யப்பட்டவன் தபிஸ் நியாஸ் என்கின்ற ஹர்ஷத் அன்சாரி என்று அடையாளம் காணப்பட்டான். இம்தியாஸின் கூற்றுப்படி அவர்கள் 19-20 குண்டுகளை வைக்கத் திட்டமிட்டனர்[5]. தெஸீன் அக்தர் மெடல் டிடெக்டர்களிடமிருந்து எப்படி தப்பித்தான் என்றால், குண்டுகளில் கார்பன் இருந்ததாம்[6]. அதாவது கார்பன் இருந்தால், அலாரம் எழுப்பாதாம். இதுதவிர ஓர்மஞ்சியைச் சேர்ந்த ஒரு 24-வயது கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர். இவள் பொகாரோவில் ஒரு கல்லூரியில் படித்து வருகிறாளாம். அவளது செல்போன் பிடிபட்டபோது, இவளும் தீவிரவாதிகளுக்கு பணப்பட்டுவாடா செய்வதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்தது[7]. முஸ்லிம் இளம்பெண்கள் ஏன் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் அல்லது ஈர்க்கப்படுகிறார்கள் அல்லது அவர்களுக்காக வேலை செய்யப் பணிக்கப்படுகிறார்கள் என்பது யோசிக்கத் தக்கது. இவளும் ஆயிஷா பானு போன்று செயல்படுகிறாளா அல்லது வேறுமாதிரியா?

Imtiyaz Ansaris father - house - Sithioஐ.எஸ்.ஐக்கும் இந்துக்களுக்கும் தொடர்பா அல்லது ஹவாலா பணமாற்றத்தில் தொடர்பா?: நவம்பர் 9 அன்று ஆறு பேரை பிடித்து விசாரித்ததில் அவர்களிடத்தில் 300 வங்கிக் கணக்குப் புத்தகங்கள், 30 ஏடிஎம் கார்டுகள், கைப்பற்றப் பட்டன[8]. 11-11-2013 அன்று பாட்னா குண்டுவெடிப்புகளுக்கு தொடர்புயுடைய ராஜு ராம் என்பவனை தன்பாதில் – ஜார்கெண்ட் கைது செய்யப்பட்டுள்ளான்.  அவனுடைய வீட்டில் சோதனையிட்டபோது, அவனது சகோதரர்கள் காணப்படவில்லை. மூன்று நாட்களுக்கு முன்னர் ஆறு நபர்களைப் பிடித்து விசாரித்தபோது, கோபால் கோயல், விகாஸ் குமார், பவன் குமார் மற்றும் கணேஷ் குமார் முதலியோருக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 10-12 வங்கிக் கணக்குப் புத்தகங்கள், ஏடிஎம் கார்டுகள், முதலியவை கைப்பற்றப் பட்டன. அவர்கள் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது[9]. இவர்கள் எல்லோரும் இந்துக்களாக இருப்பதால், இவர்கள் வெறும் ஹவாலா பணமாற்றம் செய்யும் கைக்கூலிகளா அல்லது ஐ.எஸ்.ஐ மற்றும் இந்திய முஜாஹித்தீனின் ஸ்லீப்பர் செல்களில் வேலைசெய்யும் ஆட்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Aysha Banu arrested for handling terror money - Patna blast7இங்குதான்ஆயிஷாபானுவின்தொடர்பும்வருகின்றது (12/13-11-2013)[10]: இதற்குப் பிறகுதான், மங்களூரில் ஆயிஷா மற்றும் அவளது கணவன் பிடிபட்டனர். இவர்கள் எல்லோருமே, இப்படி ஏகப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகங்கள், ஏடிஎம் கார்டுகள், சி கார்டுகள் வைத்துக் கொண்டு பாகிஸ்தானுடன் தொடர்பு கொண்டு, வெறும் ஹவாலா பணபரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளனரா அல்லது ஐ.எஸ்.ஐ மூலம் வரும் பணத்தை சந்தேகம் வராமல், இப்படி கைகள் மாறி தீவிரவாதிகளுக்கு கொடுக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதா என்று தான் NIA முக்கியமாக ஆய்ந்து வருகிறது. கர்நாடகாவைப் பொறுத்த வரைக்கும், பட்கல் மற்றும் மங்களூர் தீவிரவாதிகள், அவர்களுடைய உறவினர்கள், ஆதரவாளர்கள் நெருக்கமாக வேலை செய்து வருவதால், அவர்கள் NIAவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறாற்கள். உள்ளூர் ஊடகங்கள் அவர்களின் கைகளில் இருப்பதால், அத்தகைய பிரச்சாரத்தை செய்திகள் போலும் வெளியிட்டு வருகிறர்கள். மங்களூரு ஆட்களுக்கும், கேரளா தொடர்புகளுக்கும் இனைப்பு உள்ளது. இதனால், இந்த பிரச்சாரம் வலுவாகவே உள்ளது. இதனை வெரும் ஹவாலா என்று திசைத் திருப்பப் பார்க்கிறார்கள். மேலும் இந்துக்களும் இதில் சம்பந்தப் பட்டுள்ளது அதனை உறுதிப் படுத்துவதாகிறது என்று வாதமும் உள்ளது.

Sithio villagers refute - terror tag of their villageநவம்பர் 10, 2013 – தற்கொலை முயற்சி: நௌஸத் ஆலம் [Naushad Alam] என்கின்ற சந்தேகப் படும் குற்றவாளி அக்டோபர் 27 குண்டுவெடிப்பு விசயமாக விசாரித்துனர். இதற்குள் என்ன காரணங்களுக்காகவோ, அவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளான்[11]. இவன் மற்றும் கலீம் என்ற இன்னொருவனும் விசாரிக்கப் பட்டுள்ளனர். சிதியோ என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் விசாரிக்கப் பட்டுள்ளனர். முஹமது இம்தியாஸ் அன்சாரி, முனஹம்மது தாரிக் அன்சாரி, முஹம்மது தௌபீக் அன்சாரி மற்றும் முஹம்மது நோமன் என்ற நான்கு பேரும் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள்[12]. கர்நாடகத்தில் பட்கல், உபியில் ஆஸம்கர் போன்று ஜார்கண்டில் சித்தியோ உருவாகிறதா என்ற சந்தேகம் தோன்றியுள்ளது[13]. அத்தகைய கேள்வியை ஊடகங்களே எழுப்பியுள்ளன. மேலும், திடீரென்று இவர்களுக்கெல்லாம் லட்சக்கணக்கில் பணம் கிடைத்து வீடு, நிலம் என்றெல்லாம் வாங்கியுள்ளனர். இவர்கள் மூலம் தான் ராஜு ராவ் பற்றிய விவரங்களும் கிடைத்துள்ளன. ஆகவே, சாதாரணமான விசயத்திற்கு யாரு தற்கொலைக்கு முயன்றிருக்க மாட்டார்கள். ஆகவே, ஏதோ பெரிய உண்மையை மறைக்க இவன் தூண்டப்பட்டுள்ளானா என்று தெரியவில்லை. வழக்கம்போல, விசாரணையில் தான் அப்பாவி என்றும், தன்னை மிகவும் தொந்தரவு படுத்தினார்கள் (Alam, however, claimed innocence and said that he was “mentally harassed” by the investigation team) என்று கூறியிருக்கிறான்.

தீவிரவாதத்தை ஒடுக்கும் விசயத்தில் NIA மற்றும் பீஹார் போலீஸ் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: NIAக்கும் பீஹார் போலீசுக்கும் ஏற்கெனவே லடாய் இருந்து வருகிறது[14]. போதா குறைக்கு அரசியல் காரணமாக, நிதிஷ்குமார் முதல் மந்திரியாக இருந்தும், இவ்விசயத்தில் நக்கலாக பேசி வருகிறார், அது லல்லு போலவும் திக்விஜய் போலவும் கேவலமாக உள்ளது. தீவிரவாதத்தை ஒடுக்கும் விசயத்தில் இப்படி அரசியல் செய்வது வேடிக்கையாக இருக்கிறது. சம்பந்தப் பட்டவர்கள் குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர்கள் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அவர்கள் முஸ்லிம்கள் என்பதால், முஸ்லிம் ஓட்டு போய் விடுமே என்று தயங்குகிறார். இப்பொழுது சில இந்துக்களும் பிடிபட்டுள்ளதால், இனி செக்யூலரிஸ ரீதியில் தாராளமாக செயல்படலாம்.

© வேதபிரகாஷ்

16-11-2013


[2] The police officer, Imraan Hasan,  held the senior post of Deputy Superintendent in the Jharkhand Police; he retired two years agoCrucial information has been culled from the interrogation of one of the alleged bombers who was caught while running away from the Patna train station, where the first of eight explosions in the city took place. He has alleged that senior commanders of the Mujahideen visited the home of Imraan Hassan, the former cop. Tehseen Akhtar, who is allegedly running the Mujahideen, and Haider Ali, who reportedly coordinated the Patna terror attack, met at this house, say investigators, based on their interrogation of suspects who have been arrested.

http://www.ndtv.com/article/india/patna-blasts-investigators-want-to-interrogate-former-police-officer-446546

[6] The six accused, including key IM operative Tehseen Akhtar, escaped metal detectors because the bombs contained carbon that helped to avoid detection.

[7] The national Investigating Agency (NIA),  has found out the girl in question is a fund raiser for terror outfit Indian Mujahideen (IM). NIA sources told this newspaper that the 24-year-old is a resident of Ormanjhi Town in Ranchi and is enrolled in a college in Bokaro. The investigating agency came to know about the girl after confiscating the mobile phone of one off the IM financers from Ranchi last month “The girl played a key role in raising funds for the terror outfit. She is on the run ever since the IM financer was arrested,” a source familiar with the progress in investigation told this newspaper.

http://www.enewspaperofindia.com/Patna-blasts-NIA-hunts-for-mystery-girl_Enews_26589.aspx

[9] Three days ago, the NIA detained six people and seized dozens of bank passbooks, ATM cards and other documents in Lakhisarai, about 150 km from Patna, during raids at several places in connection with the Oct 27 Patna blasts. “Four of the six people including Gopal Kumar Goyal, Vikas Kumar, Pawan Kumar and Ganesh Kumar were sent to jail on the charge of providing financial help to terror suspects after they were produced in court,” Lakhisarai Superintendent of Police Rajeev Mishra said. Mishra said police are investigating a possible Pakistan ISI link with the four. But he denied that they had any link with the Indian Mujahideen.

http://articles.timesofindia.indiatimes.com/2013-11-11/patna/43928656_1_bihar-police-dhanbad-nia

[11] Police sources said that Naushad Alam, a resident of Sithio village on the outskirts of Ranchi, tried to hang himself from the ceiling with a piece of cloth. Alam, however, claimed innocence and said that he was “mentally harassed” by the investigation team. Another person of the same village, identified only as Kalim, was also questioned along with Alam. Four persons named by the NIA in the Patna blasts – including key suspect Md Imtiaz Ansari – hail from Sithio village. Ansari was arrested just a few hours after the blasts.

http://www.hindustantimes.com/india-news/patna-blasts-suspect-attempts-suicide-in-ranchi/article1-1149928.aspx

[13] Azamgarh in Uttar Pradesh, Bhatkal in Karnataka … and now will Sitiyo in Jharkhand, practically in Ranchi’s backyard, be known as the new address of Indian Mujahideen (IM) terror?

http://www.hindustantimes.com/india-news/patna-blasts-is-ranchi-s-sitiyo-village-the-new-terror-address/article1-1144660.aspx

Explore posts in the same categories: இம்ரான் ஹஸன், முனஹம்மது தாரிக் அன்சாரி, முஹமது இம்தியாஸ் அன்சாரி, முஹம்மது தாரிக் அன்சாரி, முஹம்மது தௌபீக் அன்சாரி மற்றும் முஹம்மது நோமன், முஹம்மது நோமன்

குறிச்சொற்கள்: , , , ,

You can comment below, or link to this permanent URL from your own site.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: