அல்லா என்ற வார்த்தையை முஸ்லிம்கள் தான் பயன் படுத்த வேண்டும் – மலேசிய நீதி மன்றத்தின் அதிரடி தீர்ப்பு – அதாவது காபிர்கள் உபயோகப் படுத்தக் கூடாது!
அல்லா என்ற வார்த்தையை முஸ்லிம்கள் தான் பயன் படுத்த வேண்டும் – மலேசிய நீதி மன்றத்தின் அதிரடி தீர்ப்பு – அதாவது காபிர்கள் உபயோகப் படுத்தக் கூடாது!
2009 முதல் 2013 முதல் கடவுளுக்கு எந்த சொல்லை உபயோகிப்பது?: 2009ம் ஆண்டு மலேசியாவில் உள்ள கத்தோலிக்கக் கிறிஸ்துவ பத்திரிகை “ஹெரால்ட்” அல்லா என்ற வார்த்தையை கிருத்துவக் கடவுளுக்காக உபயோகப்படுத்தி இருந்தது[1]. குறிப்பாக மலாய் மொழி பைபிளில் கடவுளுக்குப் பதிலாக “அல்லா” என்ற வார்த்தை உபயோகப் படுத்தப் பட்டது[2]. அதை எதிர்த்து முஸ்லிம் இயக்கத்தினர் வழக்குத் தொடர்ந்தன. அதனால், “ஹெரால்ட்” பத்திரிக்கைக்காரர்கள் அதனை உபயோகிக்கக் கூடாது என்று கோர்ட் தடை விதித்தது[3]. இதற்கு எதிராக கிருத்துவ நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இடைக்கால தடையை அது ரத்து செய்தது. இதில் உள்துறை அமைச்சகம் தலையீடு இருந்தது. இதனால், 2010ல் முஸ்லிம் அல்லாதவர்களின் வழிபாட்டு ஸ்தலங்கள், குறிப்பாக, சர்ச்சுகள் தாக்கப்பட்டன. பெட்ரோல் குண்டு, கற்கள், பெயிண்ட் முதலியை அத்தாக்குதல்களில் உபயோகப் படுத்தப் பட்டன[4]. அரசு மேல்முறையீடு செய்தது.
மலேசிய அரசியல்வாதிகளும், இந்திய அரசியல்வாதிகளைப் போலத்தான் செயல்படுகின்றனர்: 2009ல் நஜீப் ரஸாக் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்பொழுது, மலாய் முஸ்லிம் மற்றும் முஸ்லிம்-அல்லாத சிறுபான்மையினருடன் குறிப்பாக சீன மற்றும் இந்திய வம்சாவளி மக்களுடன் தாஜா செய்து கொண்டிருந்தார்[5]. பிறகு முஸ்லிம்களின் ஆதரவு வேண்டும் என்று முஸ்லிம் இயக்கங்களுடன் சேர்ந்து செயல்படுகிறார். மலேசியாவின் மக்கட்தொகையில் 60% முஸ்லிம்கள், 9% கிருத்துவர்கள். இப்ராஹிம் அன்வர் கடந்த மலேசிய மேமாத தேர்தல், ஒரு பெரிய பிராடு / மோசடி என்று வர்ணித்தார்[6]. எது எப்படியாகிலும், முஸ்லிம்-அல்லாதோர் மலேசியாவில் அவஸ்தைப் படவேண்டியதுதான். நஜீப் ரஸாக், இப்ராஹிம் அன்வர் முதலியொர் பேசுவது, நடந்து கொள்வது, சோனியா, திக்விஜய் சிங், முல்லாயம் சிங் யாதவ், கருணாநிதி போன்றே உள்ளது. ஆகவே, அடிப்படைவாதிகளுக்குக் கொண்டாட்டம் தான்!
அல்லா முஸ்லிம்களுக்குத் தான் சொந்தமானவர்: “அல்லா” என்ற சொல்லை கடவுளைக் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தக் கூடாது என்று மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது[7]. இது, மலேசிய சிறுபான்மை மக்களின் உரிமை விவகாரத்தில் தலையிடும் முடிவு என்ற அளவில் மத ரீதியான பதற்றம் உருவாக வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது. திங்கள்கிழமை 14-10-2013 அன்று மலேசிய நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள், கடந்த 2009ல் கீழ் நீதிமன்றம் ஹெரால்ட் என்ற பத்திரிகைக்கு அல்லா என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த அனுமதி வழங்கியதை ரத்து செய்து, இத்தகைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. கிறிஸ்துவ மத நம்பிக்கையின் ஒரு பகுதியாக இந்த அல்லா என்ற வார்த்தை கட்டாயம் இல்லை என்பதாலும், கடவுளைக் குறிக்க அல்லா என்ற வார்த்தை முஸ்லிம்களுக்கு மட்டுமே உரியது என்பதால், மற்றவர்கள் குறிப்பிடுவதில் குழப்பம் ஏற்படும் என்பதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அல்லா என்ற வார்த்தை இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னமே உபயோகத்தில் இருந்தது, கடவுள் என்பதை குறிக்கும் இந்த சொல்லை அனைவரும் பயன்படுத்த உரிமை உண்டு. என்றெல்லாம் வாதிடப்பட்டது[8]. மூன்று நீதிபதிகள் கொண்ட இத்தீர்ப்பு முக்கியமாகக் கருதப்படுகிறது.
“அல்லா” என்ற வார்த்தை இருக்கக் கூடாது என்றால், முழு பைபிளையும் மாற்றி மொழிபெயர்த்து எழுத வேண்டிய நிலை உருவாகும்: இதே கருத்தைத்தான் மலேசிய அரசும் நீதிமன்றத்தில் எடுத்துரைத்து வாதிட்டது. மேலும், 2008ல் பொதுமக்களின் மன நிலைக்கு ஏற்ப, பத்திரிகையில் இந்த வார்த்தையை பயன்படுத்த அனுமதித்த உள்துறை அமைச்சகத்தின் முடிவை தடை செய்வதாகவும் நீதிமன்றம் கூறியது. மலேசியாவில் உள்ள கத்தோலிக்க மதத்தின் செய்தித்தாள்கள் சார்பில் வழக்குரைஞர்கள் தாக்கல் செய்த மனுவில், மலேசியாவிலும், மலேசியாவை அடுத்த புருனே தீவிலும் நூற்றாண்டுகளாக மலாய் பேசும் கிறிஸ்துவர்கள் அல்லா என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர் என்றார்கள். இருப்பினும் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மலேசியாவின் உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம் என்று கூறியுள்ளனர். “அல்லா” என்ற வார்த்தை இருக்கக் கூடாது என்றால், முழு பைபிளையும் மாற்றி மொழிபெயர்த்து எழுத வேண்டிய நிலை உருவாகும் என்று சபா பிராந்திய, எஸ்டர் மோய்ஜி என்பவர் பிபிசியிடம் முறையிட்டுள்ளார்[9].
கிருத்துவ-முகமதிய இறையியல் மோதல்கள்: “ஹெரால்ட்” செய்தித்தாளின் ஆசிரியர் லாரன்ஸ் ஆன்ட்ரூ [ Lawrence Andrew, editor of the Catholic newspaper, The Herald] மேல்முறையீடு செய்ய தீர்மானிக்த்துள்ளார்[10]. 200க்கும் அதிகமான முஸ்லிம்கள் நாட்டின் தலைமையிடமான புத்ராஜெயாவுக்கு வெளியே கூடியிருந்து இந்தத் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து, “அல்லாஹு அக்பர்” என்று கோஷமிட்டன. ஜெப்ரிஜால் அஹமது ஜாபர் என்பவர், “ஒரு முஸ்லிமாக நான் அல்லா என்ற வார்த்தையை ஜிஹாத் போல கருதுகிறேன். அதனை நான் ஆதரிக்கிறேன்”, என்று கூறுகிறார்[11]. இந்தோனியா, போனியோ மற்றும் அரபு நாடுகள், முதலியற்றில் உள்ள கிருத்துவர்கள் அவ்வார்த்தையைத் தொடர்ந்து உபயோகப்படுத்தப் போவதாகக் கூறியுள்ளனர்[12].
© வேதபிரகாஷ்
14-10-2013
[3] http://www.telegraph.co.uk/news/worldnews/asia/malaysia/10376674/Malaysian-court-rules-only-Muslims-can-use-the-word-Allah.html
[4] http://www.aljazeera.com/news/asia-pacific/2013/10/malaysian-court-allah-muslim-only-word-2013101434515414336.htm
[5] Prime Minister Najib Razak, who took office in 2009, has walked a tight-rope between pleasing his ethnic Malay Muslim base while not alienating the country’s non-Muslim ethnic Chinese and Indian minorities.
[6] http://www.thenational.ae/world/southeast-asia/malaysia-court-rules-non-muslims-may-not-use-the-word-allah
[7]http://dinamani.com/latest_news/2013/10/14/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D/article1835088.ece
[8] Lawyers for the Catholic paper had argued that the word Allah predated Islam and had been used extensively by Malay-speaking Christians in Malaysia’s part of Borneo island for centuries.
http://www.reuters.com/article/2013/10/14/us-malaysia-court-allah-idUSBRE99D01J20131014
[9] “If we are prohibited from using the word Allah then we have to re-translate the whole Bible, if it comes to that,” Ester Moiji from Sabah state told the BBC.
[10] http://www.thenational.ae/world/southeast-asia/malaysia-court-rules-non-muslims-may-not-use-the-word-allah
[11] “As a Muslim, defending the usage of the term Allah qualifies as jihad. It is my duty to defend it,” said Jefrizal Ahmad Jaafar, 39. Jihad is Islamic holy war or struggle.
http://www.reuters.com/article/2013/10/14/us-malaysia-court-allah-idUSBRE99D01J20131014
[12] Christians in Indonesia and much of the Arab world continue to use the word without opposition from Islamic authorities. Churches in the Borneo states of Sabah and Sarawak have said they will continue to use the word regardless of the ruling.
குறிச்சொற்கள்: அருவம், அல்-உஜ்ஜா, அல்-மனத், அல்-லத், அல்லா, அல்லாஹ், அழிப்பு, இடிப்பு, இறைவன், இலா, இலாஹி, இல், உடைப்பு, உருவம், எலா, எலோஹிம், எல், கடவுள், குதா, சிலை, துலுக்கர், தெய்வம், நாசம், மதவெறி, மீன், முகமதியர், முஸ்லிம், விக்கிரகம், வெறி
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்