இந்திய முஜாஹிதீன் அமைப்பின் யாசின் பட்கல் கைது பற்றி விமர்சித்த கமால் ஃபரூக் சமாஜ்வாடி கட்சி செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது ஏன்?
இந்திய முஜாஹிதீன் அமைப்பின் யாசின் பட்கல் கைது பற்றி விமர்சித்த கமால் ஃபரூக் சமாஜ்வாடி கட்சி செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது ஏன்?
யாசின் பட்கல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன என்ற தலைப்பில் இப்பிரச்சினை அலசப்பட்டது[1]. கமால் ஃபரூக்கின் விஷமத்தனமான பேச்சின் தன்மை எடுத்துக் காட்டப்பட்டது[2]. இவ்விசயத்தில் கர்நாடகா, பீகார், உபி தொடர்புகள் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவு கட்சிகளின் தேர்தல் முடிவுகளை பாதிக்கும் அளவில் சென்று விட்டன[3]. இந்தியாவில் பல இடங்களுக்குச் சென்று வந்துள்ளதில், பலர் உதவிய விஷயங்களும் வெளி வந்தன[4]. ஊடகங்கள் அவனுக்கு உதவும் விதமும் எடுத்துக் கட்டப் பட்டது[5]. இதனால், வேறு வழியில்லாமல், கமால் ஃபரூக்கை செயலர் பதவியில் இருந்து சமாஜ்வாடி கட்சி நீக்கியுள்ளது.
கமால் ஃபரூக் நீக்கப் பட்டதன் பின்னணி: இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி யாசின் பட்கல் கைது நடவடிக்கை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்த கமால் ஃபரூக்கை செயலர் பதவியில் இருந்து சமாஜ்வாடி கட்சி நீக்கியுள்ளது[6]. இந்திய- நேபாள எல்லையில் அண்மையில் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி யாசின் பட்கல், கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார். இந்தக் கைது நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்திருந்த கமால் ஃபரூக், பட்கலை கைது செய்தது அவர் செய்த குற்றத்தின் அடிப்படையிலா? அவர் இஸ்லாமியர் என்பதற்காக எனக் கேள்வி எழுப்பியிருந்தார்[7]. யாசின் பட்கலுக்கு ஆதரவாக கமால் ஃபரூக் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன[8]. தனது பேச்சின் தன்மையை அறிந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகவும் செய்தி வந்தது[9]. ஆனால், அதற்குள் அவரது பேச்சின் தன்மையினால் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இவரின் பேச்சு மதநல்லிணக்கத்திற்கு எதிராக உள்ளதாக எழுந்த புகாரின் பேரில், இன்று கட்சி செயலர் பொறுப்பில் இருந்து கமால் ஃபரூக் நீக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது[10].
யாசின் பட்கல்லுக்கு பரிந்து பேசுவது ஏன்?:சமஜ்வாதி கட்சியின் தலைவர் கமால் பரூக்கி என்பவர், “அவன் தீவிரவாதி என்றால் விடக்கூடாது. ஆனால், அவன் முஸ்லிம் என்றதால் மட்டும் கைது செய்யப் பட்டிருந்தால், பிறகு எச்சரிக்க வேண்டியுள்ளது, ஏனெனில் அது முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரு தவறான சமிஞையை அனுப்புகிறது. ஆகவே அவன் கைது செய்யப்பட்டது குற்றத்தின் அல்லது மதத்தின் அடிப்படையிலா என்பதை விளக்க வேண்டும்”, இப்படி பேசியதும்[11][2], அங்கு மடி-கணினி வாங்க வந்த மாணவர்களுக்கு ஒன்றும் புரியவில்லையாம். உடனே, கூட இருந்த ராம்கோபால் யாதவ், “பட்டகல் ஒரு தீவிரவாதி தான், ஆகவே அவன் அவ்வாறுதான் நடத்தப்படுவான்”, என்றார். பிடிபட்ட தீவிரவாதி முஸ்லிம் என்றதும், மற்றொரு முஸ்லிம், உடனே இஸ்லாத்தைத் தூக்கிப் பிடிப்பது ஏன் என்று தெரியவில்லை. சாதாரண நேரத்தில், “தீவிரவாதிகள் எல்லோரும் முஸ்லீம்கள் என்று குறிப்பிடுவது தவறாகும்”, என்கின்றவர்கள் இப்பொழுது இப்படி பரிந்து கொண்டு பேசுவது அவன் முஸ்லிம் என்பதாலா அல்லது தீவிரவதியாக உள்ள முஸ்லிமுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தாலா?
இஸ்லாமியர்களை இலக்கு வைத்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது: இந்திய முஜாஹிதீன் அமைப்பின் யாசின் பட்கல் கைது செய்யப்பட்டுள்ளதை உத்தரப்பிரதேச மாநில ஆளும் சமாஜ்வாடி கட்சி இவ்வாறு விமர்சித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரான கமால் ஃபரூக் –
- யாசின் பட்கலை போலீசார் மதத்தின் அடிப்படையில் கைது செய்தனரா?
- அல்லது குற்றத்தின் தன்மையின் அடிப்படையில் கைது செய்தனரா?
என்பது பற்றி விளக்கம் வேண்டும். அண்மைக்காலமாக இஸ்லாமியர்களை இலக்கு வைத்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில்தான் யாசின் பட்கல் கைது நடவடிக்கையும் அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். பொறுப்பில்லாமல் இவர் இப்படி பேசியுள்ளது முஸ்லிமின் மனப்பாங்கு எப்படியுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. முஸ்லிம் இப்படி முஸ்லிமாகவே செயல்படுவதைத்தான் அடிப்படைவாதம், வகுப்புவாதம், இந்தியவிரோதம் என்று எளிதில் அறியப்பட்டாலும், செக்யூலரிஸம் என்ற மாயாஜாலத்தில் மறைத்து விடுவர். சி.என்-ஐ.பி.என், டைம்ஸ்-நௌ, என்.டி-டிவி, ஹெட்லைன்ஸ்-டுடே முதலியவை இதை பெரிது படுத்தாது. கமால் பரூக்கியின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும்[12] யாரும் அவரை எதிர்க்கப்போவதில்லை, கண்டிக்கப்போவதில்லை. நல்லவேளை, இவரே ஒப்புக் கொண்டு விட்டார், கைது செய்யப்பட்டது யாசின் பட்கல் தான் என்று. ஏனெனில், கைது செய்யப்பட்டது அவனில்லை என்று செய்திகளும் வந்துள்ளன, அவனுடைய வக்கீலும் அவ்வாறே கூறுகிறாராம்!
இப்பொழுது நீக்கப் பட்டாலும், வேறு வழியில் உள்ளே கொண்டுவரப்படுவார் என்பது நிச்சயம். ஏனெனில் முல்லாயம் முஸ்லிம்களை வைத்துக் கொண்டுதான், ஆட்சியைப் பிடித்துள்ளார். ஆகவே, பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் அவ்வாறு செய்யமாட்டார்.
© வேதபிரகாஷ்
05-09-2013
[3] https://islamindia.wordpress.com/2013/09/02/indian-mujahiddeen-bihar-karnataka-nexus-ied-technique/
[4] https://islamindia.wordpress.com/2013/09/02/how-could-yasin-bhatkal-be-moving-through-different-cities-states-within-india/
[5] https://islamindia.wordpress.com/2013/09/02/coverage-of-media-amount-to-propaganda-helping-terrorists-and-politicians/
[7] http://zeenews.india.com/news/nation/yasin-bhatkal-statement-sp-sacks-kamal-farooqui-as-party-secretary_874390.html
[8] http://news.oneindia.in/india/sp-leader-kamal-faruqui-sacked-as-partys-secy-over-bhatkal-arrest-1300121.html
[9] http://ibnlive.in.com/news/sp-sacks-kamal-farooqi-as-secretary-over-his-yasin-bhatkal-remarks/419853-37-64.html
[10] http://tamil.oneindia.in/news/2013/09/05/india-sp-sacks-kamal-farooq-as-party-secretary-182862.html
[11] Responding to the arrest of the 30-year-old accused, who is wanted in several blast cases, Farooqui had yesterday said, “Is this arrest based on crime or religion?”. “If he is a terrorist, then he should not be spared but if he has been arrested just because he is a Muslim, then caution should be exercised as we don’t want to send a wrong message to the entire community that we are trying to malign the it’s image without a thorough investigation,” he had said.
குறிச்சொற்கள்: அகிலேஷ், அடிப்படைவாத, அடிப்படைவாதி, ஆசம் கான், ஆதரவு, ஆஸம் கான், கட்சி, கமல் பரூக்கி, கமால் ஃபரூக், கமால் பரூக்கி, காங்கிரஸ், காழ்ப்பு, ஜிஹாத், தீவிரவாதம், தூண்டும் பேச்சு, முலாயம், முல்லாயம், முஸ்லிம், யாதவ. ஜாதி, வெறுப்பு
You can comment below, or link to this permanent URL from your own site.
ஒக்ரோபர் 4, 2013 இல் 12:35 பிப
This Kamal Farooqi has been hardcore fundamentalist, but appearing with clean shave face, just like Azam Khan, Omar Abdullah, Farooq Abdullah and others.
Therefore, there is nothing surprising that they support Islamic bombers, Jihadi terrorists and Muslim terrorists.
Of course, the Sonia Congress spokesmen, ministers and others would always support them providing logistics and legal aids indirectly, discussing matters in the public domain so that the advocates and councils of them take advantage.