பெங்களூரு குண்டுவெடிப்பு – 14 பேர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல்!
பெங்களூரு குண்டுவெடிப்பு – 14 பேர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல்!
ஏப்ரல் 17, 2013 அன்று பிஜேபி அலுவலகத்திற்கு அருகில் நடத்தப்பட்ட மல்லேஸ்வரம் குண்டுவெடிப்பில் 18 பேர் காயமடைந்தனர்; 23 வாகனங்கள் நாசமடைந்தன; 56 கட்டிடங்கள் சேதமடைந்தன. அதில் கீழ்கண்ட 14 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது[1].
எண் | பெயர் | பெயர் / வயது | இடம் / ஊர் |
1 | ஜே. பாஷிர் என்ற பஷீர் | J Baasir alias Basheer, 30; | (from Tirunelveli); |
2 | எம். கிச்சன் புஹாரி என்கின்ற புகாரி | M Kichan Buhari alias Bugari, 38; | (from Tirunelveli); |
3 | எம். முஹம்மது சலீம் | M Mohammed Salin, 30; | (from Tirunelveli); |
4 | பன்னா இஸ்மாயில் என்ற முஹம்மது இஸ்மாயில் | Panna Ismail alias Mohammed Ismail, 30; | (from Tirunelveli); |
5 | பறவை பாஷா | Paravai Basha, 32, | (from Tirunelveli); |
6 | ஆலி கான் குட்டி | Ali Khan Kutti | (from Tirunelveli); |
7 | செயிட் அஸ்கர் அலி என்ற செயிட் | Sait Asgar Ali alias Sait, 29; | (from Coimbatore) |
8 | எஸ். ரஹமத்துல்லா | S Rahmatulla, 32; | (from Coimbatore) |
9 | வலயில் ஹக்கீம் என்ற ஹக்கீம் | Valayil Hakeem alias Hakeem, 32; | (from Coimbatore) |
10 | சையது சுலைமான் என்ற தென்காசி சுலைமான் | Syed Suleiman alias Tenkasi Suleiman, 24; | (from Coimbatore) |
11 | மன் பாய் என்ற சுலைமான் என்ற ஓலங்கோ | Man Bhai alias Suleiman alias Olango, 31; | (from Coimbatore) |
12 | ஜுல்பிகர் அலி | Zulfikar Ali, 24 | (from Coimbatore) |
13 | பிலால் மாலிக் | Bilal Malik alias Bilal, 28 | (from Madurai) |
14 | பக்ருதீன் என்ற போலீஸ் பக்ருதீன் | Fakruddin alias Police Fakruddin, 30 | (from Madurai). |
7,445 பக்கங்கள் கொண்ட அந்த குற்றப் பத்திரிக்கையில், 200 ஆவணங்கள் மற்றும் 260 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் சிலர் அல்-உம்மா போன்ற தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்கள். அவ்வியக்கம் 1998ம் ஆண்டில் கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு நடத்தியது. அதுவும் அத்வானியைக் குறிவைத்ததாகும். அக்டோபர் 2, 2013 அன்று ஆந்திரபிரதேசத்திலிருந்து பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் மற்றும் பக்ருத்தீன் பிடிபட்டனர். பறவை பாஷா மற்றும் அலி கான் குட்டி இருவரும் இதுவரை பிடிபடவில்லை[2].
இந்தியகுற்றவியல்சட்டம், வெடிப்பொருட்கள்சட்டம், 1908, பொதுஇடங்களுக்குசேதம்ஏற்படுத்துதல்தடுப்புசட்டம் 1984 மற்றும்சட்டவிரோதமானகூடுதல்தடுப்புசட்டம் 1967 இவற்றின் கீழ் வழக்கு போட்டுள்ளது போதுமா?: 20-10-2013 சனிக்கிழமை நகர முதன்மை கூடுதல் மாஜிஸ்ட்ரேட் முன்னர், ஓம்காரைய்யா, ஜே.சி.நகர் ACP மற்றும் புலன் விசாரிக்கும் அதிகாரி மூலம் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டது. வையாலிகாவல் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப் பட்ட இந்த வழக்கில், இந்திய குற்றவியல் சட்டம், வெடிப்பொருட்கள் சட்டம், 1908, பொது இடங்களுக்கு சேதம் ஏற்படுத்துதல் தடுப்பு சட்டம் 1984 மற்றும் சட்டவிரோதமான கூடுதல் தடுப்பு சட்டம் 1967 [IPC sections 120 (B), 121, 121 (A), 123, 332, 307, 435 and 201 and under Section 3, 4, 5 and 6 of The Explosive Substances Act, 1908 and under Section 4 of Prevention of Damage to Public Property Act 1984 and under Section 10, 13, 15, 16, 17, 18, 19 and 20 of Unlawful Activities (Prevention) Act, 1967] முதலியவற்றின் கீழ் பதிவு செய்யப் பட்டுள்ளது[3]. குண்டுவெடிப்பு, குரூரக் கொலைகள் என்றெல்லாம் இருக்கும் போது, இப்படி வழக்கு போட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது. ஏனெனில், ஏற்கெனவே, ஆதாரங்கள் இல்லை, என்று இத்தகைய ஜிஹாதிகள் விடுவிக்கப் பட்டிருக்கிறார்கள் அல்லது ஐந்தாண்டுகள் சிறை தண்டனை பெற்று, பிறகு வெளியே வந்தவுடன், மறுபடியும் அதே குண்டுவெடிப்பு, குரூரக் கொலைகள் என்று ஆரம்பித்து விடுகிறார்கள். இதற்கு என்ன தீர்வு?
கைது செய்யப் பட்ட நிலையிலேயே “ஆள்-கொணர்வு மனு”, தெருக்களில் ஆர்பாட்டம், ஊடகங்களின் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்ட முறை: இவ்வழக்கு சம்பந்தமாக கைது செய்யப் பட்டபோதே, குற்றஞ்சாட்டப் பட்டவர்கள், “ஆள்-கொணர்வு மனு”, தெருக்களில் ஆர்பாட்டம், ஊடகங்களின் மூலம் பிரச்சாரம் என்று பலவித முறைகளை, அவர்களின் மனைவிகள் மூலம் செய்விக்கப் பட்டன. ஏதோ தங்கள் கணவன்மார்களை அநியாயமாக கைது செய்யப் பட்டுள்ளனர், அவர்கள் எல்லோரும் அப்பாவிகள் என்றெல்லாம் வாதிடப் பட்டன. “தி ஹிந்து” போன்ற நாளிதழ்கள் தாராளமாக இவர்களுக்கு விளம்பரத்துடன் புகைப்படங்களுடன் செய்திகளை வெளியிட்டது. ஆனால், படுகாயம் அடைந்தவர்கள் பற்றி கவலைப் படவில்லை. ஷகீல் அஹமது, திவிஜய் சிங் போன்ற காங்கிரஸ்காரர்கள் மற்றும் இதர உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ் தான் குண்டு வைத்தது, இதனால் பிஜேபிக்கு தேர்தலில் ஆதாயம் கிடைக்கும் என்றெல்லாம் வாய்கூசாமல், மனசாட்சி இல்லாமல் பேசினர், எழுதினர். பிரச்சாரம் செய்ய வந்த சோனியாவும் இதைப் பற்றிக் கண்டிக்கவில்லை. மாறாக, ஊழலைப் பற்றி பேசி, வெற்றியும் பெற்றனர். அதர்கு உள்ளூர் அறிவு-ஜீவிகள் தீவிரவாதத்தையும் மறந்து காங்கிரஸுக்குத் துணை போயினர். மோசமாக விமர்சனம் செயத காங்கிரஸ் தலைவர்களைக் கண்டிக்கவில்லை. அதாவது, சாமர்த்தியமாக குண்டுவெடிப்பை ஆதரித்தனர் என்றேயாகியது. அதனால் தான், குண்டு வைத்தவர்கள், இத்தகைய முரண்பாட்டை, சித்தாந்த குழப்பங்களை, இந்துக்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
தீவிரவாதத்தினால் பாதிக்கப் பட்டவர்களின் நிலையை மறப்பது, மறைப்பது, மறுப்பது: சட்டத்திற்கு புறம்பாக எதுவும் நடக்கக் கூடாது, செய்யப் படக்கூடாது என்பது உண்மைதான். ஆனால், குண்டுவெடிப்பில் அநியாயமாகக் கொல்லப் பட்டவர்கள், படுகாயம் அடைந்தவர்கள், அவர்களின் மனைவி-மக்கள் முதலோரின் கதி என்ன என்பதை, இவர்கள் யோசித்துப் பார்த்தார்களா என்று தெரியவில்லை. அப்படி மனிதநேயம், ஈரம், உணர்வு, மனசாட்சி முதலியவை உள்ளன, இருந்திருந்தன என்றால், அவர்கள் தங்களது கணவன்மார்களுக்கு, இத்தகைய குரூரக் குற்றங்களை செய்யாதே, குண்டுகளை வைக்காதே, அப்பாவி மக்களைக் கொல்லாதே என்றெல்லாம் அறிவுரை கூறியிருக்க வேண்டும், தடுத்திருக்க வேண்டும். அப்பொழுதெ இவையெல்லாமே தவிர்க்கப் பாட்டிருக்கக் கூடும். தொடர்ந்து, இவ்வாறு ஜிஹாத் என்ற மதவெறியோடு இந்துக்களைக் கொல்வோம் என்று வெளிப்படையாக குரூரக்குற்றங்கள், கொலைகள் முதலியவற்றை செய்து கொண்டிருந்தால், மக்களுக்கு அவர்கள் எதை உணர்த்த செய்கிறார்கள் என்பதை அவர்கள் தாம் புரிந்து கொள்ள வேண்டும்.
© வேதபிரகாஷ்
20-10-2013
[1] http://newindianexpress.com/states/karnataka/Chargesheet-filed-against-14-for-Malleswaram-blast/2013/10/20/article1845340.ece
குறிச்சொற்கள்: அகீம், அஸ்கர் அலி, இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கிச்சன் புகாரி, கிச்சன் புஹாரி, குண்டு வெடிப்பு, சிறுபான்மையினர், செக்யூலரிஸம், செயிட், சேட், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், பக்ருத்தீன், பன்னா இஸ்மாயில், பறவை பாட்சா, பறவை பாஷா, பாட்சா, பாஷா, பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீன், போலீஸ் பக்ருத்தீன், முகமது சலீம், முஸ்லீம்கள், முஹமது சலீம், முஹம்மது சலீம், மொஹமது சலீம், ரகமத்துல்லா, ரஹமத்துல்லா, ஹக்கீம்
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்