சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலைவழக்கு: முக்கியஎதிரி “போலீஸ்’ பக்ருதீன் துப்பாக்கி முனையில் கைது!
சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு: முக்கிய எதிரி “போலீஸ்‘ பக்ருதீன் துப்பாக்கி முனையில் கைது!
போலீசாரால் மும்முரமாகத் தேடப்பட்டவர்களில் ஒருவன் பிடிபட்டான்: சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய எதிரியான “போலீஸ்’ பக்ருதீன் என்று அழைக்கப்படும் பக்ருதீன் வெள்ளிக்கிழமை (04-10-2013) பிடிபட்டார்[1]. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் ரமேஷ், சேலத்தில் கடந்த ஜூலை 19-ஆம் தேதி இரவு அவரது அலுவலகத்தின் முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை குறித்து சேலம் மாநகர போலீஸார் விசாரணை செய்தனர். வழக்கின் முக்கியத்துவம் கருதி, விசாரணை சி.பி.சி.ஐ.டி. சிறப்புப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் தனிப்படை போலீஸார் வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகவும், பெங்களுரில் பாஜக அலுவலகம் அருகே வெடிகுண்டு வைத்த வழக்கு, மதுரையில் அத்வானி செல்லவிருந்த பாதையில் வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவம் ஆகியவை தொடர்பாகவும் –
- மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த போலீஸ் பக்ருதீன் (35),
- பிலால் மாலிக் (25),
- திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த பன்னா இஸ்மாயில் (38),
- நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் (45)
ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர்[2]. மேலும் தேடப்படும் 4 பேரையும் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ. 20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் டி.ஜி.பி. அலுவலகம் அறிவித்தது. போலீஸார் இவ்விசயத்தில் அதிக அளவில் தேடுதல் முயற்சிகள், யுக்திகளைக் கையாண்டுள்ளது. ஒரு லட்சம் போஸ்டர்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அச்சடித்து “பிடித்துக் கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு” என்று அறிவித்தது. தொலைக்காட்சிகளிலும் அறிவிக்கப்பட்டது[3].
ஏற்கெனவே கைதானவர்கள்: பலவித வன்முறை, தீவிரவாத குரூரக் காரியங்களுக்காகவும், குற்றங்களுக்காகவும் ஏற்கெனவே கைதானவர்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- கே. பீர் மொஹித்தீன் [K Peer Mohideen (39)],
- ஜே. பஷீர் அஹமது [ J Basheer Ahmed (30)]
- சையது மொஹம்மது புஹாரி என்கின்ற கிச்சான் புஹாரி [Syed Mohammed Buhari alias Kitchan Buhari (38) ]
முதலியோர் ஏற்கெனவே பெங்களூரு பொலீஸாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்[4]. அத்வானி கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வரும் நாகூர் அனீபா என்கின்ற மொஹம்மது அனீபாவை ஜூலை 9, 2013 அன்று திண்டுகல்லில், வத்தலகுண்டு என்ற இடத்தில் மறைந்திருந்தபோது, போலீஸார் கைது செய்துள்ளனர்[5].
தமிழ்நாடு-ஆந்திரா எல்லைப் பகுதியில் துப்பாக்கி முனையில் பிடிப்பட்டார்: இந்நிலையில் சென்னை பெரியமேடு பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருப்பதி திருக்குடை ஊர்வலத்துக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதில் இந்து அமைப்புகளின் தலைவர்கள் பங்கு கொள்வதால், அவர்களை இலக்காக வைத்து தாக்குதல் நடக்கக் கூடும் என்றதால், முக்கியமான பகுதிகளில் மாநில உளவுப்பிரிவு போலீஸார், மதவாத தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார், க்யூ பிரிவு போலீஸார், ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வுப் பிரிவு போலீஸார் ஆகியோர் தமிழ்நாடு-ஆந்திரா எல்லைப்பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சூளையில் ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வுப்பிரிவு போலீஸார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நிற்பதை பார்த்தனராம். உடனே அந்த நபரை அப்பிரிவின் இன்ஸ்பெக்டர் பிடிக்க முயன்றதாகத் தெரிகிறது. ஆனால் அந்த நபர், இன்ஸ்பெக்டரை தள்ளிவிட்டு ஓட முயன்றாராம். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த இன்னொரு இன்ஸ்பெக்டர் துப்பாக்கி முனையில், அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தார். அவனிடத்தில் மூன்று மொபைல் போன்கள், சில சிம் கார்டுகள், தமிழ்நாட்டின் வரைப்படங்கள், ஆவணங்கள் முதலியவை கண்டெடுக்கப்பட்டன[6]. அவரிடம் விசாரணை செய்ததில், அவர் போலீஸாரால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தேடப்படும் போலீஸ் பக்ருதீன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அவரை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பக்ருதீனின் கூட்டாளிகள் யாரேனும் சென்னையில் இருக்கின்றனரா என போலீஸார் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
தீவிரவாதியின் புராணம் – போலீஸ் பக்ருதீன் வளர்ந்தது எப்படி?[7]: மதுரை நெல்பேட்டையை சேர்ந்தவன் பக்ருதீன். இவனது தந்தை சிக்கந்தர் அலி போலீஸ் ஏட்டாக பணியாற்றினார். இதனால் போலீஸ்காரர் மகன் பக்ருதீன் என அழைக்கப்பட்ட பக்ருதீனுக்கு நாளடைவில் ‘போலீஸ்‘ பக்ருதீன் ஆனான். தமிழகத்தில் எப்படி அவனவன் தனக்காகப் பட்டத்தை வைத்துக் கொள்கிறானோ, அதுபோல, தீவிரவாதிகளும் வைத்துக் கொள்வதில் ஒன்றும் வியப்பில்லைதான். தாயார் சையது மீரா. சகோதரர்கள் 2 பேர். முகம்மது மைதீன் பீடி,சிகரெட் வியாபாரம் செய்துவருகிறார். மற்றொரு சகோதரர் தர்வீஸ் மைதீன் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அத்வானியை குண்டுவைத்து கொல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டான் பக்ருதீன். நெல்பேட்டையை சேர்ந்த பெண்ணை பக்ருதீன் திருமணம் செய்த நிலையில், சில மாதங்களிலேயே மனைவியைவிட்டு பிரிந்துவிட்டான். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அல் உம்மா இயக்கத்தின் முக்கிய நிர்வாகி இமாம் அலிக்கு நெருக்கமானவன் பக்ருதீன். 1995ல் விளக்குத்தூண் ஸ்டேஷனில் அடிதடியில் ஈடுபட்டதாகவும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதே ஆண்டில் திடீர்நகரில் கொலை முயற்சி வழக்கு, 1996ல் அனுப்பானடியில் அழகர் என்பரை கொலை செய்ததாகவும், மீனாட்சி கோயிலில் வெடிகுண்டு வைத்ததாகவும், மதிச்சியத்தில் கொலை வழக்கும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவன் ஜாலியாக சுற்றிவந்துள்ளான், தொடர்ந்து குரூரக் குற்றங்களை செய்து வந்துள்ளான்.
7.3.2002ல் துப்பாக்கியால் சுட்டு இமாம் அலியை தப்பவைத்ததாக திருமங்கலம் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2010ல் விளக்குத்தூணில் கொலை முயற்சி மற்றும் உதவி கமிஷனர் வெள்ளத்துரையை மிரட்டியது உள்ளிட்ட 2 வழக்குகள், 2011ல் பாஜ மூத்த தலைவர் அத்வானியை குண்டு வைத்து கொல்ல முயன்றதாக திருமங்கலம் தாலுகா போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 30 வழக்குகளுக் கும் மேல் பக்ருதீன் மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது. குண்டு தயாரிப்பதில் கில்லாடி: இமாம் அலி தப்பிய வழக்கில் 37 பேருக்கு தண்டனை வழங்கப்பட் டது. 7 பேருக்கு 7 ஆண்டும், 32 பேருக்கு 5 ஆண்டுகளும் தண்டனை விதிக் கப்பட்டது. இவர்களில் இமாம் அலி, சீனியப்பா, மாங்காய் பஷீ, முகம்மது இப்ராகீம் ஆகியோர் பெங்களூரில் 2002 செப்.29ல் சுட்டுக்கொல்லப்பட்டனர். 7 ஆண்டு தண்டனை பெற்ற போலீஸ் பக்ருதீன் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தான். அங்கும் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தான். இதன் பேரில் 2010ல் ஜாமீனில் வெளியே வந்தவன் பின்னர் போலீசில் சிக்கவில்லை, அதாவது தப்பிச்சென்றான் என்று சொல்லாமல் ஊடகங்கள் எடுத்துக் காட்டுகின்றன. பக்ருதீன் தனது கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு மிகப்பெரிய ரிமோட் குண்டை தயாரித்து 2011 அக்.28ல் பாஜ மூத்த தலைவர் அத்வானி வரும் பாதையில் வைத்தான். அதிர்ஷ்டவசமாக இதை முன்கூட்டியே போலீ சார் பார்த்து அகற்றியதால் அத்வானி தப்பினார். அப்போது கைப்பற்றப்பட்ட குண்டு, தயாரித்த தொழில்நுட்பத்தை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதன் பின்னரே போலீஸ் பக்ருதீன் எவ்வளவு ஆபத்தானவன் என்பதை போலீ சார் உணர்ந்து தீவிரமாக தேட துவங்கினர். பாவம், இத்தனை கொலைகள் செய்தும் அவனது, குரூர மனப்பாங்கை போலீசாரால் கண்டுப் பிடிக்க முடிவில்லை என்றல், அதனை என்றென்பது?
குரூரக் கொலைகள் செய்யும் மது அருந்தாத ஒழுக்கமான ஜிஹாதி: இந்த வழக்கில் 8 பேர் சிக்கியும் பக்ருதீன் சிக்கவில்லை. அடுத்தடுத்து கொலைகள்: ஊர் சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில் பக்ருதீன் ஆர்வம் கொண்டவன். அதாவது சுற்றிக் கொண்டே தீவிரவாத கொலைகளை செய்வான் போலும்! அவனுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. ஏதோ ஒழுக்கமான ஜிஹாதி போன்ற சித்தரிப்பு, திகரன் செய்துள்ளது. 2013 ஏப்.3ல் பெங்களூரில் பாஜ அலுவலகம் அருகே வெடிகுண்டு வெடித் தது, ஜூலை முதல் தேதி வேலூரில் இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன், 19ம் தேதி சேலத்தில் தமிழக பாஜ பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். தேடப்பட்டு வரும் பக்ருதீன் மீது இந்த கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை கிச்சான் புகாரியுடன் சேர்ந்து பெங்களூர் குண்டு வெடிப்பில் ஈடுபட்டான் பக்ருதீன் என தகவல் வெளியானது. இதற்கிடையே மதுரை மேலமாசி வீதியில் பால்கடைக்காரர் சுரேஷ் கொலையிலும் போலீஸ் பக்ருதீன் தலைமையிலான கும்பல் செய்தது தெரிந்தது. அப்போது போலீசார் விசாரித்தபோதுதான் அவன் மதுரைக்கு அடிக்கடி வந்து சென்றதும், நண்பர்கள் பலரது வீடுகளில் தங்கியிருந்ததும் தெரிந்தது. பக்ருதீனுடன் கூட்டாளிகள் பிலால்மாலிக், பன்னா இஸ்மாயில், அபுபக்கர் சித்திக் ஆகியோர் மிக நெருக்கமாக செயல்பட்டுள்ளனர். பிலால் மாலிக் இந்து மக்கள் கட்சி தலைவர் காளிதாஸ் 2005 ஜூன் 22ல் மதுரையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவன். அப்போது அவருக்கு 17 வயது என்பதால், மைனர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தான்[8]. பின்னர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அங்கு மோதலில் ஈடுபட்டதாக வழக்கு உள்ளது.
நெல்லை சைவத்தின் இருப்பிடமா, ஜிஹாதிகளிம் குகையா என்ற நிலையில் நெல்லை கும்பலுடன் நெருக்கம்: முகம்மது அனிபா நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்தவன். தென்காசி நகர் இந்து முன்னணி தலைவர் குமாரபாண்டியன் 2006ல் கொலை செய்யப்பட்டார். இதன் எதிரொலியாக நெல்லை நகர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் மைதீன் ஷேக்கான் கொல்லப்பட்டார். குமார பாண்டியன் கொலை வழக்கில் முகம்மது அனிபா குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த 2 கொலை வழக்கு குற்றவாளிகளும் 2007 ஆகஸ்ட்டில் மோதிக்கொண்டதில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கிலும் முகம்மது அனிபா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளான். இவ்வழக்கில் தலைமறைவாக இருக்கவும், விசாரணை, ஜாமீன் பெற்றபோதும் மதுரையில் பதுங்கியிருக்க பக்ருதீன் உதவினான். இந்த பழக்கம் நெல்லையை சேர்ந்த பலருடன் நெருக்கமாக பழக பக்ருதீனுக்கு முகம்மது அனிபா மூலம் வாய்ப்பு கிடைத்தது. இப்படித்தான் கிச்சான் புகாரியுடன் பக்ருதீனுக்கு பழக்கம் ஏற்பட்டது.
தமிழக ஜிஹாதிகளுக்கு உதவுவது யார்?: ஊடகங்கள் இப்படி ஜிஹாதிகளின் புராணம் பாடினாலும், தமிழகத்தில் உள்ளவர்களின் ஆதரவு இல்லாமல், அவர்கள் இவ்வாறு தொடர்ந்து குரூரக் குற்றங்களை செய்து கொண்டிருக்க முடியாது. அதிகார, அரசியல் மற்றும் மதவாத சக்திகளின் உதவியில்லாமல் நிச்சயமாக, இத்தகைய கூட்டுக் குற்றங்கள், சதி திட்டங்கள், திட்டமிட்ட கொலைகள் முதலியன நடத்தப்பட முடியாது[9]. எல்லா காரியங்களுக்கும் பணம் தேவைப் படுகிறது. பணம் இல்லாமல், தீவிரவாதச் செயல்களைச் செய்யமுடியாது. அதற்கும் மேலாக, இன்று “லாஜிஸ்டிக்ஸ்” என்று பேசப்படுகின்ற உதவிகள் அவர்களுக்குக் கிடைக்காமல், அத்தகைய காரியங்களை செய்யவே முடியாது. அதற்கு லட்சக் கணக்கில், ஏன் கோடிக்கணக்கில் செலவாகிறது. ஆகவே, யார், எப்படி அத்தகைய பெரிய பண பரிவர்த்தனைகளை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கவனித்தாலே, இந்த ஜிஹாதிகளை, முஜாஹித்தின்களை, மதவெறியர்களைக் கண்டு பிடித்து விடலாம்.
எவ்விதத்திலும் உதவும் சித்தாந்திகள் தங்களது போக்கை மாற்ரிக் கொள்ள வேண்டும்: இந்திய செக்யூலரிஸவாதிகள் சாவிலும் அந்த பாரபட்சத்தைக் கடைப் பிடிக்க ஆரம்பித்துள்ளார்கள். இது திராவிட, நாத்திக, கம்யூனிஸ சித்தாந்திவாதிகளின் செயல்முறைகளுடன் ஒத்துப் போவதைப் பார்க்கமுடிகிறது[10]. மேலப்பாளையத்தில், போலீசார் சோதனை செய்யச் சென்றபோது, முஸ்லீம்கள் அதனால் தான், தாங்கள் ஏதோ சட்டங்களுக்கு உட்படாத மனிதர்கள் போலக் காட்டிக் கொண்டார்கள், போலீசாரை மிரட்டினார்கள்[11]. சென்னையில் ஆர்பாட்டம், ஊர்வலம் என்று கூட்டங்களைக் கூட்டினார்கள்[12]. இதற்கெல்லாம், லட்சக் கணக்கில் பணத்தைக் கொடுத்து உதவுவது யார் என்று ஆராய்ந்தாலே உண்மையை அறிந்து கொள்ளலாம். பெங்களூரு குண்டுவெடிப்பு இவர்களின் கூட்டுசதிமுறைகளை அம்பலமாக்கியுள்ளது[13]. நிகழ்சிகளை கோர்வையாக படிக்கும் சாதாரண மனிதனுக்குக் கூட, தமிழக ஜிஹாதிகளின் மனப்பாங்குப் புரிந்து விடும்[14], இருப்பினும் தமிழக அறிவுஜீவிகள் அதனை கண்டுகொள்ள மறுக்கிறது.
® வேதபிரகாஷ்
05-10-2013
[1]http://dinamani.com/edition_chennai/chennai/2013/10/05/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4/article1819820.ece
[2] Mr. Nicholson said three persons – Fakruddin alias ‘Police’ Fakruddin, Bilal Malik and Hanifa – were the main conspirators in the plan to blow up the convoy of Mr. Advani. They were present at the scene of crime and escaped on seeing the police.
[3] This is perhaps for the first time in the crime history of Tamil Nadu that as many as one lakh posters have been printed by police announcing a cash prize of Rs five lakh (totalling Rs 20 lakh) on heads of each of the four suspects — ‘Police’ Fakruddin (35), Bilal Malik (25), Panna Ismail (38), and Abu Backer Siddique (45). The posters in Tamil and English are being displayed at vantage points across Tamil Nadu to get inputs from the public on the accused.
[4] In the Bangalore BJP office blast case, K Peer Mohideen (39), J Basheer Ahmed (30) and Syed Mohammed Buhari alias Kitchan Buhari (38) all belonging to Tamil Nadu have already been arrested by Karnataka police.
[5] Armed police personnel stormed into a hideout at Batlagundu in Dindigul district early on Monday and apprehended Nagoor Hanifa alias Mohamed Hanifa (35), one of the prime suspects who allegedly conspired to eliminate Bharatiya Janata Party leader L.K. Advani and attempted to blow up his convoy near Madurai on October 28, 2011.
[6] Three mobile phones, a few SIM cards, some diagrams and sketches of the state map and other documents were seized
[8] இப்பொழுதைய கற்பழிப்பு வழக்கிலும் ஒரு முஸ்லீம் தான் சிக்கியுள்ளான். மற்றவர்களுக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டாலும், இவனுக்கு சீர்திருத்தப் பள்ளியில் அனுமதிப்பு என்பதை கவனிக்க வேண்டும். இந்நிலையில் தான் அப்பாவி முஸ்லீம்கள் கைது செய்யப் படுகிறார்கள் என்றெல்லாம் வக்காலத்து வாங்கி வருகிறார்கள். அதற்கு, கேவலமாக உள்துறை மந்திரியும் ஒத்து ஊதுகிறார்.
[9] http://secularsim.wordpress.com/2013/05/06/relation-between-the-attacks-on-hindu-organizations-and-karnataka/
[10] http://secularsim.wordpress.com/2013/05/04/seculatism-looks-into-religion-even-in-death-thus-follows-sonia/
[11] https://islamindia.wordpress.com/2013/08/01/again-explosives-found-muslims-arrested-from-melappalayam/
[12] https://islamindia.wordpress.com/2013/07/07/how-and-why-tmmk-habitually-violates-acts-and-rules/
குறிச்சொற்கள்: அத்வானி, அல் - உம்மா, ஆந்திரா, சித்தூர், ஜிஹாதி, திருநெல்வேலி, பக்ருதீன், பெங்களூரு, பைப் குண்டு, போலீஸ்
You can comment below, or link to this permanent URL from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்